Daily TN Study Materials & Question Papers,Educational News

12th Public Exam Model Question Papers 2022 - All subjects

12th Public Exam Model Question Papers 2022 - All subjects

12th Public Exam Model Question Papers 2022 - All subjects
12th Public Exam Model Question Papers 2022 - All subjects
12th Public Exam Model Question Papers 2022 - All subjects
Tamil Click Here ( TM & EM )
Englisg Click Here ( TM & EM )
Maths Click Here ( TM & EM )
Physics Click Here ( TM & EM )
Chemistry Click Here ( TM & EM )
Biology Click Here ( TM & EM )
Botany Click Here ( TM & EM )
Zoology Click Here ( TM & EM )
Commerce Click Here ( TM & EM )
Accountancy Click Here ( TM & EM )
Economics Click Here ( TM & EM )
Geography Click Here ( TM & EM )
History Click Here ( TM & EM )
Computer Science Click Here ( TM & EM )
Computer Application Click Here ( TM & EM )
Computer Technology Click Here ( TM & EM )
Business Maths Click Here ( TM & EM )

12th Public Exam Model Question Papers 2022 - All subjects

Tamil

English

Maths

Physics

Chemistry

Biology

  • 12th Biology Public Exam Model Question Paper 1 - May 2022 - Click Here ( English Medium)
  • 12th Biology Public Exam Model Question Paper 2 - May 2022 - Click Here ( English Medium)
  • 12th Biology Public Exam Model Question Paper 3 - May 2022 - Click Here ( English Medium)
  • 12th Biology Public Exam Model Question Paper 4 - May 2022 - Click Here ( English Medium)
  • 12th Biology Public Exam Model Question Paper 1 - May 2022 - Click Here ( Tamil Medium)
  • 12th Biology Public Exam Model Question Paper 2 - May 2022 - Click Here ( Tamil Medium)
  • 12th Biology Public Exam Model Question Paper 3 - May 2022 - Click Here ( Tam Medium)
  • 12th Biology Public Exam Model Question Paper 4 - May 2022 - Click Here ( Tamil Medium)

Accountancy

Commerce

Economics


Share:

12th History - Lesson 9 - ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - Tamil Medium

12th History - Lesson 9 - ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - Tamil Medium

12th History - Lesson 9 - ஓர் புதிய சமூக – பொருளாதார ஒழுங்கமைவை எதிர் நோக்குதல் - Tamil Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.பின்வருவனவற்றை காலவரிசைப்படுத்துக.

i) ஜமீன்தாரி முறை ஒழிப்புச் சட்டங்கள்

ii) அதிக விளைச்சலைத் தரும் வீரிய ரக விதைகளின் பயன்பாடு

iii) தமிழ்நாட்டின் முதல் நில உச்சவரம்புச் சட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினைத் தேர்வு செய்க.

அ) ii,i, iii

ஆ) i, iii, ii

இ) iii, ii,i

ஈ) ii, iii,i

விடை: ஆ) i, iii,ii

 

2. இந்திய அரசாங்கம் ______ வகையான மேம்பாட்டிற்காக உறுதி பூண்டுள்ளது.

அ) முதலாளித்துவ

ஆ) சமதர்ம

இ) தெய்வீக

ஈ) தொழிற்சாலை

விடை: ஆ) சமதர்ம

 

3.இந்திய அரசியலமைப்பில் முதலாவது திருத்தம் எப்போது மேற்கொள்ளப்பட்டது?

அ) 1951

ஆ) 1952

இ) 1976

ஈ) 1978

விடை: அ) 1951

 

4.கொடுக்கப்பட்டுள்ள விடைக் குறிப்புகளைக் கொண்டு பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. தொழில் மேம்பாடு கொள்கைத் தீர்மானம் - 1. 1951-56

ஆ. இந்திய அறிவியல் நிறுவனம் - 2. இரண்டாவது ஐந்தாண்டு திட்டம்

இ. மகலனோபிஸ் - 3. 1909

ஈ முதலாவது ஐந்தாண்டு திட்டம் - 4. 1956

அ. 1 2 3 4

ஆ. 3 1 4 2

இ. 4 3 2 1

ஈ 4 2 3 1

விடை: இ) 4 3 2 1

 

5.நில சீர்திருத்தச் சட்டம் தமிழ்நாட்டில் இரண்டாவது முறையாக எப்போது நடைமுறைப்படுத்தப்பட்டது?

அ) 1961

ஆ) 1972

இ) 1976

ஈ) 1978

விடை: ஆ) 1972

 

6.பூமிதான இயக்கத்தைத் தொடங்கியவர்.

அ) ராம் மனோகர் லோகியா

ஆ) ஜெயப்பிரகாஷ் நாராயணன்

இ) வினோபா பாவே

ஈ) சுந்தர் லால் பகுகுணா

விடை: இ) வினோபா பாவே

 

7.கூற்று: ஜமீன்தாரிமுறை ஒழிப்பு அதன் முக்கிய நோக்கத்தில் ஒரு பகுதியையே எட்டியது.

காரணம்: பல நிலச்சுவான்தாரர்கள் குத்தகைதாரர்களை வெளியேற்றி நிலம் அவர்களது சுயகட்டுப்பாட்டின் கீழ் வேளாண்மையில் உள்ளதாக உரிமை கோரினர்.

அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை .

இ) கூற்று சரி ; காரணம் தவறு

ஈ) கூற்று தவறு, காரணம் சரி

விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

 

8.தொழில் வளர்ச்சி மற்றும் ஒழுங்குமுறைச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

அ) 1951

ஆ) 1961

இ) 1971

ஈ) 1972

விடை: அ) 1951

 

9.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் எந்த ஆண்டு நிறைவேற்றப்பட்டது?

அ) 2005

ஆ) 2006

இ) 2007

ஈ) 2008

விடை: அ) 2005

 

10.எந்த ஆண்டு இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் கடும் நெருக்கடியைச் சந்தித்தன?

அ) 1961

ஆ) 1991

இ) 2008

ஈ) 2005

விடை: ஆ) 1991

 

11.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புச் சட்டம் (MGNREGA) எத்தனை நாட்கள் வேலைவாய்ப்பை ஒரு தனிநபருக்கு வழங்குகிறது?

அ) 200

ஆ) 150

இ) 100

ஈ) 75

விடை: இ) 100

 

12.டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் எப்போது அமைக்கப்பட்டது?

அ) 1905

ஆ) 1921

இ) 1945

ஈ) 1957

விடை: இ) 1945

 

13.1951ஆம் ஆண்டில் இந்தியாவில் எத்தனை பொதுத்துறை நிறுவனங்கள் செயல்பட்டன?

அ) 5

ஆ) 7

இ) 6

ஈ) 225

விடை: அ) 5

II. குறுகிய விடையளிக்கவும்

1.நாடு விடுதலை அடைந்த போது இந்திய பொருளாதாரத்தின் நிலைகள் குறித்து ஒரு குறிப்பு வரைக.

விடை:

•1947இல் இந்தியா விடுதலையடைந்த போது நாட்டின் பொருளாதாரம் மிகவும் வலுவற்றதாகவும் பல பிரச்சனைகளையும் எதிர் கொண்டது.

•கைவினைத் தொழில்கள் பெரும் பாதிப்புகளுக்கு உள்ளாகியதால் திறமைமிக்க கைவினைஞர்கள் வாழ்வாதாரத்தை இழந்தனர்.

•வேளாண் துறையில் மக்கள் நெருக்கடி அதிகமானதோடு தனி நபரின் தலாவருமானமும் குறைந்தது.

 

2.ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கத்தின் முன்னிருந்த முக்கிய கடமைகள் யாவை?

விடை:

•பொருளாதாரத்தை வளர்த்தல்.

•வேளாண்துறை நிலைமைகளை மேம்படுத்துதல்.

•உற்பத்தித் துறையை விரிவாக்கம் செய்தல்.

•வேலை வாய்ப்புகளைப் பெருக்கி வறுமையைக் குறைத்தல் போன்ற மாபெரும் கடமைகளை ஜவஹர்லால் நேரு தலைமையிலான புதிய அரசாங்கம் எதிர் கொண்டது.

 

3.சமதர்ம சமூக அமைப்பு என்பதைப் பற்றி நீ அறிந்ததென்ன?

விடை:

சமதர்ம சமூக அமைப்பு என்பது ஏற்றத்தாழ்வுகளைக் குறைப்பது, சுரண்டலை ஒழிப்பது, செல்வம் ஓரிடத்தில் குவிக்கப்படுவதைத் தடுப்பது ஆகியனவாகும்.

சமூகநீதியானது அனைத்து குடிமக்களும் கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் சமவாய்ப்பைப் பெறுவதாகும்.

 

4.இந்தியா விடுதலை அடைந்ததைத் தொடர்ந்து பொதுத்துறை நிறுவனங்களை அமைப்பது தொடர்பாக வைக்கப்பட்ட இரண்டு முக்கிய கருத்துக்களை சுட்டிக் காட்டுக?

விடை:

முதலாவதாக கருத்தியல் நிலையில் அரசாங்கம் ஒரு சமதர்ம வளர்ச்சிக்கு உறுதியளித்தது. இது பொருளாதாரத்தின் மீது அரசின் அதிக அளவிலான கட்டுப்பாட்டை உள்ளடக்கியிருந்தது.

இரண்டாவது நடைமுறை சார்ந்தது. நடைமுறையில் கனரகத் தொழில்களை உருவாக்க வேண்டிய பொறுப்பை அரசே ஏற்க வேண்டியிருந்தது. ஏனெனில் அவற்றை உருவாக்க மிக அதிகமான முதலீடு தேவைப்பட்டது.

 

5.பூமிதான இயக்கம் பற்றி எழுதுக.

விடை:

நிலம் இல்லாத ஏழைகளுக்கு உபரியாக நிலம் உள்ளவர்களிடமிருந்து நிலங்களை தானமாக பெற்றுத் தருவது பூமிதான இயக்கமாகும்.

வினோபா பாவே தனது பூமிதான இயக்கத்தின் மூலம் பெரும் நிலவுடைமையாளர்கள் தங்களிடம் உபரியாக உள்ள நிலங்களைத் தாங்களாவே முன்வந்து வழங்க இணங்க வைத்த முயற்சிகள் மக்களின் கவனத்தைப் பெரிதும் கவர்ந்தது.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.குத்தகை சீர்திருத்தங்களின் நோக்கங்கள் யாவை?

விடை:

•குத்தகையை முறைப்படுத்துவது.

•குத்தகைதாரர்களின் உரிமைகளை பாதுகாப்பது.

•நிலவுடைமையாளர்களிடமிருந்து நிலங்களைப் பறிமுதல் செய்து அவற்றிற்கான உரிமையை குத்தகைதாரர்களுக்கு அளிப்பது.

 

2.இந்தியாவில் பசுமைப்புரட்சியின் விளைவுகள் யாவை?

விடை:

•இந்தியா உணவு தானிய உற்பத்தியில் தன்னிறைவு பெற்றது.

•விவசாயிகளிடமிருந்து உபரி உணவு தானியங்களை விலைக்கு வாங்கிய அரசு பெருமளவில் தானியக் கையிருப்பை ஏற்படுத்தி அவற்றை இந்திய உணவுக் கழகத்திற்குச் சொந்தமான சேமிப்புக் கிடங்குகளில் சேமித்து வைத்தது.

•மக்களுக்கான உணவு பாதுகாப்பும் உறுதி செய்யப்பட்டது.

•பசுமைப்புரட்சி மிகவும் வெற்றிகரமானதாக இருந்தபோதிலும் அது சில எதிர்மறையானவிளைவுகளையும் ஏற்படுத்தியது.

•வசதி வாய்ப்புகள் நிறைந்த பகுதிகள் வசதி வாய்ப்புகள் குறைந்த பகுதிகள் ஆகியவற்றிற்கு இடையிலான ஏற்ற தாழ்வுகளை அதிகரித்தது.

•காலப்போக்கில் விவசாயிகளிடையே அதிக அளவில் ரசாயன உரங்களையும் பூச்சிக் கொல்லி மருந்துகளையும் பயன்படுத்தும் பழக்கம் ஏற்பட்டதன் விளைவாகச் சூழலியல் பிரச்சனைகள் தோன்றலாயின.

 

3.மத்திய அரசு 1980களில் கொண்டு வந்த ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டத்தை விளக்குக?

விடை:

•1980இல் ஒருங்கிணைந்த ஊரக வளர்ச்சித் திட்டம் என்ற பெயரில் ஓர் ஒருமுகப்படுத்தப்பட்ட திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.

•கிராமப்புற குடும்பங்களின் பொருளாதார நிலையை உயர்த்துவதற்கு அவர்களுக்கு சில சொத்துக்களை வழங்குவது இத்திட்டத்தின் நோக்கமாகும்.

•நிலத்தை மேம்படுத்துவதற்காகவோ பால் உற்பத்திக்காகப் பசுக்கள் அல்லது ஆடுகளை வழங்குதல் அல்லது சிறிய கடைகள் வைக்கவோ அல்லது வேறுவணிகத் தொடர்பான வியாபாரங்கள் செய்வதற்கான உதவியாகவோ இருக்கலாம்.

•இதன் இலக்கு ஐந்து ஆண்டுகளில் (1980-1985) ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் ஆண்டொன்றுக்கு 600 குடும்பங்களுக்கு உதவிகள் வழங்குவது.

•இந்த உதவிகள் 15 மில்லியன் குடும்பங்களுக்கு சென்றடைவதை நோக்கமாகக் கொண்டிருந்தது.

•1999 ஆம் ஆண்டு வரையின் 53:5 மில்லியன் குடும்பங்களை இத்திட்டம் சென்றடைந்தது.

 

4.இந்திய வேளாண்மையின் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் யாவை?

விடை: இந்திய வேளாண்மையில் பின்தங்கிய நிலைக்கான காரணங்கள் இரண்டு வகைப்படும். அவையாவன,

நிறுவன காரணி – நில உடைமை மற்றும் விவசாய தொழிலாளர்கள் இடையே நிலவிய சமூக பொருளாதார சிக்கல்கள்.

தொழில்நுட்ப காரணி – வீரிய விதைகள், இரசாயன உரங்கள், நீர்ப்பாசனம் மற்றும் இயந்திரங்களை பயன்படுத்தாமை ஆகியவையாகும்.

 

5.பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணிகள் யாவை?

விடை:

•நிறுவனங்கள் அமைக்கப்பட வேண்டிய இடங்கள் குறித்து மாறுபட்ட கருத்துக்கள்.

•கட்டுமானப் பணிகளை முடிப்பதில் ஏற்படும் தாமதத்தால் அதிக முதலீட்டு செலவு.

•தேவைக்கு அதிகமானோர் பணியமர்த்தப்பட்டனர். இதனால் நிறுவனங்களை இயக்குவதற்கான செலவு அதிகரித்தது. இவைகள் பொதுத்துறை நிறுவனங்களின் குறைந்த செயல்பாட்டிற்கான காரணங்களாகும்.

IV. விரிவான விடையளிக்கவும்

1.ஊரக மறுசீரமைப்பு தொடர்பாக இந்திய அரசு பின்பற்றிய நடவடிக்கைகளை முன்னிலைப்படுத்துக.

விடை:

1. ஜமீன்தாரி முறை ஒழிப்பு :

•ஜமீன்தார் என்பவர்கள் நில உடைமையாளர் வகுப்பைச் சேர்ந்தவர்களாவர். தங்கள் நிலங்களில் விவசாயம் செய்யும் விவசாயிகளிடமிருந்து குத்தகை வசூல் செய்து அரசுக்கு குறிப்பிட்ட அளவு வரியாக செலுத்துவர்.

•ஜமீன்தார்கள் பொதுவாக விவசாயிகளிடமிருந்து அதிக தொகையினை வசூலித்து அவர்களை வறிய நிலைக்கு உள்ளாக்கினர்.

•இவர்களின் உரிமைகளை ஒழித்து இவர்களிடமிருந்து நிலங்களை மீட்டு விவசாயிகளுக்குத் தருவது அரசின் குறிக்கோளாகும்.

•1951மற்றும் 1955 இல் அரசு நிறைவேற்றிய அரசியல் அமைப்பு சட்டதிருத்தங்கள் மூலம் 1956ல்ஜமீன்தாரி முறை ஒழிப்பு நிறைவு பெற்றது.

•இதன்மூலம் 30 லட்சம் குடியானவர்களும், குத்தகைதாரர்களும் 62 லட்சம் ஹெக்டேர் நிலங்களுக்கு உரிமையாளர்களாயினர்.

•இருந்த போதிலும் இச்சீர்திருத்தத்தின் மூலம் திட்டமிடப்பட்ட நோக்கங்களில் ஒரு சிறுபகுதியை மட்டுமே எட்ட முடிந்தது.

2. குத்தகை சீர்திருத்தம்:

•இந்தியாவில் பயிரிடப்படும் மொத்த நிலத்தில் ஏறத்தாழ 50 விழுக்காடு நிலங்கள் குத்தகை முறையின் கீழ் இருந்தன.

•குத்தகை என்பது பொருளாக, நிலத்தில் விளைந்த விளைச்சலில் குறிப்பிட்ட பங்காக பெறப்பட்டது.

•நில உரிமையாளர்களிடமிருந்து விவசாயிகளை பாதுகாப்பதன் மூலம் விவசாயிகளுக்கு அதிகாரமளிப்பது, என முடிவு செய்தது.

•குத்தகைதாரர்களின் உரிமைகளைப் பாதுகாக்கவும். குத்தகை உரிமையை மரபுரிமையாக்குவதற்கும் இயற்றப்பட்ட சட்டங்கள் வெற்றி பெறவில்லை.

•ஒரு முழுமையான நடைமுறைப்படுத்தக் கூடிய நில உச்ச வரம்பு இல்லாத சூழ்நிலையில் குத்தகை சீர்திருத்தங்கள் பயனற்று போயின.

 

2. சுதந்திர இந்தியாவில் ஏற்பட்ட கல்வி முன்னேற்றம் குறித்து மதிப்பிடுக.

விடை:

•கல்வி மற்றும் சுகாதாரம் ஆகியவை சமூகத் துறையில் இடம் பெற்றிருப்பதோடு கல்வியின் நிலையம் சுகாதாரக் குறிப்பான்களுமே ஒரு நாட்டின் சமூகவளர்ச்சியை மதிப்பிடுவதற்கான அளவுகோல்களாக உள்ளன.

•இந்தியாவில் 1951 இல் 18.3 விழுக்காட்டிலிருந்து எழுத்தறிவு நிலை 2011இல் 74 விழுக்காடாக உயர்ந்துள்ளது.

•ஆண்களில் 82 விழுக்காட்டினரும், பெண்களில் 65 விழுக்காட்டினரும் எழுத்தறிவு பெற்றுள்ளனர். எழுத்தறிவில் பெண்கள் பின்தங்கியிருந்தனர்.

•தொடக்கக் கல்வி முதல் உயர்நிலைப்பள்ளி வரையிலான பள்ளிகளின் எண்ணிக்கை பெருமளவில் அதிகரித்தது.

•மேல்படிப்பு மையங்களின் எண்ணிக்கையும் பெருகிற்று. 2014-15 இல் நாட்டில் 12.72 லட்சம் தொடக்க உயர் தொடக்கப் பள்ளிகளும் 2.45 லட்சம் இடைநிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளும் 38,498 கல்லூரிகளும் 43 மத்தியப் பல்கலைக்கழகங்களும் 316 மாநிலப் பல்கலைக்கழகங்களும் செயல்பட்டன.

•நகர மற்றும் கிராமப்புறங்களில் இடைநிற்கும் குழந்தைகள் பெரும்பாலும் ஏழைக் குடும்பங்களைச் சேர்ந்தோராகவே இருந்தனர்.

•குறிப்பாகப் பெண் குழந்தைகளே இடை நிற்றலில் அதிகமாக இருந்தனர்.

•சேர்க்கை விகிதத்திலும் இடைநிற்றல் விகிதத்திலும் மிகப்பெரும் பிராந்திய வேறுபாடுகள் காணப்பட்டன. ஆகவே பின்தங்கிய மாநிலங்களிலும் பகுதிகளிலும் பள்ளிக் கல்வியின் நிலை மோசமாகவே இருந்தது.

•இடைநிற்றல் பிரச்சனையை தீர்க்க அரசாங்கத்தினால் அனைவருக்கும் கல்வித்திட்டம், அனைவருக்கும் இடைநிலைக் கல்வித் திட்டம் மற்றும் அண்மையில் ஒருங்கிணைக்கப்பட்ட திட்டமான ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டம் போன்றவற்றின் மூலம் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

 

3. முதல் இரண்டு ஐந்தாண்டு திட்டங்களின் சாதனைகளை மதிப்பிடுக.

விடை:

•முதலாவது ஐந்தாண்டு திட்டம் (1951-56) வேளாண்மையை வளர்ப்பதிலும் குறிப்பாக வேளாண் உற்பத்தியிலும் கவனம் செலுத்தியது.

•மொத்த முதலீட்டில் 31 விழுக்காடுகள் வேளாண்மைக்கும் நீர்பாசனத்திற்கும் ஒதுக்கப்பட்டது.

•இதற்கு பின்னர் தொழில் துறைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டது. மொத்த முதலீட்டில் வேளாண்மைக்கான பங்கு 20 விழுக்காட்டிற்கும் 24 விழுக்காட்டிற்கும் இடையே இருந்தது.

•பொதுவாக மகலனோபிஸ்திட்டம் என அறியப்பட்ட இரண்டாவது ஐந்தாண்டு திட்டம் (1956-61)பொருளாதார முன்னேற்றத்தை அடைவதற்கு கரைத் தொழிற்சாலைகளுக்கு முக்கியத்துவம் வழங்கியது. முதலாவது திட்டத்தில் 6 விழுக்காடாக இருந்த தொழில்துறையின் பங்கு இரண்டாவது திட்டத்திற்குப் பின்னர் 24 விழுக்காடாக உயர்ந்தது.

•முதலிரண்டு திட்டங்களும் ஓரளவிற்கு மிதமான 4 விழுக்காடுவளர்ச்சியை இலக்காகக் கொண்டிருந்தன. இதை பொருளாதார நிபுணர்கள் இந்து வளர்ச்சி விகிதம் என அழைத்தனர்.

•இந்த வளர்ச்சி விகிதங்கள் அடையப்பட்டதால் அவை வெற்றி பெற்ற திட்டங்களாகக் கருதப்பட்டன.

 

4. இந்திய விடுதலைக்குப்பின் ஏற்பட்ட அறிவியல் ஆராய்ச்சி மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்கள் வளர்ச்சி குறித்து ஆய்க.

விடை:

அறிவியல் ஆராய்ச்சி நிறுவனங்கள்:

•விடுதலைக்கு முன்னர் இந்தியாவிலிருந்து ஒரேயொரு அறிவியல் ஆய்வு நிறுவனம் 1909இல் J.R.D. டாட்டா மற்றும் மைசூர் மகாராஜா ஆகியோரின் நிதியுதவியில் பெங்களூருவில் அமைக்கப்பட்ட இந்திய அறிவியல் நிறுவனம் மட்டுமேயாகும்.

•1945 இல் முன்னவர் ஹோழி. J.பாபா என்பாரின் முன்னெடுப்பில் டாட்டா என்பவரின் நிதியுதவியுடன் டாட்டா அடிப்படை ஆராய்ச்சி நிறுவனம் நிறுவப்பெற்றது.

•புனேயில் அமைக்கப்பட்ட தேசிய வேதியியல் ஆய்வகம் புதுதில்லியில் அமைக்கப்பட்ட தேசிய இயற்பியல் ஆய்வகம் ஆகியவை நாடு விடுதலை பெற்ற காலத்தில் முதன்முதலாக அமைக்கப்பட்டவை.

ஆராய்ச்சி நிறுவனங்களின் வகைகள்:

அறிவியல் துறையின் வானியற்பியல், மண்ணியல், நிலவியல், சார் இயற்பியல், உயிரணு மற்றும் மூலக்கூறு உயிரியல் கணித அறிவியல் மற்றும் பல பிரிவுகளில் ஆய்வினை மேற்கொள்ளும் நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து பெருகின.

அணுசக்தி ஆணையம்:

அணுச்சக்தி ஆணையமானது அணு அறிவியலின் வளர்ச்சிக்கு மைய முகமையானதாக திகழ்கிறது. அணுச்சக்தி உற்பத்தி அணு ஆயூத உற்பத்தி ஆகிய இரண்டின் மீதும் கவனம் செலுத்தும்.

போர்திறம் சார்ந்த ஆய்வுக்கான பல நிறுவனங்களுக்கு அணுசக்தி ஆணையம் நிதியளிக்கிறது.

வேளாண்மை:

வேளாண்மை வளர்ச்சியும் ஆய்வுகளையும் இந்திய வேளாண்மை ஆய்வுக்கழகம் ஒருங்கிணைக்கிறது. இதன் ஆய்வுகள் வேளாண்மை குறித்து மட்டுமல்லாமல் துணை நடவடிக்கைகளாக மீன் வளர்ப்பு, வனங்கள், பால்வளம், தாவர மரபியல், உயிரி – தொழில் நுட்பம், பல்வேறு பயிர் வகைகளான நெல், உருளைக்கிழங்கு வகைகள், பழங்கள் மற்றும் பூச்சிகளை கட்டுப்படுத்துதல் ஆகிய நடவடிக்கைகளையும் இவ்வமைப்பு மேற்கொள்கிறது.

வேளாண்மை பல்கலைக்கழகங்கள்:

வேளாண்மை பல்கலைக்கழகம் கல்வி கற்பித்தல், வேளாண்மை நடைமுறைகள் குறித்த ஆய்வு ஆகியவற்றில் செயலூக்கத்துடன் ஈடுபட்டுள்ளன.

இந்தியாவில் 67 வேளாண்மை பல்கலைகழகம் உள்ளன. இவற்றில் 3 பல்கலைக்கழகங்கள் தமிழகத்தில் அமைந்துள்ளன.

தொழில்நுட்ப நிறுவனங்கள்:

•இந்தியத் தொழில்நுட்ப நிறுவனங்கள் பொறியியலின் வெவ்வேறு பிரிவுகளுக்காக நிறுவப்பெற்ற சிறப்பு நிறுவனங்களாகும்.

•முதல் IIT கரக்பூரில் நிறுவப்பெற்றது. தொடர்ந்து டெல்லி பம்பாய் கான்பூர் மற்றும் சென்னை ஆகிய இடங்களில் உருவாக்கப்பட்டன.

•இச்சமயம் நமது நாட்டில் 23 IIT கள் செயல்படுகிறது.

•31 தேசிய தொழில்நுட்ப நிறுவனங்களும், 23 இந்திய தகவல் தொழில் நுட்பகழக நிறுவனங்களும் செயல்படுகின்றன.


V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

தாராளமயமாக்கல், உலகமயமாக்கல் மற்றும் தனியார்மயமாக்கல் கொள்கைகளில் நேர்மறை மற்றும் எதிர்மறை விளைவுகள் குறித்த வகுப்பறையில் விவாதம் நடத்தவும்.

Share:

12th History - Lesson 8 - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - Tamil Medium


Lesson 8 - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு

12th History - Lesson 8 - காலனியத்துக்குப் பிந்தைய இந்தியாவின் மறுகட்டமைப்பு - Tamil Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க

அ.ஜேவிபி குழு                      1.1928

ஆ.சர் சிரில் ராட்கிளிஃப்        2.மாநில மறுசீரமைப்பு ஆணையம்

இ. பசல் அலி                          3.1948

ஈ.நேரு குழு அறிக்கை            4.எல்லை வரையறை ஆணையம்

அ.1 2 3 4

ஆ.3 4 2 1

இ. 4 3 2 1

ஈ.4 2 3 1

விடை: ஆ) 3 4 2 1

 

2.பின்வருவனவற்றைக் காலவரிசைப்படி அமைக்கவும்.

(i) இந்திய சுதந்திரம் குறித்த அட்லியின் அறிவிப்பு

(ii) நேருவின் தலைமையிலான இடைக்கால அரசாங்கம்

(iii) மௌண்ட்பேட்டன் திட்டம் கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

அ) ii, i, iii

ஆ) i, ii, iii

இ) iii, ii, i

ஈ) ii, iii,i

விடை: அ) ii,i, iii

 

3.பின்வருவனவற்றைப் பொருத்திச் சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

 

அ.சீன மக்கள் குடியரசு                                       1.பெல்கிரேடு

ஆ.பாண்டுங் மாநாடு                                 2.மார்ச் 1947

இ.ஆசிய உறவுகள் மாநாடு                       3.ஏப்ரல் 1955

ஈ.அணிசேரா இயக்கத்தின் தோற்றம்       4.ஜனவரி 1, 1950

அ.3 4 2 1

ஆ.4 2 3 1

இ.4 3 2 1

ஈ.3 2 4 1

விடை: இ) 4 3 2 1

 

4.பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்க.

(i) சீன மக்கள் குடியரசு

(ii) சீனாவுடனான இந்தியப் போர்

(iii) அரசமைப்பு நிர்ணயச் சபையின் கூட்டம்

(iv) பஞ்சசீலக் கொள்கை

(v) நேரு – லியாகத் அலி கான் ஒப்புதல்

கீழே கொடுக்கப்பட்டுள்ள குறியீடுகளிலிருந்து விடையினை தேர்ந்தெடுக்கவும்.

அ) i, ii, iii, iv,v

ஆ) iii, i, v, iv, ii

இ) iii, iv, i, v, ii

ஈ) i, iii, iv, v, ii

விடை: ஆ) iii,i, v, iv, ii

 

5.மகாத்மா காந்தியடிகள் படுகொலை செய்யப்பட்ட நாள் …………….

அ) ஜனவரி 30, 1948

ஆ) ஆகஸ்ட் 15, 1947

இ) ஜனவரி 30, 1949

ஈ) அக்டோபர் 2, 1948

விடை: அ) ஜனவரி 30, 1948

 

6.ஆந்திர மாநில கோரிக்கையினை முதன் முதலில் எழுப்பியவர் …………….

அ) பொட்டி ஸ்ரீராமுலு

ஆ) பட்டாபி சீத்தாராமையா

இ) கே.எம். பணிக்கர்

ஈ) டி.பிரகாசம்

விடை: ஆ) பட்டாபி சீத்தாராமையா

 

7.அரசமைப்பு நிர்ணயச் சபையில் குறிக்கோள் தீர்மானங்களைக் கொண்டு வந்தவர்

அ) இராஜேந்திர பிரசாத்

ஆ) ஜவகர்லால் நேரு

இ) வல்லபாய் படேல்

ஈ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்

விடை: ஆ) ஜவகர்லால் நேரு

 

8.பி.ஆர். அம்பேத்காரை எந்த தொகுதியிலிருந்து தேர்ந்தெடுப்பதைக் காங்கிரஸ் உறுதி செய்தது? (மார்ச் 20200 )

அ) அமேதி

ஆ) பம்பாய்

இ) நாக்பூர்

ஈ) மகவ்

விடை: ஆ) பம்பாய்

 

9.கூற்று: ராட்கிளிஃபின் எல்லை வரையறை அனைத்து வகையான முரண்பாடுகளையும் கொண்டிருந்தது.

காரணம்: முரண்பாடுகள் இருப்பினும் அது அனைவராலும் ஒரு மனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

அ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை இது

இ) கூற்று சரி காரணம் தவறு.

ஈ) கூற்று தவறு காரணம் சரி

விடை: ஆ) கூற்று மற்றும் காரணம் சரி, காரணம் கூற்றை விளக்கவில்லை.

 

10.அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் எப்போது நடைபெற்றது?

அ) மார்ச் 22, 1949

ஆ) ஜனவரி 26, 1946

இ) டிசம்பர் 9, 1946

ஈ) டிசம்பர் 13, 1946

விடை: இ) டிசம்பர் 9, 1946

 

11.அரசமைப்பு எப்பொழுது ஏற்றுக்கொள்ளப்பட்டது?

அ) ஜனவரி 30, 1949

ஆ) ஆகஸ்ட் 15, 1947

இ) ஜனவரி 30, 1949

ஈ) நவம்பர் 26, 1949

விடை: ஈ) நவம்பர் 26, 1949

 

12.மொழிவாரி அடிப்படையில் அமைக்கப்பட்ட முதல் மாநிலம் ……………

அ) காஷ்மீர்

ஆ) அஸ்ஸாம்

இ) ஆந்திரா

ஈ) ஒரிஸா

விடை: இ ) ஆந்திரா

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.இணைப்புறுதி ஆவணம் பற்றி நீவிர் அறிவது யாது?

விடை:

•இந்திய அரசாங்கச் சட்டம் 1935 கீழ் உருவாக்கப்பட்ட ஒரு சட்டப்பூர்வமான ஆவணம் ஆகும்.

•இந்த ஆவணமே பிரிவினையின் போது இந்திய சுதேச அரசர்கள், இந்தியா அல்லது பாகிஸ்தான் ஆகிய ஏதேனும் ஒரு நாட்டுடன் இணைவதற்கான ஒப்பந்தமாகவும் பயன்படுத்திக் கொள்ளப்பட்டது.

 

2.அரசமைப்பு நிர்ணய சபையின் அமைப்பினை விளக்குக.

விடை:

•1946 டிசம்பர் 9ல் அரசமைப்பு நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது. இராஜேந்திர பிரசாத் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

•B.R.அம்பேத்கார் அரசமைப்பின் வரைவு குழுவின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

•395 சட்டப் பிரிவுகளையும் 8 அட்டவணைகளையும் கொண்ட அரசியல் அமைப்பை தயாரித்தது.

•1950 ஜனவரி 26ல் அரசியல் அமைப்புச் சட்டம் அமலுக்கு வந்தது.

•நீதி, சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்ட இறைமையுடைய குடியரசை ஏற்படுத்த வழிவகுத்தது.

 

3.அரசமைப்பின் ஷரத்து 370ன் முக்கியத்துவம் என்ன?

விடை:

•1949ல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் 21 பகுதியில் திருத்தம் செய்து தற்காலிக மற்றும் மாறுதலுக்கு உட்படுத்துதலின் கீழ் 370 வது பிரிவு வரையறுக்கப்பட்டது.

•உதாரணமாக ஷரத்து 370ன் மூலம் காஷ்மீர் மக்களுக்கு சில சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டுள்ளது.

•ஷரத்து 370ன் படி, சட்டசபை காலம் 6 ஆண்டுகள் இரட்டைக் குடியுரிமை, பாதுகாப்பு, வெளியுறவு விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பு விஷயங்கள் தவிரவேறு ஏதேனும் குறித்து சட்டம் இயற்ற முடியாது. அரசு அம்மாநிலத்தின் அனுமதி பெற்ற பின்னர் சட்டம் இயற்ற முடியும்.

 

4.ஹைதராபாத் சமஸ்தானத்தை இந்திய யூனியனுடன் சேர்க்க எடுக்கப்பட்ட காவல்துறை நடவடிக்கையினை எது நியாயப்படுத்துகிறது?

விடை:

•ஹைதராபாத் நிஜாம் மற்றும் அவரது இராணுவமான இராசாக்கள் மீது தங்கள் கோபத்தை வெளிப்படுத்தி தெலுங்கான மக்கள் இயக்கத்தை கம்யூனிஸ்டுகள் வழி நடத்தினர்.

•இதன் காரணமாகஹைதராபாத் மீது காவல்துறை நடவடிக்கை எடுப்பதற்கு சட்டப்பூர்வமான காரணம் வாய்த்தது.

 

5.ஜே.வி.பி குழு பரிந்துரைகளின் முக்கியத்துவம் என்ன?

விடை:

•மொழிவாரி மாகாணக் கோரிக்கையை ஆராய ஜவஹர்லால் நேரு வல்லபாய்படேல் மற்றும் பட்டாபி சீத்தாராமையா ஆகிய மூவரையும் கொண்ட (J.V.P) ஜே.வி.பி. குழு அமைக்கப்பட்டது.

•இக்குழு மொழிவாரியாக மாநிலங்கள் அமைத்தால் நாட்டு ஒற்றுமை சிதறிவிடும் எனக்கருதியது.

•எதிர்காலத்தில் மாநிலங்களுக்கு இடையிலான எல்லைகளை மறுசீரமைக்கவும், இருக்கின்ற மாநிலங்களிலிருந்து புதிய மாநிலங்களை உருவாக்குவதற்கான வழிவகைகளை திறந்து வைத்தது.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.காஷ்மீர் அரசர் எவ்வாறு இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டார்?

விடை:

•இந்திய விடுதலைக்குச் சில மாதங்களுக்குப்பின் பாகிஸ்தானியர்கள் சிலர் காஷ்மீரைச் சூறையாடிய போது

•காஷ்மீர் மகாராஜா ஹசிங்கால் அதை தடுக்க முடியவில்லை.

•காஷ்மீர் அரசர் இந்திய ராணுவ உதவியை நாடினார்.

•காஷ்மீர் அரசர் இணைப்புறுதி ஆவணத்தில் கையொப்பமிட வல்லபாய்படேல் வற்புறுத்தினார்.

•இதனால் அரசர் இணைப்புறுதி பத்திரத்தில் கையெழுத்திட இசைந்தார்.

•காஷ்மீர் சுதந்திர இந்தியாவின் ஒரு பகுதியானது.

 

2.இந்திய அரசமைப்பின் தனித்தன்மைகள் யாவை?

விடை:

•வயது வந்தோர் அனைவருக்கும் வாக்குரிமை, பாராளுமன்றமுறை அடிப்படை உரிமைகள், அரசுநெறிமுறைக் கோட்பாடுகள் போன்ற அம்சங்களை இந்திய அரசியல் அமைப்பின் சிறப்புக் கூறுகளாகக் கொள்ளலாம்.

•மத்தியில் ஒருமுகத்தன்மையும் கூட்டாட்சித் தலைமையும் ஒரு நிர்வாக அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது.

•அரசாங்கத்தின் அதிகாரங்கள் மிகத் தெளிவாக மத்திய, மாநில பொது ஆகிய மூன்று பட்டியல்களில் கொடுக்கப்பட்டுள்ளன.

 

3.பிரிவினையால் ஏற்பட்ட கடுமையான வி~~வுளைச் சுட்டிக் காட்டுக?

விடை:

•இருநாடுகளிலும் சிறுபான்மையினர் அந்தந்தநாடுகளில் தொடர்ந்து வாழ்ந்தசமயச்சிறுபான்மையினராகவும் குடிமக்களாகவும் வாழவேண்டும் என்ற புரிதலின் அடிப்படையிலேயே இந்தியா பிரிவினை செய்யப்பட்டது.

•இந்து – முஸ்லீம் வன்முறைக்கு இடையே ஏற்பட்ட உயிர்க்கொலைகள் அதிகாரப்பரிமாற்றம் எதிர்பார்த்தது போல் மென்மையாக நடைபெறாது என்பதை உணர்த்தியது.

•வகுப்புவாதக் கலவரங்கள் இந்தியாவெங்கும் நடைபெற்றன குறிப்பாக வங்காளம் மற்றும் பஞ்சாப்பில் அவை அதிகமாக இருந்தன.

•இரண்டு தேசங்கள் உருவான பின்னும் பிரிந்தப் பகுதிகள் இருபக்கமும் வாழ்ந்த சிறுபான்மையின மக்களை பயமும் பாதுகாப்பின்மையும் ஆட்கொண்டிருந்தன.

 

4.பஞ்சசீலக் கொள்கையின் ஐந்து கோட்பாடுகளை விளக்குக.(மார்ச் 2020)

விடை:

பஞ்சசீலக் கொள்கைகள்:

•இரு நாடுகளும் ஒன்றுக்கொன்று அவற்றின் நில எல்லை மற்றும் இறையாண்மையை மதித்து நடத்தல்.

• இரு நாடுகளும் ஒன்றையொன்று ஆக்கிரமிக்காமல் இருத்தல்.

•ஒரு நாடு மற்றொரு நாட்டின் உள் நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.

•இரு நாடுகளுக்கு இடையேயான சமத்துவம் மற்றும் ஒன்றுக்கொன்று பயனடைவதற்கான கூட்டுறவு.

•சமாதான சகவாழ்வு ஆகியவை ஜவஹர்லால் நேருவால் கொண்டுவரப்பட்ட பஞ்சசீல கொள்கைகளாகும்.

IV. விரிவான விடையளிக்கவும்

1.சுதேச அரசுகளை இந்திய ஒன்றியத்துடன் இணைப்பது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினைகள் என்ன?

அவற்றை எவ்வாறு திறமையாக படேல் மற்றும் நேரு கையாண்டனர் என்பதையும் விளக்குக.

விடை:

•இந்திய அரசமைப்பு நிர்ணய சபை ஏற்படுத்தப்பட்டு சுதந்திர அரசமைப்பு வரைவு பணி தொடங்கிய போதே தேசமும் அதன் தலைவர்களும் எதிர்கொள்ள வேண்டி புதிய சவால்கள் இருந்தன.

•அவற்றுள் இந்தியப் பகுதிகள் அல்லது சுதேச அரசுகளை ஒன்றிணைப்பது முக்கியமானதாக இருந்தது.

சுதேச அரசுகளை ஒருங்கிணைத்தல்:

•காஷ்மீர், ஜூனகாத், ஹைதராபாத் ஆகியவைத் தவிர மற்ற சுதேச அரசுகள் அனைத்தும் இணைப்புறுதி ஆவணத்தில் கையெழுத்திட்டு பாதுகாப்பு, வெளியுறவு மற்றும் தகவல் தொடர்பில் இந்தியாவின் மைய ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டன.

சேரமறுத்த சுதேச அரசுகளை இணைத்தல்:

•விடுதலையின் போது 566 சுதேச அரசுகளும் 11 பிரிட்டிஷ் மாகாணங்களும் இருந்தன. வல்லபாய் படேல் தனது திறமையினால் இவ்வரசுகளை ஒன்று இணைக்கும் பணியில் ஈடுபட்டார்.

•ஜூனகாத், காஷ்மீர், ஹைதராபாத் ஆகிய மூன்று சுதேச அரசுகள் இந்திய யூனியனுடன் இணைய மறுத்தன.

ஜூனகாத்:

•ஜூனகாத் ஆட்சியாளர் மக்களின் விருப்பத்திற்கு மாறாக பாகிஸ்தானுடன் இணைய விரும்பினார்.

•வல்லபாய் படேல் இந்திய துருப்புகளை அங்கு அனுப்பி மக்களிடம் கருத்துக் கணிப்பு நடத்தினார்.

•அதன் ஜூனகாத் இந்திய யூனியனுடன் இணைந்தது.

காஷ்மீர்:

•காஷ்மீர் அரசர் ராஜாஹரிசிங் ஆரம்பத்தில் தன்னைசுதந்திர அரசாக எண்ணிக்கொண்டார். பாகிஸ்தானிய ராணுவம் காஷ்மீர் மீது படையெடுத்த போது ஹரிசிங் இந்தியாவின் உதவியை நாடினார்.

•காஷ்மீர் இந்தியாவுடன் இணைக்கப்பட்டால் மட்டுமே, இந்தியா பன்னாட்டுச் சட்டப்படி தனது துருப்புகளை உதவிக்கு அனுப்ப முடியும் என்று பிரதமர் நேரு எடுத்துக் கூறினார்.

•எனவே 1947 அக்டோபர் 26ல் ராஜாஹரிசிங் இணைப்புறுதி பத்திரத்தில் கையெழுத்திட்டார். இதன்படி காஷ்மீர் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி ஆயிற்று.

ஹைதராபாத்:

•ஹைதராபாத் ஆட்சியாளர் நிசாம் இந்திய ஒன்றியத்துடன் இணைய மறுத்தார்.

•பலமுறை எடுத்துக் கூறியும் நிசாம் பணிய மறுத்தமையால் 1948ல் இந்திய துருப்புகள்ஹைதராபாத்துக்குச் சென்றது. நிசாம் சரணடைந்தார்.

•இறுதியாக ஹைதராபாத் இந்திய ஒன்றியத்துடன் இணைந்தது.

 

2.1920 முதல் 1956 வரை இந்திய மாநிலங்கள் மறுசீரமைக்கப்பட்டதின் பல்வேறு நிலைகளைக் கண்டறிக. (மார்ச் 2020 )

விடை:

•1920 ஆம் ஆண்டு முதலே இந்திய விடுதலை இயக்கத்தோடு, மொழிவாரி மாநில கோரிக்கை ஒன்றிணைந்திருந்தது. நாக்பூரில் நடைபெற்ற காங்கிரஸ் கூட்டத்தில் மொழிவாரியான மாகாண காங்கிரஸ் குழுக்கள் அமைக்கப்படுவதன் மூலம் மொழி அடையாளத்தின் அடிப்படையில் அமைந்த தேசிய அடையாளம் பாதுகாக்கப்படும் என்று உறுதி அளித்திருந்தது.

•1928இல் வெளியான நேரு அறிக்கையில் “நிதி மற்றும் நிர்வாக காரணங்களுக்கு உட்பட்டு, பெரும்பான்மை மக்கள் வாழும் இட அடிப்படையில் மாநிலங்களில் மொழி வாரியாக சீரமைப்பதற்கான கோரிக்கை நிறைவேற்றப்பட வேண்டும்” என குறிப்பிட்டார்.

•1946 ஆகஸ்ட் 31 இல் பட்டாபி சீதாராமையா ஆந்திர மாகாணத்திற்கான கோரிக்கையை அரசமைப்பு நிர்ணய சபையின் முன் வைத்தார். ஆனால் அரசமைப்பு வரைவுக்குழு ஆந்திராவிற்கான புவியியல் மாகாண எல்லைகள் வகுக்கப்படும் வரை ஆந்திராவைதனி அலகாக குறிப்பிட முடியாது என்று கருதியது.

•எனவே 1948ஜூன் 17ல் ஜவஹர்லால் நேரு, வல்லபாய்படேல், பட்டாபி சீதாராமையா ஆகியோர் அடங்கிய ஜே.வி.பி. குழுவை அமைத்தது.

•இந்த குழுவும் மொழிவாரி மாநிலம் அமைக்கப்படுவதை ஆதரிக்கவில்லை .

•நாட்டின் பல பகுதிகளில் மொழிவாரி மாநிலங்கள் அமைக்கக் கோரி மக்கள் இயக்கங்கள் நடைபெற்றன.

•ஆந்திராவில் இத்தகைய இயக்கம் தீவிரமடைந்தது. எனவே 1953 ஆம் ஆண்டு ஆந்திரா தனிமாநிலமாக உருவாக்கப்பட்டது.

•சென்னை மாநிலமும் தமிழ் பேசும் மாநிலமாக ஏற்கப்பட்டது.

•1953ல் பிரதமர் ஜவஹர்லால் நேரு நீதிபதி பசல் அலி தலைமையிலான மாநிலங்கள் சீரமைப்புக்குழுவை நியமித்தார். இதில் பண்டிட் குன்ஸ்ரூ . சர்தார் K.M.பணிக்கர் உறுப்பினர்களாக இருந்தார்கள்.

•1955 செப்டம்பர் 30ல் இக்குழுதனது அறிக்கையை அளித்தது. இதன் அடிப்படையில் 1956ல்நாடாளுமன்றம் மாநிலங்கள் சீரமைப்புச் சட்டத்தை நிறைவேற்றியது.

•16 மாநிலங்களும் ஆறு யூனியன் பிரதேசங்களும் இச்சட்டத்தில் இடம் பெற்றன.

•ஹைதராபாத் உள்ளடக்கிய ஆந்திர பிரதேசம், கர்நாடகம், குஜராத், பஞ்சாப், ஹரியான, இமாசல பிரதேசம் போன்ற மொழிவாரி மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.

•இதன் மூலம் 1920இல் இந்திய தேசிய காங்கிரஸ் தொடங்கப்பட்ட மொழிவாரி மாகாண சீரமைப்பு முடிவுக்கு வந்தது.

 

3.இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள் யாவை? அணிசேரா இயக்கத்தில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளை இணைத்ததில் பிரதமர் நேரு அவர்களின் பங்கினை விளக்குக.

விடை:

இந்திய வெளியுறவுக் கொள்கையின் அடிப்படைக் கோட்பாடுகள்:

•காலனிய எதிர்ப்பு (அ) ஏகாதிபத்திய எதிர்ப்பு, இன ஒதுக்கலை எதிர்த்தல்.

•இனவெறியை எதிர்த்தல்.

•வல்லரசு நாடுகளுடன் அணி சேராமை.

•ஆப்பிரிக்க – ஆசிய ஒற்றுமை

•பிற நாடுகளை ஆக்கிரமிக்காமல் இருத்தல்.

•பிறநாடுகளின் உள்நாட்டு நிகழ்வுகளில் தலையிடாமல் இருத்தல்.

•ஒரு நாடு மற்றொரு நாட்டின் இறையாண்மை மற்றும் நில எல்லையை மதித்தல்.

•உலக அமைதி மற்றும் பாதுகாப்பை மேம்படுத்துதல்.

•நாடுகளுக்கிடையேயான அமைதியை நிலை நிறுத்துவதில் வெற்றிடம் ஏற்படாவண்ணம் இருநாடுகளும் -சமநீதியைப் பாதுகாத்தல்.

அணி சேராக் கொள்கையில் ஆசிய ஆப்பிரிக்க நாடுகள்:

•இரண்டாம் உலகப்போருக்குப் பின், அமெரிக்கா (USA) மற்றும் சோவியத் ஒன்றியம் (USSR) ஆகிய இரு வல்லரசு நாடுகளுக்கிடையே ஏற்பட்ட பனிப்போர் காரணமாக இந்திய வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்பட்ட சிக்கலுக்கு இந்தியா அணிசேராக் கொள்கை மூலம் தீர்வு கண்டது.

•உலகுக்கான இந்தியாவின் பங்களிப்பு, இந்திய சீன உறவு மற்றும் பஞ்சசீலக் கொள்கையுடன் மட்டும் நிறைவடையவில்லை. வல்லரசு நாடுகளுடன் கூட்டு சேராத அணி சேராமை என்ற கருத்தாக்கம் வலுப்பெறவும் பாண்டுங் மாநாடு உதவியது.

ஆசிய உறவுக்கான மாநாடு:

•மார்ச் 1947இல் டெல்லியில் நேரு ஏற்பாடு செய்த ஆசிய உறவுக்கான மாநாட்டில் 20 க்கும் மேற்பட்ட நாடுகள் கலந்த கொண்டன. ஆசிய நாடுகளின் விடுதலை மற்றும் உலகில் ஆசியாவின் நிலையை உறுதி செய்தல் என்பதே மாநாட்டின் மையக் கருத்தாகும்.

•இத்தகைய மாநாடு மீண்டும் ஒருமுறை டிசம்பர் 1948இல் இந்தோனேசியாவில் மறுகாலனியாக்கத்திற்கு உட்படுத்த விரும்பிய டச்சுக்காரர்களுக்குப் பதில் கூறும் வகையில் நடத்தப்பட்டது.

•காலனி ஆதிக்க நீக்க முயற்சிகள் 1954 இல் கொழும்பில் நடைபெற்ற ஆசிய தலைவர்கள் மாநாட்டில் மேலும் முன்னெடுக்கப்பட்டது.

பாண்டுங் மாநாடு:

•1955ல் இந்தோனேஷிய நாட்டின் பாண்டூங்மாநாட்டில் ஆப்பிரிக்க ஆசிய நாடுகளின் மாநாடு நடைபெற்றது. பின்னாளில், பெல்கிரேட் நகரில் இந்த நாடுகள் கூடி அணி சேரா இயக்கத்தை தோற்றுவிப்பதற்கான அடித்தளத்தை பாண்டுங் மாநாடு ஏற்படுத்தி கொடுத்தது.

 

V. செயல்பாடுகள் (மாணவர்களுக்கானது)

1. அடையாள அரசியல் தொடர்பான சாதக பாதகங்கள் பற்றி விவாதிக்க சிறப்புக் கூட்டங்களை நடத்துக,

2. ஆசிரியர்கள் கோவிந்த் நிகலானியின் தொலைக்காட்சி படமான Tamas மற்றும் எம்.எஸ். சத்யுவின் “Garam Hawa” படத்தையும் ஆங்கில துணை தலைப்புகளுடன் திரையிடலாம்.

3. குஷ்வந்த்சிங்கின் Trainto Pakistan என்ற சிறப்பான புத்தகத்தை இப்பாடப்பகுதி கருத்துகள் தொடர்பாக வாசிக்கலாம்.

Share:

12th History - Lesson 7 - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - Tamil Medium

12th History - Lesson 7 - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - Tamil Medium

12th History - Lesson 7 - இந்திய தேசிய இயக்கத்தின் இறுதிக்கட்டம் - Tamil Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.தனிநபர் சத்தியாகிரகம் எப்போது தொடங்கியது?

அ) மார்ச் 23, 1940

ஆ) ஆகஸ்ட் 8, 1940

இ) அக்டோபர் 17, 1940

ஈ) ஆகஸ்ட் 9, 1942

விடை: இ) அக்டோபர் 17, 1940

 

2.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. இந்து – முஸ்லீம் கலவரம்         1. மோகன் சிங்

ஆ.ஆகஸ்ட் கொடை    2. கோவிந்த் பல்லப் பந்த்

இ. பிரிவினைத் தீர்மானத்தை முன்மொழிந்தவர்         3. லின்லித்கோ பிரபு

ஈ. இந்திய தேசிய இராணுவம்        4. நவகாளி

அ. 3 4 2 1

ஆ.4 2 1 3

இ. 4 3 2 1

ஈ. 3 2 4 1

விடை: இ) 4 3 2 1

 

3.கிரிப்ஸ் தூதுக்குழு யாருடைய ஆட்சியின் போது இந்தியாவிற்கு வருகை தந்தது?

அ) வேவல் பிரபு

ஆ) லின்லித்கோ பிரபு

இ) மௌண்ட்பேட்டன் பிரபு

ஈ) இவர்களில் யாருமில்லை

விடை: இ) மௌண்ட்பேட்டன் பிரபு

 

4.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

அ. அமெரிக்கக் குடியரசுத் தலைவர்                   1. டோஜா

ஆ. சீனக் குடியரசுத் தலைவர்                              2. வின்ஸ்ட ன் சர்ச்சில்

இ.பிரிட்டிஷ் பிரதமர்                                 3. ஷியாங் கே ஷேக்

ஈ. ஜப்பான் பிரதமர்                                   4. எஃப்.டி. ரூஸ்வெல்ட்

அ. 1 4 3 2

ஆ. 1 3 2 4

இ.4 3 2 1

ஈ. 4 2 3 1

விடை: இ) 4321

 

5.சுபாஷ் சந்திர போஸ் எந்த ஆண்டு காங்கிரஸிலிருந்து நீக்கப்பட்டார்?

அ) 1938

ஆ) 1939

இ) 1940

ஈ) 1942

விடை: ஆ) 1939

 

6.மகாத்மா காந்தியடிகளின் “செய் அல்லது செத்துமடி” என எந்த நிகழ்வின்போது அழைப்பு விடுத்தார்?

அ) சட்டமறுப்பு இயக்கம்

ஆ) ஒத்துழையாமை இயக்கம்

இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

ஈ) இவை அனைத்தும்

விடை: இ) வெள்ளையனே வெளியேறு இயக்கம்

 

7.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போது பம்பாயில் இரகசிய வானொலி நிலையத்தை நடத்தியவர் யார்?

அ) உஷா மேத்தா

ஆ) பிரீத்தி வதேதார்

இ) ஆசப் அலி

ஈ) கேப்டன் லட்சுமி

விடை: அ) உஷா மேத்தா

 

8.இந்திய தேசிய இராணுவப்படை வீரர்கள் சார்பாக நீதிமன்றத்தில் வாதாடியவர் யார்?

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) மோதிலால் நேரு

இ) இராஜாஜி

ஈ) சுபாஷ் சந்திர போஸ்

விடை: அ) ஜவஹர்லால் நேரு

 

9.1942இல் வெள்ளையனே வெளியேறு இயக்கம் தொடங்கப்பட்ட போது இந்தியாவின் அரசபிரதிநிதி யார்?

அ) வேவல் பிரபு

ஆ) லின்லித்கோ பிரபு

இ) மௌண்ட்பேட்டன் பிரபு

ஈ) வின்ஸ்ட ன் சர்ச்சில்

விடை: ஆ) லின்லித்கோ பிரபு

 

10.கூற்று: வெள்ளையனே வெளியேறு இயக்கம் அதன் குறிக்கோளை அடையவில்லை.

காரணம்: அப்போதைய பிரிட்டிஷ் அரசு கடுமையான அடக்கு முறையைப் பின்பற்றியது.

அ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது

ஆ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்கவில்லை.

இ) கூற்று சரி ஆனால் காரணம் தவறு –

ஈ) கூற்று தவறு ஆனால் காரணம் சரி

விடை: அ) கூற்று மற்றும் காரணம் சரி காரணம் கூற்றை விளக்குகிறது

 

11.இந்திய தேசிய இராணுவம் எந்த நாட்டு உதவியுடன் நிறுவப்பட்டது?

அ) ஜெர்மனி

ஆ) ஜப்பான்

இ) பிரான்ஸ்

ஈ) அமெரிக்க ஐக்கிய நாடுகள்

விடை: ஆ) ஜப்பான்

 

12.இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் படைப்பிரிவின் பெயர்………………………… ஆகும்.

அ) சுபாஷ் படைப்பிரிவு

ஆ) கஸ்தூர்பா படைப்பிரிவு

இ) கேப்டன் லட்சுமி படைப்பிரிவு

ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு

விடை: ஈ) ஜான்ஸி ராணி படைப்பிரிவு

 

13.சுதந்திர இந்தியாவின் தற்காலிக அரசாங்கத்தைச் சுபாஷ் சந்திர போஸ் எங்கு ஏற்படுத்தினார்?

அ) இரங்கூன்

ஆ) மலேயா

இ) இம்பால்

ஈ) சிங்கப்பூர்

விடை: ஈ) சிங்கப்பூர்

 

14.இந்திய தேசிய இராணுவப் படை மீதான விசாரணை எங்கு நடைபெற்றது?

அ) செங்கோட்டை, புதுடெல்லி

ஆ) பினாங்

இ) வைஸ்ரீகல் லாட்ஜ், சிம்லா

ஈ) சிங்கப்பூர்

விடை: அ) செங்கோட்டை, புதுடெல்லி

 

15.1945இல் சிம்லா மாநாட்டைக் கூட்டிய அரசபிரதிநிதி

அ) வேவல் பிரபு

ஆ) லின்லித்கோ பிரபு

இ) மௌண்ட்பேட்டன் பிரபு

ஈ) கிளமண்ட் அட்லி

விடை: அ) வேவல் பிரபு

 

16.1946இல் இடைக்கால அரசாங்கம் யாருடைய தலைமையில் அமைக்கப்பட்டது?

அ) ஜவஹர்லால் நேரு

ஆ) மௌலானா அபுல் கலாம் ஆசாத்

இ) ராஜேந்திர பிரசாத்

ஈ) வல்லபாய் படேல்

விடை: அ) ஜவஹர்லால் நேரு

 

17.சரியான வரிசையில் அமைத்து விடையைத் தேர்வு செய்க.

(i) இந்திய தேசிய இராணுவம் தோற்றுவிக்கப்படுதல்

(ii) இராயல் இந்திய கடற்படைக் கலகம்

(iii) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

(iv) இராஜாஜி திட்டம்

அ) ii, i, iii, iv

ஆ) i, iv, iii, ii

இ) iii, iv, i, ii

ஈ) iii, iv, ii, i

விடை: அ) ii, i, iii, iv

 

18.பின்வரும் நிகழ்வுகளின் சரியான வரிசையைத் தேர்வு செய்க.

(i) இந்திய தேசிய இராணுவம் மீதான விசாரணை

(ii) நேரடி நடவடிக்கை நாள்

(iii) ஆகஸ்ட் கொடை

(iv) தனிநபர் சத்தியாகிரகம்

அ) i, ii, iii, iv

ஆ) iii, i, ii, iv

இ) iii, iv, i, ii

ஈ) i. iii, iv, ii

விடை: இ) iii, iv, i, ii

 

19.இந்தியர் கைகளுக்கு அதிகாரம் மாற்றப்படும் என அறிவித்த பிரிட்டிஷ் பிரதமர் யார்?

அ) வின்ஸ்ட ன் சர்ச்சில்

ஆ) மௌண்ட்பேட்டன் பிரபு

இ) கிளமண்ட் அட்லி

ஈ) F.D.ரூஸ்வெல்ட்

விடை: இ) கிளமண்ட் அட்லி

 

20.பிரிட்டிஷார் எந்தக் காலத்திற்குள் இந்தியாவை விட்டு வெளியேற முடிவு செய்தனர்?

அ) ஆகஸ்ட் 15, 1947

ஆ) ஜனவரி 26, 1950

இ) ஜூன், 1948

ஈ) டிசம்பர், 1949

விடை: இ) ஜூன், 1948

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.லாகூர் தீர்மானத்தின் முக்கியத்துவம் என்ன?

விடை:

•1929-ஆம் ஆண்டு ஜவஹர்லால் நேரு தலைமையில் காங்கிரஸ் மாநாடு லாகூரில் நடைபெற்றது. அம்மாநாட்டில் முதன் முறையாக, முழு விடுதலை வேண்டி தீர்மானம் இயற்றப்பட்டது.

•பூர்ண சுதந்திரம் அடைவதே, காங்கிரசின் குறிக்கோள் என அறிவிக்கப்பட்டது.

•உப்பு வரியை எதிர்த்து சட்டமறுப்பு இயக்கம் நடத்தவும் தீர்மானிக்கப்பட்டது.

 

2.ஆகஸ்ட் கொடையின் சிறப்பைக் கூறுக?

விடை:

•லின்லித்கோ பிரபுவால் ஆகஸ்ட் கொடை 8 ஆகஸ்ட் 1940 அன்று அறிவிக்கப்பட்டது.

•வரையறுக்கப்படாத ஒரு தேதியில் டொமினியன் அந்தஸ்து, அதிகமான இந்தியர்களைக் கொண்டு செயற்குழுவை விரிவாக்கம் செய்தல்.

•இந்திய உறுப்பினர்களை கொண்ட போர் ஆலோசனைக் குழுவை உருவாக்கல்

•சிறுபான்மையினரின் உரிமைகளை அங்கீகரித்தல்

•போருக்குப் பின் இந்திய மக்கள் தங்களுக்கென்ற ஒரு அரசியல் சாசனத்தை இயற்ற உள்ள உரிமையை ஏற்று அதற்கு வாய்ப்பளிக்க உறுதியளித்தல் இதுவே ஆகஸ்ட் நன்கொடையின் சிறப்பாகும்.

 

3.கிரிப்ஸ் முன்மொழிவைக் காங்கிரஸ் ஏன் நிராகரித்தது?

விடை:

கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தல்:

•டொமினியன் அந்தஸ்து வழங்குவதென்பது ஏமாற்றமளிக்கக் கூடிய குறுகிய நடவடிக்கையாகும்.

•அரசியல் சாசன வரைவுக்குழுவில் பங்கெடுக்கும் அரசாட்சி நடைபெற்ற மாகாணங்களைச் சேர்ந்தோர் பிற மாகாணங்களைப் போல் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கு மாற்றாக உறுப்பினர்களால் நியமிக்கப்படும் முறையை காங்கிரஸ் நிராகரித்தது.

•இவை அனைத்துக்கும் மேலாக ஓங்கி நின்றது இந்தியப் பிரிவினை பற்றிய குழப்பமாகும். எனவே கிரிப்ஸின் முன்மொழிவை காங்கிரஸ் நிராகரித்தது.

 

4.சிம்லா மாநாட்டின் பேச்சுவார்த்தைகள் ஏன் முறிந்தன?

விடை:

சிம்லா மாநாடு:

•வைஸ்ராய் வேவல் பிரபு ஜூன் 1945இல் பிரதமர் சர்ச்சிலின் ஒப்புதல் பெற்று சிம்லா மாநாட்டைக் கூட்டினார்.

•வைஸ்ராய்வைத்த முன்மொழிவின்படிவைஸ்ராய், முப்படைகளின் தளபதி இந்தியாவின் சாதி இந்துக்கள், முஸ்லீம்கள் சமஅளவில் முக்கியத்துவம் அளித்து பிரதிநிதித்துவமும், பட்டியல் இனங்களுக்கென்று தனிப்பிரதித்துவமும் வழங்கப்பட்டு புதிய அரசியல் சாசனம் பற்றிய உரையாடலைத் துவங்கத் திட்டமிடப்பட்டது.

•இம்முன்மொழிவு யாருக்கும் திருப்தியாய் இல்லை.

•தீர்மானமெனத்தையும் எட்டாமலேயே 25 ஜூன் முதல் 14 ஜூலை வரை நடந்த சிம்லா மாநாடு முடிவுந்தது.

•குறிப்பாக வைஸ்ராயின் குழுவிற்கு உறுப்பினர்களை அனுப்புவதில் இந்திய தேசிய காங்கிரஸிற்கும், முஸ்லீம்

•லீகிற்கும் இருந்த உரிமைப் பற்றியப் பிரச்சனையை முன்வைத்தே பேச்சுவார்த்தை முறிவடைந்தது.

5.கேப்டன் மோகன் சிங் எவ்வாறு இந்திய இராணுவத்தை ஏற்படுத்தினார்?

விடை:

•தென்கிழக்கு ஆசியாவில் நிலை கொண்டிருந்த பிரிட்டிஷ் இந்தியப் படை வீரர்களால் ஜப்பானியப் படைகளுக்கு ஈடு கொடுத்து நிற்க முடியவில்லை.

•பிரிட்டிஷ் இந்திய படைகளின் அதிகாரிகள் அவர்களின் கீழிருந்த படை வீரர்களை போர்க் கைதிகளாக விடுவித்துவிட்டு ஓட்டம் பிடித்தனர்.

•மலேயாவில் இவ்வாறு கைவிடப்பட்ட பட்டிஷ் இந்திய இராணுவத்தின் அதிகாரியான கேப்டன் மோகன் சிங் ஜப்பானியர்களின் உதவியை நாடினார்.

•ஜப்பானின் கட்டுப்பாட்டில் இருந்த போர்க் கைதிகள் யாவரும் மோகன் சிங்கின் தலைமையின் கீழ் விடப்பட்டனர்.

•ஜப்பானிடம் சிங்கப்பூர் வீழ்ந்ததால் மேலும் பல போர்க் கைதிகள் உருவானதில் மோகன்ராஜ் சிங்கின் கட்டுப்பாட்டில் 45,000 போர்வீரர்கள் வந்தனர்.

•இவர்களில் 40,000 பேரைத் தேர்ந்தெடுத்து 1942இன் இறுதியில் இந்திய தேசிய இராணுவத்தை கேப்டன் மோகன் சிங் ஏற்படுத்தினார்.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்காத அமைப்புகளின் பெயரை எழுதுக.

விடை:

•முஸ்லீம் லீக்

•ஷிரோமணி அகாலிதல்

•இந்து மஹாசபா ஆகிய அமைப்புகள் வெள்ளையனே வெளியேறு இயக்கத்தில் பங்கேற்கவில்லை.

 

2.சர் ஸ்டாஃபோர்டு கிரிப்ஸ் அவர்களின் முன்மொழிவுகளை விவாதிக்கவும்.

விடை:

•இந்தியாவை பொறுத்தமட்டில் விரைவில் சுயாட்சியை உணர்த்தும் அரசு முறையை நிறுவுதல் என்று மொழிந்திருந்தார். ஆனால் அவர் வெளியிட்ட வரைவில் விடுதலை பற்றிய உறுதியான நிலைப்பாடு ஏதும் இருக்கவில்லை .

•அரசியல் சாசன வரைவுக்குழு – மாகாண சபைகளில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களைக் கொண்டும், அரசர்கள் கட்டுப்பாட்டில் இருந்த பகுதிகளில் இருந்து நியமிக்கப்பட்டவர்களாலும் ஏற்படுத்தப்படும் என்றும் சொல்லப்பட்டிருந்தது.

•ஏதாவது ஒரு மாகாணத்திற்கு புதிய அரசியல் சாசனத்தை ஏற்றுக் கொள்ளத் தயக்கமிருந்தால், அம்மாகாணம் தனது எதிர்காலத்தை நிர்ணயிக்க பிரிட்டிஷ் அரசோடு தனிப்பட்ட ஒப்பந்தம் ஏற்படுத்த உரிமை இருப்பதாக கிரிப்ஸ் முன்மொழிவு அறிவித்தது. இதில் பழைய வரைவுகளிலிருந்து மாற்றம் இருப்பதாக தெரியவில்லை.

•இது பற்றி நேரு, “நான் முதன் முறையாக இவ்வரைவை வாசித்தபோது கடுமையான மனஅழுத்தத்திற்கு உட்பட்டேன்” என்று கூறியுள்ளார்.

 

3.இந்திய தேசிய காங்கிரஸிலிருந்து சுபாஷ் சந்திர போஸ் நீக்கப்பட்டதற்கான காரணங்களை விளக்குக.

விடை:

•இந்திய தேசிய காங்கிரஸில் சுபாஷ் சந்திரபோஸ் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டமை காந்தியடிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

•காங்கிரஸிற்குள் சுபாஷ் சந்திரபோஸ் ஓரங்கட்டப்பட்டதால் அவ்வமைப்பின் மேல்மட்டத் தலைவர்கள் அவரோடு ஒத்துழைக்க மறுத்தனர். அதனால் கல்கத்தாவில் கூடிய அனைத்திந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில் போஸ் இராஜினாமா செய்தார்.

•பின்னர் ஃபார்வர்டு பிளாக் கட்சியை துவக்கியதோடு அதைத் தொடர்ந்து இந்திய தேசிய ராணுவத்தையும்

•உருவாக்கி காங்கிரஸ் இயக்கத்தில் இருந்து தனித்து புரட்சிகர நடவடிக்கைகளில் ஈடுபட்டார். எனவே ஆகஸ்ட் 1939ல் சுபாஷ் சந்திரபோஸ் காங்கிரஸின் அனைத்துப் பொறுப்புகளில் இருந்தும் நீக்கப்பட்டார்.

 

4.1946இல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம்பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் யாவர்?

விடை:

முகம்மது அலி ஜின்னா, லியாகத் அலிகான், முகமது இஸ்மாயில்கான் மற்றும் குவாஜா சர் நிஜாமுதீன் ஆகியோர் 1946ல் ஏற்படுத்தப்பட்ட இடைக்கால அரசாங்கத்தில் இடம் பெற்ற முஸ்லீம் லீக் பிரதிநிதிகள் ஆவர்.

 

5.எத்தகைய சூழ்நிலையில் காந்தியடிகள் வெள்ளையனே வெளியேறு இயக்கம் பற்றி சிந்தித்தார்?

விடை:

•துவக்கத்திலிருந்தே இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தையும், காந்தியடிகளையும் சர்ச்சில் வெறுப்புணர்வோடே அணுகி வந்தார். > போரில் இந்தியர்களின் ஒத்துழைப்பு தேவை என்ற போதும் அவர்தம் போக்கில் மாற்றம் ஏற்படவில்லை.

•இதற்கிடையே ஒருபுறம் விடுதலைக்கான எந்த உறுதியும் கொடுக்காமல் காலணிய அரசு இழுத்தடித்தது.

•மறுபுறம் சுபாஷ் சந்திரபோஸ் அச்சு நாடுகளோடு கைகோர்த்து சுதந்திர போராட்டத்தை முன்னெடுத்துச்

•செல்ல நெருக்கடி கொடுத்தார்.

•1942ல் ஜெர்மனியில் இருந்து போஸ் ஆசாத் ஹிந்து ரேடியோ மூலம் இந்திய மக்களை தொடர்பு

•கொண்டு உரை நிகழ்த்தினார். இப்பின்புலத்தில்தான் காந்தியடிகள் ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கம் பற்றி சிந்திக்கலானார்.

 

IV. விரிவான விடையளிக்கவும்

1. வெள்ளையனே வெளியேறு இயக்கத்தின் போக்கினை விவாதிக்கவும்.

விடை:

வெள்ளையனே வெளியேறு இயக்கம்:

•கிரிப்ஸ் தூதுக்குழுவின் தோல்வியால் காந்தி ஏமாற்றமடைந்தார். இயக்கத் தலைமையைக் காந்தியடிகளிடத்துக் காங்கிரஸ் ஒப்படைத்தது.

•ஆகஸ்டு 8, 1942ல் காங்கிரஸ் மாநாடு தீர்மானம் நிறைவேற்றி ஆங்கிலேயரை இந்தியாவை விட்டு வெளியேறும்படி கூறியது. விடுதலைக்கான கடைசி போராட்டம் என்று காந்தி அறிவித்தார். அவர் நிகழ்த்திய உரையில் ‘செய் அல்லது செத்துமடி’ என்பதே முடிவு என அறிவித்தார்.

•ஆங்கிலேயரின் ஆட்சியை முடிவிற்குக் கொண்டு வரும்படி காங்கிரஸ் கோரிக்கை வைத்தது. காங்கிரஸ் தடை செய்யப்பட்டது.

•எல்லா முதன்மை தலைவர்களும் கைதாயினர். அடக்கு முறையையும் கொடுங்கோண்மையையும் அப்பாவி மக்கள் மீது அரசு ஏவியது.

•ஆகஸ்டு 9ல் மும்பை, அகமதாபாத் மற்றும் புனேயில் அமைதியின்மை ஏற்பட்டது. ஆகஸ்ட் 11ல் நிலைமை விரைந்து மோசமானது.

இயக்கத்தின் போக்கு:

•தீவைப்பு, கொள்ளை, படுகொலை ஆகியவற்றில் மக்கள் இறங்கித் தண்டவாளங்களை பெயர்த்துக் காவல் நிலையம், புகைவண்டி நிலையம் ஆகியவற்றிற்குத் தீ வைத்தனர். இந்தியாவை விட்டு வெளியேறுக இயக்கம் தென்னிந்தியாவிலும் பெரும் ஆதரவு பெற்றது.

•எதிர்ப்பின் ஆரம்பக்கட்டம் நகர்புறங்களை மையமாகக் கொண்டும் இரண்டாம் நிலையில் அது கிராமப்புறங்களிலும் பரவியது.

•காங்கிரஸிற்குள் இருந்த சோசலிஷவாதிகள் தலைமறைவாக இருந்து கிராமத்து இளைஞர்களைக் கொரில்லா முறையில் ஒருங்கிணைத்தனர்.

•காந்தியடிகளின் 10 பிப்ரவரி 1943ல் துவங்கி 21 நாட்கள் உண்ணாவிரதம் ஒரு திருப்பு முனையாக அமைந்தது இயக்கத்திற்கு வலுவேற்றியது.

இயக்கத்தின் தீவிரம்:

•துப்பாக்கிச் சூட்டுக்கு பலியானவர்கள் 1060 பேர். அரசின் 208 காவல் கண்காணிப்பு நிலைகளும், 332 இருப்பு பாதை நிலையங்களும் 945 அஞ்சல் அலுவலகங்களும் முற்றிலும் அழிக்கப்பட்டன.

•205 காவல்துறை வீரர்களாவது தங்கள் பணியை விடுத்து புரட்சியாளர்களோடு கைகோர்த்தனர்.

வானொலி பயன்படுத்தப்படல்:

•“வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தின் மற்றொரு சிறப்பம்சம் புரட்சியாளர்கள் பம்பாய் நகரில் வானொலி ஒலிபரப்பு முறையை நிறுவி இதன் ஒலிபரப்பு மெட்ராஸ் வரை கேட்கப்பட்டது. இதற்கு வித்திட்டவர் உஷா மேத்தா என்பவராவார்.

•இதுவரை இல்லாத அளவிற்கு வெள்ளையனே வெளியேறு இயக்கம் காலனிய அரசுக்குப் பேரிடியாக சென்று விழுந்தது.

•இவ்வியக்கம் எந்நிலையிலும் எதிர்பார்த்திருக்க முடியாத அளவிற்கு மக்களின் பேராதரவைக் கொண்டு வந்து சேர்த்ததோடு அவர்களின் ஒற்றுமையை வெளிப்படுத்தி காலனிய ஆட்சியாளர்களுக்கு தாங்கள் தவிர்க்க முடியாத பெரும் சக்தி என்ற உண்மையைப் பறை சாற்றியது.

 

2.சுதந்திரப் போராட்டத்தை இந்திய தேசிய இராணுவ விசாரணை எவ்வாறு தீவிரப்படுத்தியது?

விடை:

•டெல்லியின் செங்கோட்டையில் இந்திய தேசிய இராணுவத்தின் மீது நடத்தப்பட்ட விசாரணையில் காந்தியடிகளின் குரலுக்கு இசைந்து 1920களின் ஆரம்பத்தில் தனது சட்டப்பணிகளை துறந்த ஜவஹர்லால் நேரு நீண்ட இடைவேளைக்குப் பின் தனது தொங்கலாடையை அணிந்து இந்திய தேசிய இராணுவ வீரர்களின் சார்பில் வழக்கில் ஆஜரானார்.

•காலனிய அரசின் பிடிவாதமான முரட்டுப்போக்கு மற்றுமொரு பேரியக்கத்திற்கு மேடையமைத்துக் கொடுத்தது.

•இந்திய தேசிய காங்கிரசும் 25 ஜூன் முதல் 10 ஜூலை 1945 வரை நடைபெற்ற சிம்லா மாநாட்டில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததையடுத்து நேரடியாக மக்களைத் திரட்டும் பொருட்டு நாடு முழுவதும் பொதுக் கூட்டங்களை நடத்தியது.

•அண்மையில் இந்திய அரசியல் சட்டம் 1935இன் கீழ் தேர்தல் வருவதாக இருந்தாலும் இக்கூட்டங்களில்

•ஓட்டுக் கேட்பதைவிட பெரும்பாலும் இந்திய தேசிய இராணுவ விசாரணையைப் பற்றியே பேசப்பட்டது.

•இப்பின்புலத்தில் காலனிய அதிகாரம் ஷா நவாஸ் கான், P.K. ஷெகல் மற்றும் G.S. தில்லோம் ஆகிய

•மூன்று முக்கிய அதிகாரிகளைப் பிரித்தெடுத்து விசாரணை நடத்தியது.

•கடையடைப்புகளும், ஊர்வலங்களும் பொது வேலைநிறுத்தங்களும் இந்திய தேசிய இராணுவ வாரம் 1 கடைபிடிக்கப்பட்ட போது நடந்தேறியதோடு வீரர்களின் உடனடி விடுதலையும் வலியுறுத்தப்பட்டது.

 

3.இராஜாஜி திட்டம் பற்றி ஒரு பத்தி எழுதுக.

விடை:

•போருக்குப் பின்பு ஒரு ஆணையத்தின் மூலம் இஸ்லாமியர்கள் முழு பெரும்பான்மையில் வாழும் தொடர் மாவட்டங்களைப் பிரித்தெடுத்து அங்கே வயது தகுதி அடைந்தோரைக் கொண்டு வாக்கெடுப்பு நடத்தி பாகிஸ்தான் உருவாக்கம் பற்றிய முடிவை எடுத்தல் வேண்டும்.

•ஒரு வேளை ஓட்டெடுப்பின் முடிவில் பிரிவினை உறுதி செய்யப்பட்டால், அம்முக்கிய பணிகளான பாதுகாப்பு, தொலைத் தொடர்பு போன்றவற்றை பொதுவில் செயல்படுத்த ஒப்பந்தம் ஏற்படுத்தல் வேண்டும்.

•எல்லையில் அமையப் பெற்ற மாவட்டங்களுக்கு இரு இறையாண்மை கொண்ட நாடுகளில் ஏதோ ஒன்றில் சேர்ந்து கொள்ள வாய்ப்பளிக்கப்பட வேண்டும்.

•இத்திட்டங்கள் யாவும் முழுமையான அதிகார மாற்றம் ஏற்பட்ட பின் செயல்முறைக்குக் கொண்டு வரப்படுதல் வேண்டும்.

 

4.இந்திய விடுதலை இயக்க வரலாற்றில் கப்பற்படை கலகம் ஒரு சிறப்பான அத்தியாயம் என ஏன் கருதப்படுகிறது?

விடை:

•போரினால் ஏற்பட்ட பொருளாதார பாதிப்பு, விலைவாசி ஏற்றத்திலும், உணவு, தானிய பற்றாக்குறையிலும் போர்கால தொழிற்சாலைகள் மூடப்பட்டதின் மூலமாகவும் வேலையில்லா திண்டாட்டத்தின் மூலமும் பிரிட்டிசாருக்கு எதிரான உணர்வாக கிளம்பி இந்திய தேசிய இராணுவ விசாரணை எதிர்ப்பு இயக்கங்களோடு கலந்தன.

•HMIS தல்வார் என்ற போர் கப்பலில் மாலுமியாக பணியாற்றிய B.C. தத் என்பவர் அக்கப்பலின் பக்கவாட்டில் வெள்ளையனே வெளியேறு என்று எழுதினார்.

•இதனையடுத்து அக்கப்பலில் மாலுமியாக பணியாற்றிய 1100 மாலுமிகள் உடனடியாக போராட்டத்தில் இறங்கினர்.

•தத்தின் கைது நடவடிக்கை 18 பிப்ரவரி 1946 அன்று வெடித்து கிளம்பிய கிளர்ச்சிக்கு உந்துவிசையாக அமைந்தது.

•அதன் மறுநாள் கோட்டைக் கொத்தளத்தில் பணியிலிருந்த மாலுமிகளும் அதிக எண்ணிக்கையில் கிளர்ச்சியில் இருந்ததோடு, பம்பாய் நகரை வாகனங்களில் வலம் வந்தவாறே காங்கிரஸ் கொடியை ஏந்தி அசைக்கவும் பிரிட்டிஷ் விரோதக் கூச்சல்களை எழுப்பினர்.

•விரைவில் ஜவுளித் தொழிற்சாலை ஊழியர்களும் ஆதரவுப் போராட்டத்தில் இறங்கினர்.

•போராட்ட அலை கடற்படை முழுவதும் பரவியதால் 78 கப்பல்களிலும் 20 கரை சார்ந்த பணியிடங்களிலும் இருந்த 20,000 மாலுமிகள் 18 பிப்ரவரிக்குப் பின் போராட்டத்தில் இறங்கியிருந்தனர்.

•மாலுமிகளின் போராட்டத்திற்கு ஆதரவாக பம்பாய், பூனா, கல்கத்தா, ஜெசூர், அம்பால நகரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இராயல் இந்திய விமானப் படை ஊழியர்களும் ஆர்ப்பாட்டத்தில் இறங்கினர்.

•போராட்டத்தில் ஈடுபட்ட மாலுமிகள் பல்வேறு துறைமுகங்களிலும் கப்பலின் முகட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட், மற்றும் முஸ்லிம் லீக் கட்சிகளின் கொடிகளை ஒருங்கே கட்டியிருந்தனர்.

•பம்பாய், கல்கத்தா, மெட்ராஸ் நகரங்களின் தொழிற்சங்கப் போராட்டங்கள் மாலுமிகளுக்கு ஆதரவாக வெளிப்பட்டுக் காலனிய இறுதியில் மாலுமிகள் சரணடைய வேண்டியதாயிற்று.

•இராயல் இந்தியக் கடற்படை மாலுமிகளின் போராட்டம் இந்திய தேசிய இயக்க வரலாற்றில் ஒரு உன்னதமானப் பக்கம் என்பதோடு ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தின் கடைசி அத்தியாயமாகவும் திகழ்கிறது

Share:

12th History - Lesson 6 - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - Tamil Medium

Lesson 6 - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம்

12th History - Lesson 6 - தேசியவாத அரசியலில் வகுப்புவாதம் - Tamil Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.முகலாயர் காலத்தில் அலுவலக மற்றும் நீதிமன்ற மொழியாக விளங்கியது எது? (மார்ச் 2020 )

அ) உருது

ஆ) இந்தி

இ) மராத்தி

ஈ) பாரசீகம்

விடை: ஈ) பாரசீகம்

 

2.லண்டன் பிரிவிக் கவுன்சிலில் இடம்பெற்ற முதல் இந்தியர் ………….

அ) ரஹமத்துல்லா சயானி

ஆ) சர் சையது அகமது கான்

இ) சையது அமீர் அலி

ஈ) பஃருதீன் தயாப்ஜி

விடை: இ) சையது அமீர் அலி

 

3. கூற்று: 1870இல் வங்காள அரசாங்க ஆணை இஸ்லாமிய தொழில்வல்லுநர் குழுக்களிடையே ஐயங்களை ஏற்படுத்தியது.

காரணம்: அவ்வாணை உருது மொழி பாரசீக அரபி எழுத்து முறைக்குப் பதிலாக இந்தியைக் கொண்டு வந்தது.

அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

ஆ) கூற்று சரி காரணம் கூற்றை விளக்குகிறது

இ) கூற்று தவறு காரணம் சரி

ஈ) கூற்று, காரணம் இரண்டும் தவறு

விடை: அ) கூற்று சரி ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

 

4..இரு நாடு கொள்கையை முதன்முதலில் கொண்டு வந்தவர் …….

அ) இராஜாஜி

ஆ) ராம்சே மெக்டோனால்டு

இ)முகமது இக்பால்

ஈ) சர்வாசிர் ஹசன்

விடை: ஈ) சர் வாசிர் ஹசன்

 

5.1937 இல் நடைபெற்ற தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது

அ)12 மாகாணங்கள்

ஆ) 7 மாகாணங்கள்

இ)5 மாகாணங்கள்

ஈ) 8 மாகாணங்கள்

விடை: ஆ) 7 மாகாணங்கள்

 

6.காங்கிரஸ் ஆட்சி முடிவுக்கு வந்த நாளினை முஸ்லிம் லீக் மீட்பு நாளாக கொண்டாடியது.

அ) 22 டிசம்பர், 1940

ஆ) 5 பிப்ரவரி, 1939

இ) 23 மார்ச், 1937

ஈ) 22 டிசம்பர், 1939

விடை: ஈ) 22 டிசம்பர், 1939

 

7.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்வு செய்க.

பட்டியல் I                                        பட்டியல் II

அ.அன்னிபெசண்ட்                          1.அலிகார் இயக்கம்

ஆ.சையது அகமது கான்                 2. தயானந்த சரஸ்வதி

இ.கிலாபத் இயக்கம்                       3.பிரம்மஞான சபை

ஈ.சுத்தி இயக்கம்                               4.அலி சகோதரர்கள்

அ.3 1 4 2

ஆ.1 2 3 4

இ.4 3 2 1

ஈ.2 3 4 1

விடை: அ) 3 1 4 2

 

8.பின்வரும் கூற்றுகளிலிருந்து சரியானவற்றைத் தேர்வு செய்க.

i) அலிகார் இயக்கத்தைத் தோற்றுவித்த சர் சையது அகமது தொடக்கத்தில் காங்கிரசை ஆதரித்தார்.

ii) 1909இல்தோற்றுவிக்கப்பட்ட பஞ்சாப் இந்துசபையானது இந்துமதவகுப்புவாத அரசியலுக்கு அடித்தளமிட்டது.

அ) கூற்று (i) மற்றும் (ii) சரி

ஆ) கூற்று (i) சரி (ii) தவறு

இ) கூற்று (i) தவறு (ii) சரி

ஈ) கூற்று (i) மற்றும் (ii) தவறு

விடை: ஈ) கூற்று (i) மற்றும் (ii) தவறு

 

9.எப்போது முஸ்லிம் லீக் நேரடி நடவடிக்கை நாளை அனுசரித்தது?

அ) 25 டிசம்பர், 1942

ஆ) 16 ஆகஸ்ட், 1946

இ)21 மார்ச், 1937

ஈ) 22 டிசம்பர், 1939

விடை: ஆ) 16 ஆகஸ்ட், 1946

 

10.வேவல் பிரபுவிற்குப் பின்னர் பதவியேற்றவர்

அ) லின்லித்கோ

ஆ) பெதிக் லாரன்ஸ்

இ) மௌண்ட்பேட்டன்

ஈ) செம்ஸ்ஃபோர்டு

விடை: இ) மௌண்ட்பேட்டன்

 

11.கூற்று: பிரிட்டிஷ் அரசாங்கம் வகுப்புவாதத்தை வளர்க்கவும் பரப்பவும் பின்பற்றியது தனித்தொகுதிக் கொள்கையாகும்.

காரணம்: மக்கள் இரண்டு தனித்தொகுதிகளாக பிரிக்கப்பட்டதால் வகுப்புவத அடிப்படையிலேயே வாக்களித்தனர். ( மார்ச் 2020 )

அ) கூற்று சரி, ஆனால் காரணம் கூற்றை விளக்கவில்லை

ஆ) கூற்று சரி, காரணம் தவறு

இ) கூற்று மற்றும் காரணம் தவறு

ஈ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது.

விடை: ஈ) கூற்று சரி, காரணம் கூற்றை விளக்குகிறது

 

12.பின்வருவனவற்றைப் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.

அ.இந்துமத மறுமலர்ச்சி                  1.M.S.கோல்வாக்கர்

ஆ.கலீஃபா பதவி ஒழிப்பு                 2.ஆரிய சமாஜம்

இ.லாலா லஜபதி ராய்                      3.1924

ஈ.ராஷ்டிரிய சுயசேவா சங்கம்         4.இந்து-முஸ்லிம் மாகாணங்களாக பஞ்சாப் பிரித்தல்

அ.2 4 3 1

ஆ.3 4 1 2

இ.1 3 2 4

ஈ.2 3 4 1

விடை: ஈ) 2 3 4 1

II. குறுகிய விடையளிக்கவும்

3.ஆகாகான் தலைமையிலான முஸ்லிம் லீக் முன் வைத்த கோரிக்கைகள் என்ன?

விடை:

•பம்பாயிலிருந்து சிந்துப் பகுதியைத் தனியாகப் பிரிப்பது.

•பலுச்சிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது.

•பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரிதிநிதித்துவம்.

•மத்தியச் சட்டமன்றத்தில் முஸ்லிம்களுக்கு 33 விழுக்காடு இட ஒதுக்கீடு.

 

4.1923இல் வாரணாசியில் நடைபெற்ற ஆறாவது இந்து மகாசபை மாநாட்டைப் பற்றி குறிப்பு எழுதுக.

விடை:

•1923 ஆகஸ்டில் வாரணாசியில் நடைபெற்ற இந்து மகாசபையின் ஆறாவது மாநாட்டில் 968 பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

•அவர்களில் 56.7 விழுக்காட்டினர் ஐக்கிய மாகாணத்தைச் சேர்ந்தவர்களாவர்.

•ஐக்கிய மாகாணம், பஞ்சாப், டெல்லி, பீகார் ஆகியவை86.8 விழுக்காட்டுப் பிரதிநிதிகளை அனுப்பிவைத்தன.

•சென்னை பம்பாய், வங்காளம் ஆகிய மூன்றும் 6.6 விழுக்காடு பிரதிநிதிகளை மட்டுமே அனுப்பிவைத்தன.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.1921இல் நடைபெற்ற மலபார் கலகத்தைப் பற்றிய காந்தியடிகளின் கருத்து என்ன ?

விடை:

•1921இல் நடைபெற்ற குருதி கொட்டிய மலபார் கிளர்ச்சியின்போது அங்கு முஸ்லிம் விவசாயிகள் ஆங்கிலேய ஆட்சியாளர்களுக்கு எதிராகவும் இந்து நிலபிரபுக்களுக்கு எதிராகவும் களமிறங்கியது.

•இந்து மகா சபை தன்னுடைய பிரச்சாரத்தை புதுப்பிக்க காரணமாயிற்று அடிப்படையில் அது ஒரு விவசாயக் கிளர்ச்சியாக இருந்தாலும் தீவிர மத உணர்வுகள் கோலோச்சின.

•காந்தியடிகள் இந்நிகழ்வை இந்து முஸ்லிம் மோதலாகவே மதிப்பிட்டார்.

•மலபாரில் நடைபெற்ற நிகழ்வுகளுக்கு முஸ்லிம் தலைவர்கள் பொது மன்னிப்புக் கேட்க வேண்டுமென  காந்தியடிகள் கோரிக்கை விடுத்தார்.

 

2.இஸ்லாமியர்களுக்காக மத்தியில் முதலில் அமைக்கப்பட்ட அரசியல் கட்சியின் நோக்கங்களை எழுதுக.

விடை:

அனைத்து இந்திய முஸ்லீம் லீக்கின் நோக்கங்கள்:

•இந்திய முஸ்லீம்கள், பிரிட்டிஷ் அரசிடம் உண்மையுடனும் நன்றியுடனும் நடந்து கொள்ள வேண்டுமென்ற உணர்வை அவர்களிடம் ஏற்படுத்துதல்.

•இந்த அமைப்பின் செயல்பாடுகள் குறித்து அரசுக்கு எழும் தவறான கருத்துக்களை நீக்குதல்

•இந்திய முஸ்லிம்களின் விருப்பங்கள் அரசியல் உரிமைகள் ஆகியவற்றை மேம்படுத்துதல் மற்றும் பாதுகாத்தல்.

•தங்களது தேவைகள், உயர்ந்த லட்சியங்களை கண்ணியமான முறையில் அரசுக்கு தெரிவித்தல்

•இந்திய முஸ்லிம்கள் மற்ற இனத்தவரிடம் எவ்விதபகைமை பாராட்டுவதையும் முன்விரோதம்கொள்வதையும் தடுத்தல் ஆகியவையாகும்.

 

3.1909 ஆம் ஆண்டின் மின்டோ -மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவத்தைக் கூறுக.

விடை:

1909 ஆம் ஆண்டின் மின்டோ -மார்லி சீர்த்திருத்தங்களின் முக்கியத்துவம்:

•அரசபிரதிநிதிகளின் நிர்வாகத்தில் இந்தியருக்கு ஒரு இடம் ஒதுக்கப்பட்டது.

•மைய சட்ட சபையையும் மாநில சட்ட சபையையும் விரிவு படுத்தப்பட்டன.

•வகுப்புவாரி பிரதிநிதித்துவம் அங்கீகரிக்கப்பட்டது. தனித்தொகுதிகள் முஸ்லீமுக்கு வழங்கப்பட்டன.

•தேர்தல் நடந்த முதன் முறையாக அனுமதி அளிக்கப்பட்டது.

 

4.1927ஆம் ஆண்டு டெல்லியில் நடைபெற்ற முஸ்லிம் லீக் மாநாட்டின் முன்மொழிவுகள் யாவை?

விடை:

1927 மார்ச் 20இல் டெல்லியில் முஸ்லிம்களின் மாநாடு நடைபெற்றது. இம்மாநாட்டில் வைத்த 4 முன்மொழிகள்:

•பம்பாயிலிருந்து சிந்து பகுதியைத் தனியாக பிரிப்பது.

•பலுசிஸ்தானையும் அதன் எல்லைகளையும் சீர்திருத்துவது

•பஞ்சாபிலும் வங்காளத்திலும் மக்கள் தொகை அடிப்படையில் பிரதிநிதித்துவம்.

•மத்திய சட்டமன்றத்தில் முஸ்லீம்களுக்கு 33 விழுக்காடுகள் இட ஒதுக்கீடு ஆகியவையாகும்.

 

IV. விரிவான விடையளிக்கவும்

1.பிரிட்டிஷ் இந்தியாவில் வகுப்புவாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்க.

விடை:

பிரிட்டிஷ் இந்தியாவின் வகுப்பு வாதத்தின் தோற்றம் மற்றும் வளர்ச்சி:

•ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசியவாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்கமுடியும் என்று நம்பினர்.

•1875 இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது. ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரியத் தன்மைகளை உறுதியுடன் முன்வைத்தது.

•வடஇந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய பசு பாதுகாப்புத் கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கமளித்தன.

•ஆரிய சமாஜம் போன்ற நிறுவனங்கள் எடுத்த முயற்சிகள் 1891 முதல் அன்னிபெசண்ட் அம்மையாரால் வழிநடத்தப்பட்ட பிரம்மஞான சபையின் மூலம் வலுப்பெற்றன.

முஸ்லிம் உணர்வின் எழுச்சி:

•சர்வபள்ளி கோபால் குறிப்பிடுவது போல, மறுபுறம் இஸ்லாம் அலிகார் இயக்கத்தின் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

•பிரிட்டிஷார் அலிகார் கல்லூரியை ஏற்படுத்தி சையது அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லிம் தேசியக்கட்சி தோன்றவும், முஸ்லிம் அரசியல் கருத்தியல் தோன்றவும் உதவியது.

•வாகாபி இயக்கம் வர்காபிகள் இஸ்லாமை அதனுடைய ஆதித்தூய்மைக்கு அழைத்துச் செல்லவும் அதன் உயிரை உருக்குலைத்துக் கொண்டிருப்பதாக அவர்கள் கருதிய சில மூடப்பழக்கங்களை முடிவுக்கு கொண்டுவரவும் விரும்பினர்.

•வாகாபிகளில் தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர் அடிமட்டச் செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு முஸ்லிம்களை அரசியல் மயமாக்குவதில் முக்கியப் பங்காற்றியது.

 

2.ஆங்கிலேயர்களின் பிரித்தாளும் கொள்கை இந்திய தேசியத்தில் ஏற்படுத்திய தாக்கம் என்ன? (மார்ச் 2020)

விடை:

•கூட்டு இந்திய அடையாளம் ஒன்று உருவாவதைத் தடுப்பதே பிரிட்டிஷாரின் நோக்கமாக இருந்ததால், இந்தியர்களின் ஒருங்கிணைப்பு முயற்சிகளை முறியடிக்கத் தொடங்கினர்.

•பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் பிரித்தாளும் கொள்கையைக் கையாண்டது.

•பம்பாய் – கவர்னர் எல்பின்ஸ்டோன், “பழைய ரோமானிய இலட்சியமான ‘Divide et Impera’ (பிரித்தாளுதல்) என்பது நமதாக வேண்டும்” என்று எழுதினார்.

•வகுப்புவாதக் கலவரங்கள் நாட்டின் ஆளுகைக்குச் சவாலாக இருக்கும் என்று தெரிந்திருந்தபோதிலும் பிரிட்டிஸ் அரசாங்கம், வகுப்புவாத கருத்தியல் சார்ந்த அரசியலுக்கும் சட்டப்பூர்வ அங்கீகாரத்தையும், கௌரவத்தையும் வழங்கியது.

•அனைத்துக் கட்சிகளும் இத்தகைய குறுங்குழுவாத அணுகுமுறையைப் பின்பற்றியதால் வடஇந்தியாவில்

•இந்துக்கள் மற்றும் முஸ்லிம்களுக்கிடையே பகைமைவளர்ந்தது. இதன் தாக்கம்நாட்டின் பிறபகுதிகளிலும் காணப்பட்டது.

•19ஆம் நூற்றாண்டின் கடைசி பதிற்றாண்டுகளில் ஏராளமான இந்து-முஸ்லிம் கலவரங்கள் வெடித்தன. 1882 இல் ஜீலை – ஆகஸ்டில் தென்னிந்தியாவில் கூட ஒரு பெருங்கலகம் சேலத்தில் நடைபெற்றது.

 

3.இந்து தேசியம், இஸ்லாமிய தேசியம் மற்றும் இந்திய தேசியம் ஆகியவை இந்திய பிரிவினைக்கு சமபங்காற்றியது எவ்வாறு?

விடை:

•கல்வி கற்ற மேல்வகுப்பு இந்துக்கள் தேசிய உணர்வு பெற்று எழுந்தனர்.

•இதனை விரும்பாத ஆங்கிலேயர்கள் நடுத்தர வர்க்க முஸ்லீம்களை காங்கிரஸின் வளர்ச்சியை தடுக்க ஒரு கருவியாக பயன்படுத்திக் கொண்டனர்.

•இது இந்து-முஸ்லீம் இனவாதத்தை தூண்டியது.

இந்து தேசியம்:

•ஆரம்பகால தேசியவாதிகள் சிலர் தேசிய வாதத்தை இந்துமத அடித்தளத்தில் மட்டுமே உருவாக்க முடியும் என எண்ணினர்.

•1875இல் நிறுவப்பட்ட ஆரிய சமாஜத்தின் மூலம் அரசியலில் இந்து மறுமலர்ச்சிக்கான குரல் ஒலிக்கத் தொடங்கியது.

•ஆரிய சமாஜம் இந்து மதத்தின் உயரிய தன்மைகளை எடுத்துரைத்தது.

•வட இந்தியாவின் பெரும்பாலான பகுதிகளில் தோன்றிய பசு பாதுகாப்பு கழகங்கள் இந்து வகுப்புவாதம் வளர்வதற்கு ஊக்கம் அளித்தது.

•இந்து தேசியவாதிகளில் ஒருவராகத் தன்னை அறிமுகப்படுத்திக் கொண்ட அன்னிபெசன்ட் அம்மையார் தனது கருத்துக்களை கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார். “பண்டைய மதங்களை புத்துயிர்ப்பு செய்து வலுப்படுத்தி உயர்த்துவதே இந்தியர்களின் முதற்பணி”.

•இது கடந்த காலப் பெருமையுடன் ஒரு புதிய சுயமரியாதையையும், எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையையும், தேச பற்றுடன் கூடிய வாழ்வின் ஒரு பேரலையாகவும் நாட்டை புனரமைப்பதற்கான தொடக்கமாகவும் உருவாக்கப்படவேண்டும் என இந்து தேசியம் அமைவதற்கான ஊக்கம் கொடுத்தார்.

இஸ்லாமிய தேசியம்:

•இஸ்லாம் அலிகார் இயக்கத்தின் வழியாக தன்னை வெளிப்படுத்திக் கொண்டது.

•பிரிட்டிஷார் அலிகார் கல்லூரியை ஏற்படுத்த சையது அகமதுகானுக்கு ஆதரவளித்ததும் முஸ்லீம் தேசிய கட்சி தோன்றவும் உதவியது.

•வாகாபி இயக்கம் இந்து முஸ்லீம் உறவில் விரிசலை ஏற்படுத்தியது.

•வாகாபிகளில் தொடங்கி கிலாபத்காரர்கள் வரையானோர் அடிமட்ட செயல்பாடுகளில் காட்டிய செயற்முனைப்பு முஸ்லீம்களை அரசியல்மயமாக்குவதில் முக்கிய பங்காற்றியது.

இந்திய தேசியம்:

•இந்திய தேசிய காங்கிரஸ், தேசிய வாதம் மற்றும் சமயச்சார்பின்மையில் உறுதியாக இருந்த போதிலும் அதனுடைய உறுப்பினர்கள் இந்து வகுப்புவாத அமைப்புகளில் செயல்படுவதைத் தடுக்க முடியவில்லை.

•ஆரிய சமாஜத்தின் “சுத்தி” மற்றும் “சங்கதன்” நடவடிக்கைகளில் காங்கிரஸ்காரர்களின் பங்கேற்பு இந்துக்கள் மற்றும் முஸ்லீம்களை பிளவுபடுத்தியது.

•இருப்பினும் நிறைய காங்கிரஸ்காரர்கள் இந்து அமைப்புகளில் ஈடுபட்டாலும் காங்கிரஸ் தலைமை சமயச்சார்பற்றதாகவே விளங்கியது.

•இந்திய தேசிய காங்கிரஸின் மூன்றாவது கூட்டத்தில் பசுவதை குற்றமென அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும் என காங்கிரஸ்காரர்கள் சிலர் வற்புறுத்திய போது காங்கிரஸ் தலைமை அதனை ஏற்கவில்லை. இவ்வாறாக இந்து தேசியம், முஸ்லீம் தேசியம் மற்றும் இந்திய தேசியம் என இந்திய பிரிவினைக்கு பங்கெடுத்துக் கொண்டது.

Share:

12th History - Lesson 5 - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - Tamil Medium

Lesson 5 - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம்

12th History - Lesson 5 - ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டங்களில் புரட்சிகர தேசியவாதத்தின் காலம் - Tamil Medium

I. சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1.இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி எந்த ஆண்டு தொடங்கப்பட்டது?

அ) 1920

ஆ) 1925

இ) 1930

ஈ) 1935

விடை: ஆ) 1925

 

2.கல்பனா தத் எதனுடன் தொடர்புடையவர்?

அ) ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோசியேஷன்

ஆ) வங்காள சபை

இ) இந்திய கம்யூனிஸ்ட் கட்சி

ஈ) இந்தியக் குடியரசு இராணுவம்

விடை: ஈ) இந்தியக் குடியரசு இராணுவம்

 

3.பின்வருவனவற்றைப் பொருத்துக.

அ. கான்பூர் சதி வழக்கு – 1.அடிப்படை உரிமைகள்

ஆ. மீரட் சதி வழக்கு – 2. சூரியா சென்

இ. சிட்டகாங் ஆயுதக் கிடங்கு – 3. 1929

ஈ. இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாடு 4. 1924

அ)1,2,3,4

ஆ) 2,3,4,1

இ) 3,4,1,2

ஈ) 4,3.2.1

விடை: ஈ) 4,3,2,1

 

4.கீழ்க்காண்பவர்களில் 64 நாட்கள் உண்ணாவிரதத்திற்குப் பிறகு சிறையில் உயிரிழந்தவர் யார்?

அ) புலின் தாஸ்

ஆ) சச்சின் சன்யால்

இ)ஜதீந்திரநாத் தாஸ்

ஈ) பிரித்தி வதேதார்

விடை: இ) ஜதீந்திரநாத் தாஸ்

 

5.பின்வரும் கூற்றுகளில் பொருளாதாரப் பெரும் மந்தம் குறித்துச் சரியானவை.

i) இது வட அமெரிக்காவில் ஏற்பட்டது

ii) வால் தெருவில் ஏற்பட்ட வீழ்ச்சியானது பெரும் மந்தத்தை விரைவுபடுத்தியது.

iii) பெரும் மந்தம் வசதி படைத்தவர்களை மட்டுமே பாதித்தது

iv) விலை வீழ்ச்சி அடைந்ததால் பெரும் மந்தத்தின் போது சிறப்பான வாழ்க்கை முறையை தொழிலாளர்கள்

அனுபவித்தனர்.

அ) i மற்றும் ii

ஆ) i, ii மற்றும் iii

இ) மற்றும் iv

ஈ) i, iii மற்றும் iv

விடை: அ) i மற்றும் ii

 

6.முதலாவது பருத்தித் தொழிற்சாலை பம்பாயில் தொடங்கப்பட்ட ஆண்டு

அ)1852

ஆ) 1854

இ) 1861

ஈ) 1865

விடை: ஆ) 1854

 

7.கொடுக்கப்பட்ட குறிப்புகளை கொண்டு சரியான கூற்றைத் தேர்ந்தெடுக்கவும்.

i) “ChittagongArmoury Raiders Reminiscences” எனும் நூல்கல்பனாதத் என்பவரால் எழுதப்பட்டது.

ii) கல்பனா தத்தாய்நாட்டின் விடுதலைக்காக ஆயுதம் தாங்கி போராடினார்

iii) கல்பனாதத் பேரரசருக்கு எதிராகப் போர் தோடுத்தார் எனக் குற்றஞ்சாட்டப்பட்டார்.

அ) மட்டும்

ஆ) 1 மற்றும் ii

இ) ii மற்றும் iii

ஈ) அனைத்தும்

விடை: ஈ) அனைத்தும்

 

8.முதலாவது பயணிகள் இரயில் 1853 இல் எந்த இடங்களுக்கு இடையே ஓடியது?

அ.  மதராஸ் – அரக்கோணம்

ஆ.  பம்பாய் – பூனா

இ. பம்பாய் – தானே

ஈ. கொல்கத்தா – ஹூக்ளி

விடை: இ) பம்பாய தானே

 

9.கல்கத்தாவில் முதலாவது சணல் ஆலை தொடங்கப்பட்ட ஆண்டு ………

அ)1855

ஆ) 1866

இ) 1877

ஈ) 1888

விடை: அ) 1855

 

10.பின்வருவோரில் கான்பூர் சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர் யார்?

அ) எம்.என்.ராய்

ஆ) பகத் சிங்

இ)எஸ்.ஏ.டாங்கே

ஈ) ராம் பிரசாத் பிஸ்மில்

விடை: அ) எம்.என்.ராய்

 

11.கான்பூர் சதி வழக்குக் குறித்த பின்வரும் எந்த கூற்றுகள் சரியானவை?

i) சணல் மற்றும் பருத்தி தொழிற்சாலைகளில் தொழிற்சங்கங்கள் தோன்றின.

ii) இவ்வழக்கில் கம்யூனிஸ்ட்களும் தொழிற்சங்கவாதிகளும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

iii) இவ்வழக்கு நீதிபதி H.E.ஹோம்ஸ் என்பவரின் முன்பாக விசாரணைக்கு வந்தது.

iv) விசாரணைமற்றும் சிறைத்தண்டனையானது இந்தியாவில் காங்கிரஸ் நடவடிக்கைகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது.

அ) i, ii மற்றும் iii

ஆ) i, iii மற்றும் iv

இ) ii, iii மற்றும் iv|

ஈ) i, ii மற்றும் iv

விடை: ஈ) i, ii மற்றும் iv

 

II. குறுகிய விடையளிக்கவும்

1.இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை உருவாக்க கிரேட் பிரிட்டனால் அனுப்பப்பட்ட மூன்று ஆங்கில கம்யூனிசவாதிகளின் பெயர்களைக் குறிப்பிடுக.

விடை: இந்தியாவில் கம்யூனிஸ்ட் கட்சியை கட்டியமைக்க உதவுவதற்கென பிரிட்டானிய கம்யூனிஸ்ட் கட்சியால் அனுப்பிவைக்கப்பட்ட கம்யூனிஸ்ட்டுகள்.

பிலிப் ஸ்ப்ராட்

பான் ப்ராட்லி

லெஸ்டர் ஹட்சின்சன் ஆகியோர் ஆவார்.

 

2.மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடிய வழக்கறிஞரை அடையாளப்படுத்துக.

விடை: கே.எஃப் நாரிமன், எம்.சி.சக்லா போன்ற புகழ்பெற்ற வழக்கறிஞர்கள் மீரட் சதி வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளிகளுக்கு ஆதரவாக வாதாடினர்.

 

3.புகழ்பெற்ற கோரக்பூர் நீதிபதியான H.E. ஹோம்ஸ் பற்றி நீவிர் அறிவது யாது?

விடை: அமர்வு நீதிபதி H.E. ஹோம்ஸ் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இவர் கோரக்பூர் அமர்வு நீதிபதியாக பணியாற்றிய போது சௌரிசௌரா வழக்கில் தொடர்பு கொண்டவர்களாக குற்றம் சாட்டப்பட்ட 172 விவசாயிகளுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்து பிரசித்தி பெற்றவர்.

 

4.இரண்டாவது லாகூர் சதி என்றறியப்படும் நிகழ்வு யாது?

விடை:

•ராஜகுரு, சுகதேவ். ஜஹீந்திரநாத் தாஸ் ஆகியோருடன் பகத்சிங்கும் மேலும் 21 பேரும் கைது செய்யப்பட்டு, “சாண்டர்ஸ் கொலை” தொடர்பான விசாரணைக்கு ஆளாக்கப்பட்டனர்.

•இந்த வழக்கு இரண்டாவது லாகூர் சதி வழக்கு என்று அறியப்படுகிறது.

•இதில் ஜஹிந்திரநாத் தாஸ் என்பவர் சிறையின் மோசமான நிலை, பாரபட்சமான நடவடிக்கைகளை எதிர்த்து 64 நாட்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டு, சிறையிலேயே மரணமடைந்தார்.

 

5.இந்தியாவின் நவீன தொழிற்சாலையின் தந்தை என ஜே.என். டாடா அழைக்கப்பட காரணம் என்ன ?

விடை:

•ஜே.என்.டாடா என்கிற ஜாம்ஷெட்ஜி நுஸவர்வஞ்சி டாடா பரோடாவில் உள்ள நல்சாரி என்ற இடத்தில் ஒரு பார்சி வணிக குடும்பத்திலிருந்து வந்தவர்.

•இந்தியாவின் முதல் வெற்றிகரமான தொழிலதிபர் இவர் என்பதால், “இந்திய நவீனத் தொழிலகங்களின் தந்தை” என அழைக்கப்படுகிறார்.

 

III. சுருக்கமான விடையளிக்கவும்

1.சிட்டகாங் ஆயுதப் படைத் தாக்குதலை நடத்த சூரியாசென் எவ்வாறு திட்டமிட்டார்?

விடை:

•சூரியா சென்னின் புரட்சிக் குழுவான இந்தியக் குடியரசு இராணுவம் சிட்டகாங்கை கைபற்ற மறைந்திருந்து தாக்கும் கொரில்லா பாணி தாக்குதலை நடத்த திட்டமிட்டனர்.

•1930 ஏப்ரல் 18 அன்று இரவில் சிட்டகாங் படைத்தளம் தாக்கி தகர்க்கப்பட்டது.

•மாகாணத்தின் பிற பகுதிகளிலிருந்து தனிமைப்படுத்தும் முகமாக ரயில்வே தகவல்தொடர்பு வலை பின்னல்களை துண்டிக்கும் பொருட்டு தந்தி, அலுவலகங்கள், படைத்தளங்கள், காவல்துறை முகாம்கள் போன்றவைகளை தகர்த்தனர்.

•காலனிய நிர்வாகத்திற்கு நேரடியாக சவால் விடுக்கும் நோக்குடன் அது நடந்தேறியது.

 

2.டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) பற்றி குறிப்பு எழுதுக.

விடை:

•1907ல் பீகாரில் உள்ள சாகிநகரில் டாடா குழுமத்தால் டாடா இரும்பு மற்றும் எஃகு நிறுவனம் (TISCO) முதன்முதலில் சுதேசி இயக்கத்தின் ஒரு நிகழ்வாக அமைக்கப்பட்டது.

•இந்தத்துறையில் உள்ள மற்ற முயற்சியாளர்களை விட டாடா மிக உன்னத நிலையை அடைந்துள்ளது.

•அதன் உற்பத்தி 1912-13ல் 31,000 டன்னிலிருந்து 1917-18ல் 1,81000 டன்னாக அதிகரித்தது.

 

3.தென்னிந்தியாவில் தொழிற்சங்கங்களின் வளர்ச்சிக்காகச் சிங்காரவேலர் ஆற்றிய பங்களிப்புக் குறித்து எழுதுக.

விடை:

•சிங்காரவேலர் இளமைகாலத்தில் புத்தமதத்தை தழுவினார், பிறகு இந்திய தேசிய காங்கிரஸில் இணைந்து செயல்பட்டார்.

•எனினும் சில காலத்திற்குப்பிறகு அவர் புரட்சிகர தேசியவாத பாதையை தேர்ந்தெடுத்தார்.

•திரு.வி.கல்யாண சுந்தரத்துடன் இணைந்து தென்னிந்தியாவில் பல தொழிற்சங்கங்களை தோற்றுவித்தார்

•1923 ஆம் ஆண்டு மே மாதம் முதல் நாள் முதன் முறையாக நாட்டில் மேதினத்தை கொண்டாடினார்.

•1928ல் தென்னிந்திய ரயில்வே வேலை நிறுத்தத்தை (பொன்மலை, திருச்சிராப்பள்ளி) ஏற்பாடு செய்ததில் இவர் முக்கியப் பங்கு வகித்தள் அதற்காக தண்டனை பெற்றார்.

 

IV. விரிவான விடையளிக்கவும்

1.பகத்சிங்கின் புரட்சிகர தேசியவாதம் மற்றும் புரட்சிகர நடவடிக்கைகள் எவ்வாறு அவரைத் தூக்கு மேடைக்கு இட்டுச் சென்றது? (மார்ச் 2020)

விடை:

பகத்சிங்கின் பின்புலம்:

•தேசியவாதத்தின் ஓர் ஒப்பற்ற நிலையைப் பகத்சிங் பிரதிநிதித்துவப் படுத்துகிறார். அவருடைய புரட்சிகர

•தேசியவாத நிலைப்பாடு, ஒரு தனித்த வழி என்ற அளவில் ஒட்டுமொத்த விடுதலை இயக்கத்தின் லட்சியங்களுக்காகப் பெரிதும் பாராட்டப்படுகிறது.

•பகத்சிங்கின் 14ஆம் வயதில் ஜாலியன் வாலாபாக் படுகொலை நிகழ்ந்தது. அவர் தனது இளமைக் காலம் முதலாகவே, நவ்ஜவான் பாரத் சபா, ஹிந்துஸ்தான் ரிபப்ளிகன் அசோசியேஷன் ஆகிய அமைப்புகளில் தன்னை இணைத்துக்கொண்டார்.

•1929 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8 ஆம் தேதி மத்திய சட்டமன்றத்தில் வீசிய குண்டுகள் எவரையும் கொல்லவில்லை. ஆங்கிலேயர்களின் கொடுங்கோன்மைச் சட்டங்களுக்கு எதிரான ஒரு போராட்டச்

•செயலாக புரட்சியாளர்களால் அது கருதப்பட்டது.


2.1919 – 1939 ஆம் ஆண்டுகளுக்கிடையில் காலனி ஆதிக்க இந்தியாவில் ஏற்பட்ட தொழில் வளர்ச்சியினைப் பற்றி எழுதுக.

விடை:

•பிரிட்டிஷ் வணிகக் கொள்கையானது உள்நாட்டுத் தொழிற்துறையைப் பெரும் எண்ணிக்கையாக்கியது.

•முதல் உலகப்போரின் போதும் பொருளாதாரப் பெருமந்தம் போன்ற சில எதிர்பாராத சந்தர்ப்பங்கள் காரணமாகவும் இந்தியாவில் தொழில்துறை விரிவாக்கம் ஏற்பட்டது. –

•போர்களுக்கு இடைப்பட்ட காலப்பகுதி உற்பத்தி தொழில்களின் வளர்ச்சியை பாதித்துள்ளது.

•ஆச்சிரியத்தக்க வகையில் இந்திய தொழில்களின் வளர்ச்சி சிறப்பாக இருந்தது.

•1923-24இல் ஒரு சிறிய தடுமாற்றத்திற்குப் பிறகு, நெசவுத் தொழில் சிறப்பாக செயல்படத் தொடங்கியது.

•1929-30ல் இந்தியாவால் 44 சதவீதம் வெளியில் இருந்து நுகர்வு செய்யப்பட்ட பருத்திப் பொருட்கள் 1933-34இல் பெருமந்த நிலைக்குப் பிறகு, 20.5 சதவீதமாகக் குறைந்துவிட்டது.

•வளர்ச்சி அடைந்த ஏனைய இரண்டு தொழில்கள் சர்க்கரை உற்பத்தியும் சிமெண்ட் உற்பத்தியுமாகும்.

•போர்களுக்கு இடைப்பட்ட ஆண்டுகளில் கப்பல் தொழிலும் வளர்ச்சியைக் கண்டது. இந்தியா நீராவிக்

•கப்பல் கம்பெனி லிமிடெட் (1919) ஏனையவற்றிற்கு முன்னோடியாக இருந்தது. –

•1939இல், அவர்கள் பிரிட்டிஷாரின் பம்பாய் நீராவிக் கப்பல் நிறுவனத்தையும் வாங்கிவிட்டனர்.

•இரண்டாம் உலகப்போருடன் ஒரு புதிய கட்ட உற்பத்தி துவங்கி. அது இயந்திர உற்பத்தி, விமானப் போக்குவரத்து. ரயில் பெட்டி, ரயில் எஞ்சின் உற்பத்தி மற்றும் பலவற்றிற்கான உற்பத்தித் தொழில்களாய் விரிவடைந்தது.

 

3.பொருளாதாரப் பெரும் மந்தம் ஏற்பட்ட போது சமூக, பொருளாதார மற்றும் அரசியல் லட்சியங்கள் வெளிப்படுத்துவதில் இந்திய தேசிய காங்கிரசின் கராச்சி மாநாட்டின் முக்கியத்துவத்தை ஆய்வு செய்க.

விடை:

•இந்திய தேசிய காங்கிரஸ், புரட்சியாளர்களின் வன்முறைச் செயல்களுக்கு மாறாக, வன்முறையற்ற போராட்டங்களுக்கு மக்களை அணி திரட்டியது.

•தனது சட்டமறுப்பு இயக்கத்தின் ஒரு பகுதியாக காங்கிரஸ் குத்தகை செலுத்தா மற்றும் வரிசெலுத்தாப் போராட்டத்தைக் கடைபிடித்தது.

•பெருமந்த அழுத்தத்தினால் ஏற்பட்ட சமூக- பொருளாதாரத் தேவைகள் கராச்சியின் காங்கிரஸ் அமர்வில் தீவிரமாய் பேசப்பட்டது.

•விடுதலைப் போராட்டம் ஒரு புதிய வடிவம் பெற்றது. விவசாயிகள் கிசான் சபா எனப்படும் விவசாயிகள் சங்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டும் தொழிலாளர்கள் தொழிற்சங்கங்களில் இணைந்து கொண்டும் தங்களது பெரிய அளவிலான ஈடுபாட்டை சுதந்திரப் போராட்டக்களத்தில் உயர்த்தினர்.

•நேருவின் தலைமையின் கீழ் வந்த காங்கிரஸ் சமூக மற்றும் பொருளாதார நீதி அடிப்படையில் ஒரு சமத்துவ சமூகத்தைப் பற்றிப் பேச ஆரம்பித்தது.

•1931 மார்ச்சில் நடந்த கராச்சி அமர்வு சர்தார் வல்லபாய் படேல் தலைமையில் அடிப்படை உரிமைகள் மற்றும் கடமைகளில் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிய தோடல்லாமல் சுதந்திர இந்தியாவின் பொருளாதார கொள்கை பற்றிய ஒரு பார்வையை வழங்கியது.

•அடிப்படை உரிமைகள் தீர்மானத்தை மேலோட்டமாய் பார்த்தால் கூட பிரிட்டிஷாரால் நமது அடிப்படை உரிமைகள் எப்படியெல்லாம் மறுக்கப்பட்டுள்ளது என்பது தெரியும்.

•அதனால்தான் அடிப்படை உரிமைகள் தீர்மானத்தில் முக்கிய இடம் பிடித்துள்ளது.

•கொடூரமான சட்டங்கள் போட்டும், அடக்குமுறைகளைக் கையாண்டும் மக்களின் சுதந்திரத்தைக் காலனியரசு நசுக்கியது.

•சுதந்திர இந்தியாவில் இந்திய தேசிய காங்கிரஸ் தான் வழங்க உறுதி அளித்துள்ள உரிமைகள் பட்டியலில் காந்தியக் கொள்கைகளும் நேருவின் சோசலிஷப் பார்வைகளும் இடம் பெற்றன.

Share:

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support