Daily TN Study Materials & Question Papers,Educational News

8th Tamil Quiz 2 Answer Key -வினாடி வினா 2 - 2021-2022 Worksheet 2 ( bridge Course)

8th Tamil Quiz 2 Answer Key -வினாடி வினா 2 - 2021-2022 Worksheet 2 ( bridge Course)

1. கல்வெட்டுகளிலுள்ள எந்த எழுத்துகளுக்குக் குறில், நெடில் வேறுபாடு இல்லை எனத் தேர்ந்தெடுக்க.

  • அ) இகர, உகரம்

    ஆ)உகர,எகரம்

    இ)எகர, ஒகரம்

    ஈ)அகர, இகரம்

    விடை:இ)எகர,ஒகரம்.

2. தமிழெழுத்துகளில் மிகப்பெரும் சீர்திருத்தங்கள் செய்தவர் யார் எனத் தெரிவுசெய்க.

  • அ) பாரதியார்

    ஆ) திரு வி கலியானசுண்தரனார்

    இ) உ.வே.சாமிநாதர்

    ஈ)வீரமாமுனிவர்

    விடை:ஈ)வீரமாமுனிவர்

3. பொருத்துக

  • குறிப்புகள்காலம்விடை
    அ)ஓலைச்சுவடி1.கடைச்சங்க காலம்.2.வளைகோடுகள்
    ஆ) செப்பேடுகள்2.வளைகோடுகள்.3.ஏழாம் நூற்றாண்டு
    இ) கல்வெட்டுகள்3.ஏழாம் நூற்றாண்டு.4.நேர்கோடு
    ஈ)கண்ணெழுத்துகள் 4.நேர்கோடு.1.கடைச்சங்க காலம்

    4. கோடிட்ட இடங்களை நிரப்புக.

    அ) ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை________________ என்பர்.

    விடை :அ.ஒலி எழுத்துநிலை

    ஆ) கண் + எழுத்துகள் - சேர்த்தெழுதக் கிடைக்கும்சொல்__________________.ஆகும்.

    விடை " ஆ)கண்ணெழுத்துகள்

    இ) மனிதன் தன் கருத்தைப் பிறருக்குத் தெரிவிக்க_______________ கண்டுபிடித்தான்.

    விடை : மொழியைக்

5. சரியா? தவறா? என எழுதுக.

  • அ) தமிழ்மொழியை எழுத இருவகை எழுத்துகள் வழக்கிலிருந்தன என்பதற்கு உத்திரமேரூர் கல்வெட்டே சான்றாகும்.(தவறு )

    ஆ) தமிழ்மொழி தற்போது கணினிப் பயன்பாட்டிற்கு ஏற்றமொழியாக உள்ளது.( சரி)

    இ) மனிதன், பழங்காலத்தில் குகைச்சுவர்களிலும் தன் எண்ணங்களைக் குறியீடுகளாகப் பொறித்துவைத்தான். ( சரி)

    ஈ) அச்சுக்கலை தோன்றிய பிறகே தமிழெழுத்துகள் நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.(சரி )

6. தமிழ் வரிவடிவ வளர்ச்சியினை வரிசைப்படுத்துக.

  • அ) பேச்சு,ஒலி, எழுத்து, சைகை

    விடை:சைகை,ஒலி,பேச்சு, எழுத்து

    ஆ) அச்சுக்கலை, கல்வெட்டு, செப்பேடு

    விடை:கல்வெட்டு, செப்பேடு,அச்சுக்கலை

7. கல்வெட்டுகள், செப்பேடுகளில் காணப்படும் வரிவடிவங்கள் யாவை?


  • விடை:நேர்கோடு,வளைகோடு,புள்ளிகள்

8. பெரியார் செய்த எழுத்துச் சீர்திருத்தங்களை எழுதுக.

  • விடை:

    அ.பழைய வடிவங்களை மாற்றி ணா,றா,னா என்றும்,

    ஆ.ணை,லை,ளை,னை என்றும் எழுதச் செய்தார்.

9. வட்டெழுத்து, தமிழெழுத்து என்றால் என்ன?

  • விடை:
    #வளைந்த கோடுகளால் அமைந்த மிகப்பழைய தமிழ் எழுத்து வட்டெழுத்து.

    #இக்காலத்தில் எழுதப்படும் தமிழ் எழுத்துகளின் பழைய வரிவடிவம் தமிழெழுத்து.


10. தமிழ்மொழியின் வரிவடிவ வளர்ச்சி குறித்து ஒரு பக்க அளவில் கட்டுரை வரைக.

  • (குறிப்பேட்டில் எழுதுக)

தமிழ் மொழியின் வரி வடிவ வளர்ச்சி-கட்டுரை

முன்னுரை:

  • மனிதன் தோன்றிய காலத்தில் தனது தேவைகளையும் கருத்துக்களையும் மற்றவர்களுக்குத் தெரிவிக்க சைகைகளைப் பயன்படுத்தினான். பிறகு ஒலிகள் மூலம் வெளிப்படுத்தினான். அடுத்து சிறிது சிறிதாகச் சொற்களைச் சொல்ல கற்றுக்கொண்டான். காலப்போக்கில் அவை பேச்சு மொழியாக உருவானது.

வரிவடிவத்தின் தொடக்கநிலை:

  • மனிதன் தனக்கு எதிரே இல்லாதவர்களுக்கும், பின்னால் வரும் தலைமுறையினருக்கும் தனது கருத்துக்களைத் தெரிவிக்க விரும்பினான்.அதற்காகப் பாறைகளிலும் சுவர்களிலும் தன் எண்ணங்களை குறியீடுகளாகக் குறித்து வைத்தான். இதுவே எழுத்து வடிவத்தின் தொடக்க நிலையாகும். 

ஓவிய எழுத்து:

  • தொடக்க காலத்தில் எழுத்து என்பது ஒலியையோ வடிவத்தையோ குறிக்காமல், பொருளின் ஓவிய வடிவமாக இருந்தது.இவ்வரிவடிவத்தை ஓவிய எழுத்து என்பர். | 

ஒலி எழுத்து நிலை:

  • அடுத்ததாக ஒவ்வொரு வடிவமும் அவ்வடிவத்துக்குரிய முழு ஒலியாகிய சொல்லைக் குறிப்பதாக மாறியது. அதன்பின் ஒவ்வொரு வடிவமும் அச்சொல்லின் முதல் ஓசையைக் குறிப்பதாயிற்று. இவ்வாறு ஓர் ஒலிக்கு ஓர் எழுத்து என உருவான நிலையை ஒலி எழுத்து நிலை என்பர். இன்று உள்ள எழுத்துகள் ஒரு காலத்தில் பொருள்களின் ஓவியமாக இருந்தவற்றின் திரிபுகளாகக் கருதப்படுகின்றன.

தமிழ் எழுத்துகள்:

  • காலந்தோறும் தமிழ் எழுத்துக்களின் வரிவடிவங்கள் பல்வேறு மாற்றங்களுக்கு உள்ளாகி வளர்ச்சி அடைந்து வந்துள்ளன. அச்சுக்கலை | தோன்றிய பிறகு தமிழ் எழுத்துக்கள் இப்போதுள்ள நிலையான வடிவத்தைப் பெற்றுள்ளன.

முடிவுரை:

  • பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு. ஓலை போன்றவற்றில் எழுதினர். பிறகு அச்சில் ஏற்றப்பட்டது. காலந்தோறும் வளர்ந்து வரிவடிவத்தில் பல மாற்றங்களை ஏற்று தற்காலத்தில் கணினி பயன்பாட்டிற்கு ஏற்ற மொழியாக வளர்ந்துள்ளன தமிழ் எழுத்துக

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support