அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் 460-க்கும் மேற்பட்ட பொறியியல் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இளநிலை படிப்புகளில் உள்ள சுமார் 1.5 லட்சம் இடங்கள் ஆண்டுதோறும் பொது கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு வருகின்றன.
அதன்படி இந்த ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வு, தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் மூலம் இணைய வழியில் ஜூலையில் நடைபெற உள்ளது. இதற்கான விண்ணப்பப் பதிவு கடந்த மே 5-ல் தொடங்கி ஜூன் 4-ம் தேதியுடன் முடிவடைந்தது. மாநிலம் முழுவதும் சுமார் 1.6 லட்சம் மாணவர்கள் விண்ணப்பித்தனர்.
இதையடுத்து விண்ணப்பித்த மாணவர்களுக்கான ரேண்டம் எண் (சமவாய்ப்பு எண்) கடந்த ஜூன் 6-ம் தேதி வெளியிடப்பட்டது. தொடர்ந்து மாணவர்கள் சமர்பித்துள்ள சான்றிதழ்களின் உண்மைத்தன்மை துறை சார்ந்த அதிகாரிகளால் சரிபார்க்கப்பட்டு வருகிறது. இந்தப் பணிகள் இன்றுடன் (ஜூன் 20) நிறைவு பெறுகின்றன.
தொடர்ந்து தரவரிசைப் பட்டியல் ஜூன் 26-ம் தேதி வெளியிடப்பட உள்ளது. அதன்பின் கலந்தாய்வு ஜூலை 2-ல் தொடங்கி நடைபெறும் என்று தொழில்நுட்பக் கல்வி இயக்குநரகம் தெரிவித்துள்ளது.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.