Daily TN Study Materials & Question Papers,Educational News

மாடித்தோட்டம் வைக்க ஆசையா ?- இந்த 5 தவறு செய்யாதீங்க! | Maadi Thottam top 5 tips

'மாடித்தோட்டம் வைக்க ஆசையா ?-  இந்த 5 தவறு செய்யாதீங்க!

இப்போது பலரும் தனது வீட்டில் மாடி தோட்டம்(Maadi Thottam), அமைக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர், இருப்பினும் மாடி தோட்டம் அமைக்கும் போது குறிப்பாக செய்கின்ற ஐந்து தவறுகளினால், மாடி தோட்டத்தில் நாம் ஆசைப்பட்டு வைக்கும் அனைத்து செடிகளும் செழிப்பாக வளர்வது இல்லை. அப்படி என்ன 5 தவறை நாம் செய்து வருகின்றோம் என்பதையும், அவற்றை எப்படி தவிர்த்து கொள்ளலாம் என்பதையும் இப்போது நாம் படித்தறிவோம் வாருங்கள்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam)1:

நாம் மாடி தோட்டம் வைக்க போகிறோம் என்ற ஆர்வத்தில் தொட்டியில் மண்ணை நிரப்பி, செடியை நட்டு வைத்து விடுவோம். இவ்வாறு இனி எப்போதும் செய்யாதீர்கள் இதுதான் நாம் செய்கின்ற முதல் தவறாகும்.

மண்ணில் சில இயற்கை கலவைகளை சேர்க்க வேண்டும். அதாவது, மண்ணில் மக்கக்கூடிய பொருட்களான, காய்ந்த இலை, சமையலறை கழிவுகள், காகிதங்கள், முட்டை ஓடுகள் ஆகியவற்றை ஒன்றாக கலந்து 15 நாட்கள் வரை மண்ணை மூடி வைக்கவும். பின்பு 15 நாட்கள் கழித்து அந்த மண்ணை தொட்டியில் நிரப்பவும்.

அதன் பிறகு விதைகளை விதைக்கவும் அல்லது செடிகளை நடவும். இது தான் சரியான முறை இவ்வாறு செய்வதினால் செடிகள் நன்றாக செழிப்புடன் வளரும்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam) 2:

மாடி தோட்டத்தில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது சிலர் தொட்டிகள் நிறைய தண்ணீரை ஊற்றுவார்கள். இவ்வாறு செய்வது மிகமிக தவறான செயலாகும். இதுவே நாம் செய்யுகின்ற இரண்டாவது தவறாகும்.

எப்போதும் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றும் போது செடிகளுக்கு சிறிதளவு தண்ணீர் தான் ஊற்ற விடும். அதிகளவு தண்ணீர் ஊற்றினால், செடியின் வேர்ப்பகுதி அழுகிவிடும். எனவே செடிக்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றினாலே செடிகள் நன்றாக வளரும்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam) 3:

அதேபோல் செடிகளுக்கு காலை அல்லது மாலை வேளைகளில் தண்ணீர் ஊற்றும் முறை மிகவும் நல்லது. பகல் நேரங்களில் செடிகளுக்கு தண்ணீர் ஊற்றுவத்தை தவிர்த்து கொள்ளுங்கள். இவ்வாறு செய்வதினால், சூரிய ஒளியின் வெப்பத்தால் செடி மிக விரைவில் கருகிவிடும்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam) 4:

மாடி தோட்டத்தை அமைப்போம் ஆனால் அமைத்த தோட்டத்தை ஒழுங்காக பராமரிக்க மாட்டோம். அதனால் செடிகளில் எளிதாக பூஞ்சை நோய்களின் தாக்குதல்கள் அதிகமாக இருக்கும். எனவே மாடி தோட்டத்தை தினமும் பராமரிக்க நேரம் இல்லாவிட்டாலும். வாரத்தில் ஒரு முறையாவது செடிகளை கட்டாயம் பராமரிக்க வேண்டும்.

அதாவது வாரத்தில் ஒரு முறை செடிகளுக்கு வேப்பம்பிண்ணாக்கு கரைசல் அல்லது இஞ்சி பூண்டு விழுதுகளை அரைத்து செடிகளின் மீது தெளித்துவிடுங்கள். இவ்வாறு செய்வதினால், பூஞ்சை நோய் தாக்குதல்களை கட்டுப்படுத்த முடியும்.

மாடி தோட்டம் டிப்ஸ் (Maadi Thottam) 5:

செடிகளின் தன்மையை தெரிந்து செடிகளை சரியான தட்பவெப்ப நிலையுள்ள இடத்தில வைக்க வேண்டியது மிகவும் அவசியம்.

அதாவது ஒரு சில தாவரங்கள் வறட்ச்சியை தாங்கக்கூடியதாக இருக்கும். ஒரு சில தாவரங்கள் குறைந்த வெப்பத்தில் வளரக்கூடியதாக இருக்கும்.

எனவே மாடித்தோட்டத்தில் வைக்கும் தாவரத்தின் தட்பவெப்ப நிலையை அறிந்துகொண்டு செடிகளை சரியான இடத்தில் வைக்கவும்.

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support