தமிழகத்தில் உபரி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பு – டிசம்பர் 20ல் கலந்தாய்வு!
தமிழக பள்ளிக்கல்வித்துறையில் உள்ள உபரி ஆசிரியர்களுக்கான முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வி இயக்குநகரம் வெளியிட்டுள்ளது.
வெளியான அறிவிப்பு
தமிழகத்தில் பள்ளிக்கல்வி துறையில் உள்ள உபரி ஆசிரியர்கள் பணி நிரவல் செய்யப்பட இருக்கின்றனர். இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குநகரம் சார்பில் மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட சுற்றறிக்கையில், அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் 2023-24 ஆம் கல்வியாண்டுக்கு மாணவர் எண்ணிக்கை அடிப்படையில் பணியாளர் நிர்ணயம் செய்யப்பட்டது. இந்த உபரி ஆசிரியர்களாக இருப்பவர்கள் தொடர்ந்து அதே இடத்தில் பணிபுரிவதால் அரசுக்கு நிதியிழப்பு ஏற்படுகிறது.
அதனால் உபரி ஆசிரியர்கள் பணிநிரவல் செய்யப்பட இருக்கின்றனர். அதற்காக அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் உபரி ஆசிரியர்கள் விவரங்களை பாடம், பதவி வாரியாக பட்டியல் தயார் செய்ய வேண்டும். அதன் விவரங்களை எமிஸ் தளத்தில் நவ.30 ஆம் தேதிக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும். இந்த தகவல்களின் அடிப்படையில் மாவட்டத்துக்குள் பணிநிரவல் கலந்தாய்வு டிசம்பர் 20 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.