Daily TN Study Materials & Question Papers,Educational News

2024 புத்தாண்டு ராசி பலன்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசன் .. வெளிநாடு செல்வது யார்?

2024 புத்தாண்டு ராசி பலன்: இந்த 6 ராசிக்காரர்களுக்கு வேலையில் புரமோசன் .. வெளிநாடு செல்வது யார்?

2024ஆம் ஆண்டு இன்னும் சில வாரங்களில் பிறக்கப்போகிறது. 2024ஆம் ஆண்டில் எந்த ராசிக்காரர்களுக்கு உயர்கல்வி யோகம் கைகூடி வரும்? படித்து முடித்தவர்களில் யாருக்கு வேலை கிடைக்கும், புரமோசன் யாருக்கு கிடைக்கும் என்று பார்க்கலாம்

மேஷம்: செவ்வாய் பகவானை ராசி அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பதவி உயர்வு சம்பள உயர்வு தேடி வரப்போகிறது. 2024ஆம் ஆண்டில் நிலையான நிரந்தரமான வேலை கிடைக்கும். தொழில், வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வேலைக்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு உயர்கல்வி யோகமும் நினைத்த கல்லூரியில் படிக்கும் வாய்ப்பும் தேடி வரும்.

ரிஷபம்: 2024ஆம் ஆண்டில் வேலை செய்யும் இடத்தில் உங்களின் அந்தஸ்து உயரும். வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கப்போகிறது. சனிபகவான் நல்ல வேலையை தரப்போகிறார். மாணவர்களுக்கு உயர்கல்வி யோகம் தேடி வந்துள்ளது. வேலைக்காகவும், படிப்பிற்காகவும் வெளிநாடு செல்லப்போகிறீர்கள்.

மிதுனம்: ராகு பதவி யோகத்தை தரப்போகிறார். எதிர்பாராத அதிர்ஷ்டம் தேடி வரப்போகிறது. வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வந்துள்ளது. வெளிநாடுகளில் வசிப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். நிரந்தரமான வேலைக்காகவும், புரமோசனுக்காகவும் காத்திருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. வேலையில் இருப்பவர்களுக்கு இந்த ஆண்டு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கப்போகிறது.


கடகம்: 2024ஆம் ஆண்டு உங்களுக்கு வேலை செய்யும் இடத்தில் புரமோசன் கிடைப்பதால் பண வருமானம் அதிகரிக்கும். படித்து முடித்து விட்டு வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு நல்ல வேலை கிடைக்கும். வரும் வாய்ப்புகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள். நல்ல வேலை கிடைக்கும் வரை இருக்கும் வேலையை அவசரப்பட்டு விட வேண்டாம். மாணவர்கள் படிப்பில் அக்கறையும் கவனமும் செலுத்துங்கள். உயர்கல்விக்காக முயற்சி செய்பவர்கள் பெற்றோர்களின் ஆலோசனையை கேட்டு நடந்து கொள்வது நல்லது.


சிம்மம்: சூரியனை ராசி அதிபதியாகக் கொண்ட சிம்ம ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டில் எதிர்பாராத அதிர்ஷ்டம் உண்டாகும். கண்டகச்சனி இருந்தாலும் வேலைக்காக வெளிநாடு, வெளியூர் செல்லும் யோகம் வரப்போகிறது. வேலையில் இடம் மாற்றம் ஏற்படும். குரு பகவான் பதவி யோகத்தை தரப்போகிறார். வேலை, தொழிலில் மாற்றம் வரப்போகிறது. சொந்தத்தொழில் செய்வதற்கான யோகம் கைகூடி வரப்போகிறது. மாணவர்களுக்கு 2024ஆம் ஆண்டு அற்புதமான ஆண்டாக அமைந்துள்ளது. படிப்பில் படு சுட்டியாக இருப்பீர்கள். உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வந்துள்ளது.

கன்னி: 2024ஆம் ஆண்டில் உங்களுக்கு கேட்டது எல்லாம் கிடைக்கப்போகிறது. புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும். வேலையில் மாற்றம் வரப்போகிறது. கை நிறைய சம்பளம், புரமோசனுடன் கூடிய இடமாற்றம் கிடைக்கும். செய்யும் தொழிலில் லாபம் கிடைக்கும்.

துலாம்: சுக்கிரனை ராசி அதிபதியாகக் கொண்ட துலாம் ராசிக்காரர்களுக்கு 2024ஆம் ஆண்டு தொட்டதெல்லாம் பொன்னாகும். : வேலைக்காக காத்திருப்பவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கும். வேலையில் இருப்பவர்கள் கவனமாக இருப்பது அவசியம். உங்களுடைய வேலையை அடுத்தவர்களை நம்பி ஒப்படைக்க வேண்டாம். படிக்கும் மாணவர்கள் விளையாட்டுத்தனத்தை விட்டு விட்டு அக்கறையோடு படிக்கவும். மே மாதத்திற்குப் பிறகு படிப்பிற்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வரும்.

விருச்சிகம்: 2024ஆம் ஆண்டில் விருச்சிக ராசிக்காரர்களுக்கு விமானத்தில் ஏறும் யோகம் வரப்போகிறது. வேலைக்காக வெளிநாடு செல்ல வேண்டும் என்று நினைப்பவர்களின் எண்ணங்கள் நிறைவேறும். குடும்பத்தை விட்டு வெளிநாட்டில் சிக்கித்தவிப்பவர்களுக்கு நல்ல செய்திகள் தேடி வரும். மே மாதத்திற்குப் பிறகு புதிய தொழில் தொடங்கலாம். செய்யும் முதலீடுகளில் இரட்டிப்பு லாபம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனும் சம்பள உயர்வும் கிடைக்கும்.

தனுசு: பிறக்கப்போகும் 2024ஆம் ஆண்டு தனுசு ராசிக்காரர்களுக்கு வேலை செய்யும் இடத்தில் அற்புதமான மாற்றங்களைத் தரப்போகிறது. செய்யும் தொழில் வியாபாரத்தில் லாபம் பல மடங்காக உயரப்போகிறது. நல்ல வேலை கிடைக்கும். தொழில் வியாபாரம் விருத்தி அடையும். வெளிநாட்டில் கல்வி, வேலைக்காக முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் தேடி வரும். வாழ்க்கையில் கடந்த காலங்களில் சோதனைகளை சந்தித்தவர்களுக்கு சாதனை புரியும் ஆண்டாக 2024ஆம் ஆண்டு அமையப்போகிறது

மகரம்: 2024ஆம் ஆண்டு மகிழ்ச்சி நிறைந்த ஆண்டாக வெற்றிகளை தேடித்தரக்கூடிய ஆண்டாக அமையப்போகிறது. வேலையில்லாமல் கவலைப்பட்டுக்கொண்டிருந்த உங்களுக்கு விடிவுகாலம் பிறக்கப்போகிறது. கடந்த காலங்களில் வேலையை இழந்தவர்களுக்கு 2024ஆம் ஆண்டில் நல்ல வேலை கிடைக்கப்போகிறது. வேலையில் இருந்தாலும் புரமோசனும் சம்பள உயர்வும் இல்லையே என்று ஏங்கித்தவித்தவர்களுக்கு புரமோசனுடன் கூடிய சம்பள உயர்வு கிடைக்கப்போகிறது. பெண்களுக்கு வேலை செய்யும் இடத்தில் மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும்.

கும்பம்: 2024ஆம் ஆண்டு கும்ப ராசிக்காரர்களுக்கு குபேர யோகத்தை தரப்போகும் ஆண்டாக அமையப்போகிறது. இருக்கிறதை விட்டு விட்டு பறப்பதற்கு ஆசைப்பட வேண்டாம். இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். குரு பகவானின் பார்வையால் உங்களுக்கு நல்ல வேலை வாய்ப்பு கிடைக்கும். வேலை செய்யும் இடத்தில் உங்களுக்கு மதிப்பு மரியாதை கூடும். உண்மையான உழைப்புக்கு ஏற்ற கூலி கிடைக்கும். பல வழிகளில் இருந்தும் பணம் வரும். ஷேர் மார்க்கெட்டில் முதலீடு செய்வதை தவிர்த்து விடுங்கள்.

மீனம்: 2024ஆம் ஆண்டு மீன ராசிக்காரர்களுக்கு ராஜயோகத்தை தரக்கூடிய ஆண்டாக அமைந்துள்ளது. நிறைய பண வருமானம் வரும். மே மாதத்திற்குப் பிறகு புதிய வேலைக்காக செய்யும் முயற்சிகளுக்கு வெற்றிகள் கிடைக்கும். இருக்கும் வேலையை தக்க வைத்துக்கொள்ளுங்கள். வேலையை விட்டு விட்டு மற்றொரு வேலைக்கு ஆசைப்படாதீர்கள் பாதியில் விட்டு விட்டு போய்விடுவார்கள். அலுவலகத்தில் உயரதிகாரிகளிடம் பேசும் போது கவனம் தேவை. நமக்கு விடிவு காலம் எப்போது வரும் என்று ஏங்கித்தவித்தவர்களுக்கு புத்தாண்டு நல்ல செய்தியை தரப்போகிறது. மாணவர்கள் உயர்கல்விக்காக வெளிநாடு செல்லும் யோகம் கைகூடி வந்துள்ளது. 

Share:

0 Comments:

إرسال تعليق

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

أرشيف المدونة الإلكترونية

Definition List

header ads

Unordered List

Support