தோல்விகளால் துவண்டு போன நடிகை.. வாய்ப்பு கொடுத்து அரவணைத்த ஹீரோ..
ஆரம்பத்தில் இந்த நடிகையின் அறிமுகமே தோல்வியாக தான் இருந்தது. இருந்தாலும் அக்கட தேசத்தில் கஷ்டப்பட்டு முன்னேறி தனக்கென ஒரு அந்தஸ்தை அடைந்தார். அதன் பிறகு நடிகைக்கு டாப் ஹீரோக்களுடன் ஜோடி போடும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படியே பாலிவுட் பக்கமும் சென்றார். அங்கு முரட்டு நடிகருடன் நடித்த இவர் அவரை வைத்து அடுத்தடுத்த வாய்ப்புகளை பிடிக்கவும் திட்டம் போட்டார். ஆனால் நடிகையின் நேரமோ என்னமோ படம் படுதோல்வி அடைந்தது.
அதேபோல் ட்ரெண்டிங் நடிகருடனும் இணைந்து நடித்த அந்த படமும் சொல்லிக் கொள்ளும்படி போகவில்லை. இதனால் நொந்து போன நடிகை சில காலம் ஆன்மீகப் பக்கம் தன் கவனத்தை திசை திருப்பி வந்தார்
மாஸ்டர் நடிகர் படத்தில் இணைந்த நடிகை
ஆனால் இப்போது அவருக்கு அதிர்ஷ்டம் கூரையை உடைத்துக்கொண்டு கொட்டி இருக்கிறது. தற்போது வாரிசு நடிகரின் படத்தில் நடிக்க இவர் கமிட் ஆகி இருக்கிறார். ஏற்கனவே மாஸ் ஹீரோவின் படத்தில் ரீ என்ட்ரி கொடுத்த இவருக்கு அது சொதப்பலில் தான்முடிந்தது.
ஆனால் இந்த முறை அம்மணி நிச்சயம் ஒரு ரவுண்டு வருவார். ஏனென்றால் அடுத்த படமும் அவருக்கு கை கூடி இருக்கிறது. மாஸ்டர் நடிகரின் சீரிஸ் படத்தில் நடிக்க அம்மணி சம்மதித்திருக்கிறாராம்.
இதனால் அவருக்கு பெரும் நம்பிக்கை வந்திருக்கிறது. இதை வைத்து கோலிவுட்டை கலக்கி விடுவேன் அடுத்த லேடி சூப்பர் ஸ்டார் நான் தான் என தனக்கு நெருக்கமானவர்களிடம் துள்ளி குதிக்காத குறையாக சந்தோஷப்பட்டு வருகிறாராம்.
0 Comments:
إرسال تعليق
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.