Daily TN Study Materials & Question Papers,Educational News

,8th Tamil basic quiz 4 - Worksheet 4 Answer key - Bridge course

8th Tamil basic quiz 4 - Worksheet 4 Answer key - Bridge course

வினாடி வினா 4

மதிப்பீடு

1. கீழ்க்காணும் பாடலில், இருவேறு பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ள சொல்லையும் அதன் பொருள்களையும் எழுதுக.

‘தொல்லை வினைதரு தொல்லை அகன்று

சுடர்க தமிழ்நாடே!’

விடை:

தொல்லை - துன்பம் , கவலை 

பொருந்தாத பழைய கருத்துக்களால் உண்டாகும் துன்பங்கள் நீங்கி தமிழ்நாடு ஒளிர வேண்டும் 

2. கோடிட்ட இடங்களை நிரப்புக.

‘வாழ்க  நிரந்தரம்  வாழ்க  தமிழ்மொழி

வாழிய வாழியவே!

வான மளந்த தனைத்தும்  அளந்திடும்

வண்மொழி வாழியவே!

3. பின்வரும் பாடலடிகளில் பயின்றுவந்துள்ள எதுகை, மோனைச் சொற்களை எடுத்தெழுதுக.

எங்கள் தமிழ்மொழி எங்கள் தமிழ்மொழி

என்றென்றும் வாழியவே! ’

‘வாழ்க தமிழ்மொழி வாழ்க தமிழ்மொழி

வாழ்க தமிழ்மொழியே!

விடை:

எதுகை : 

ங்கள் - எங்கள்

மிழ்மொழி - தமிழ்மொழி

வாழ்க - வாழ்

மோனை  : 

ங்கள் - ங்கள்

மிழ்மொழி - மிழ்மொழி

வாழ்க - வாழ்க

4. உரைப்பகுதியைப் படித்து விடையளிப்பதற்கேற்ற வினாக்கள் நான்கு அமைக்க.

தமிழெழுத்துகளின் பழைய வரிவடிவங்களைக் கோவில்களிலுள்ள கருங்கல்சுவர்களிலும் செப்பேடுகளிலும் காணமுடிகிறது. கல்வெட்டுகள் கி.மு. (பொ.ஆ.மு.)மூன்றாம் நூற்றாண்டுமுதல் கிடைக்கின்றன. செப்பேடுகள் கி. பி. (பொ.ஆ.பி.) ஏழாம்நூற்றாண்டுமுதல் கிடைக்கின்றன. கல்வெட்டுகள், செப்பேடுகள் ஆகியவற்றில் காணப்படும் வரிவடிவங்களை வட்டெழுத்து, தமிழெழுத்து என இரு வகையாகப் பிரிக்கலாம்.

வினா 1:

தமிழெழுத்துகளின் பழைய வரிவடிவங்களை எங்கெல்லாம் காண முடிகிறது?

வினா 2:

எந்த நூற்றாண்டு முதல் கல்வெட்டுகள் கிடைக்கின்றன ?

வினா 3:

செப்பேடுகள் எந்த நூற்றாண்டு முதல் கிடைக்கின்றன ?

வினா 4:

விரி வடிவங்களை எத்தனை வகைகளாக  பிரிக்கலாம் ?

5. விடுபட்ட கட்டங்களை நிரப்புக.

வீரமாமுனிவரின் எழுத்துச்சீர்திருத்தம்

6. சரியா? தவறா? என எழுதுக.

அ) பழங்காலத்தில் கற்பாறை, செப்பேடு, ஓலை போன்றவற்றில் எழுதினர்.

( )

விடை : சரி 

ஆ) கடைச்சங்ககாலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் ‘வட்டெழுத்துகள்’என்று அழைக்கப்பட்டன. ( )

விடை : தவறு  

7. எழுத்துச்சீர்திருத்தத்தின் தேவை குறித்த கருத்துகளை உன் சொந்த நடையில் எழுதுக.

விடை:

மொழியை பிழையின்றி பேசவும் எழுதவும். 

குறில் நெடில் வேறுபாடுகளை அறிந்து கொள்ளவும் 

பிறமொழி கலப்பை தவிர்க்கவும். 

 நவீன யகத்திக்கு ஏற்ப்ப தமிழ் மொழியை கணினியில் அச்சேற்றவும் எழுத்து சீர்திருத்தம் தேவை .

8. கோடிட்ட இடங்களை நிரப்புக.

அ) உயிரெழுத்துகள்______________ஐ இடமாகக் கொண்டு பிறக்கின்றன.

விடை : கழுத்து 

ஆ) வல்லின மெய்யெழுத்துகள் ஆறும்______________ஐ இடமாகக்கொண்டுபிறக்கின்றன.

விடை : மார்பு 

இ) மெல்லின மெய்யெழுத்துகள் ஆறும் ______________ஐ இடமாகக்கொண்டுபிறக்கின்றன.

விடை : மூக்கு 

ஈ) இடையின மெய்யெழுத்துகள் ஆறும் ______________ ஐ இடமாகக்கொண்டுபிறக்கின்றன.

விடை : கழுத்து

உ) ஆய்த எழுத்து______________ ஐ இடமாகக்கொண்டு பிறக்கிறது.

விடை : தலை 

9. கீழ்க்காணும் சொற்களை உரக்க உச்சரித்து, மெய்யெழுத்துகளின் பிறப்பிடங்களை எழுதுக (குறிப்பேட்டில் எழுதுக).

சங்கு - மூக்கு 

, பஞ்சு,மூக்கு 

 தொண்டை, மார்பு 

தந்தம், மார்பு 

வாய், கழுத்து

தாழ்ப்பாள், கழுத்து ,மார்பு, கழுத்து

ஔவையார்,கழுத்து

கற்றை, மார்பு 

தென்றல். மூக்கு ,கழுத்து

10. உரை ப்பகுதியில் விடுபட்டுள்ள சொற்களை எழுதிப் படிக்க.எழுத்துகளின் பிறப்பு உயிரின் முயற்சியால் உடலின் உள்ளிருந்து எழும் காற்றானது மார்பு ,மூக்கு ,கழுத்து,தலை ஆகிய நான்கு இடங்களுள்ஒன்றில் பொருந்தி, இதழ் , பல் , நாக்கு ,மேல்வாய் ஆகிய உறுப்புகளின் முயற்சியினால் வேறுவேறு ஒலிகளாகத்தோன்றுகின்றன. இதனையே எழுத்துகளின்பிறப்பு என்பர்.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support