பொங்கல் பண்டிகையை ஒட்டி அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு வழங்கப்படும்” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம்..!
மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் - உண்மை நிலை என்ன? மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கம்..!
தமிழ்நாடு மருத்துவக் கல்வி இயக்குநரகம் 19.08.2024 அன்று இளநிலை மருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியலை மட்டுமே வெளியிட்டுள்ளது.
மருத்துவப் படிப்புகளுக்கான கட் ஆஃப் மதிப்பெண்களை தமிழ்நாடு அரசு வெளியிடுவதில்லை . தரவரிசைப் பட்டியல் மட்டுமே அரசால் வெளியிடப்படுகிறது ' என்று மருத்துவக் கல்வி இயக்குநரகம் விளக்கமளித்துள்ளது .
தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்
தேசிய அளவில் வெளியான NIRF தரவரிசை பட்டியலில் டாப் 100 கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இடம் பெற்றுள்ள தமிழ்நாட்டை சார்ந்த 36 கல்லூரிகளின் பட்டியல்...
7-ஆவது இடத்தில் கோயம்புத்தூர் PSGR கிருஷ்ணம்மாள் பெண்கள் கல்லூரி.
8-ஆவது இடத்தில் சென்னை லயோலா கல்லூரி
11-ஆவது இடத்தில் கோயம்புத்தூர் PSG கலை மற்றும் அறிவியல் கல்லூரி.
13-ஆவது இடத்தில் சென்னை மாநிலக் கல்லூரி.
14-ஆவது இடத்தில் மெட்ராஸ் கிருஷ்டியன் கல்லூரி.
15-ஆவது இடத்தில் மதுரை தியாகராஜர் கல்லூரி.
25-ஆவது இடத்தில் திருச்சி செயிண்ட் ஜோசப் கல்லூரி.
28-ஆவது இடத்தில் தூத்துக்குடி வ.உ.சி கல்லூரி .
30- வது இடத்தை சென்னை ஸ்டெல்லா மாரிஸ் பெண்கள் கல்லூரி.
33-ஆவது வது இடத்தை திருச்சி பிஸப் ஹீப்பர் கல்லூரி.
36-ஆவது இடத்தை பாளையங்கோட்டை செயிண்ட் சேவியர் கல்லூரி
37-ஆவது இடத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ கிரிஷ்ணா கலை அறிவியல் கல்லூரி.
41-ஆவது இடத்தை திருச்சி ஹோலிகிராஸ் கல்லூரி.
42-ஆவது இடத்தை மார்த்தாண்டம் நேசமணி மெமோரியல் கிரிஸ்டியன் கல்லூரி.
44-ஆவது இடத்தை பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் கல்லூரி
47-ஆவது இடத்தை திருப்பத்தூர் செக்ரெட் ஹார்ட் கல்லூரி
52-ஆவது இடத்தை கோயம்புத்தூர் கொங்குநாடு கலை அறிவியல் கல்லூரி
54-ஆவது இடத்தை மதுரை அமெரிக்கன் கல்லூரி
56-ஆவது இடத்தை கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி.
59-ஆவது இடத்தை திருச்சி ஜமால் முகமது கல்லூரி
63-ஆவது இடத்தை சிவகாசி அய்யா நாடார் ஜானகி அம்மாள் கல்லூரி
67-ஆவது இடத்தை கோயம்புத்தூர் அரசு கலைக் கல்லூரி
67-ஆவது இடத்தை சென்னை பெண்கள் கிரிஸ்டியன் கல்லூரி
71-ஆவது இடத்தை சென்னை ராணி மேரி கல்லூரி
73-ஆவது இடத்தை சென்னை ஸ்கூல் ஆஃப் சோசியல் வொர்க்
75-ஆவது இடத்தை கோயம்புத்தூர் டாக்டர் NGP கலை மற்றும் அறிவியல் கல்லூரி
76-ஆவது இடத்தை காரைக்குடி அழகப்பா அரசு கலைக் கல்லூரி
78-ஆவது இடத்தை தூத்துக்குடி APC மகாலட்சுமி பெண்கள் கல்லூரி
79-ஆவது இடத்தை சென்னை எத்திராஜ் பெண்கள் கல்லூரி
82-ஆவது இடத்தை திருச்சி நேஷனல் கல்லூரி
82-ஆவது இடத்தை கோயம்புத்தூர் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா கல்லூரி
89-ஆவது இடத்தை சென்னை குரு நானக் கல்லூரி
94-ஆவது இடத்தை கோயம்புத்தூர் டாக்டர் SNS ராஜலஷ்மி கல்லூரி
96-ஆவது இடத்தை விருதுநகர் இந்து நாடார் செந்திகுமர் நாடார் கல்லூரி
98-ஆவது இடத்தை திருநெல்வேலி, சதக்கத்துல்லாஹ் அப்பா கல்லூரி
100-ஆவது இடத்தை நாகர்கோவில் ஸ்காட் கிரிஸ்டியன் கல்லூரி பிடித்துள்ளது.
ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவிப்பு
விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு 7.8.24 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார் அதனை ஈடு செய்விதமாக ஆகஸ்ட் 17.08.24 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல் - மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS -ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு..
2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல் - மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS -ல் 05.08.2024க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு..
DSE Proceedings - Download here
ஆகஸ்ட் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு
தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக இருப்பது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவில். இந்த கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.
அதனை தொடர்ந்து பட்டிமன்றம், நாடகம், நாட்டியம், கருத்தரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். நடப்பு ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட். 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாலியல் குற்றச்சட்டம் 2012 தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் வீடியோக்கள்!
பாலியல் குற்றச்சட்டம் 2012 தொடர்பான விதிகளை தெளிவுபடுத்தும் வீடியோக்கள் You Tube links
DSE - Pocso Act Awareness Videos👇
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்படவேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா? RTI பதில்
6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்படவேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா?
RTI பதில்👇👇👇👇
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம்.
அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம்
நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வுவதை 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தியது அதிமுக அரசு அதைவிட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறையிலும் திமுக அரசு சிக்கி இருப்பதாக ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது.
60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு தேவை 18 ஆயிரம் கோடி இவர்களெல்லாம் பழைய ஓய்வதில்லை திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்ஷன் வழங்க சுமார் 300 கோடி தேவை மேலும் புதிதாக ஆட்களை நியமனம் செய்யும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி தேவை ரூபாய் தேவைப்படும்.
ஆக சுமார் 19,000 கோடி தேவை அதனால் ஓய்வு பெற அனுமதிக்காமல் இரண்டு ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்திற்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடி தான் தேவைப்படும் அதே சமயம் ஆண்டுக்கு சுமார் 18,400 கோடியை இரண்டு ஆண்டுகளுக்கு 36 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசு செலவினத்தை தவிர்க்க முடியும் அதனால் ஓய்வு பெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித்திருக்கிறது தி.மு.க அரசு...
3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆக.10 வரை நீட்டிப்பு
தமிழகத்தில் 3 ஆண்டு சட்டப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகத்தின் கீழ் 26 அரசு மற்றும் தனியார் சட்டக் கல்லூரிகள் (சீர்மிகு சட்டப்பள்ளி உட்பட) இயங்கி வருகின்றன. இவற்றில் 3 ஆண்டு எல்எல்பி சட்டப் படிப்புகளுக்கு 2,530 இடங்கள் உள்ளன. இவை நடப்பு கல்வியாண்டு (2024-25) இணைய வழி கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. இதற்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த ஜூலை 3-ம் தேதி தொடங்கி இன்றுடன் நிறைவு பெற்றது. மொத்தம் 16 ஆயிரம் மாணவர்கள் வரை விண்ணப்பித்திருந்தனர்.
இதற்கிடையே பல்வேறு தரப்பின் கோரிக்கையை ஏற்று 2-வது முறையாக விண்ணப்பிக்கும் கால அவகாசம் ஆகஸ்ட் 10-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து விருப்பமுள்ள மாணவர்கள் /www.tndalu.ac.in/ என்ற இணையதளம் வழியாக துரிதமாக விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வு விதிகள், விண்ணப்பக் கட்டணம் உட்பட கூடுதல் விவரங்களை மேற்கண்ட வலைத்தளத்தில் அறிந்து கொள்ளலாம் என்று சட்டப் பல்கலைக்கழகத்தின் பதிவாளர் கவுரி ரமேஷ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது. முன்னதாக ஏற்கெனவே விண்ணப்பப் பதிவுக்கான அவகாசம் ஜூலை 24-ம் தேதியுடன் முடிவடைய இருந்தது குறிப்பிடத்தகக்து.
வருமான வரி கணக்கு தாக்கலில் புதிய சாதனை: கடந்த ஆண்டைவிட 7.5% அதிகம்
ஆக. 2: 2024-25 மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை புதிய சாதனையாக 7.28 கோடி வருமான வரிக் கணக்கு (ஐடிஆா்) தாக்கல் செய்யப்பட்டிருப்பதாக வருமான வரித் துறை வெள்ளிக்கிழமை தெரிவித்தது.
கடந்த 2023-24 மதிப்பீட்டு ஆண்டில் தாக்கல் செய்யப்பட்ட 6.77 கோடியைவிட இது 7.5 சதவீதம் அதிகம்.
இது தொடா்பாக வருமான வரித் துறை வெளியிட்ட செய்திக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: 2024-25 மதிப்பீட்டு ஆண்டில் ஜூலை 31-ஆம் தேதி வரை புதிய சாதனையாக 7.28 கோடி வருமான வரிக் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதில் 5.27 கோடி கணக்குகள் புதிய நடைமுறையின் கீழும், 2.10 கோடி கணக்குகள் பழைய நடைமுறையின் கீழும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்மூலம் 72 சதவீதம் போ் புதிய வரி விதிப்பு நடைமுறையையும், 28 சதவீதம் போ் பழைய முறையையும் தோ்ந்தெடுத்துள்ளது தெரியவந்துள்ளது.
வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்வதற்கு கடந்த ஜூலை 31-ஆம் தேதி வரை கால அவகாசம் விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், கடைசி நாளில் அதிகபட்சமாக 69.92 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. அதேபோல் முதல்முறையாக வரி செலுத்துவோருக்கான பிரிவின் கீழ் 58.57 லட்சம் கணக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.
வரலாற்றில் முதல்முறையாக கடந்த ஏப்ரல் 1-ஆம் தேதிமுதல் ஐடிஆா்-1, ஐடிஆா்-2, ஐடிஆா்-4, ஐடிஆா்-6 ஆகிய படிவங்கள் வாரியத்தின் இணையதளத்தில் உள்ளீடு செய்யப்பட்டன. அதன்படி 7.28 கோடி ஐடிஆா்களில் அதிகபட்சமாக ஐடிஆா் -1 படிவத்தில் 45.77 சதவீதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. அதேபோல் 43.82 சதவீத ஐடிஆா்கள் இணையவாயிலாகவும், மீதமுள்ளவை நேரடி முறை மூலமாகவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இணையம் மூலம் வருமான வரிக் கணக்கு தளத்தை ஜூலை 31-ஆம் தேதி மட்டும் 3.2 கோடி போ் அணுகியுள்ளனா். இணையம் மூலமாக 6.21 கோடி ஐடிஆா்கள் சரிபாா்க்கப்பட்டுள்ளன. அவற்றில் 5.81 கோடிக்கும் மேற்பட்ட ஐடிஆா்கள் ஆதாரை அடிப்படையாகக் கொண்டு ஒருமுறை மட்டும் பயன்படுத்தும் கடவுச்சொல் மூலம் சரிபாா்க்கப்பட்டுள்ளன.
அவகாச தேதி நிறைவடைந்தும் வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்யாதோா் விரைவாக தாக்கல் செய்யுமாறு வருமான வரித் துறை அறிவுறுத்தியது. மேலும், வரி விதிப்பில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய நடைமுறை மற்றம் ஏற்கெனவே செயல்பாட்டில் உள்ள பழைய நடைமுறைகள் குறித்து வரி செலுத்துவோா் அறிந்துகொள்ளும் வகையில் பல்வேறு விழிப்புணா்வு பிரசாரங்கள் மேற்கொண்டதாக வருமான வரித் துறை தெரிவித்தது.
கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது!
கற்பித்தல் மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்து வேறு பணிகளில் தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை ஈடுபடுத்தக் கூடாது” என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரையைச் சேர்ந்த கலைச்செல்வி, தஞ்சையைச் சேர்ந்த சசிகலா ராணி ஆகியோர் உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனு: “நாங்கள் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்களாக பணியாற்றினோம். எங்கள் பள்ளிகளில் பிளஸ் 2 மாணவர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த லேப்டாப்கள் திருடப்பட்டன. இது தொடர்பான வழக்கு நிலுவையில் இருப்பதால் எங்களை ஓய்வு பெற அனுமதிக்கவி்ல்லை. எங்களை ஓய்வு பெற அனுமதித்து, ஓய்வூதியம் உள்ளிட்ட பணப்பலன்களை வழங்க உத்தரவிட வேண்டும்” என மனுக்களில் கூறியிருந்தனர்.
இந்த மனுக்கள் நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு விசாரணைக்கு வந்தது. பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவு: “ஏழை, எளிய மக்களின் மேம்பாட்டிற்கான நலத்திட்டங்களை செயல்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. இதுபோன்ற முயற்சிகள் பாராட்டுக்குரியவை. இத்திட்டங்களை செயல்படுத்துவதில் நீதிமன்றம் குறுக்கே வராது. அதே நேரத்தில் பெரும்பாலான பள்ளிகள் பாதுகாப்பான நிலையில் இல்லை என்பது மறுக்க முடியாத உண்மை.தலைமை ஆசிரியர்களுக்கு சில நிர்வாகப் பொறுப்புகள் இருந்தாலும், அவர்களின் முதன்மை கடமை மாணவர்களுக்கு கற்பிப்பது தான். மடிக்கணினி திருட்டு வழக்கில் பள்ளி தலைமை ஆசிரியர்களை பலிகடா ஆக்குவது நியாயமற்றது.
தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை சாதாரண மனிதர்களை போல கல்வித்துறை நடத்துவதை ஏற்க முடியாது. இது கண்டிக்கத்தக்கது. தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்களை கற்பிக்கும் பணி மற்றும் பள்ளி நிர்வாகம் தவிர்த்த பிற பணிகளில் பயன்படுத்தக்கூடாது. மனுதாரர்களை ஓய்வு பெற அனுமதித்து, அவர்களின் ஓய்வூதிய பலன்களை உடனடியாக வழங்க வேண்டும்” என நீதிபதி உத்தரவிட்டார்.
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை - அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என அறிவிப்பு!
வீட்டு இணைப்புகளுக்கு எவ்வித மின்கட்டண உயர்வும் இல்லை - அனைத்து இலவச மின்சாரச் சலுகைகளும் தொடரும் என அறிவிப்பு..!
நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தின் அறிவிப்பை அடிப்படையாக கொண்டு ஜூலை மாதம் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக தகவல் பரவிய நிலையில் மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் மீண்டும் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும், கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும் எனவும் பல்வேறு கட்சி தலைவர்களும் வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இருக்காது என மின்சார வாரியம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக தமிழ்நாட்டில் நுகர்வோர் விலை குறியீடு உயர்வின் அடிப்படையில் மின் கட்டணத்தை உயர்த்த மின்சார ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்திருப்பதால் மின் கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாகவும் தமிழக வரலாற்றில் 10 மாதங்களில் 2வது முறையாக மின்கட்டணம் உயர்த்துவது இதுவரை நிகழ்ந்ததில்லை, மீண்டும் மின்கட்டண உயர்வு என்பது மக்கள் மீது நடத்தப்படக்கூடிய தாக்குதல் என்பது உள்ளிட்ட பல்வேறு கருத்துக்களை தெரிவித்து ஜூலை முதல் கட்டண உயர்வு முடிவை மின்சார வாரியம் கைவிட வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி அறிக்கை வெளியிட்டிருந்தார்.
ஜூலை மாதம் 1ம் தேதியிலிருந்து மின்கட்டணத்தை 6 சதவீதம் அல்லது மின்வாரியத்தின் பணவீக்கம் 4.7 சதவீதத்திற்கு உயர்திக்கொள்ளலாம் என மின்சார ஒழுங்குமுறை ஆணையம் கடந்த ஆண்டு அறிவித்திருந்தது. இந்நிலையில் வரும் ஜூலை 1ம் தேதி முதல் மின்கட்டணம் உயர்த்தப்பட இருப்பதாக பல்வேறு தகவல்கள் வெளியாகியிருந்த நிலையில் தமிழ்நாட்டில் நடைமுறையில் இருக்கக்கூடிய மின்கட்டணத்தில் எந்தவொரு மாற்றமும் இல்லை என மின்சார வாரியம் தகவல் தெரிவித்துள்ளது.
Press Release
பட்டிவீரன்பட்டி பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா அதி விமர்சியாக!
திண்டுக்கல் அருகே உள்ள வத்தலகுண்டு பட்டிவீரன்பட்டி என்னும் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா நாடார் சமுதாயத்தை சேர்ந்த மக்களால் அதி விமர்சையாக கொண்டாடப்படும் இந்த ஆண்டும் பத்திரகாளியம்மன் கோவில் திருவிழா மிக சிறப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பட்டிவீரன்பட்டி கிராமத்தில் கொண்டாடப்பட்டு வருகிறது அந்த திருவிழாவில் நாடார் சமுதாயத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் மூன்று நாட்கள் திருவிழாவில் கலந்துகொண்டு சிறப்பாக கொண்டாடி வருகிறார்கள் அந்த திருவிழா தற்போது அதி விமர்சையாக நடைபெற்று வருகிறது.
அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் பணிப்பதிவேடு விவரங்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம் - வரும் 21ம் தேதி மீண்டும் முகாம் நடத்த உத்தரவு!
ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணிப்பதிவேடு தகவல்களை 01.07.2023-க்குள் சரிபார்த்துக்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.
கண்களால் கணினி இயக்கம்; ஆச்சர்யப்படுத்தும் பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்!
கண்களால் கணினி இயக்கம்; ஆச்சர்யப்படுத்தும் பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்!
லண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர், இந்த இரு மாணவர்களுக்கும் உதவி வருகிறார். கண்களால் மொபைல்போனை இயக்கும் செயலி மற்றும் பொருள்களை வாங்கும் திட்டப்பணிக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். January 17, 2023 by அ.ஜேம்ஸ் ப்ரடொலின் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கை முன் மாதிரியாகக் கொண்டு, கண்களால் கம்ப்யூட்டரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் சி. கிஷோர் மற்றும் க.சிவமாரிமுத்து.
ஆசிரியை சுமித்ராவுடன் மாணவர்கள் இம்மாணவர்கள், ஒரு மாத காலம் தீவிரமாக முயற்சி செய்து, தாங்களாகவே பைத்தான் குறியீட்டு முறையை கற்றுக் கொண்டுள்ளனர். பள்ளியின் கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் பைத்தான் குறியீட்டு முறை மூலம், மாற்றுத்திறனாளிகள் எளிதாகக் கண்களால் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பயன்படுத்தும் வகையில், சொந்தமாக செயலியை உருவாக்கியுள்ளார்கள். மாணவர்களின் இந்த படைப்பானது, தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஓப்பன் ஹவுஸ்-2022 அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று, சிறந்த படைப்பாளருக்கான விருதை மாணவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. இதனையடுத்து, லண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர், இந்த இரு மாணவர்களுக்கும் உதவி வருகிறார். கண்களால் மொபைல்போனை இயக்கும் செயலி மற்றும் பொருள்களை வாங்க, இணையதள குக்கீஸ் பயன்படுத்தும் செயலி உருவாக்கும் திட்டப்பணிக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.
பெற்றோருடன் மாணவர்கள் மாணவர்கள் சி. கிஷோர் மற்றும் க.சிவமாரிமுத்து இருவரும் கூறுகையில், ``திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு புதிய கற்றல் முறை (Digital Learning Management System) ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். பழைய கம்ப்யூட்டரை கொண்டே கண்களால் கம்ப்யூட்டரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளோம். புதிகாக உயர் ரக கம்ப்யூட்டர் வாங்க உதவியை எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு கிடைத்தால், எதிர்காலத்தில் செயலியின் பாதுகாப்பு அம்சமாக தனி ஒரு நபர் மட்டுமே கண்களை கொண்டு கம்ப்யூட்டரை இயக்கும் வகையில் செயலியை மாற்ற முடியும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள கண்களின் தரவுகளை கொண்டு பணம் எடுக்கும் இயந்திரங்களில் பாதுகாப்பு அம்சத்தை உயர்த்தும் செயலியையும் உருவாக்கும் எண்ணம் உள்ளது’’ என்றனர். மேலும் இதே பள்ளியின் மாணவர்கள் கே. லக்ஷ்மி காந்தன் மற்றும் எஸ். வரதராஜன் இருவரும், குரல் மூலம் எந்த மொழியிலும் எவ்வித பேச்சு உச்சரிப்பில் பேசினாலும் கம்ப்யூட்டர் செயல்படும் வகையில் `ஜார்விஸ்’ என்ற செயலியை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.
Free coaching class for Competitive Examinations - District Employment and Career Guidance Centre!
Free coaching class for Competitive Examinations - District Employment and Career Guidance Centre!
தை அம்மாவாசை 2023: வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்?
வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்? Thai Amavasai 2023: Thai Amavasai is Coming: When to Offer Tarpan?
Thai Amavasai Tharpanam: தை அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படும்.
2023ம் ஆண்டு பிறந்துள்ள தை மாதத்தில் அடுத்தடுத்து பல முக்கியமான நாட்கள் பிறந்து வருகிறது. தை என்றாலே சிறப்பு மிக்க மாதமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 17-ந் தேதிதான் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது. இந்த நிலையில், நாளை மறுநாள் அதாவது வரும் 21-ந் தேதி தை அமாவாசை(Thai Amavasai) தினமாகும். தை அமாவாசை தினமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.
தை அமாவாசை:
நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கருதப்படுகிறது. சிறப்பு மிகுந்த இந்த நாட்களில் நாளை மறுநாள் வரும் தை அமாவாசை தினத்தில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படும்.
தை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் அளிப்பதற்கு காலை 6.17 மணி முதல் அன்று நள்ளிரவு அதாவது 22-ந் தேதி அதிகாலை 2.22 மணி வரை உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில்தான் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். நாம் இந்த தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடையவதாக நம்பப்படுகிறது.
தர்ப்பணம்:
இந்த தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தை அமாவாசை தினத்தில் ஏழை, எளிவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாளை மறுநாள் வரும் தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல, ஏழை,எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் செய்வது மிகவும் நல்லது ஆகும். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் நீராடி காலை முதல் தர்ப்பணம் அளிப்பார்கள். இதனால், நாளை மறுதினம் தர்ப்பணம் அளிக்கும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், தை அமாவாசை தினத்தில் நமது மூதாதையர்களை நினைவுபடுத்தும் விதமாக தாத்தா, கொள்ளுதாத்தா, எள்ளுதாத்தா, பாட்டன், பூட்டன் என நமது தலைமுறையினரையும் நினைவில் கொள்ள வேண்டும். தங்களது சக்திக்கு ஏற்ப தர்ப்பணம் செய்வது நல்லது ஆகும்
TNPSC - கணக்கு அலுவலர் நேர்முக தேர்வு - அறிவிப்பு!
TNPSC - கணக்கு அலுவலர் நேர்முக தேர்வு அறிவிப்பு!
TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!
TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!
முதலில் TNSED App - individual login செய்யவும்
- 2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்
- 5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்
- 10 முதல் 15 வருடங்களுக்கு 270 நாட்கள்
- 15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்
- 20 வருடங்களுக்கு மேல் 540 நாட்கள்








.jpg)
















