Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label Local Holiday. Show all posts
Showing posts with label Local Holiday. Show all posts

ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு 7.8.24 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார் அதனை ஈடு செய்விதமாக ஆகஸ்ட் 17.08.24 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

ஆகஸ்ட் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக இருப்பது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவில். இந்த கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

அதனை தொடர்ந்து பட்டிமன்றம், நாடகம், நாட்டியம், கருத்தரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். நடப்பு ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட். 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை!

தேவர் ஜெயந்தி - பள்ளி , கல்லூரிகளுக்கு விடுமுறை!

தேவர் ஜெயந்தி மற்றும் குருபூஜை விழாவை முன்னிட்டு சிவகங்கை , திருப்புவனம் , மானாமதுரை , இளையான்குடி , காளையார்கோவில் ஆகிய ஒன்றியங்களில் உள்ள பள்ளி , கல்லூரிகளுக்கு வரும் 30 - ம் தேதி விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் அறிவிப்பு


Share:

Local Holiday - தமிழகத்தில் அக்.27 பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை - ஆட்சியர் அறிவிப்பு!

Local Holiday - உள்ளூர் விடுமுறை
1. Local Holiday - சிவகங்கை உள்ளூர் விடுமுறை :

தமிழகத்தில் மருது சகோதரர்களின் 222வது நினைவு தினத்தை முன்னிட்டு அக்.27 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என சிவகங்கை மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் மருது சகோதரர்களின் நினைவு நாளை முன்னிட்டு சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அனைத்து திருவுருவ சிலைக்கு பல்வேறு அரசியல் தலைவர்களும் மாலை அணிவித்து மரியாதை செய்வார்கள். அந்த வகையில் இந்த ஆண்டு மருது சகோதரர்கள் 222வது நினைவுதினம் அக்.27 ஆம் தேதி சிறப்பாக கொண்டாடப்பட இருக்கிறது.

அதனால் சிவகங்கை மாவட்டத்தின் சிவகங்கை, திருப்புவனம், மானாமதுரை, திருப்புத்தூர், காளையார்கோவில், இளையான்குடி, தேவகோட்டை ஒன்றியங்களில் பள்ளி, கல்லூரிக்கு அக். 27 ஆம் தேதி விடுமுறை விடப்பட்டுள்ளது. இது குறித்த அறிவிப்பை சிவகங்கை மாவட்ட ஆட்சியர் ஆஷாஅஜீத் வெளியிட்டுள்ளார். அசம்பாவித சம்பவங்கள் ஏற்படாமல் இருக்க உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

2. Local Holiday - சேலம் உள்ளூர் விடுமுறை :
சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருக்குடமுழுக்கு பெருவிழாவையொட்டி 27.10.2023 வெள்ளிக்கிழமை அன்று சேலம் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.   
 - செ.கார்மேகம்,இ.ஆ.ப., மாவட்ட ஆட்சியர், சேலம்

Share:

நவம்பர் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

நவம்பர் 1-ந் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த கன்னியாகுமரி தமிழகத்துடன் இணைக்கப்பட்ட தினத்தை முன்னிட்டு நவம்பர் 1-ந் தேதி கன்னியாகுமரி மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டுள்ளார்.

1954ம் ஆண்டு திருவிதாங்கூர் கொச்சி சமஸ்தான தமிழ் மக்கள் வசிக்கும் பகுதிகளை தமிழ்நாட்டுடன் இணைக்கும் போராட்டம் தீவிரமடைந்தது. போராட்டம் உச்சகட்டத்தை எட்டியதால் அப்பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தடையை மீறிய தியாகி மார்ஷல் நேசமணி, ரசாக், சிதம்பரநாதன் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

அதன் பின்னா் நடந்த கிளா்ச்சிகள், போராட்டங்கள், கடை அடைப்புகள், பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகளின் விளைவாக காவல்துறை துப்பாக்கிச் சூட்டில் மிகப்பெரிய உயிர்களை இழக்கவேண்டி இருந்தது. கன்னியாகுமரி மாவட்டம் மிக மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டது. திருவிதாங்கூர் பகுதியில் ஜனாதிபதி ஆட்சி அமல்படுத்தப்பட்டது.

1956ம் ஆண்டு நவம்பர் 1-ந் தேதி கேரளாவின் திருவிதாங்கூர் சமஸ்தானத்தின் கட்டுப்பாட்டில் இருந்த தோவாளை, அகஸ்தீ்ஸ்வரம், கல்குளம், விளவங்கோடு உள்ளிட்ட தாலுகாக்கள் கன்னியாகுமரி மாவட்டம் என்ற பெயரில் தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டன. செங்கோட்டை பகுதி நெல்லை மாவட்டத்துடன் இணைக்கப்பட்டது.


இதனை கொண்டாடும் விதமாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 1-ந் தேதி 'கன்னியாகுமரி தினம்' கொண்டாடப்பட்டு வருகிறது. குமரி மாவட்டம் தோன்ற முதல் காரணமாக இருந்த தியாகி மார்ஷல் நேசமணியை அப்பகுதி மக்கள் 'குமரி தந்தை' என அழைக்கின்றனர்.


Share:

05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

05.08.2022 ( வெள்ளிக்கிழமை ) உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

தூத்துக்குடி பணிமய மாதா ஆலய திருவிழா வருகிற 5-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவை முன்னிட்டு ஆகஸ்ட் 5ஆம் தேதி அன்று மாவட்டம் முழுவதும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இந்த விடுப்பு பொருந்தாது. 

இது செலவானில் முறிவு சட்டத்தின்படி பொது விடுமுறை நாள் கிடையாது. இந்த விடுமுறைக்கு பதிலாக ஆகஸ்ட் 13ஆம் தேதி அன்று அலுவலக நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்

Share:

26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!



அரியலூர் மாவட்டத்திற்கு வரும் 26ஆம் தேதி உள்ளூர் விடுமுறை என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

அரியலூர் மாவட்டம், கங்கைகொண்ட சோழபுரத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனால் ஏறத்தாழ 1000 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டுள்ள அருள்மிகு பிரகதீஸ்வரர் ஆலயம் உலகப் புகழ் வாய்ந்த ஒன்றாகும்

அரியலூர் மாவட்டத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற இந்த ஆலயத்தில் மாமன்னன் ராஜேந்திர சோழனின் பிறந்த நாளை முன்னிட்டு ஒவ்வொரு ஆண்டும் ஆடி மாதம் திருவாதிரை விழாவானது அப்பகுதிவாழ் மக்களால் வெகு விமர்சையாகவும் சிறப்புடனும் கொண்டாடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் 26ஆம் தேதி ஆடி திருவாதிரையில் மாமன்னன் ராஜேந்திர சோழன் பிறந்தநாள் அரசு விழாவாக கொண்டாடப்படுவதை முன்னிட்டு,அரியலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் ,விடுமுறை அறிவிப்பு என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது

Share:

06.07.2022 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை - அரசாணை வெளியீடு

06.07.2022 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை - அரசாணை வெளியீடு

திருவட்டார் ஆதிகேசவ பெருமாள் திருக்கோவில் கும்பாபிஷேக திருவிழா 06.07.2022 (புதன்கிழமை) அன்று கன்னியா குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்தது தமிழக அரசு.


06.07.2022 (புதன்கிழமை) உள்ளூர் விடுமுறை - அரசாணை வெளியீடு


Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories