Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label Education news. Show all posts
Showing posts with label Education news. Show all posts

பள்ளிகள் செயல்படும் நேரம் திடீர் மாற்றம்.., வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்பு!


நாடு முழுவதும் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளியில் பயிலும் மாணவர்களின் நலனுக்காக அந்த மாநில அரசு பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது. அதன்படி தற்போது தெலுங்கானா மாநிலத்தில் உள்ள ஹைதராபாத் மற்றும் செகந்திராபாத் மாவட்டங்களைத் தவிர மற்ற அனைத்து மாவட்டங்களுக்கும் பள்ளிகள் செயல்படும் நேரத்தை மாற்றி உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

அதாவது இனி வரும் நாட்களில் அனைத்து மாவட்டங்களிலும் உள்ள தொடக்கப்பள்ளி மற்றும் மேல்நிலைப் பள்ளிகள் காலை 9:30 மணிக்கு தொடங்கப்படும். அதேபோன்று மாலை தொடக்கப்பள்ளிகள் 4.15 மணி வரையிலும், மேல்நிலைப்பள்ளி மாலை 4:45 மணி வரையிலும் செயல்படும் என தெரிவித்துள்ளனர். 

Share:

12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை 24-ம் தேதி!

Supplementary Examination Results for Class 12th Students Directorate of Government Examinations 12-ம் வகுப்பு மாணவர்களுக்கான துணைத்தேர்வு முடிவுகள், ஜூலை 24-ம் தேதி பிற்பகல் வெளியிடப்படும் அரசு தேர்வுகள் இயக்ககம்

www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில்

தங்களது தேர்வெண், பிறந்ததேதி பதிவுசெய்து மதிப்பெண்

பட்டியலினை பதிவிறக்கம செய்யலாம்

Share:

+2 மாணவர்களுக்கு இது கட்டாயம்… பள்ளிகல்வித்துறை மிக முக்கிய உத்தரவ!!

தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு இது கட்டாயம்… பள்ளிகல்வித்துறை போட்ட மிக முக்கிய உத்தரவு…!!


நான் முதல்வன் திட்டத்தின் கருப்பொருள் “உலகை வெல்லும் தமிழகம்” என்பதாகும். இந்த திட்டத்தின் மூலம் பல்வேறு துறைகளிலும் சாதனை புரிய துடிக்கும் இளைஞர்கள் தங்கள் அறிவை வளர்க்கும் விதமாக பயிற்சிகள் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நமக்கு எங்கு வேலை கிடைக்க போகிறது என்னும் மனத்தடையை நீக்குவதற்காக இந்த திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. கல்வி, ஆராய்ச்சி, சிந்தனை, செயலில் திறமையானவர்களாக மாணவர்கள் இளைஞர்களாக மாற்றவே திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் +2 மாணவர்களுக்கு Mail ID தொடங்க பள்ளிகல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. +2 முடித்து கல்லூரி மாணவர் சேர்க்கையின் போதும், ‘நான் முதல்வன்’ திட்டத்தை அமல்படுத்தும் போதும் Mail ID கட்டாயம் தேவைப்படுவதால், உடனே Mail ID உருவாக்க வேண்டும் என்றும் ஜூலை 30க்குள் மாணவர்கள் Mail ID தொடங்க தலைமை ஆசிரியர், ஆசிரியர்கள் உதவுமாறும், email பயன்படுத்துவது குறித்து பயிற்சி அளிக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

பொதுத்தேர்வின் Key Answer ஷீட் கசிந்ததால் பள்ளிக்கல்வி துறை அதிர்ச்சி


பன்னிரண்டாம் வகுப்பு விடைத்தாள் மதிப்பீடு செய்யும் ஆசிரியர்களுக்கான விடை குறிப்புகள் சமூக வலைதளங்களில் உலா வந்ததால் கல்வித் துறை அதிர்ச்சி

எப்படி கசிந்தது என விசாரணை நடத்தி அறிக்கையை தர தேர்வுத்துறைக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவு

வரும் பத்தாம் தேதி முதல் 79 மையங்களில் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்பட உள்ளன. இந்த நிலையில் விடைத்தாள் திருத்தும் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களுக்கு மட்டும் அனுப்பப்பட்ட விடை குறிப்புகள் சமூக வலைதளங்களில் வெளியானதால் பரபரப்பு ஏற்பட்டது

Share:

10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிவு – அரசு அதிரடி நடவடிக்கை!

10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிவு – அரசு அதிரடி நடவடிக்கை!

பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடர்பாக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த சலசலப்பு எழுந்துள்ளது.

வினாத்தாள் கசிவு:

தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. பொதுத்தேர்வு தொடங்குவற்கு முன்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், திங்கட்கிழமை நடந்த தேர்வின் போது விகாராபாத் மாவட்டத்தில் அரசு பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் தேர்வு தொடங்கியவுடன், தனது மொபைலில் வினாத்தாளை போட்டோ எடுத்தார்.

அதனை மற்றொரு ஆசிரியருக்கு அனுப்பியுள்ளார். இவர்கள் விடைக்குறிப்பு தயாரிக்க இந்த செயலை செய்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் செய்தி நிறுவனங்களுக்கு தெரிய வந்து, தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அந்த 2 ஆசிரியர்கள் உட்பட 4 அரசு ஊழியர்களை இடை நீக்கம் செய்துள்ளார். மேலும், இது தனிப்பட்ட செயல்பாடு தான் என்றும், தேர்வு எந்த வித முறைகேடும் இல்லாமல் சீராக நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

RTE 2023-2024 விண்ணப்பம் - முக்கிய தகவல்..!

RTE 2023-2024 விண்ணப்பம் - முக்கிய தகவல்..!

RTE எனப்படும் கட்டாய தொடக்கக் கல்வித் திட்டம், எல்.கே.ஜி இந்தத் திட்டத்தின் கீழ் உங்கள் குழந்தைகளை அருகில் உள்ள தனியார் மெட்ரிகுலேஷன் மற்றும் சிபிஎஸ்சி பள்ளிகளில் ஒரு ரூபாய் கூட செலவில்லாமல் சேர்க்கலாம்.  இந்தத் திட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் படிக்கும் உங்கள் குழந்தைகளுக்கான கல்விக் கட்டணத்தை அரசே செலுத்துகிறது.  திட்டம் 2023-24 கல்வியாண்டுக்கான விண்ணப்ப தேதியை அறிவித்துள்ளது.

  அதன்படி மார்ச் 20ம் தேதி முதல் ஏப்ரல் 20ம் தேதி வரை இதற்கு விண்ணப்பிக்கலாம்.அப்படியானால் இந்த திட்டம் எப்படி செயல்படுகிறது?  இதற்கு யார் விண்ணப்பிக்கலாம்?  விண்ணப்பிக்க என்ன சான்றிதழ் தேவை?  அதை இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

8-ம் வகுப்பு வரை கல்வியைக் கட்டாயமாக எல்லா குழந்தைகளுக்கும்  உறுதி செய்யக்கூடிய ஒரு  திட்டமாகும். இந்தத் திட்டத்தின் மூலமாக மெட்ரிகுலேஷன் மற்றும் CBSE தனியார் பள்ளிகளில் 25 சதவிகிதம் ஏழை எளிய மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டும். உதாரணத்திற்கு 100 இடங்கள் அவர்கள் பள்ளியிலிருந்தால் 25 இடங்களை இவர்களுக்குக் கட்டாயமாக ஒதுக்க வேண்டும். அப்படி தேர்வு செய்யப்படுகிற மாணவர்களுக்கான கல்வித் தொகையை அரசே செலுத்திவிடும். 

விண்ணப்பிக்கும் முறை ? எப்படி 2023-2024?

இந்த வருடத்தில் L.K.G மற்றும் 1ஆம் வகுப்பு சேரக்கூடிய குழந்தைகளை இத்திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்கும் பள்ளிக்கூடம் 1 கிலோமீட்டர் பரப்பளவில் சுற்றியுள்ள பள்ளிகூடமாக இருக்க வேண்டும். அதிகபட்சமாக 5 பள்ளிக்கூடங்கள் வரை இத்திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தில் விண்ணப்பிக்கத் தகுதியானவர்களாக 3 பிரிவுகளாகப் பிரித்து இருக்கிறார்கள். அதன்படி 

* நலிவடைந்த பிரிவினர் 

* வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவினர் 

* வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவினர் 

இதில் நலிவடைந்த பிரிவினரில் விண்ணப்பிப்பவர்களின் ஆண்டு வருமானம் 2 லட்சத்தைவிட அதிகமாக இருக்கக்கூடாது. அடுத்து வாய்ப்பு மறுக்கப்பட்ட பிரிவில் அனைத்து மதத்தைச் சேர்ந்த பிற்படுத்தப்பட்ட மற்றும் பட்டியலின மக்களான BC, MBC, SC, ST ஆகியோர் விண்ணப்பிக்கலாம். வாய்ப்பு மறுக்கப்பட்ட சிறப்புப் பிரிவில்

ஆதரவற்றோர் , மாற்றுத்திறனாளிகள், திருநங்கைகள், எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள், தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் ஆகியோர் விண்ணப்பிக்கலாம்.

தகுதியுடையோர்:

* நலிவடைந்த பிரிவினருக்கு வருமான சான்றிதழ் 

*  குழந்தையுடைய சாதி சான்றிதழ் 

* குழந்தையின் ஆதார் அட்டை

* குழந்தையின் பிறப்பு சான்றிதழ்

* ரேஷன் கார்டு

* இருப்பிடச் சான்றிதழ் 

* சிறப்புப் பிரிவில் விண்ணப்பிக்கக் கூடியவர்கள் அந்தந்த துறையில் அதற்கான சான்றிதழை வாங்க வேண்டும். உதாரணத்திற்கு மாற்றுத்திறனாளிகள் மாற்றுத்திறனாளி சான்றிதழை அந்தத் துறையினரிடம் வாங்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை:

இதற்கு விண்ணப்பிக்கக் கூடிய இணையதளம் https://rte.tnschools.gov.in/ வருகிற 20ஆம் தேதி திறக்கப்பட்டும். இணையதளம் திறக்கப்பட்டவுடன் எப்படி விண்ணப்பிப்பது என்பதை விரிவாக இன்னொரு பதிவில் பார்க்கலாம். சென்ற வருடம்  தனியார் பள்ளிகளில் ஒதுக்கப்பட்ட 1,15,628 இடங்களில் வெறும் 60 சதவிகிதம் தான் நிரப்பப்பட்டிருக்கிறது. இதற்கு இந்தத் திட்டம் பற்றிய போதிய விழிப்புணர்வு மக்களிடத்தில் போய்ச் சேராததும், குறிப்பிட்ட நேரத்தில் சான்றிதழைச் சேர்க்க முடியாததும் காரணமாகக் கூறப்படுகிறது. ஆக இம்முறை உங்கள் குழந்தைகளைத் தனியார்ப் பள்ளியில் சேர்க்க வேண்டும் என்று விருப்பப்படுவோர் இத்திட்டத்திற்குத் தேவையான அனைத்தையும் இப்போதே தயார் செய்யத் தொடங்கவும். மேலும் இதுகுறித்த விவரங்களுக்கு 14417 என்னும் இலவச எண்ணுக்குத் தொடர்பு கொண்டு  தகவலைப் பெற்றுக்கொள்ளலாம்  

Share:

11, 12 ம் வகுப்பு பொதுத்தேர்வு Hall ticket தேர்வர்கள் பதிவிறக்கலாம் !

11, 12 ம் வகுப்பு Hall ticket தேர்வர்கள் பதிவிறக்கலாம் ! 

நடைபெறவுள்ள மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு பொதுத்தேர்வெழுத, விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் (தட்கல் உட்பட) தங்களது தேர்வுக் கூட நுழைவுச் சீட்டுகளை 28.02.2023 அன்று பிற்பகல் முதல் www.dge1.tn.gov.in கொள்ளலாம். என்ற இணையதளத்தின் மூலம் பதிவிறக்கம் செய்து

தனித்தேர்வர்கள், www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்குச் சென்று முதலில் “HALL TICKET" என்ற வாசகத்தினை 'Click' செய்தால் தோன்றும் பக்கத்தில் உள்ள "HIGHER SECONDARY FIRST YEAR / SECOND YEAR- MARCH/APRIL 2023 PRIVATE CANDIDATE HALL TICKET DOWNLOAD" என்ற வாசகத்தினை 'Click' செய்து தோன்றும் பக்கத்தில் தங்களது விண்ணப்ப எண் (Application Number) மற்றும் பிறந்த தேதியினைப் (Date of Birth), பதிவு செய்து, அவர்களுடைய தேர்வுக் கூட நுழைவுச் சீட்டைப் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

மேல்நிலை முதலாமாண்டு (+1 Arrear) மற்றும் இரண்டாமாண்டு (+2) பொதுத் தேர்வெழுதவுள்ள தனித்தேர்வர்களுக்கு இரண்டு தேர்வுகளுக்கும் சேர்த்து, ஒரே தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு மட்டும் வழங்கப்படும்.

மார்ச்/ஏப்ரல் 2023, மேல்நிலை முதலாம் ஆண்டு / இரண்டாம் ஆண்டு பொதுத் தேர்வுகளுக்கான தேர்வுக்கால அட்டவணைகளை (TIME TABLE) www.dge1.tn.gov.in என்ற இணையதளத்திற்கு சென்று அறிந்து கொள்ளலாம்.

Share:

பிப்-25 ஆம் தேதி தான் கடைசி நாள்!! ஆசிரியர் தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு!!

ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 2 தற்காலிக விடைக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது ‌.

இது தொடர்பாக ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தலைவர் நந்தகுமார் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2021இல் பட்டதாரி ஆசிரியர் பணிக்கான தகுதித்தேர்விற்கு உரிய தாள் 2க்கான தேர்வுகள் கம்ப்யூட்டர் மூலம் பிப்ரவரி 3-ம் தேதி முதல் 15-ம் தேதி வரையிலும் நடத்தப்பட்டது. தற்போது தேர்வுக்கான கேள்விகளுக்கு உரியத் தற்காலிக உத்தேச வினைக்குறிப்புகள் ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளமான www.tn.nic.in வெளியிடப்பட்டுள்ளன. தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய தேதியில் எந்த அமர்வில் தேர்வு எழுதியவர்களோ அந்த அமர்வுக்கு உரிய Master Quotion Paper TRB இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

தேர்வர்கள் வெளியிடப்பட்டுள்ள தற்காலிக விடைக்குறிப்பிற்கு இணையவழியில் ஆட்சேபனை தெரிவிக்கும் போது உரிய வழிமுறைகளைத் தவறாமல் பின்பற்றி அதற்குரிய சான்றாவணங்களை இணைக்க வேண்டும். சான்றாவணங்கள் இணைக்கப்படாத முறையீடுகள் பரிசீலனைக்கு ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

மேலும், ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ள தற்காலிக உத்தேச விடைக்குறிப்பின் மீது தேர்வர்கள் ஆட்சேபனை தெரிவிக்க விரும்புவோர் இன்று முதல் 25-ம் தேதி மாலை 5.30 மணி வரையில் மட்டும் ஆதாரங்களுடன் பதிவு செய்திடல் வேண்டும் அங்கீகரிக்கப்பட்ட பாட புத்தகங்கள் ஆதாரம் மட்டுமே அளிக்க வேண்டும்

Share:

12ஆம் வகுப்பு மாணவர்களை அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்ல பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!

12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கல்லூரி ஆர்வமூட்டல் செயல்பாடுகள் (Exposure Visit) - 27.02.2023 அன்று அருகாமையில் உள்ள கல்லூரிகளுக்கு அழைத்துச் செல்லுதல் சார்ந்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி உறுப்பினர் செயலரின் செயல்முறைகள்.

நான் முதல்வன் திட்டத்தின் கீழ் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு மேல்நிலைப் பள்ளிகளில் இவ்வாண்டு 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி பயில ஆர்வமூட்டுதல் சார்ந்து அருகாமையில் இருக்கின்ற கல்லூரிகளுக்கு ( Exposure Visit ) மாணவர்களை அழைத்து செல்வதற்கு திட்டமிடப்பட்டுள்ளது , இது சார்ந்து , 20.02.2023 அன்று முதன்மை செயலாளர் பள்ளிக் கல்வித் துறை தலைமையில் நடந்த இணையவழி கூட்டத்தில் தெரிவித்தப்படி , கீழக்கானும் வழிமுறைகளை பின்பற்ற பின்பற்ற கேட்டுக் கொள்ளப்படுகிறது.

Students Exposure Visit to Govt Colleges - Download here...

Share:

பொதுத்தேர்வுப் பணி ஆசிரியர்கள் 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்தத் தடை!


தமிழகத்தில் பொதுத்தேர்வுப் பணிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: * சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை தேர்வு மையங்களில் பயன்படுத்தக் கூடாது. செல்போனை தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில் வைக்க வேண்டும்.

தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு மையத்தில் வாட்ஸ்ஆப்' மூலம் எந்த வித தகவல்களையும் பகிரக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வரும் மாா்ச் 13 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

இதையும் படிக்க: தமிழகத்தில் 40 இடங்களில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு! இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் கண்டறிதல், பெயா்ப் பட்டியல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்வுத் துறை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

Share:

கல்லூரி பயிலும் SC/ST மாணவர்களுக்கு POST MATRIC உதவித்தொகை - செய்தி வெளியீடு!


ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் கீழ் செயல்படுத்தப்படும் போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டங்களுக்கான இணையதளம் 30.01.2023 அன்று திறக்கப்பட்டது.

 இத்திட்டங்களின் கீழ் பயன்பெற தகுதி வாய்ந்த ஆதிதிராவிடர் , பழங்குடியினர் மற்றும் கிறித்துவ மதம் மாறிய ஆதிதிராவிடர் இன மாணாக்கர்களிடமிருந்து ( கல்லூரியில் பயில்பவர்கள் மட்டும் ) புதிய ( fresh ) மற்றும் புதுப்பித்தல் ( renewal ) இனங்களுக்கான கல்வி உதவித் தொகை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

Share:

அரசுப் பேருந்துகளில் மாணவர்கள் தொங்கினால் புகார் அளிக்கலாம்: போக்குவரத்துத் துறை அதிரடி!

அரசுப் பேருந்துகளில் ஆபத்தான பயணத்தை மேற்கொள்ளும் மாணவர்கள் மீது புகார் அளிக்கலாம் என போக்குவரத்துத் துறை உத்தரவிட்டுள்ளது. 

இதுதொடர்பாக மாநகர அரசுப் போக்குவரத்துத் துறை மேலாண் இயக்குநர் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்,  மாநகர போக்குவரத்து கழக பேருந்துகளில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் பேருந்து படிக்கட்டுகளில் தொங்கியபடி பயணம் செய்தவாறு பேருந்துகளில் ஏறும், போதும், பயணம் செய்யும்போதும், பாதுகாப்பான விதிகளை கடைப்பிடிக்கச் செய்ய ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்கள் கடைப்பிடிக்க வேண்டிய நிலையான இயக்க நெறிமுறைகள் ஏற்கனவே சுற்றறிக்கை மூலம் வலியுறுத்தப்பட்ட நிலையில், ஒரு சில பேருந்துகளில் மாணவர்கள் படிகட்டு பயணம் தொடருவதால் மீண்டும் கீழ்வரும் இயக்க நெறிமுகளை கடைப்பிடிக்க வலியுறுத்தப்படுகிறது. 


அதன்படி, வழித்தடங்களில் ஏதேனும் மாணவர்கள் படியில் தொங்க நேரிட்டாலோ அல்லது உயிருக்கு பாதுகாப்பற்ற முறையில் பயணிக்க முற்பட்டலோ அந்த பேருந்தை நிறுத்தி படிக்கட்டு மற்றும் முறையற்ற பயணத்தை தவிர்க்க மாணவர்களை அறிவுறுத்த வேண்டும்.


மாணவர்கள், ஓட்டுநர்கள் மற்றும் நடத்துநர்களின் அறிவுரையை கேட்காமல் மீறி செயல்பட்டு, நிலைமை கட்டுப்பாட்டை மீறினால் ஓட்டுநர் மற்றும் நடத்துநர் பேருந்து இயக்கத்தை போக்குவரத்துக்கு இடையூறு இல்லாமல் ஓரமாக நிறுத்தி அருகில் உள்ள காவல் நிலையத்திற்கோ அல்லது காவல் துறை அவசர அழைப்பு 100 எண்ணுக்கோ மற்றும் மாநகர போக்குவரத்து கழக வான்தந்தி பிரிவுக்கும் தகவல் தெரிவித்து புகார் அளித்திட வேண்டும். 

பேருந்துகளில் பள்ளி, கல்லூரி மாணவர்களின் பாதுகாப்பான பயணத்தினை உறுதி செய்வது ஓட்டுநர் மற்றும் நடத்துநர்களின் பொறுப்பு என்பதனை உணர்ந்து பணிபுரிய வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் மீண்டும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Share:

TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று தேர்வு முடிவுகள் வெளியீடா?

TNPSC Group 4 தேர்வர்கள் கவனத்திற்கு – இன்று தேர்வு முடிவுகள் வெளியீடா?

TNPSC குரூப் 4 தேர்வுகளுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், இன்று இத்தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தேர்வு முடிவுகள்

தமிழக அரசுத்துறைகளில் உள்ள 4ம் நிலை பணியிடங்கள் மற்றும் VAO பணியிடங்களுக்கு TNPSC தேர்வாணையம் நடத்தும் குரூப் 4 தேர்வு மூலமாக தகுதியான நபர்கள் நிரப்பப்படுகின்றனர். கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளுக்கு பிறகு TNPSC தேர்வு கால அட்டவணையில் குறிப்பிட்டபடி குரூப் 4 தேர்வு கடந்த ஜூலை 24ம் தேதி அன்று நடைபெற்றது.


இந்த தேர்வு மூலமாக 7301 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான தேர்வு முடிவுகள் அக்டோபர் மாதத்தில் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் பெண்களுக்கான இடஒதுக்கீடு தொடர்பாக வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டது. அதனால் இந்த வழக்கின் தீர்ப்பின் அடிப்படையில் தேர்வு முடிவுகள் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.


தற்போது இந்த வழக்கின் தீர்ப்புகள் வெளியான நிலையில் குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள் இம்மாத இறுதிக்குள் வெளியாகும் என தேர்வாணையம் அறிவித்துள்ளது. அதன்படி குரூப் 4 தேர்வுக்கான முடிவுகள்  Feb முதல் வாரத்தில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்தேர்வின் முடிவுகள் TNPSC-யின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் மட்டுமே வெளியிடப்படும். அதனால் தேர்வர்கள் அவ்வப்போது அதிகாரப்பூர்வ இணையதளத்தை சரிபார்த்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Share:

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.01.2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள்- 20.01.2023  -  School Morning Prayer Activities - 20.01.2023


திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

 இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: செய்நன்றி அறிதல்

குறள் : 108

நன்றி மறப்பது நன்றன்று நன்றல்லது

அன்றே மறப்பது நன்று.

பொருள்:

ஒருவர் நமக்குச் செய்த நன்மையை மறப்பது நல்லதல்ல; அவர் தீமை செய்திருந்தால் அதை மட்டும் அக்கணமே மறந்து விடுவது நல்லது.

பழமொழி :

All things come to those who wait.

பொறுத்தவரே பூமியை ஆள்வார்

இரண்டொழுக்க பண்புகள் :

1. புத்தகம் மனித குலத்தின் குல சொத்து வாசிப்பேன். 

2. மனிதன் இறைவனின் அற்புத படைப்பு. நேசிப்பேன்.

பொன்மொழி :

சொற்கள் நம் சிந்தனையின் உடைகள். அவற்றை கந்தல்களாகவும், கிழிசல்களாகவும், அழுக்காகவும் உடுத்தக்கூடாது.

பொது அறிவு :

1. பாராசூட் பயிற்சிப் பள்ளி எங்கு அமைந்துள்ளது ? 

 ஆக்ராவில். 

 2. இந்தியாவில் மொத்தம் எத்தனை மொழிகள் உள்ளன? 

 1652 மொழிகள்.

English words & meanings :

Meat - flesh of the animals. noun. விலங்குகளின் மாமிசம். பெயர்ச் சொல். Meet - happen to visit or go to the presence of some one. verb. ஒருவரை சந்தித்தல். வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

மொச்சை பயிறில் உள்ள முக்கிய ஊட்டச்சத்துக்களில் தியமின், வைட்டமின் கே மற்றும் பி6, தாமிரம், செலினியம், இரும்புச்சத்து, நியசின், ரிபோஃப்ளவின், வைட்டமின் சி, வைட்டமின் ஏ, கோலின், சோடியம், செலினியம், துத்தநாகம், பொட்டாசியம் மற்றும் மக்னீசியம் போன்ற சத்துக்கள் உள்ளன. இது உங்களுக்கு மெலிந்த புரதத்தை வழங்குகிறது.


NMMS Q

கீழ்க்கண்டவற்றுள் எது உலோகப்போலி அல்ல? 

a) போரான் b) நைட்ரஜன் c) சிலிக்கான் d) ஜெர்மனியம். 

விடை : நைட்ரஜன்

ஜனவரி 20 இன்று

எட்வின் யூஜின் ஆல்ட்ரின் அவர்களின் பிறந்தநாள் 

எட்வின் யூஜின் ஆல்ட்ரின், Edwin Eugene Aldrin, Jr., பிறப்பு: ஜனவரி 20, 1930) என்பவர் அமெரிக்க விண்வெளி வீரரும் விமானியும் ஆவார். இவர் முதன் முதலாக மனிதரை சந்திரனில் ஏற்றிச் சென்ற அப்பல்லோ 11 விண்கலத்தில் நீல் ஆம்ஸ்ட்ரோங் உடன் பயணம் செய்து சந்திரனில் இறங்கிய இரண்டாவது மனிதர் என்ற பெருமையைப் பெற்றார்

நீதிக்கதை

இறைவனுக்கு நன்றி சொல்வோம்

ஒரு ஊரில் காகமொன்று இருந்தது. அது கருப்பு நிறத்தில் இருப்பதை வெறுத்தது. ஒரு நாள் ஒரு குளக்கரையில் இருந்த மரத்தின் மீது அமர்ந்திருந்தது அப்போது நீரில் இரு அன்னப்பறவைகள் நீந்திக் கொண்டிருந்தன.


அவற்றைப் பார்த்த காகம் அந்த அன்னப்பறவைகளைப் போல நான் வெள்ளையாக இல்லையே என வருந்தியது. அந்தப் பறவைகளைப்போல நாமும் தண்ணீரில் நீந்தினால் தன் சிறகுகளில் இருக்கும் கரிய நிறம் போய் வெண்மை நிறம் வந்துவிடலாம் என எண்ணியது.

உடனே அன்று முழுதும் அது தண்ணீரில் நீந்தியது. தன் இறகுகளை தேய்த்து தேய்த்து பார்த்தது. அதனால் சில இறகுகளையும் இழந்தது.

அதைப் பார்த்த அன்னப் பறவைகளில் ஒன்று காகத்திடம் இறைவன் படைப்பில் ஒவ்வொரு உயிரினமும் ஒவ்வொரு உருவம், நிறம் பெற்றவை. அதை மாற்ற நினைத்தால் நடக்காது என அறிவுரை கூறியது. மேலும், கடவுள் எந்த அங்கஹீனத்தையும் கொடுக்காமல் படைத்ததற்கு நன்றி சொல்லவேண்டும் என்றது.

இன்றைய செய்திகள் - 20.01.2023

* மின் இணைப்பு எண்ணுடன் 2 கோடி ஆதார் எண்கள் இணைப்பு: அமைச்சர் செந்தில்பாலாஜி தகவல்.

* நீட் விலக்கு மசோதா குறித்து விளக்கம் கேட்டு மீண்டும் மத்திய அரசு கடிதம்: மா.சுப்பிரமணியன் தகவல்.

* அரசுப் பள்ளிகளுக்கான என்எஸ்எஸ் நிதி, வங்கிக் கணக்கில் நேரடியாக செலுத்தப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.

* தவறான பயன்பாட்டை தடுக்க மனநோய் மற்றும் தூக்க மருந்துகளை மருத்துவரின் பரிந்துரை சீட்டு இருந்தால் மட்டுமே வழங்க வேண்டும் என்று மருந்துகட்டுப்பாடு இயக்குநரகம் அறிவுறுத்தியுள்ளது.

* விக்கிப்பீடியா ஆதாரங்கள் நம்பத் தகுந்தவை அல்ல - உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தல்.

* உலகம் முழுவதும் தொற்றை சமாளிக்க சுகாதார கட்டமைப்பு உருவாக்கப்பட வேண்டும்: ஜி-20 கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தல்.

* சீன புத்தாண்டு விடுமுறையில் தினசரி கரோனா உயிரிழப்பு 36 ஆயிரத்தை தாண்டும்: லண்டன் ஆய்வு நிறுவனம் கணிப்பு.

* ஐசிசி ஒருநாள் போட்டி தரவரிசை : விராட் கோலி, சிராஜ் முன்னேற்றம்.

* ஹாக்கி உலகக்கோப்பை: 14-0 என்ற கணக்கில் சிலி அணியை வீழ்த்தி காலிறுதி சுற்றுக்கு தகுதி பெற்றது நெதர்லாந்து.

Today's Headlines

* Minister SenthilBalaji informed  that 2 crore Aadhaar numbers had been linked with electricity connection number.

 * Central Government sent letter again asking for clarification on NEET Exemption Bill Information by Minister M. Subramanian

* The School Education said NSS funds for government schools will be paid directly into bank accounts said by the school education department .

 * The Drug Control Directorate has advised that psychotropic and sleeping medicines should be dispensed only with a doctor's prescription to prevent misuse.

* Wikipedia sources are not trust worthy : an advice from Supreme Court

 * Health infrastructure must be built to tackle the pandemic worldwide: India insists at G-20 meeting

 * London Research Institute predicted that Corona death toll will exceed 36,000 during Chinese New Year holiday.

* ICC ODI Rankings: Virat Kohli and Siraj Progressed 

 * Hockey World Cup: Netherland beat Chile by14-0 and reached quarter-final round

 Prepared by

Covai women ICT_போதிமரம்

Share:

அரசுப்பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்களின் பணிப்பதிவேடு விவரங்களை பதிவேற்ற கூடுதல் அவகாசம் - வரும் 21ம் தேதி மீண்டும் முகாம் நடத்த உத்தரவு!

ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணிப்பதிவேடு தகவல்களை 01.07.2023-க்குள் சரிபார்த்துக்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.


ஆசிரியர்கள் அனைவரும் தங்களது பணிப்பதிவேடு தகவல்களை 01.07.2023-க்குள் சரிபார்த்துக்கொள்ள பள்ளிக்கல்வி ஆணையர் உத்தரவு.
 அனைத்து வகை அரசு / அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் பணிப்பதிவேடு ( SR ) ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப் பட்டுள்ளதை உறுதி செய்தல் -அறிவுரைகள் வழங்குதல் தொடர்பாக பள்ளிக்கல்வி ஆணையரின் செயல்முறைகள். 

தமிழ்நாட்டில் உள்ள அரசு / அரசு நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்கள் , ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியல்லாத பணியாளர்களது பணிப்பதிவேடுகளில் ஈட்டிய விடுப்பு , மருத்துவச் சான்றின் பேரில் ஈட்டா விடுப்பு மற்றும் இதர பதிவுகள் நாளது தேதிவரை மேற்கொள்ளப்பட்டுள்ளதை உறுதி செய்திட வழங்கப்படுகின்றன.
Share:

கண்களால் கணினி இயக்கம்; ஆச்சர்யப்படுத்தும் பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்!

கண்களால் கணினி இயக்கம்; ஆச்சர்யப்படுத்தும் பட்டுக்கோட்டை அரசுப் பள்ளி மாணவர்கள்!



லண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர், இந்த இரு மாணவர்களுக்கும் உதவி வருகிறார். கண்களால் மொபைல்போனை இயக்கும் செயலி மற்றும் பொருள்களை வாங்கும் திட்டப்பணிக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார். January 17, 2023 by அ.ஜேம்ஸ் ப்ரடொலின் ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங்கை முன் மாதிரியாகக் கொண்டு, கண்களால் கம்ப்யூட்டரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளார்கள் தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் மாணவர்கள் சி. கிஷோர் மற்றும் க.சிவமாரிமுத்து.

ஆசிரியை சுமித்ராவுடன் மாணவர்கள் இம்மாணவர்கள், ஒரு மாத காலம் தீவிரமாக முயற்சி செய்து, தாங்களாகவே பைத்தான் குறியீட்டு முறையை கற்றுக் கொண்டுள்ளனர். பள்ளியின் கம்ப்யூட்டர் ஆய்வகத்தில் பைத்தான் குறியீட்டு முறை மூலம், மாற்றுத்திறனாளிகள் எளிதாகக் கண்களால் கம்ப்யூட்டரில் உள்ள கோப்புகளை பயன்படுத்தும் வகையில், சொந்தமாக செயலியை உருவாக்கியுள்ளார்கள். மாணவர்களின் இந்த படைப்பானது, தஞ்சாவூர் மாவட்டம், வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிகர்நிலை பல்கலைகக்கழகம் மற்றும் பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரி சார்பில், 2022 நவம்பர் 9ம் தேதி முதல் 11ம் தேதி வரை நடைபெற்ற ஓப்பன் ஹவுஸ்-2022 அறிவியல் கண்காட்சியில் பங்கேற்று, சிறந்த படைப்பாளருக்கான விருதை மாணவர்களுக்குப் பெற்றுத் தந்துள்ளது. இதனையடுத்து, லண்டன் பக்கிங்ஹாம் பல்கலைக்கழகத்தில் பணியாற்றி வரும், பட்டுக்கோட்டை அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியின் முன்னாள் மாணவர், இந்த இரு மாணவர்களுக்கும் உதவி வருகிறார். கண்களால் மொபைல்போனை இயக்கும் செயலி மற்றும் பொருள்களை வாங்க, இணையதள குக்கீஸ் பயன்படுத்தும் செயலி உருவாக்கும் திட்டப்பணிக்குத் தேவையான உதவிகளையும் செய்து வருகிறார்.

பெற்றோருடன் மாணவர்கள் மாணவர்கள் சி. கிஷோர் மற்றும் க.சிவமாரிமுத்து இருவரும் கூறுகையில், ``திருக்குறளை அடிப்படையாகக் கொண்டு புதிய கற்றல் முறை (Digital Learning Management System) ஒன்றையும் உருவாக்கத் திட்டமிட்டுள்ளோம். பழைய கம்ப்யூட்டரை கொண்டே கண்களால் கம்ப்யூட்டரை இயக்கும் செயலியை உருவாக்கியுள்ளோம். புதிகாக உயர் ரக கம்ப்யூட்டர் வாங்க உதவியை எதிர்பார்த்துள்ளோம். அவ்வாறு கிடைத்தால், எதிர்காலத்தில் செயலியின் பாதுகாப்பு அம்சமாக தனி ஒரு நபர் மட்டுமே கண்களை கொண்டு கம்ப்யூட்டரை இயக்கும் வகையில் செயலியை மாற்ற முடியும். ஆதார் கார்டுடன் இணைக்கப்பட்டுள்ள கண்களின் தரவுகளை கொண்டு பணம் எடுக்கும் இயந்திரங்களில் பாதுகாப்பு அம்சத்தை உயர்த்தும் செயலியையும் உருவாக்கும் எண்ணம் உள்ளது’’ என்றனர். மேலும் இதே பள்ளியின் மாணவர்கள் கே. லக்ஷ்மி காந்தன் மற்றும் எஸ். வரதராஜன் இருவரும், குரல் மூலம் எந்த மொழியிலும் எவ்வித பேச்சு உச்சரிப்பில் பேசினாலும் கம்ப்யூட்டர் செயல்படும் வகையில் `ஜார்விஸ்’ என்ற செயலியை உருவாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.

Share:

Free coaching class for Competitive Examinations - District Employment and Career Guidance Centre!

Free coaching class for Competitive Examinations - District Employment and Career Guidance Centre!


Honble Minister for Youth Welfare and Sports Development inaugurated the free coaching class for Competitive Examinations organised by the District Employment and Career Guidance Centre at Presidency College

Share:

தை அம்மாவாசை 2023: வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்?

வருகிறது தை அமாவாசை: என்ன நேரத்தில் தர்ப்பணம் அளிக்க வேண்டும்? Thai Amavasai 2023: Thai Amavasai is Coming: When to Offer Tarpan?


Thai Amavasai Tharpanam: தை அமாவாசை தினத்தில் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது மிகவும் சிறப்பானதாக கருதப்படும்.

2023ம் ஆண்டு பிறந்துள்ள தை மாதத்தில் அடுத்தடுத்து பல முக்கியமான நாட்கள் பிறந்து வருகிறது. தை என்றாலே சிறப்பு மிக்க மாதமாக உள்ளது. இந்த நிலையில், கடந்த 17-ந் தேதிதான் சனிப்பெயர்ச்சி நிகழ்ந்தது. இந்த நிலையில், நாளை மறுநாள் அதாவது வரும் 21-ந் தேதி தை அமாவாசை(Thai Amavasai) தினமாகும். தை அமாவாசை தினமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தினமாகும்.


தை அமாவாசை:


நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்க சிறந்த நாட்களில் ஒன்றாக ஆடி அமாவாசை, புரட்டாசி மாத மகாளய அமாவாசை, தை அமாவாசை தினங்கள் கருதப்படுகிறது. சிறப்பு மிகுந்த இந்த நாட்களில் நாளை மறுநாள் வரும் தை அமாவாசை தினத்தில் மக்கள் தங்களது முன்னோர்களுக்கு  தர்ப்பணம் செய்வது புண்ணியமாக கருதப்படும்.


தை அமாவாசை தினத்தில் நம் முன்னோர்களுக்கு திதி எனப்படும் தர்ப்பணம் அளிப்பதற்கு காலை 6.17 மணி முதல் அன்று நள்ளிரவு அதாவது 22-ந் தேதி அதிகாலை 2.22 மணி வரை உகந்த நேரம் ஆகும். இந்த நேரத்தில்தான் நமது முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிக்க வேண்டும். நாம் இந்த தை அமாவாசை நாளில் நம் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பதால் அவர்களது ஆன்மா சாந்தியடையவதாக நம்பப்படுகிறது.

தர்ப்பணம்:

இந்த தை அமாவாசை தினத்தில் நாம் கருப்பு உளுந்து, கருப்பு எள், வெல்லம், புத்தாடைகள் ஆகியவற்றை நாம் தானமாக அளித்தால் மிகவும் நல்லது. இவ்வாறு செய்வதன் மூலமாக நம் முன்னோர்களின் ஆசி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, தை அமாவாசை தினத்தில் ஏழை, எளிவர்களுக்கு தானம் செய்வதன் மூலம் நமக்கு ஏராளமான நன்மைகள் வந்தடையும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

நாளை மறுநாள் வரும் தை அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் அளிப்பது போல, ஏழை,எளிய மக்களுக்கு தானம் செய்ய வேண்டியதும் கட்டாயம் ஆகும். தானத்தில் சிறந்த தானமான அன்னதானம் செய்வது மிகவும் நல்லது ஆகும். தை அமாவாசை தினத்தை முன்னிட்டு ராமேஸ்வரம் உள்ளிட்ட முக்கிய வழிபாட்டு தலங்களில் பொதுமக்கள் நீராடி காலை முதல் தர்ப்பணம் அளிப்பார்கள். இதனால், நாளை மறுதினம் தர்ப்பணம் அளிக்கும் இடங்களில் பொதுமக்கள் கூட்டம் அலைமோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், தை அமாவாசை தினத்தில் நமது மூதாதையர்களை நினைவுபடுத்தும் விதமாக தாத்தா, கொள்ளுதாத்தா, எள்ளுதாத்தா, பாட்டன், பூட்டன் என நமது தலைமுறையினரையும் நினைவில் கொள்ள வேண்டும். தங்களது சக்திக்கு ஏற்ப தர்ப்பணம் செய்வது நல்லது ஆகும்

Share:

TNPSC - கணக்கு அலுவலர் நேர்முக தேர்வு - அறிவிப்பு!

TNPSC - கணக்கு அலுவலர் நேர்முக தேர்வு அறிவிப்பு!



கருவூலத் துறை கணக்கு அலுவலர் பதவிக்கு, நேர்முகத் தேர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

தமிழக கருவூலங்கள் மற்றும் கணக்குகள் பணியில் அடங்கிய, கணக்கு அலுவலர் நிலை - -3 பணியில், 23 காலியிடங்களை நிரப்ப, கடந்த ஆண்டு அக்டோபரில் போட்டித் தேர்வு நடத்தப்பட்டது.

இதில் தேர்ச்சி பெற்ற வர்களின் விபரங்கள் டி.என்.பி.எஸ்.சி.,யின் www.tnpsc.gov.inஎன்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளன.

தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு ஜன. 25ம்தேதி நேர்முகத் தேர்வு நடத்தப்படும் என,டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.
Share:

TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!

TNSED SCHOOLS APP ல் CL ,ML,EL, RL விண்ணப்பிப்பது எப்படி மொத்த விடுப்பை கணக்கிடுவது பற்றிய முழு விளக்கம்!



முதலில் TNSED App - individual login செய்யவும்


2) பிறகு e-profile என்ற option-ஐ கிளிக் செய்யவும்.

3) Apply leave என்பதை கிளிக் செய்யவும்

4) திரையில் "Enter leave balance" என்ற option வரும்

5) முதலில் தற்செயல் விடுப்பு(CL) மீதம் எவ்வளவு உள்ளது என்பதை பதிவு செய்யவும்

6) பிறகு "compensatory leave" என்ற option வரும்.அதில் நாம் எத்தகைய தகவலும் நாம் பதிவு செய்யக்கூடாது. ஏனென்றால் அது ஆசிரியர்களுக்கானது அல்ல(Non teaching staff),எனவே அக்காலத்தில் நாம் 0 என்று பதிவு செய்யவும்

7)  EL எவ்வளவு மீதம் உள்ளது என்பதை SR-ஐ பார்த்து சரியாக குறித்துக்கொண்டு பிறகு இதில் பதிவு செய்ய வேண்டும்.

8) மருத்துவ விடுப்பு எவ்வாறு பதிவு செய்வது? தகுதிகாண் பருவம் முடித்த அனைத்து ஆசிரியர்களுக்கும் இது பொருந்தும்.

  1. 2 முதல் 5 வருடங்களுக்கு 90நாட்கள்
  2. 5 முதல் 10 வருடங்களுக்கு 180நாட்கள்
  3. 10 முதல் 15  வருடங்களுக்கு 270 நாட்கள்
  4. 15 முதல் 20 வருடங்களுக்கு 360 நாட்கள்
  5. 20 வருடங்களுக்கு மேல்  540 நாட்கள்

ஆசிரியர்களின் பணிக்காலத்திற்கேற்ப இது வரை எடுத்த மருத்துவ விடுப்புகளின் எண்ணிக்கையை கழித்து பதிவிடவும்.
உதாரணத்திற்கு ஒரு ஆசிரியர் 9 வருடங்களாக பணிபுரிந்து வருகிறார் என்றால் அவருக்கான விடுப்பு அனுமதி 180 நாட்கள் அவர் எடுத்த மருத்துவ விடுப்பு 30 நாட்கள் என்று வைத்துக்கொள்வோம்.

180-30=150 என்று பதிவு செய்ய வேண்டும்.ஆசிரியரின் பணிகாலத்திற்கேற்ப இது மாறுபடும்.

9) அடுத்து RL மதச்சார்பு விடுப்பு எப்படி பதிவு செய்வது?மொத்தம்3 மதச்சார்பு விடுப்புகள் நீங்கள்  எடுத்த விடுப்பு நாட்கள் 2 எனில் 3-2=1 என்று குறித்துக்கொள்ளவும்.

10) இறுதியாக "submit" கொடுத்தால் நமக்கு மீதம் எத்தனை நாட்கள் விடுப்பு உள்ளது என்று வந்துவிடும்,பிறகு நாம் விடுமுறைக்கு பதிவு செய்து கொள்ளலாம்!

குறிப்பு :


தற்போதுவரை இந்த வசதி அப்டேட் செய்யப்படவில்லை. அப்டேட் ஆனவுடன் பதிவு செய்யவும்.

Share:

Definition List

header ads

Unordered List

Support