10ம் வகுப்பு பொதுத்தேர்வு வினாத்தாள் வாட்ஸ்அப்பில் கசிவு – அரசு அதிரடி நடவடிக்கை!
பொதுத்தேர்வு வினாத்தாள் கசிவு தொடர்பாக எழுந்த சர்ச்சை தொடர்பாக அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. இதனால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் மிகுந்த சலசலப்பு எழுந்துள்ளது.
வினாத்தாள் கசிவு:
தெலுங்கானா மாநிலத்தில் கடந்த ஏப்ரல் 3ம் தேதி முதல் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடந்து வருகிறது. பொதுத்தேர்வு தொடங்குவற்கு முன்பாக பல்வேறு முன்னேற்பாடு பணிகளும் மேற்கொள்ளப்பட்டது. இந்நிலையில், திங்கட்கிழமை நடந்த தேர்வின் போது விகாராபாத் மாவட்டத்தில் அரசு பள்ளியில் தேர்வு கண்காணிப்பாளராக இருந்த ஆசிரியர் தேர்வு தொடங்கியவுடன், தனது மொபைலில் வினாத்தாளை போட்டோ எடுத்தார்.
அதனை மற்றொரு ஆசிரியருக்கு அனுப்பியுள்ளார். இவர்கள் விடைக்குறிப்பு தயாரிக்க இந்த செயலை செய்ததாக தெரிவித்துள்ளனர். ஆனால், இந்த விஷயம் செய்தி நிறுவனங்களுக்கு தெரிய வந்து, தேர்வில் வினாத்தாள் கசிவு நடந்துள்ளதாக புகார்கள் எழுந்தது. இதன் காரணமாக மாவட்ட ஆட்சியர் அந்த 2 ஆசிரியர்கள் உட்பட 4 அரசு ஊழியர்களை இடை நீக்கம் செய்துள்ளார். மேலும், இது தனிப்பட்ட செயல்பாடு தான் என்றும், தேர்வு எந்த வித முறைகேடும் இல்லாமல் சீராக நடந்து முடிந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.