Daily TN Study Materials & Question Papers,Educational News

பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கோபி இவரா? தீயாய் பரவும் தகவல்!

பாக்கியலட்சுமி சீரியலில் புதிய கோபி இவரா? தீயாய் பரவும் தகவல்!

Baakiyalakshmi: பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து சதீஷ் விலகுவதாக அறிவித்த நிலையில் கோபி கதாப்பாத்திரத்தில் புதிதாக நடிக்க உள்ள பிரபலம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

 


விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. பாக்கியா, ராதிகா, கோபி ஆகியோரை மைய்யப்படுத்தி ஒளிபரப்பாகி வரும் இந்த சீரியலுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளது. இல்லத்தரசிகள் மட்டுமின்றி பல இளசுகளும் ஆண்களுமே இந்த சீரியலுக்கு ரசிகர்களாக உள்ளனர். நாளுக்கு நாள் விறுவிறுப்பாக செல்லும் இந்த சீரியலுக்கு என பெரும் ரசிகர் பட்டாளமே உள்ளது.

இந்நிலையில் இந்த சீரியலில் கோபி கதாப்பாத்திரத்தில் நடித்து வந்த சதீஷ், பாக்கியலட்சுமி சீரியலில் இருந்து விலகப் போவதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்தார். இதனால் ரசிகர்கள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் சதீஷூடன் இணைந்து `எழில்' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கும் விஜே விஷால் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சதீஷூடன் இணைந்து போட்டோ ஒன்றை வெளியிட்டிருந்தார்.

அதில், `அப்பா.. நீங்க எங்கேயும் போகக் கூடாது நான் போகவும் விடமாட்டேன்!' எனக் குறிப்பிட்டிருந்தார். மேலும் ஹாஸ்டேக்கில் கோபி சார் எனவும் அதில் குறிப்பிட்டிருந்தார் விஜே விஷால். இதனை தொடர்ந்து சதீஷ் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், `வாழ்க்கையில் பேசி தீர்த்துக்க முடியாத பிரச்சனை என்று எதுவுமில்லை. எவ்ளோ பெரிய பிரச்சனை என்றாலும் நம்ம நண்பர்களுடன் நமக்கு வேண்டப்பட்டவங்களோடு உட்கார்ந்து பேசினா நிச்சயம் தீர்வு கிடைக்கும்.



உங்களுக்குப் புரியுதா நான் என்ன சொல்ல வர்றேன்னு?' என ஒரு வீடியோவில் பேசியிருந்தார். மற்றொரு வீடியோவில், `இன்பாக்ஸில் நிறைய பேர் பாக்கியலட்சுமி தொடரிலிருந்து நான் விலகுறேன்னு சொன்னதும் போகாதீங்க என்று சொல்றீங்க, அத்தனை அன்பு நெஞ்சங்களுக்கும், உங்களின் அன்புக்கும் ரொம்ப நன்றி. என்னால முடிஞ்ச அளவுக்கு உங்க எல்லாருக்கும் ரிப்ளை பண்ணிட்டு இருக்கேன். ஷூட்டிங் பிசியா போயிட்டு இருக்கு அதனால பலருக்கு ரிப்ளை அனுப்ப முடியல.. ஃப்ரீயானதும் கண்டிப்பா ரிப்ளை பண்றேன் என்று கூறியிருந்தார்.

இந்த வீடியோவை தொடர்ந்து சதீஷ் பாக்கியலட்சுமி சீரியலில் மீண்டும் கோபி கதாப்பாத்திரத்தில் நடிப்பார் என தகவல் பரவியது. இந்நிலையில் பாக்கியலட்சுமி சீரியலில் கோபி கதாபாத்திரத்தில் பிரபல சீரியல் நடிகர் பப்லூ பிருத்விராஜ் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. பப்லு பிரீத்திவிராஜ் பல படங்களிலும் சீரியல்களிலும் நடித்துள்ளார்.

கடைசியாக சன் டிவியில் ஒளிபரப்பான கண்ணான கண்ணே சீரியலில் நடித்திருந்தார் பப்லு பிரீத்திவிராஜ், சமீபத்தில் தன்னை விட 30 வயது குறைவான பெண்ணை திருமணம் செய்ததால் விம்ர்சனத்துக்குள்ளானார் பப்லு பிரித்திவிராஜ் என்பது குறிப்பிடத்தக்கது.


Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support