மே 1ம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறை.. ஜூன் 12ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!


மே 1ம் தேதி முதல் தொடங்கும் கோடை விடுமுறை.. ஜூன் 12ல் மீண்டும் பள்ளிகள் திறப்பு!

பள்ளி மாணவர்களுக்கு இறுதி தேர்வுகள் நடந்து வரும் நிலையில், மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்கும் என்று அரசு அறிவித்துள்ளது.

கோடை விடுமுறை:

நாடு முழுவதும் கோடை காலம் தொடங்கி உள்ளது. இதனால் பள்ளி மாணவர்களுக்கு கோடை விடுமுறை குறித்த அறிவிப்புகள் மாநில வாரியாக வெளியாகி வருகிறது. மேலும், 2022- 2023ம் கல்வி ஆண்டின் கடைசி வேலை நாள் குறித்தும் தெரிவிக்கப்பட்டு வருகிறது. நடப்பு ஆண்டில் வெயில் மிகவும் அதிகமாக இருப்பதால் வழக்கத்தை விட முன்னதாகவே கோடை விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது
அந்த வகையில், ஆந்திரா மாநிலத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகளுக்கு மே 1ம் தேதி முதல் கோடை விடுமுறை தொடங்குவதாகவும், ஏப்ரல் 30ம் தேதி தான் இறுதி வேலை நாள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மாணவர்களின் தேர்வு முடிவுகளை பெற்றோர்கள் மற்றும் மாணவர்களுடன் கலந்தாய்வு நடத்தி தெரிவிக்க வேண்டும் என்றும், பெற்றோர்கள் கட்டாயம் இந்த கூட்டத்தில் கலந்து கொள்ள உத்தரவிடப்பட்டுள்ளது. ஜூன் 12ம் தேதி முதல் 2023 – 2024 ம் கல்வி ஆண்டு தொடங்கும் என்றும் கல்வித்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தில்:

  தமிழகத்தைப் பொருத்தவரை 11 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 4ம் தேதியும் ,12 ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 5ம் தேதியும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 20 ம் தேதியுடனும் பொதுத்தேர்வுகள் நடந்து முடிந்து கோடை விடுமுறை தொடங்கியது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு ஏப்ரல் 28 கடைசி வேலை நாளாக இருந்த பட்சத்தில் தமிழகத்தினுடைய பள்ளி கல்வித் துறை அமைச்சர் திரு அன்பில் மகேஷ் பொய்யாமொழி அவர்கள் தற்போது பள்ளிகள் திறப்பு என்பது அறிவிக்கப்படவில்லை வெயிலின் தாக்கத்தை பொறுத்து பின்னர் அறிவிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். தற்போது வரை தமிழகத்தில் பள்ளி திறக்கும் தேதி என்பது நிச்சயிக்கப்படாத நிலையில் ஜூன் 1ம் தேதி பள்ளிகள் திறக்கப்படலாம் வழக்கம் போல் என்ற நிலை உள்ளது. இதன் படி பார்த்தால் பள்ளிகள் திறக்கும் தேதி என்பது இன்னும் சில தினங்களில் அறிவிக்கப்படும் என தெரிகிறது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...