12th tamil important அணி இலக்கணம்(Ani ilakkanam) - PADAVELAI

PADAVELAI

Daily TN Study Materials & Question Papers,Educational News

Post Top Ad

Thanks for Reading

Monday, August 24, 2020

12th tamil important அணி இலக்கணம்(Ani ilakkanam)

 இலக்கணம் மொழிப் பயிற்சி வினாக்கள்

12th tamil important அணி இலக்கணம்(Ani ilakkanam)


1.பொருள் வேற்றுமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம்

                           இருவேறு பொருள்களுக்கு இடையே உள்ள ஒற்றுமையை முதலில் கூறி பின் வேறுபடுத்திக் காட்டுவது பொருள் வேற்றுமை அணி. 

சான்று

ஓங்கலிடை வந்து உயர்ந்தோர் தொழ விளங்கி

ஏங்கொலிநீர் ஞாலத்து இருளகற்றும் ஆங்கவற்றுள் 

மின்னேர் தனியாழி வெங்கதிரொன்று ஏனையது 

தன்னே ரிலாத தமிழ் .

(தண்டியலங்கார உரை மேற்கோள் பாடல்)

பொருத்தம்

  ஒற்றுமை

                கதிரவனும் தமிழும் இருளைப் போக்குகிறது 

வேற்றுமை

               கதிரவன், உலகின் புற இருளைப் போக்குகிறது.

தமிழ், மக்களின் அறியாமை என்னும் அக இருளைப் போக்குகிறது.

எனவே, கதிரவனை விட தமிழ் உயர்ந்தது.

**********************************************

2.நிரல்நிறை அணி சான்று தந்து விளக்குக.

அணி விளக்கம் : 

                       சொல்லையும் பொருளையும் வரிசையாக நிறுத்தி, அவ்வரிசைப்படியே பொருள் கொள்ளச் செய்வது நிரல்நிறை அணி.

சான்று :  

அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை 

பண்பும் பயனும் அது.

பொருத்தம் :

 'அன்பும் அறனும் உடைய இல்வாழ்க்கை

பண்புடையதாகவும் பயன் மிக்கதாகவும் அமையும் என வரிசை முறைப்படி பொருள் கொள்ளப்படுவதால், இது நிரல்நிறை அணி ஆயிற்று.

**********************************************

3.ஏகதேச உருவக அணியைச் சான்றுடன் விளக்குக:-

 அணி விளக்கம் : 

                         ஒரு பொருளை உருவகம் செய்து, அதற்கு இணையான மற்றொரு பொருளை உருவகம் செய்யாது விட்டுவிடுவது ஏகதேச உருவக அணி.

சான்று

சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 

ஏமப் புணையைச் சுடும்.

பொருத்தம்

             சினத்தை நெருப்பாகவும் இனத்தைத் தெப்பமாகவும் உருவகம் செய்த வள்ளுவர் உலக வாழ்க்கையைக் கடலாக உருவகம் செய்யாமல் விட்டுவிட்டேன்.

**********************************************

4.தொழில் உவமை அணியைச் சான்றுடன் விளக்குக .

அணி விளக்கம் : 

                                ஒரு பொருளின் தொழில் அல்லது செயல் காரணமாக அமையும் உவமை தொழில் உவமை எனப்படும்.

சான்று

அகலாது அணுகாது தீக்காய்வார் போல்க இகல்வேந்தர்ச் சேர்ந்தொழுகு வார்

பொருத்தம்

                   இக்குறளில் தீக்காய்தல்' என்னும் செயல் (தொழில்), அரசரோடு பழகுவதற்கு உவமையாகக் கூறப்பட்டுள்ளது. எனவே, இது தொழில் உவமையணி.

**********************************************

5.உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் : 

                       உவமை ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து உவம உருபு வெளிப்படையாக வருவது உவமையணி.

சான்று

உடம்பாடு இலாதவர் வாழ்க்கை குடங்கருள் பாம்போடு உடனுறைந் தற்று

பொருத்தம்:

உவமை : குடங்கருள் பாம்போடு உடனுறைதல் .

உவமேயம் : உடம்பாடு இலாதவர் வாழ்க்கை.

உவம உருபு : அற்று.

**********************************************

6.எடுத்துக்காட்டு உவமை அணியைச் சான்றுடன் விளக்குக

அணி விளக்கம் : 

                 உவமை ஒரு தொடராகவும் உவமேயம் மற்றொரு தொடராகவும் அமைந்து,உவம உருபு மறைந்து வருவது எடுத்துக்காட்டு உவமையணி.

சான்று

துஞ்சினார் செத்தாரின் வேறல்லர் எஞ்ஞான்றும் 

நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

பொருத்தம்:

உவமை : துஞ்சினார் செத்தாரின் வேறல்லர்

உவமேயம் : நஞ்சுண்பார் கள்ளுண் பவர்

உவம உருபு : மறைந்து வந்துள்ளது

**********************************************

7.சொற்பொருள் பின்வருநிலையணியைச் சான்றுடன் விளக்குக. 

அணி விளக்கம்

                செய்யுளில், வந்த சொல்லே மீண்டும் மீண்டும் வந்து, தந்த பொருளையே தருவது சொற்பொருள் பின்வருநிலையணி.

சான்று 1 : 

எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள்

மெய்ப்பொருள் காண்ப தறிவு.

பொருத்தம்

           இக்குறளில், 'பொருள்' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, தந்த பொருளையே தருகிறது.

சான்று 2

எண்ணிய எண்ணியாங்கு எய்துப எண்ணியார்

திண்ணியர் ஆகப் பெறின்

பொருத்தம்

              இக்குறளில், 'எண்ணிய' என்னும் சொல் மீண்டும் மீண்டும் வந்து, 'நினைத்த எனத் தந்த பொருளையே தருகிறது.

**********************************************

12th tamil Book back Answers

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-1 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-2 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers unit-3 Guide

  • இயல் 3.5 பொருள் மயக்கம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-4 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-5 Guide

  • இயல் 5.1 மதராசப்பட்டினம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-6 Guide

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-7 Guide

  • இயல் 7.3 தேயிலைத் தோட்டப் பாட்டு
  • இயல் 7.4 புறநானூறு
  • இயல் 7.5 சங்ககாலக் கல்வெட்டும் என் நினைவுகளும்
  • இயல் 7.6 தொன்மம்

Samacheer book 12th Tamil Book Back Answers Unit-8 Guide

  • இயல் 8.1 நமது அடையாளங்களை மீட்டவர்
  • இயல் 8.2 முகம்
  • இயல் 8.4 சிறுபாணாற்றுப்படை
  • இயல் 8.5 கோடை மழை
  • இயல் 8.6 குறியீடு

Dear visitors we understand your expectations for tamilnadu state board samacheer book 12th Tamil Full Guide solutions book back answers guide.these 12th Tamil book answers guide help for your exam preparation for online study you can get good marks in your Examination.

12th Tamil இயல்-1 முதல் இயல்-9 வரை இலக்கண குறிப்புகள். Click here

12th Tamil important 4 mark -தமிழாக்கம்,கலைச்சொல் தருக:-Click here


2 comments:

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Post Top Ad

share your friends