10th Tamil பகுபத உறுப்பிலக்கணம் அனைத்தும்
பகுபதம் அறிதல்- பகுபத உறுப்புகள் எத்தனை?
பகுபத உறுப்புகள் ஆறு .
அவை:- பகுதி,விகுதி,சந்தி,சாரியை,விகாரம்,இடைநிலை
இயல் - 1
1. வளர்ப்பாய் - வளர் + ப் + ப் +ஆய்
வளர் - பகுதி
ப் - சந்தி
ப் - எதிர்கால இடைநிலை
ஆய் - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
2 . கொள்வார் - கொள் + வ் + ஆர்
கொள் - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
3. உணர்ந்த - உணர் +த் ( ந் ) + த் + அ
உணர் - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
4. வந்தனன் - வா (வ) + த் ( ந் )+ த் + ஆன் + அன்
வா - பகுதி ' வ ' ஆனது விகாரம்
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அன் - சாரியை
அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
5. செய்யாதே - செய் + ய் + ஆ + த் + ஏ
செய் - பகுதி
ய் - சந்தி
ஆ - எதிர்மறை இடைநிலை
த் - எழுத்துப்பேறு
ஏ - முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி
---------------------------------------------------------------------------
இயல் -2
10 th Students :
6.விரித்த - விரி + த் + த் + அ
விரி - பகுதி
த் - சந்த
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
7. குமைந்தனை - குமை +த்(ந் )+ த் + அன்
குமை - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை , அன் - சாரியை
ஐ - முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி
8. பாய்வன - பாய் + வ் +அன் +அ
பாய் - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
அன் - சாரியை
அ - பலவின்பால் வினைமுற்று விகுதி
9. நிறுத்தல் - நிறு +த் + தல்
நிறு - பகுதி
த் - சந்தி
தல் - தொழிற்பெயர் விகுதி
10. கொடுத்தோர் - கொடு + த் + த் + ஓர்
கொடு - பகுதி
த் - சந்தி
த் - இறந்தகால இடைநிலை
ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி
------------------___________________________________________-------
இயல் - 3
11. பரப்புமின் - பரப்பு + மின்
பரப்பு - பகுதி
மின் - முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி
12. அறைந்தனன் - அறை + த் ( ந் )+ த் + அன் + அன்
அறை - பகுதி
த் - சந்தி - ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அன் - சாரியை
அன் - ஆண்பால் வினைமுற்று விகுதி
______________________________________________________________
இயல் - 4 - பகுபத உறுப்பிலக்கணம்
13. பொருத்துங்கள் - பொருத்து + உம் + கள்
பொருத்து - பகுதி
உம் - முன்னிலை பன்மை விகுதி
கள் - விகுதி மேல் விகுதி
14 . நெறிப்படுத்தினர் - நெறிப்படுத்து + இன் + அர்
நெறிப்படுத்து - பகுதி
இன் - இறந்தகால இடைநிலை
அவர்- பலர்பால் வினைமுற்று விகுதி
__________________________-----___________________________________
இயல் -5
15. விளைவது - விளை + வ் + அ + து
விளை - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
அ - சாரியை
து - தொழிற்பெயர் விகுதி
16. சமைக்கின்றார் - சமை + க் + கின்று + ஆர்
சமை - பகுதி
க் - சந்தி
கின்று - நிகழ்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
17 .உரையாமை - உரை+ ய் + ஆ + மை
உரை - பகுதி
ய் - சிந்தி ( உடம்படுமெய் )
ஆ - எதிர்கால இடைநிலை
மை - தொழிற்பெயர் விகுதி
18. காய்க்கும் - காய் + க் + க் + உம்
காய் - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - பெயரெச்ச விகுதி
______________-----------_______________________________________________
இயல் - 6
19.பருகிய - பருகு +இன் + ய் + அ
பருகு - பகுதி
இன் -- இறந்தகால இடைநிலை - 'ன் ' கெட்டது விகாரம்
அ - பெயரெச்ச பகுதி
20 . பூக்கும் - பூ + க் + க் + உம்
பூ - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - வினைமுற்று விகுதி
21. தொட்டு - தொடு( தொட்டு ) + உ
தொடு - பகுதி, ' தொட்டு ' என இரட்டித்து இறந்தகாலம் காட்டியது - விகாரம்
உ - வினையெச்ச விகுதி
22 . கண்டேன் - காண் + (கண் ) + ட் + ஏன்
காண் - பகுதி , ' கண் ' எனக் குறுகியது விகாரம்
ட் - இறந்தகால இடைநிலை
ஏன் - தன்மை ஒருமை வினைமுற்று விகுதி
____________________________________________________________
இயல் - 7
23 .இறைஞ்சி - இறைஞ்சு + இ
இறைஞ்சு - பகுதி
இ - வினையெச்ச விகுதி
24 . ஓம்புவார் - ஓம்பு + வ் + ஆர்
ஓம்பு - பகுதி
வ் - எதிர்கால இடைநிலை
ஆர் - பலர்பால் வினைமுற்று விகுதி
25 . கொண்ட - கொள் (ண்) + ட் +அ
கொள் - பகுதி ' ண் ' ஆனது விகாரம்
ட் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
26 . ஆழ்ந்த - ஆழ் + த் ( ந் ) + த் + அ
ஆழ் - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
அ - பெயரெச்ச விகுதி
27 .ஓங்கிய - ஓங்கு +இ (ன் )+ ய் + அ
ஓங்கு - பகுதி
இ (ன் ) - இறந்தகால இடைநிலை
ய் - உடம்படுமெய்
அ - பெயரெச்ச விகுதி
28 . மகிழ்ந்தோர் - மகிழ் +த்(ந்) +த் +ஓர்
மகிழ் - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
ஓர் - பலர்பால் வினைமுற்று விகுதி
_____________________________________________________________________
இயல் - 8
29. வேண்டி - வேண்டு + இ
வேண்டு - பகுதி
இ - வினையெச்ச விகுதி
30 . போகிறது - போ + கிறு + அ + து
போ - பகுதி
கிறு - நிகழ்கால இடைநிலை
அ - சாரியை
து - ஒன்றன்பால் வினைமுற்று விகுதி
31 . மலர்ச்சி - மலர் + ச் + சி
மலர் - பகுதி
ச் - பெயர் இடைநிலை
சி - தொழிற்பெயர் விகுதி
32 . இணைகின்றன - இணை + கின்று + அன் + அ
இணை - பகுதி
கின்று - நிகழ்கால இடைநிலை
அன் - சாரியை
அ - பலவின்பால் வினைமுற்று விகுதி
33 . போக்குக - போக்கு + க
போக்கு - பகுதி
க - வியங்கோள் வினைமுற்று விகுதி
____________________________________________________________
இயல் - 9
34 . சரிந்து - சரி + த் ( ந் ) + த் + உ
சரி - பகுதி
த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்
த் - இறந்தகால இடைநிலை
உ - வினையெச்ச விகுதி
35 . உடையார் - உடை + ய் + அர்
உடை - பகுதி
ய் - சந்தி ( உடம்படுமெய் )
அர் - பலர்பால் வினைமுற்று விகுதி
36 . பொளிக்கும் - பொளி + க் +க் +உம்
பொளி - பகுதி
க் - சந்தி
க் - எதிர்கால இடைநிலை
உம் - வினைமுற்று விகுதி
1 Comments
Totally waste 🤮🤮🤢
ReplyDelete1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.