10th standard இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்தல் , வழுவமைதி வகைகள்

 

10th standard

பத்தாம் வகுப்பு - இரு சொற்களையும் ஒரே தொடரில் அமைத்தல் , வழுவமைதி வகைகள் 

10th standard one word questions

2 Mark Questions  :

  2  மதிப்பெண் வினாக்கள்  :                                                

1 .இரு சொற்களையும்  ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

         இயல் - 3                               ப .எண் : 68

1.  சிலை -  சீலை

சிலையைத்  திரைச்சீலையால்  மறைத்திருக்கிறார்கள் .

2. தொடு -   தோடு

தொடு உணர்வின்  மூலம்  தோடு காதில் உள்ளதை  தெரிந்துகொள்ளலாம் .                                              (அல்லது)

தாய் தன் குழந்தையின் காதைத் தொடுவதன் மூலம்   தோடு  அணிவித்தாள் .

3. மடு -  மாடு

கிணற்றில்  இருந்து  இறைக்கும் தண்ணீர்  மடு வழியாக  வாய்க்காலுக்கு சென்றதால்  மாடு தண்ணீர்  குடித்தது .  

                                                 (அல்லது)

மடுவில் தண்ணீர் குடித்துக் கொண்டு இருந்தது ராமனின்  மாடு .

4. மலை - மாலை

மலையேறும் போது  மாலை நேரமாகிவிட்டது .        

                                                ( அல்லது)

மலை மீது இருக்கும் கோவிலுக்கு மாலை  நேரத்தில் சென்றேன் .

5. வளி - வாளி

  வளிமண்டல காற்று பெற  மரம் நட்டு  வாளி நிறைய தண்ணீர் ஊற்றுவோம் .

6. விடு - வீடு

இளம் வயதிலே தீய பழக்கங்களை விட்டு விடு ; வீடு சென்று மகிழ்ச்சியாக இரு .

இயல் - 4                                                       ப.எண் : 96

7. இயற்கை -  செயற்கை

பாதை தெரியாத இயற்கைக் காடுகளில்  பயணிக்கச் செயற்கைக் கருவிகள் பயன்படுகின்றன .

8. கொடு -  கோடு

ஆசிரியர் எழுதுகோலை  மாணவனிடம் கொடுத்து , கோடு வரையச்  சொன்னார் .

9.  கொள் -  கோள்

மனதிலே   நம்பிக்கை  வைத்துக் கொள் ;  கோள்களுக்கும் சென்று வருவாய் என தந்தை மகனுக்கு  தைரியம் ஊட்டினார் .

10 . சிறு -  சீறு

சிறுவயதில் வளர்த்த காளைக் கன்றுக்குட்டி பின்னாளில்  சீறிப்பாயும் காளையாக மாறி நின்றது  .

11 . தான் - தாம்

மாணவர்கள் தான் படித்தக் கருத்துகளைத்  தாமே எழுதிப் பார்த்து  மதிப்பீடு  செய்துகொண்டார்கள் .

12 . விதி -  வீதி

சாலை விதியை மதித்து , வீதியைக் கடந்து செல்வோம் .

2 .  இயல் - 2                  ப, எண் :46

 1.  மலர் உண்டு . பெயரும்  உண்டு . -  இரண்டு தொடர்களை ஒரு தொடராக்குக .

மலரும் மலருக்குப் பெரும் உண்டு .

2 . தொடரில்  பொருந்தாப் பொருள் தரும்  மயங்கொலி எழுத்துகளைத் திருத்துக .                                    ப, எண் :46

இலுப்பை பூக்கள் இனிமையானவை . கரடிகள் மறத்தின் மீதேறி  அவற்றைப் பரித்து  உண்ணும் .  பாதிரிப் பூ  குடிநீருக்குத்   தன் மணத்தை ஏற்றும் .

விடை  :

இலுப்பைப்  பூக்கள் இனிப்பானவை ,  கரடிகள்  மரத்தின் மீதேறி ,  அவற்றைப் பறித்து  உண்ணும் .  பாதிரிப் பூ   குடிநீருக்குத்  தன் மனத்தை ஏற்றும் . 


3 .  கற்பவை கற்றபின்             

ப, எண் : 92

கீழ்காணும் தொடர்களில் வழுவமைதி வகைகளை  இனங்கண்டு எழுதுக .

அ)  அமைச்சர் நாளை விழாவிற்கு வருகிறார் .

விடை  :  கால வழுவமைதி

இத்தொடர்  ' நாளை விழாவிற்கு வருவார் '  என  என அமையவில்லை  என்றாலும்  பிழையாகக் கருதுவதில்லை . ஏனெனில்  அவரது வருகையின் உறுதி தன்மை நோக்கிக்  கால வழுவமைதியாக  ஏற்றுக் கொள்கிறோம் .

2 . அவனும் நீயும் அலுவலரைப்  பார்க்க ஆயத்தமாகுங்கள் .

இட வழுவமைதி

"நீயும் அவனும் " என தன்மை இடத்தை முதலில் கூறவில்லை என்றாலும் பிழையாகக் கருதாமல் இட வழுவமைதியாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.

3 ." இந்தக் கண்ணன்   ஒன்றைச் செய்தான் என்றால் ,  அதை அனைவரும் ஏற்பர் "  என்று கூறினான் .

இட வழுவமைதி

இந்தக் கண்ணன்  என்பான்  தன்னைப்பற்றி  பிறரிடம் கூறும் போது  தன்மையினைப் படர்க்கை இடத்தில் கூறுவது   இட வழுவமைதி ஆகும் .

4. சிறிய வயதில் அந்த மரத்தில் தான் ஊஞ்சல் கட்டி விளையாடுவோம் .

கால வழுவமைதி .

" இத்தொடரில்" சிறிய வயதில்   எள்பது இறந்தக்கால நிகழ்வாதலால்  " ஊஞ்சல் கட்டி விளையாடினோம் "  அமையாததால்  பிழையாகக் கருதவில்லை . ஏனெனில்  சிறுவயதில் ஊஞ்சல் கட்டி விளையாடியதின்   உறுதித்தன்மையை நோக்கி காலவழுவமைதி ஆக ஏற்றுக் கொள்கிறோம்

5 .  செல்வன் இளவேலன்  இந்தச் சிறுவயதிலேயே விளையாட்டுத்துறையில் சாதனை புரிந்திருக்கிறார் .

பால் வழுவமைதி.

இத்தொடரில் " சாதனை புரிந்திருக்கிறான் "  என அமையாமல் " சாதனை புரிந்திருக்கிறார் "  என பலர்பால் கூறப்பட்டுள்ளதால் இது பால் வழுவமைதியாகக்  கொள்ளப்பட்டது .

4 .அடைப்புக்குறிக்குள் உள்ளவாறு மாற்றுக .

அ)  தந்தை , "  மகனே !  நாளை உன்னுடைய தோழன் அழகனை அழைத்து வா!"  என்று சொன்னார் .(  ஆண்பால்  பெயர்களைப் பெண்பாலாக  மாற்றித் தொடர் எழுதுக .)

  தாய் , "  மகளே நாளை  உன்னுடைய தோழி அழகியை அழைத்து வா !"  என்று  சொன்னாள் .

ஆ)  அக்கா நேற்று வீட்டுக்கு வந்தது . அக்கா புறப்படும்போது அம்மா வழியனுப்பினர். (  வழுவை வழாநிலையாக மாற்று )

அக்கா நேற்று வீட்டுக்கு வந்தாள் .  அக்கா புறப்படும்போது , அம்மா வழியனுப்பினார் .

இ) "  இதோ முடித்து விடுவேன் "  என்று  செயலை முடிக்கும் முன்பே கூறினார் .(  வழாநிலையை வழுவமைதியாக மாற்றுக )

"  இதோ ,  முடித்துவிட்டேன் "  என்று செயலை முடிக்கும் முன்பே கூறினார் .

ஈ)  அவன் உன்னிடமும் என்னிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை .(  படர்க்கையை முன்னிலையாக ,  முன்னிலையைத் தன்மையாக , தன்மையைப் படர்க்கையாக மாற்றுக ).

நீ  என்னிடமும் அவனிடமும் செய்தியை இன்னும் கூறவில்லை .

உ)  குழந்தை அழுகிறான் ,  பார் . (  வழுவை வழாநிலையாக மாற்றுக . )

குழந்தை அழுகிறது பார் .


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...