11th Tamil - unit 1 Book Back Answers ( இயல் 1 )

11th Tamil - unit 1 Book Back Answers ( இயல் 1 )


11th standard tamil unit 1 book back Amswer you can find Here. and Also 11th Tamil Unit 1- 8 Book back Answers Download Available Here.

பலவுள் தெரிக.

1. பொருத்தமானவற்றைத் தேர்ந்தெடுக்க .

அ ) அ. முத்துலிங்கம் - யுகத்தின் பாடல் 

ஆ) பவணந்தி முனிவர் - நன்னூல்

இ) சு. வில்வரத்தினம் - ஆறாம் திணை 

ஈ) இந்திரன் - பேச்சுமொழியும் கவிதை மொழியும்.

(i) அ, ஆ         (ii) அ, ஈ         (iii) ஆ, ஈ         (iv) அ, இ

2. கபாட புரங்களைக் காவுகொண ்டபின்னும்

காலத்தால் சாகாத தொல் கனிமங்கள்” - அடி மோனையைத் தெரிவு செய்க.

அ) கபாடபுரங்களை – காவுகொண்ட 

ஆ) காலத்தால் – கனிமங்கள்

இ) கபாடபுரங்களை – காலத்தால் 

ஈ) காலத்தால் - சாகாத

3. பாயிரம் இல்லது அன்றே. 

அ) காவியம்     ஆ) பனுவல்     இ) பாடல்     ஈ) கவிதை

4. ஒரு திரவ நிலையில், நான் விரும்பும் வகையில் என்னிடம் கீழ்ப்படிந்து நடந்துகொள்ளும் எனது மொழி, எழுத்துமொழியாகப் பதிவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியைப் போன்ற திட நிலையை அடைகிறது. இவ்வரிகள் உணர்த்தும் கருத்து.

அ. மொழி என்பது திட, திரவ நிலையில் இருக்கும்.

ஆ. பேச்சுமொழி, எழுத்துமொழியை திட, திரவப் பொருளாக உருவகப்படுத்தவில்லை.

இ. எழுத்துமொழியைவிட பேச்சுமொழி எளிமையானது.

ஈ. பேச்சுமொழியைக் காட் டிலும் எழுத்துமொழி எளிமையானது.

5. மொழிமுதல் எழுத்துகளின் அடிப்படையில் முறையானதைக் கண்டுபிடிக்க.

அ) அன்னம் , கிண்ணம் 

ஆ) டமார ம், இங்ஙனம் 

இ) ரூபாய், லட்சாதிபதி 

ஈ) றெக்கை, அங்ஙனம்

குறுவினா

1. பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கது ஏன்?

  • எழுத்துமொழி, பேச்சுமொழிக்கு திரும்பும்போது வெளிப்பாட்டுச் சக்தி அதிகம் கொண்டதாக மாறிவிடுகிறது. எழுத்துமொழியைக் காட்டிலும் பேச்சுமொழி, உணர்ச்சி வெளிபாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது

2. என் அம்மை, ஒற்றியெடுத்த

 நெற்றிமண் அழகே!

வழிவழி நினதடி தொழுதவர்,

உழுதவர், விதைத்தவர்,

வியர்த்தவர்க்கெல்லாம்

நிறைமணி தந்தவளே!

- இக்கவிதை அடிகளில் உள்ள வினையாலணையும் பெயர்களை எழுதுக.

  • தொழுதவர், 
  • உழுதவர், 
  • விதைத்தவர், 
  • வியர்த்தவர்

3. ‘பாயிரம்’ பற்றி நீங்கள் அறியும் கருத்து யாது?

  • நூலை உருவாக்கும் ஆசிரியரின் சிறப்பையும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும்.

4. உயிரெழுத்து, பன்னிரண்டு, திருக்குறள், நாலடியார் - இச்சொற்களில் எவ்வகை ஈற்றெழுத்துகள் அமைந்துள்ளன ?

  • உயிரெழுத்து (த் + உ), பன்னிரண்டு (ட் + உ); = உயிரீறு 
  • திருக்குறள், நாலடியார் – மெய்யீறு 

5. இனம், மொழி குறித்த இரசூல் கம்சதோவ் பார்வையை க் குறிப்பிடுக.

  • “தன் இனத்தையும், மொழியையும் பாடாத கவிதை, வேரில்லாத மரம்; கூடில்லாத பறவை”

சிறுவினா

1. சு. வில்வரத்தினம் பாடத்தான் வேண்டும் என எவற்றைக் குறிப்பிடுகிறார்?

  • எனக்கு உயிர்தந்தவள் தாய், தான் ஊட்டிய பாலோடு, உலகை அறிமுகம் செய்ய ஊட்டி வளர்த்த மொழி தமிழ். என் உயிரோடு கலந்து உடலோடு வளர்ந்தது. வளர்ந்தபின் வளமான மொழியை கற்றபோது, அதன் வளத்தோடு வீச்சும், ஆழம் புரிந்தது.
  • “யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல் இனிதாவது எங்கு காணோம்” என் பாட்டன் பாரதி சொன்னதன் பொருளைப் புரிந்து கொண்டேன். “தமிழுக்கு அமுதென்று பேர்” என்று பாரதிதாசன் கூறியதைத் தெளிந்தேன். “தமிழன் என்றோர் இனமுண்டு! தனியே அவர்க்கோர் குணமுண்டு” என்று நாமக்கல் கவிஞர் சொன்னதன் ஆழ்பொருள் அறிந்தேன். அதனால், என் தமிழை உயிரினும் மேலானதாக மதிக்கிறேன்.

2. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெ ற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

  1. முகவுரை
  2. பதிகம்
  3. அணிந்துரை
  4. நூல்முகம்
  5. புறவுரை
  6. தந்துரை
  7. புணர்ந்துரை

3. ’என்னுயிர் தமிழ்மொழி என்பேன்’ என்னும் தலைப்பில் நீவிர் கொண்டுள்ள மொழிப் பற்றினை எழுதுக.

  • பல தலைமுறை கடந்தும் தனது திருவடிகளைத் தொழச் செய்தவள். தமிழ்ப்பயிர் தழைத்தோங்க காலந்தோறும் வியர்வை சிந்த உழைத்து, கலைச் செல்வங்களைப் படைக்கச் செய்து, நிறைமணி தந்தவர். தமிழ் மொழியாகிய வயலினை அறிவு கொண்டு உழுது, நற்பருத்துகளை விளைவித்துத் தமிழ் நிலத்தில் ஊன்ற உதவியவள்.
  • ஒலிக்கும் கடலையும், நெருப்பாற்றையும், மலை உச்சிகளையும் காற்றில் ஏறிக் கடந்துசெல் என்னும் பாடலை, தொன்மையான கபாடபுரங்களைப் பலி கொண்ட பிறகும், காலத்தால் அழியாத செல்வங்களின் வலிமைச் சேரச் செய்தவள். ஏடு தொடக்கி வைத்து, விரலால் மண்ணில் தீட்டித்தீட்டி எழுதக் கற்பித்தவள்.
  • ஆதலால், தமிழன்னை பல்லாயிரம் ஆண்டுகள் வாழவேண்டும் என பாடத்தான் வேண்டும் என்கிறார் சு.வில்வரத்தினம்

4.கூற்று - குறியீட்டுக் கவிதை என்பது பொருளைப் பதிவு செய்வதன்று; நினைவுகூரத்தக்க தருணங்களைப் பதிவு செய்வதாகும்.

- கவிதை – கூண்டு திறந்தது சிறகடிக்கவா?

இல்லை! சீட்டெடுக

- கூற்றில் குறியீடு எனக் குறிப்பிடப்படுவது கவிதையில் எப்பொருளாக வந்துள்ளது?

  • குறியீட்டுக் கவிதை என்பது அந்தவேளையில் கண்டதன் நுண்பொருளை சிந்திக்கத் தூண்டும் எண்ணத்தைப் பதிவு செய்வதாகும்.
  • பறவைகளைக் கூட்டல் அடைத்து வைத்துச் சோதிடம் பார்ப்பதை அனைவரும் அறிவர். கூட்டைத் திறப்பது பறவைகளுக்குச் சுதந்திரம் தருவதற்காகவோ? அன்று
  • அது சிறகசைத்துப் பறப்பதை மறக்க அடித்து அடிமைப்படுத்தி விடுகிறார்கள். அதற்கென ஒரு கொத்தடிமைத் தொழிலை முடிவு செய்கிறார்கள். இந்தக் குறியீடு, சமூக அவலத்தை வெளிப்படுத்தும்; சுருக்கமாகச் சுட்டிக்காட்ட உதவும்

11th Tamil Unit 1 - நெடுவினா

1. நீ ங்கள் மொழியை வெளிப்படுத்தும் நிலை யில் பேச் சுமொழியையு ம் எழுத்து மொழியையும் எவ்வா று உணர்கிறீர்கள் என்பதை விவரிக்க .

முன்னுரை

கலைகளின் உச்சம் கவிதை என்பர். அக்கவிதையினை இயன்றவரை பேசுவதுபோல் எழுதுவதுதான் உத்தமம் என்றும் அதுவே மானுடத்துக்கு எழுத்தாளர்கள் செய்யும் கடமை என்றும் கூறினார் மகாகவி பாரதி, கவிதை எவ்வாறு நிகழ்கிறது; எழுத்து மொழியைக் கடந்து பேச்சுமொழி எவ்வாறு கவிதைக்கு நெருக்கமாக இருக்கிறது என்பவை பற்றிப் பேசுகிறது இக்கட்டுரை.

பேச்சுமொழி

எழுத்து மொழியைக் காட்டிலும் பேச்சுமொழி உணர்ச்சிக்கு மிக அருகில் இருக்கிறது. எனவேதான் இலக்கிய வழக்கைக் (நெறியை) கைவிட்டுப் பேச்சுமொழிக்குத் திரும்பியவுடனே கவிஞனுடைய கவிதையின் மொழி, அதிக வெளிப்பாட்டுச் சக்தி கொண்டதாக மாறிவிடுகிறது.

அதனால்தான் பேச்சுமொழி, எழுத்துமொழியைக் காட்டிலும் அதிக உணர்ச்சி வெளிப்பாட்டுச் சக்தி மிக்கதாக உள்ளது.

பேச்சு என்பது தன்னைத் திறந்து கொள்கிற ஒரு செயல்பாடு. பேச்சு என்பது மொழியில் நீந்துவது பேச்சு மொழியின்போது நமது உடம்பின் வெளிப்பாடுகள் நம்மை மொழியென்னும் நீரில் முன்னோக்கி நகரச் செய்கின்றன.

இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல அமைகின்றனர். இதையே அவர்கள் நேரடி மொழி எனக் கருதுகின்றனர்.

பேச்சு மொழிக்கு ஒருபோது பழமை தட்டுவதில்லை. இது வேற்று மொழி ஆவதில்லை. அது எப்போதும் உயிர்ப்புடன் இருக்கிறது. மாறிக்கொண்டும் இருக்கிறது. இம்மொழிதான் ஒரு கவிஞரை நிகழ்காலத்தவரா இல்லை இறந்த காலத்தவரா என்பதை நிர்ணயிக்கிறது என்கிறார் மலையாளக் கவி ஆற்றூர் ரவிவர்மா பேச்சு மொழியில் ஒரு கவிதை செய்யப்படுகிறபோது அஃது உடம்பின் மேல் தோல் போல் இயங்குகிறது.

எழுத்துமொழி

ஒரு திரவ நிலையில்விரும்பும் வகையில் தன்னிடம் கீழ்படிந்து நடந்து கொள்ளும் மொழி, எழுத்துமொழியகப் பதவு செய்யப்படுகிறபோது உறைந்துபோன பனிக்கட்டியை போன்ற திடநிலையை அடைந்து விடுகிறது.

எழுத்து மொழி எழுவதை மட்டும்தான் மனிதனின் கை செய்கிறது. எழுத்து மொழியில் பேச்சை கேட்க எதிராளி என்கிற ஒருவன் கிடையாது. எழுத்து என்பது ஒரு வகையில் பார்த்தால் தனக்குத் தானே பேசிக் கொள்கிற பேச்சு.

பேச்சு மொழியில் ஒரு கவிதை செய்ப்படுகிறபோது அஃது உடம்பின் மேல் தோல் போல் இயங்கும். ஆனால் எழுத்து மொழியில் அதே சொற்கள் கவிதையின் உணர்வை, உணர்ச்சியற்ற ஆடைபோல் போர்த்தி மூடிவிடுகின்றன.

இதை உணர்ந்த கவிஞர்கள் சிலர் தங்களுடைய கவிதைகளை எதிரிலிருக்கும் வாசகனுடன் பேசுவது போல அமைகின்றனர். இதையே அவர்கள் நேரடி மொழி எனக் கருதுகின்றனர்.

முடிவுரை

பேச்சுமொழி, எழுத்துமொழி இவைகள் மூலம் எவ்வாறு மொழியை வெளிப்படுத்தலாம் என்பதை மேற்கண்ட கருத்துகளின மூலம் நாம் தெரிந்து கொண்டோம். எழுத்த மொழியை விட பேச்சுமொழியே வெளிப்படுத்தும் சிறந்த கருவியாக இருக்கிறது என்று கூறினால் அது மிகையாகாது.

2. நன்னூல் பொதுப்பாயிரம், சிறப்புப்பாயிரம் வாயிலாக அறியலாகும் செய்திகளைத் தொகுத்துரைக்க.

பாயிரம் :

நூலை உருவாக்கும் ஆசிரியரின் திறம் வாயும், அந்நூல் வழங்கும் கருத்து வளத்தையும் தொகுத்து நூல் முகப்பில் வைக்கும் முறை பற்றிப் பேசுவது பாயிரமாகும். பாயிரம் (1) பொதுப்பாயிரம், ம சிறப்புப் பாயிரம் என இருவகைப்படும்.

(i) பொதுப்பாயிரம் :

எல்லா நூல்களின் முன்பிலும் பொதுவாக உரைக்கப்படுவது, பொதுப்பாயிரம் எனப்படும்.

நூலின் இயல்பு, ஆசிரியரின் இயல்பு, கற்பிக்கும் முறை

மாணவரின் இயலபு கற்கும் முறை என்னும் ஐந்தையும் கூறுவது, பொதுப்பாயிரம் ஆகும்.

(ii) சிறப்புப்பாயிரம் :

தனிப்பட்ட பல நூல்களுக்கு மட்டும் சிறப்பாகக் குறிப்பிடப்படுவது, சிறப்புப்பாயிரம் எனப்படும்.

நூல் சிரியரின் பெயர்

நூல் பின்பற்றிய வழி

நூல் வழங்கப்படுகின்ற நிலப்பரப்பு;

நூலின் பெயர்; தொகை, வகை, விரி என்பவற்றுள் இன்னதில் இயற்றப்பட்டது என்னும் யாப்பு;

நூலில் குறிப்பிடப்படும் கருத்து; 5நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன்;

இவற்றுடன் நூல் இயற்றப்பட்ட காலம்; அரங்கேற்றப்பட்ட அவைக்களம்;

இயற்றப்பட்ட காரணம் ஆகியவற்றைச் சேர்த்துக் கூறுவதும் ஆகிய எல்லாச் செய்திகளையும் செம்மையாகத் தெரிவிப்பது, சிறப்புப் பாயிரத்தின் இலக்கணம் ஆகும்.

3. தமிழர் வாழ்வோடும் புலம்பெயர் நிகழ்வோடும் அ.முத்துலிங்கத்தின் திணைப்பாகுபாடு எவ்வாறு இணைக்கப்படுகிறது.

இலங்கை,  மவுண்லவினாவில் வாடகை வீட்டில் தமிழ்க் குடும்பம் ஒன்று. இனக்கலவரத்தின் போது வீட்டுக்காரரான சிங்களவரால் அன்று இரவு காப்பாற்றப்பட்டு, மறுநாள் அகதிகள் முகாமுக்கு சென்றது. அங்கே யாரோ அணிந்த மேல்சட்டையை மட்டும் ஒருவர் மாற்று உடையாகப் பெற்றார். உணவுக்காகத் தட்டு ஏந்தி நின்றபோது, இப்படி ஒருகணம் தம் வாழ்வில் வராமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என முடிவு செய்து, உறுதியாக இருந்துள்ளார். பல வருடம் பல தேசங்களில் சுற்றி அலைந்துள்ளார்.

புலம்பெயர்தல் காரணம்

புலம்பெயர்தல் என்பது, புதிதன்று, சங்ககாலத்தில் ஐந்நிலத்தில் வாழ்ந்த தமிழர், புலம் பெயர்ந்து வாழ்ந்ததை, இலக்கியங்களில் காண முடிகிறது. அவர்கள் உயிர்க்காகவும், பொருள் தேடவும் புலம்பெயர்ந்தபோதும், வெஞ்சின வேந்தன் பகைஅலைக் கலங்கி வாழ்வோர் போகிய பேரூர்பாழ் எனத் தனிமகானர் பாடியுள்ளார். அக்காலத்தில் அரசனின் சீற்றத்திற்கு அஞ்சி புலம் பெயர்ந்ததுபோலச் சமீப காலங்களில் தம்மைப் போன்றோர் புலம் பெயர நேரிட்டுள்ளது எனக் குறிப்பிட்டுள்ளார்.

தீய சிந்தனையைச் சாக அடித்தவர்கள்

கனடாவுக்குப் புலம் பெயர்ந்த தமிழர்கள், சிலவருடங்களில் தமிழ்ப் பத்திரிகைகள் தொடங்கி கோரிக்கைகளை வெற்றி பெறாதநிலையில் நிரந்தர வேலையும் அடுத்தவேளை உணவும் நிச்சயமில்லா நிலையிலும், தங்கள் புதுவாழ்வைப் பதிவு செய்கின்றனர்.

புலம்பெயர்ந்தோர் சாதனை

புலம்பெயர்ந்த இரண்டாம் தலைமுறை தமிழைக்கைவிடும் என்ற குற்றச்சாட்டைப் பொய்யாக்கி, கணினி யுகத்தில் தமிழ்கற்று உயர் இலக்கியங்களைப் படைத்துத் தமிழை உலக அரங்கில் முன்னிறுத்துகிறார்கள். நியூசிலாந்திலிருந்து அலாஸ்காவரை புலம் பெயர்ந்த தமிழர்கள், பத்துலட்சம் பேர் வாழ்கிறார்கள். கனடாவில் மட்டும் மூன்று லட்சம் தமிழர்கள். ஒரு காலத்தில சூரியன் மறையாத பிரட்டிஷ் ராச்சியம் என்று சொன்னதுபோல், இன்று சூரியன் மறையாத தமிழ்புலம் என்று புலம் பெயரந்த தமிழர்கள் தோற்றுவித்தனர்.

கனடாவில் சாலை ஒன்றுக்கு வன்னிவீதி என்று பெயர் சூட்டப்பட்டிருக்கிறது. இப்பெயரை மாற்றவோ, சிதைக்கவோ முடியாது. 2012 முதல் ஆண்டுதோறம் ஜனவரி 14-ம் நாள், தமிழர் பாரம்பரிய நாள் எனப் பிரகனப் படுத்தப்பட்டுள்ளது. இவை ஈழத் தமிழரின் புலம்பெயர்ந்த வரலாற்றை நினைவுபடுத்திக் கொண்டிருக்கும்.

ஆறாம் திணையும் ஆறுமணிக் குருவியும்

ஆசிரியரின் ஈழத்துக் கொக்குவில் கிராமத்தில் காகமும் ஆறுமணிக் குருவியும் இருந்தன. காகம் பறக்க இரண்டு மைல் தூரமே எல்லை. ஆறுமணிக்குருவி. இமயத்தை கடந்தும் சென்று திரும்புமாம். ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்தவர்கள், இந்த ஆறுமணிக் குருவிபோல, அவர்களுக்கு எல்லை கிடையாது. இனி அந்தத் தமிழர்களின் புலம், பனிசார்ந்த நிலமும், அதுவே ஆறாம் திணை என அ.முத்துலிங்கம் பாகுபடுத்திக் கூறியுள்ளது சிறப்பாகும்.

இலக்கணத் தேர்ச்சி செய்க

1. தவறான இணையத் தேர்வு செய்க

அ.மொழி + ஆளுமை + உயிர் + உயிர்

ஆ.கடல் + அலை + உயிர் + மெய்

இ.தமிழ் + உணர்வு + மெய் + உயிர்

ஈ .மண் + வளம் + மெய் + மெய்

விடை : கடல் + அலை + உயிர் + மெய்

2. கீழ்காணும் குறிப்புகளில் பொதிந்துள்ள மேடைப்பேச்சில் சிறந்து விளங்கிய தமிழறிஞர்களின் பெயர்களைக் கண்டறிக
அ) கீழ்காணும் சென்னை மாகாணத்துக்குத் தமிழ்நாடு என்று பெயர் மாற்றம் செய்த முதல்வர் (3)

விடை : அறிஞர் அண்ணா

ஆ) தொழிலாளர்களின் தந்தை என்று அழைக்கப்படுபவர் (10) 

விடை : திரு.வி.கல்யாணசுந்தரனார்

இ) உயிரை உணர்வை வளர்ப்பது தமிழே என்று பாடியவர் (6)

விடை : பாரதிதாசன்

ஈ) பொதுவுடைமைக் கொள்கையின் முன்னோடிகளுள் ஒருவர் (2)

விடை : ஜீவானந்தம்

3. பேச்சு வழக்கை எழுத்து வழக்காக மாற்றுக

அ) காலங்காத்தால எந்திரிச்சி படிச்சா ஒரு தெளிவு கிடைக்கும்.

விடை : அதிகாலையில் எழுந்திருந்து படித்தால் ஒரு தெளிவு கிடைக்கும்

ஆ) முயற்சி செஞ்சா அதுக்கேத்த பல் வராம போவாது.

விடை : முயற்சி செய்தால் அதற்கேற்ற பயன் வராமல் போகாது

இ) காலத்துகேத்த மாரி புதுசு புதுசா மொழி வடிவத்த மாத்தனும்

விடை : காலத்திற்கேற்ற மாதிரி புதிது புதிதாக மொழிவடிவத்தை மாற்ற வேண்டும்

ஈ) ஒவ்வொருத்தரும் பேசிக்கிட்டிருக்கும்போது எல்லாத்தையும் கவனமா பதிய வைக்கனும்.

விடை : ஒவ்வொருவரும் பேசிக் கொண்டிருக்கும்போது, எல்லாவற்றையும் கவனமாக பதியவைக்க வேண்டும்.

உ) தேர்வெழுத வேகமாகப் போங்க, நேரங்கழிச்சி போனா பதட்டமாயிருக்கும்.

விடை : தேர்வெழுத வேகமாப் போங்கள், நேரம் கழித்துபோனால் பதற்றமாகிவிடும்.

4. வினாக்கள்

அ) மொழிக்கு முதலில் வரும் எழுத்துகள் எத்தனை? அவை யாவை?

  • மொழிக்கு முதலில் வரும் எழுத்துக்கள் 22
அவை

  • உயிரெழுத்துக்கள் = 12 
  • மெய் எழுத்துக்கள் = 10 

ஆ) மொழிக்கு இறுதியில் வரும் எழுத்துகள் எத்தனை? எடுத்தக்காட்டு தருக.

  • மொழிக்கு இறுதில் வரும் எழுத்தக்கள் 24
அவை

  • உயிரெழுத்துக்கள் = 12 
  • மெய் எழுத்துக்கள் = 11 

  • குற்றியலுகரம்          = 1

இ) உயிரீறு, மெய்யீறு – விளக்குக

உயிரீறு

  • சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் உயிரெழுத்து அமைவது உயிரீறு

மணி (ண் + இ) + மாலை = மணிமாலை

மெய்யீறு

  • சொல்லின் (நிலைமொழியின்) இறுதியில் மெய்யெழுத்து அமைவது மெய்யீறு
பொன் + வண்டு = பொண்வண்டு

ஈ) உயிர்முதல், மெய்முதல் – எடுத்துக்காட்டுடன் விளக்குக

உயிர் முதல்

  • சொல்லுக்கு (வருமொழியின்) முதலில் உயிரெழுத்து அமைவது உயிர்முதல் ஆகும்
வாழை + இலை =  வாழையிலை

மெய் முதல்

  • சொல்லுக்கு (வருமொழியின்) முதலெழுத்து உயிர்மெய்யாக இருந்தாலும் அதன் முதலில் நிற்கும் வடிவம் மெய் என்பதால் அது மெய்முமதல் எனப்படும்
தமிழ் + நிலம் (ந்+இ) = தமிழ்நிலம்

உ) குரங்குக்குட்டி – குற்றியலுகரப் புணர்ச்சியை விளக்குக

குரங்கு + குட்டி = குரங்குக்குட்டி.

“மென்றொடர்க் குற்றியலுகரத்தின் முன் வல்லினம் மிகும்” எனும் விதிப்படி “க்” மிகுந்து குரங்குக்குட்டி என்றானது.
உ) “ங்” என்னம் மெய் எவ்வாறு சொல்லுக்கு முதலில் வரும்?

“ங்” என்னம் மெய், அகரத்துடன் சேர்ந்து (ங் + அ) “ங” எனச் சொல்லக்கு முதலில் “ஙனம்” (விதம்) என வரும்.
இச்சொல்லும், சுட்டெழுத்துக்கள், வினா எழுத்துக்களுடன் இணைந்தே வரும்.
(எ.கா) அங்ஙனம், இங்ஙனம், உங்ஙனம், எங்ஙனம், யாங்ஙனம்

மொழியை ஆள்வோம்

சான்றோர் சித்திரம்

தமிழ் இலக்கிய வரலாற்றில், “புலமைக் கதிரவன்” எனத் தமிழறிஞர்கள் போற்றிய தமிழ்மொழிப் பெரும்புலவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரார் ஆவார். திருச்சிராப்பள்ளி அருகில் உள்ள அதவத்தூர் என்னும் ஊரில் பிறந்த இவர் திருவாவடுதுறை மடத்தின் தலைமை புலவராக விளங்கினார்.

மீனாட்சி சுந்தரனார், தமிழறிஞர்களைத் தேடிக் கண்டு வழிபட்டு, செவிதிறந்து கற்றார். திருவாவடுதுறை மடத்தின் தலைவர் சுப்பிரமணிய தேசிகர், சென்னைத் தாண்டவராயர் திருத்தணிக விசாகப் பெருமாள் ஆகியோரிடம் பூக்கள்தோறும் சென்று தேனுண்ணும் வண்டுபோல் பாடம் கற்றார். அவர் இயற்றிய சேக்கிழார் பிள்ளைத்தமிழ் என்ற நூல் அவருடைய பெருமையை என்றும் உணர்த்தும். தலபுராணங்கள் பாடுவதில் சிறந்தவர். யகம அந்தாதி, திரிபந்தாதி, வெண்பா அந்தாதிகள் ஆகியவற்றை உருவாக்கிப் புகழ் பெற்றார். மாலை, கோவை, கலம்பகம், பிள்ளைத்தமிழ் ஆகியவற்றைப் பாடிப்பெருமை அடைந்தார். உ.வே.சாமிநாதர், தியாகராசர், குலாம் காதிறு நாவலர் போன்றோர் இவரின் மாணவர்கள். மகாவித்துவான் திரிசிரபுரம் மீனாட்சி சுந்தரனார் அவர்களின் புகழ் உள்ளவரையிலும் வாழும்.

1. தமிழிலக்கிய வரலாற்றில் புலமைக் கதிரவன் – இத்தொடரில் “புலமைக்கதிரவன்” என்பதற்கு இலக்கணக்குறிப்பு தருக

புலமைக்கதிரவன் = உருவகத்தொடர்

2. மேற்கண்ட பத்தியில் இடம் பெற்றுள்ள உவமை, உருவகத் தொடர்களை கண்டறிக

புலமைக்கதிரவன் = உருவகத்தொடர்

தேனுண்ணும் வண்ட போல் – உவமைத் தொடர்

3. மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களில் பாடுவதில் சிறந்தவர் – விடைக்கேற்ற வினாவை அமைக்க

தல புராணங்களில் பாடுவதில் சிறந்தவர் யார்?

4. பத்தியில் மொழிமுதல் எழுத்துக்களைக்கொண்டு அமைந்த சொற்களுள் எவையெவை வடமொழிச் சொற்கள் என்று சுட்டுக

புராணங்கள், மகாவித்தவான், யமக அந்தாதி, திரிபந்ததாதி, கலம்பகம்

5. “விளங்கினார்” – பகுபத உறுப்பிலக்கணம் எழுதுக

விளங்கினார் = விளங்கு + இன் + ஆர்

  • விளங்கு – பகுதி
  • இன் – இறந்த கால இடைநிலை
  • ஆர் – பலர்பால் வினைமுற்று விகுதி

தமிழாக்கம் தருக

1. The Pen is mightier than the Sword.

விடை : எழுதுகோலின் முனை, வாளின் முனையை விட வலிமையானது.

2. Winners don’t do different things, they do things differently.

விடை : வென்றோர், வேறுபட்ட செயல்களைச் செய்வதில்லை; அவர்கள் செயல்களை வேறுவிதமாக செய்வார்கள்

3. A picture is worth a thousand words.

விடை : ஒரு படம் என்பது , ஆயிரம் வாரத்தைகளை விட மதிப்புள்ளது.

4. Work while you work and play while you play.

விடை : உழைக்க வேண்டிய நேரத்தில் உழை! விளையாட வேண்டிய நேரத்தில் விளையாடு!

5. Knowledge rules the world.

விடை : அறிவே உலகை ஆளுகிறது

பிறமொழிச் சொற்களைத் தமிழ்ப்படுத்துக

பிறமொழிச்சொற்கள் தமிழ்ச்சொற்கள்
வாடகை குடிக்கூலி
மாதம் திங்கள்
போலீஸ் காவலர்
நிச்சயம் உறுதி
உத்திரவாதம் பொறுப்பு
சந்தோஷம் மகிழ்ச்சி
சம்பளம் ஊதியம்
ஞாபகம் நினைவு
வருடம் ஆண்டு
தேசம் நாடு
வித்தியாசம் வேறுபாடு
உற்சாகம் ஊக்கம்
விசா நுழைவாணை, நுழைவிசைவு
பாஸ்போர்ட் கடவுச்சீட்டு
கம்பெனி குழுமம்
பத்திரிகை செய்தித்தாள்
கோரிக்கை வேண்டுகோள்
யுகம் காலத்தை அளக்கும் அலகுகளில் ஒன்று
ராச்சியம் ஆட்சி
சரித்திரம் வரலாறு
முக்கியத்துவம் இன்றியமையாமை
சொந்தம் தனக்குரியது, உரியது
சமீபம் அண்மை
தருணம் தக்க சமயம்

நிகழ்ச்சி நிரலினை செய்திக் கட்டுரையாக மாற்றுக. அச்செய்தியை நாளிதழில் வெளியிட வேண்டி முதன்மை ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.


அனுப்புனர் :

                மாணவர் இலக்கிய மன்றத் தலைவர்

                அரசு மேல்நிலைப் பள்ளி

                சென்னை – 600 001.

பெறுநர் :

                முதன்மை ஆசிரியர்

                தினமணி நாளிதழ்

                சென்னை – 600 002.

ஐயா,

        எம் பள்ளியில் நடைபெற இருக்கும் திங்கள கூடுகை நிகழ்வு குறித்த செய்தி அனுப்பியுள்ளேன். அதனை வெளியிட்டு உதவுமாறு பணிவுடன் வேண்டுகிறேன்.

உங்கள்

வேலன்

(மாணவர் தலைவர்)

ஜீலைத் திங்கள் வார இறுதி வெள்ளிக்கிழமை அன்று, அரசு மேனிலைப் பள்ளியில் பிற்பகல் 2.30 மணிக்கு “அரியன கேள் புதியன செய்” என்னும் அமைப்பின் திங்கள் கூடுகை நிகழ்வு. தமிழ்த்தாய் வாழ்த்துடன் தொடங்குகிறது. மாணவர் இலக்கியச் செல்வன். 2.35 மணிக்கு வரவேற்புரை நிகழ்த்துகிறார். தலைமை ஆசிரியர் திரு.எழிலன் அவர்கள், “புலம்பெயர் தமிழரின் வாழ்க்கை” என்னும் தலைப்பில், 2.50 மணிக்கு சிறப்புரை நிகழ்த்துவார். 3.45 மணிக்கு மாணவர் ஏஞ்சலின் நன்றியுரை கூறி முடித்தவுடன், 4.00 மணிக்கு நாட்டுப் பண்ணுடன் கூடுகை நிகழ்வு நிறைவு பெறும்.

மொழியோடு விளையாடு

1.தொடரில் உள்ள சொற்களை ஒழுங்குபடுத்தி இரண்டு சொற்றொடர்களாக்குக

எ.கா. ஓர் பயிர் பறவை வளர வேண்டும் அழகான தண்ணீர் மயில்

விடை :

மயில் ஓர் அழகான பறவை

பயிர் வளர தண்ணீர் வேண்டும்

1. பள்ளிக்கூடம் எல்லாம் தருபவை ஒவ்வொரு கலைகள் குழந்தையும் போக வேண்டும் மகிழ்ச்சி

விடை :

ஒவ்வொரு குழந்தையும் பள்ளிக்கூடம் போக வேண்டும்.

கலைகள் எல்லாம் மகிழ்ச்சி தருபவை.

2. நிலவு வீசுவதால் தெற்கிலிருந்து மாலை தென்றல் மகிழ்விக்கும் எனப்படுகிறது மனத்தை

விடை :

மாலை நிலவு மனதை மகிழ்விக்கும்.

தெற்கிலிருந்து வீசுவதால் தென்றல் எனப்படுகிறது.

3. பிறர் செய்யாவிட்டாலும் செய்த தீமை மறக்கக்கூடாது நன்மை செய்யக்கூடாது உதவியை.

விடை :

பிறர் செய்த உதவியை, நன்மையை மறக்கக்கூடாது.

நன்மையை செய்யாவிட்டாலும் தீமை செய்யக்கூடாது.

4. நேற்று ஏன் வந்த பையன் பக்கத்தில் யார் இருக்கவில்லை தெரியுமா

விடை :

நேற்று வந்த பையன் யார் தெரியுமா?

ஏன் பக்கத்தில் இருக்கவில்லை?

5. கோசல மக்கள் நாடு ஒரு மகிழ்ச்சியாக சிறந்த வாழந்த் நாடு வந்தனர்.

விடை :

கோசல நாடு ஒரு சிறந்த நாடு.

மக்கள் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தனர்.

வேர்ச்சொற்களை எடுத்துக்காட்டில் உள்ளவாறு தொடர்களாக மாற்றுக

வா பேசு தா ஓடு பாடு
எ.கா. : வா – வேர்ச்சொல்

  • அருணா வீட்டுக்கு வந்தாள் (வினைமுற்று)
  • அங்கு வந்த பேருந்தில் அனைவரும் ஏறினர் (பெயரச்சம்)
  • கருணாகரன் மேடையில் வந்து நின்றார் (வினையெச்சம்)
  • என்னைப் பார்க்க வந்தவர் என் தந்தையின் நண்பர் (வினையாலணையும் பெயர்)

அ. பேசு – வேர்ச்சொல்

  • கண்ணன் நன்றாகப் பேசு (வினைமுற்று)
  • மேடையில் பேசிய புத்தகம் கயல்விழிக்குப் பிடித்திருந்தது (பெயரச்சம்)
  • குழந்தை நினைத்தவற்றையெல்லாம் பேசி முடித்தார். (வினையெச்சம்)
  • வானொயில் பேசியவர் யார் என்று அண்ணன் தம்பியிடம் கேட்டான் (வினையாலணையும் பெயர்)

ஆ. தா – வேர்ச்சொல்

  • வேல்விழி கயல்விழிக்குப் புத்தகம் தந்தாள் (வினைமுற்று)
  • வேல்விழி தந்த புத்தகம் கயல்விழிக்குப் பிடித்திருந்தது (பெயரச்சம்)
  • தலைமையாசிரியர் சான்றிதழ்களைத் தந்து முடித்தார் (வினையெச்சம்)
  • தானமாகப் பொருள்களை தந்தவர் மகிழ்ந்தார் (வினையாலணையும் பெயர்)

இ. ஓடு – வேர்ச்சொல்

  • மாணவர்கள் வேகமாக ஓடினார் (வினைமுற்று)
  • வேகமாக ஓடிய மாணவர்கள் வெற்றி பெற்றான் (பெயரச்சம்)
  • குமரன் வேகமாக ஓடி விழுந்தான் (வினையெச்சம்)
  • மெதுவாக ஓடியவர் தோற்றார் (வினையாலணையும் பெயர்)

ஈ. பாடு – வேர்ச்சொல்

  • கீதா பாட்டுப் பாடினாள் (வினைமுற்று)
  • பாட்டு பாடிய கீதா நடனம் ஆடினாள். (பெயரச்சம்)
  • கீதா பாட்டுப் பாடி முடித்தாள். (வினையெச்சம்)
  • வகுப்பில் பாடியவள் அனைவராலும் பாராட்டப்பட்டாள். (வினையாலணையும் பெயர்)

நிற்க அதற்குத் தக

கலைச்சொல் அறிவோம்


அழகியல் – Aesthetics இதழாளர் – Journalist
 கலை விமர்சகர் – Art Critic புத்தக மதிப்புரை – Book Review
புலம்பெயர்தல் – Migration மெய்யியலாளர் – Philosopher

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...