தமிழகத்தில் மழை காரணமாக நாளை இந்த மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை., மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!


தமிழகத்தில் மேற்கு திசை காற்று மாறுபாடு காரணமாக பல்வேறு பகுதிகளில் மிதமான மழை முதல் கனமழை வரை பெய்து வருகிறது. இதனால் சாலைகளில் நீர் தேங்கி இருப்பதால் பள்ளி மாணவர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்படாமல் இருக்க பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது.அந்த வகையில் நீலகிரி மாவட்டத்தில் நேற்று (ஜூலை 5) முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருவதால், இம்மாவட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 6) விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. 

தற்போது வரை இந்த கனமழை கூடலூர், பந்தலூர், உதகை மற்றும் குந்தா பகுதிகளில் தொடர்ந்து விட்டு விட்டு பெய்து வருகிறது.இதன் காரணமாக கூடலூர், பந்தலூர், உதகை மற்றும் குந்தா ஆகிய 4 தாலுகாக்களில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் நாளை (ஜூலை 7) விடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments