தமிழக அரசானது பள்ளி மாணவர்கள் கல்வி கற்பதே உறுதி செய்வதுடன், அவர்களை ஊக்கப்படுத்தி எதிர்காலத்தை சிறப்பாக அமைத்துக் கொள்வதற்காக பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறது. இந்த வகையில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள +1 மற்றும் +2 மாணவர்களுக்கு இலவசமாக சைக்கிள், லேப் டாப் உள்ளிட்ட சாதனங்களை அரசு சிறப்பாக வழங்கி வருகிறது.
இதில் இலவச சைக்கிள், நடப்பு கல்வி ஆண்டுக்கான விக்கிரவாண்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் +1 மற்றும் +2 மாணவர்களுக்கு, இன்று உயர் கல்வித்துறை அமைச்சர் பொன்முடி வழங்கினார். இதன் பிறகு பேசிய அமைச்சர் பொன்முடி, +1 மற்றும் +2 மாணவர்களுக்கு மட்டுமல்லாமல் நிதி நிலைக்கேற்ப அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் இலவச சைக்கிள் வழங்க, நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.