தமிழக குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் – தயார் நிலையில் மையங்கள்!

தமிழக குடும்பத்தலைவிகளுக்கு 1000 ரூபாய் – தயார் நிலையில் மையங்கள்!


தமிழகத்தில் கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டம் மூலம் பெண்களுக்கு மாதம் ரூ. 1000 வழங்குவதற்கான மையங்கள் கைரேகை பதிவு செய்யும் பயோமெட்ரிக் மெஷின் உடன் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 - விண்ணப்பம் ( Rs. 1000 Application Form )

உரிமைத்தொகை திட்டம்

தமிழகத்தில் அரசு சார்பில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ரூ. 1000 வழங்கப்படும் என அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. இந்த திட்டம் வருகிற செப் 15 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கிறது. இந்த திட்டத்திற்கான ஏற்பாடுகள் அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று வருகிறது. மேலும் மாவட்டங்களில் இந்த திட்டத்தை செயல்படுத்தும் பொறுப்பு அந்தந்த மாவட்ட ஆட்சியர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 - விண்ணப்பம் ( Rs. 1000 Application Form )

இந்நிலையில் சென்னையில் மாநகராட்சி ஆணையர் ராதாகிருஷ்ணன் தலைமையில் அனைத்து துறைகளையும் ஒருங்கிணைத்து இந்த திட்டத்தை செயல்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக சென்னையில் வீடு வீடாக விண்ணப்பம் கொடுக்க தன்னார்வலர்களை தேர்வு செய்யும் பணிகள் நடைபெற்று வருகிறது. இது குறித்து மாநகராட்சி ஆணையர் கூறுகையில், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தை செயல்படுத்த ஆரம்பகட்ட பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதற்காக இல்லம் தேடி கல்வி தன்னார்வலர்கள் மற்றும் ரேஷன் கடை ஊழியர்கள் இணைந்து விண்ணப்பங்களை வழங்கி வருவருவதாகவும் குறிப்பிட்டார்.

குடும்ப தலைவிகளுக்கு ரூபாய் 1000 - விண்ணப்பம் ( Rs. 1000 Application Form )

மேலும் இதற்கான சிறப்பு மையங்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பகுதியிலும் 2 சிறப்பு மையங்கள் அமைக்கப்படும். சென்னையில் மட்டும் 1417 ரேஷன் கடைகள் இருப்பதால் 3550 மையங்கள் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டு வருவதாகவும் ஜூலை 24 ஆம் தேதிக்கு பின் இந்த மையங்கள் முழுமையாக செயல்பட தொடங்கும் எனவும், ஒவ்வொரு மையத்திலும் கைரேகையை பதிவு செய்ய பயோமெட்ரிக் மெஷின் வைக்கப்படும் எனவும், மக்களுக்கு தேவையான குடிநீர் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்படும் என தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments