TNPSC - குரூப்-4 பணி நியமன கவுன்சிலிங் இன்று துவக்கம்...!

TNPSC - குரூப்-4 பணி நியமன கவுன்சிலிங் இன்று துவக்கம்...!


குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, பணி நியமன கவுன்சிலிங், இன்று துவங்க உள்ளது. முதற்கட்டமாக, 8,500 பேர் கவுன்சிலிங்குக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

தமிழக அரசு துறைகளில், குரூப் 4 பதவிகளில்காலியாக உள்ள, 10,292 இடங்களை நிரப்ப, டி.என். பி.எஸ்.சி., வழியே, கடந்த ஆண்டு ஜூலை, 24ல் போட்டி தேர்வு நடத்தப்பட்டது. இதில் தேர்ச்சி பெற்ற தகுதியான விண்ணப்பதாரர்களுக்கு, பணி நியமன கவுன்சிலிங் இன்று துவங்குகிறது.

சென்னையில் உள்ள, டி.என்.பி.எஸ்.சி., அலுவலக வளாகத்தில், இந்த கவுன்சிலிங் நடத்தப்படுகிறது. ஆக.,10 வரை கவுன்சிலிங் நடக்கிறது. இதற்காக, 8,500 பேர் அடங்கிய பதிவெண் பட்டியல், டி.என்.பி.எஸ்.சி.யின் www.tnpsc.gov.in/என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட கவுன்சிலிங்கில், வி.ஏ.ஓ. என்ற கிராம நிர்வாக அதிகாரி பதவியில், 425 இடங்கள்;இளநிலை உதவியாளர் பணியில், 5,321; வரி வசூலிப்பாளர், 69; கள உதவியாளர், 20 மற்றும் கிடங்கு காப்பாளர் 1 ஆகிய பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இதையடுத்து, 3,377 தட்டச்சர் மற்றும் சுருக்கெழுத்தர் பணிகளுக்கு, நியமன கவுன்சிலிங் நடக்கும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments