பழமொழி விளக்கம் : வாழ்க்கை நிகழ்வில் ( நிகழ்வு ) - 11, 12th

பழமொழி விளக்கம் : வாழ்க்கை நிகழ்வில் ( நிகழ்வு )

முயற்சி திருவினையாக்கும்

பழமொழி விளக்கம்-

முயற்சியைக் கைவிடாமல் தொடர்ந்து செயலை செய்து வந்தால் வாழ்வில் உயர்வு அடையாளம் என்பதே இப்பழமொழியின் விளக்கம்.

வாழ்க்கை நிகழ்வு:

சங்கீதா ஒன்பதாம் வகுப்பு படிக்கும் மாணவி படிப்பில் சுமார். ஆசிரியர் வகுப்பில் சங்கீதாவை எழுப்பி தமிழ் பாடத்தைப் படிக்கச் சொன்னார். அவள் தவறாக படித்ததைக் கேட்டு வகுப்பு மாணவிகள் சிரித்தனர். ஆனால் அவள் அதற்காக வெட்கப்படவில்லை. நேரம் கிடைக்கும் போதெலலாம் புத்தகத்தை எடுத்து படித்துப் பார்த்தாள். பள்ளியில் நடைபெறும் பேச்சுப் போட்டியில் கலந்து கொள்வதற்காக சங்கீதா தன் பெயரைக் கொடுத்த போது அனைத்து மாணவிகளும் அவளைப் பார்த்து ஏளனம் செய்தனர். இவளா பேசப் போகிறாள் என்று கூறி அவள் மனதைப் புண்படுத்தினர். வீட்டில் பேசிப் பழகினாள். நடந்த பேச்சுப் போட்டியில் சிறப்பாகப் பேசி முதல் பரிசைப் பெற்றாள். அனைவரும் அவளை பாராட்டினார்கள். முயற்சி செய்தால் முடியாத காரியம் ஒன்றும் இல்லை.

நீதி:

சித்திரமும் கைப்பழக்கம், செந்தமிழும் நாப்பழக்கம் என்பதை உணர்ந்து தொடர்ந்து முயற்சி செய்தால் வாழ்வில் வெற்றி பெறலாம் என்பதே இப்பழமொழி உணர்த்தும் நீதி.

“சிறு துரும்பும் பல்குத்த உதவும்"

பழமொழி விளக்கம்;

எந்தவொரு சின்னச் செயலுமே பயனுள்ளதாக அமையும் என்பதனை உணர வேண்டும். 

வாழ்க்கை நிகழ்வு:

நான் பள்ளியில் படிக்கும் போது என்னுடன் கந்தன் என்ற மாணவனும் படித்து வந்தான். ஓரளவு படிக்கும் மாணவன், ஆனாலும் தினந்தோறும் பள்ளிக்கு வந்து போகும் போது மாணவர்கள் பயன்படுத்தி வீணாக்கிய காகிதங்களைப் பொறுக்கிச் செல்வான்.

“ஏன்டா இந்தக் குப்பைக் காகிதங்களைப் பொறுக்கிற? என்று நான் அவனிடம் கோபப்பட்டதுண்டு. ஆனால் கந்தன் சிரித்துக் கொண்டே அந்தக் காகிதத் துண்டுகளைத் தனது கூடைக்குள் அள்ளிச் செல்வான். நான் கூட இவன் இந்தக் காகிதத் துண்டுகளை கடையில் போட்டு பணம் சம்பாதிக்கிறானோ என்று எனக்குள்ளே கேட்டதுண்டு. நான் எண்ணியது போல எதுவும் நடக்கவும் இல்லை. கந்தனின் இந்தச் செயல் எங்களது நட்பையே பிரித்து விட்டது. எவ்வளவு கூறியும் கேட்காத இந்தக் கந்தனின் நட்பு எதற்கு என்று நட்பையும் முறித்துக் கொண்டேன், ஆனாலும் அவனது செயல் தொடர்ந்து நடைபெற்று வந்தது.

ஒருநாள் பள்ளியில் தலைமையாசிரியர், நமது பள்ளியில் ஓர் கண்காட்சி வைக்கபோகிறேன். கழிவுப் பொருட்களிலிருந்து படைக்கும் பொருள்களின் கண்காட்சி இது என்றார். ஒவ்வொரு மாணவர்களும் வீணான பொருட்களைத் தேடி அலைந்து சேர்த்தனர். கண்காட்சி தொடங்கியது. கந்தன் பேப்பர் கூழினால் செய்த ஒரு மனிதச் சிலையைக் கண்காட்சியில் வைத்தான். அந்தச் சிலை அனைவரையுமே கவர்ந்தது. முதல் பரிசையும் வென்றது. நான் கந்தனின் செயலைக் கண்டு பெருமிதம் கொண்டேன். தினம் தினம் கொண்டு சென்ற 

 காகிதத் துண்டுகளை தண்ணீரில் ஊறவைத்து அதில் வடித்த மனித உருவச் சிலை கண்டு பூரித்துப் போனேன்.

நீதி:

ஆம் கழிவிப் பொருட்கள் என்று எதையமே வீனாக்கக கூடாது அதுவும் ஒரு சில நேரத்தில் பயனுள்ள. பொறளாக மாறும் என்பது போல சுந்தன சிறு திரும்பும் பல்குத்த உதவும் என்பதனை நிருபித்து விட்டான். 

"சுடர் விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்"

பழமொழி விளக்கம்:

விளக்குதானே எரிந்து கொண்டே இருக்கும் என்று இருந்து விடக்கூடாது தீரி எரிய ஒளி மங்கும். அப்போது திரியைத் தூண்டிவிட்டால் தான் ஒளி பிரகாசிக்கும். இது திறமைமிக்கவர்க்கும் வழிகாட்டுதல் நல்ல பயன்தரும் எனவதை விளக்க இப்பழமொழி பயன்படுகிறது.

வாழ்க்கை நிகழ்வு:

இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு ஆவார் அவருடைய தந்தையார் புகழ்பெற்ற வழக்கறிரும் தேசப்பக்தருமான மோதிலால் நேரு அவர்கள் தன் ஒரே மைந்தன் ஜவகரைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தார். இயற்கையாகவே நுண்ணறிவு படைத்தவர் ஜவகர். பிள்ளைகளோடு பந்து விளையாடிக் கொண்டிருக்கையில் அது ஒரு சிறு குழிக்குள் பந்து விழுந்துவிட்டது. கையை விட்டு எடுக்க முடியவில்லை. பிள்ளைகள் திகைக்க ஜவகர் ஒரு வாளி தண்ணீரைக்குழியில் ஊற்றினார். பந்து மேலே வந்தது. இத்தகையை நுண்ணறிவை ஜகவர் பெற்றிருந்தார்.

நீதி: 

அதேபோல் மாணவர்கள் எவ்வளவு நுண்ணறிவு பெற்றிருந்தாலும் அவன் வளர்ச்சிக்கு உதவி செய்ய ஆசிரியர் தேவை என்பது சுடர் விளக்காயினும் தூண்டு கோல் வேண்டும் என்ற பழமொழிக்கு எடுத்துக்காட்டாய் விளங்குகிறது.

"ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு 

பழமொழி விளக்கம்:

சாதி, மத, இன வேறுபாடுகள் இல்லாமல் இருந்தால் மக்கள் அனைவரும் மகிழ்ச்சியாக இருப்பார்கள். இதைந்தான் ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியின் விளக்கமாகும். 

வாழ்க்கை நிகழ்வு :

ஒற்றுமை என்றும் உயரியது என்பது வெள்ளிடை மலை. மலைச்சாமிக்கு மூன்று சகோதரர்கள். திருமணம் ஆவதற்குமுன் எனும்பம் தசையாய் ஒட்டி வாழ்ந்தவர்கள், வீட்டுக்கு வந்த மகராசிகளால் வேறுவேறு ஆயினர். ஒரு வீட்டிற்குள் நான்கு குடும்பங்கள் போட்ட சண்டையில் அக்கம் பக்கத்தார் அலுத்துக் கொண்டனர். பின்னர். தனித்தனியாக வாடகை வீடு பார்த்துக் கொண்டு போக வேண்டியதாயிற்று. பின் பாகப்பிரிவினை நடந்தது. ஆளுக்கு ஐந்து ஏக்கர் நிலம் தேறியது. அவர்களுக்குக் கூட்டுக் குடும்பமாக இருந்தபோது இருந்த நிலைமையின் அருமை புரிந்தது.

நீதி:

நம் மக்கள் அனைவரும் தவறாமல் வரி செலுத்தினால் நம்முடைய நாடு வல்லரசாக மாறும் இவையே ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு என்ற பழமொழியின் நீதியாகும்,

கற்றோர்க்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு 

பழமொழி விளக்கம்:

கற்றோர்க்கு தனது நாடும் ஊருமே அல்லாமல் எந்த நாடும் ஊரும் தன்னுடைய ஊராகும்.

வாழ்க்கை நிகழ்வு :

ஓர் ஊரில் முத்தன் என்பவர் வாழ்ந்து வந்தார். சொந்தத் தொழிலில் ஈடுபட்டுக் கடினமாக உழைத்துச் செல்வந்தராக உயர்ந்தார். அவருக்குப் புகழினி. மதியழகன் என்ற இரண்டு பிள்ளைகள், பிள்ளைகள் இருவரையும் பள்ளிக்கு அனுப்பாமல், தொழிலில் ஈடுபடுத்த எண்ணினார். ஆனால், தந்தையின் ஆலோசனையையும் மீறி கல்லூரிப் படிப்பு வரை இருவரும் படித்து முடித்தனர், முத்தனுக்குக் கல்வியின் மேல் பெரிய ஈடுபாடோ, விருப்பமோ கிடையாது. ஆகவே, சரியாகக் கல்வி கற்காத முத்தனை அவரது வியாபாரக் கூட்டாளிகள் ஏமாற்றி விட்டனர். இதனால் வீடு, வயல், ஆடுமாடுகள் எனச் செல்வத்தை இழந்து ஒருவேளை உணவுக்கே துன்பப்படும் நிலைக்கு அவரும் அவரது குடும்பத்தினரும் ஆளாகினர். முத்தனின் பிள்ளைகள் இருவரும் இனியும் தாமதிக்கக்கூடாது என எண்ணி வெளிநாட்டில் உள்ள நிறுவனங்களுக்கு வேலை வேண்டி விண்ணப்பித்தனர். உரிய கல்வித்தகுதி பெற்றிருந்ததால், இருவருக்கும் நல்ல வேலை கிடைத்தது. சில நாள்களிலேயே குடும்பத்தின் வறுமை நீங்கியது.

'தன் கையே தனக்கு உதவி

பழமொழி விளக்கம்:

பிறர் உதவியை எதிர்பார்க்காமல் நம் பணியை நாம் செய்து கொள்வது இப்பழமொழியின் கருத்து. 

வாழ்க்கை நிகழ்வு:

மாடசாமி தன்னுடைய பிள்ளைகள் இருவரையும் எப்படியாவது மேல் படிப்பைப் படிக்க வைத்து பெரிய மனிதர்களாக்கிட வேண்டும் என விரும்பினார். அவர் ஓய்வு பெற்ற ஆசிரியர். குழந்தைகள் அவருக்கு சற்று காலம் கடந்தே பிறந்தனர். அதனால் ஓய்வு பெறும் வயதுக்குள் அவர்களை உயர் படிப்பிலோ உயர் பதவியிலோ அமர்த்திப் பார்க்க, கொடுத்து வைக்கவில்லை. தான் அதிகமாகச் செலவு செய்து தன் தங்கைகளைப் பெரிய இடத்தில் திருமணம் செய்து கொடுத்து இருந்தாலும், அவர்கள்கூட அவர் நிலையை உணர்ந்த பாடில்லை. இருவரையும் பொறியியல் கல்லூரியில் சேர்த்துவிட்டார். மதிப்பெண்கள் நன்கு எடுத்திருந்ததால் இடம் கிடைத்துவிட்டது. யானைக்குத் தீனி போட வேண்டும். அதுபோல் அந்தப் படிப்புக்குப் பணம் கட்ட வசதியில்லை. அவரது ஓய்வு ஊதியம் உண்பதற்கே சரியாக இருந்தது. நிலம் கொஞ்சம் ஊரில் இருந்தாலும் சரியான விலைக்குப் போகும் நிலை இல்லை. முடிவில் அவர் ஒரு முடிவுக்கு வந்தார். கடன் வாங்குவதைவிட நல்ல வழியாக எங்காவது ஒரு பள்ளியில் சிறு பள்ளியாக இருந்தாலும்கூட, வேலைக்குச் சேர்ந்து ஒரு நாலாயிரம் அல்லது ஐந்தாயிரம் சம்பாதிக்கலாம் என்பது தான் அது.

நீதி:

பிறரை எதிர்பார்க்காமல் தாமே உழைத்து வாழ்க்கையை நடத்துவது என்பது இப்பழமொழியின் கருத்தாகும்.

"குறைகுடம் கூத்தாடும்" 

பழமொழி விளக்கம் :

எதையும் அரை குறையாக அறிந்து கொள்ளுவது துன்பத்தையே தரும் என்பதை இப்பழமொழி விளக்குகிறது.

வாழ்க்கை நிகழ்வு!

பத்தாம் வகுப்புப் படிக்கும் போது நந்தன், விந்தன் என இரண்டு நண்பர்கள் இருந்தனர். அவர்களுள் நந்தன் எப்போதும் படிப்பில் நான்கு அல்லது ஐந்தாவது இடத்தில்தான் இருப்பான். விந்தன் எப்போதும் முதல் இடமே வசிப்பான். பத்தாம் வகுப்பு காலாண்டுத் தேர்வு நடைபெறுகையில் விந்தன் உடல் நலம் குன்றி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாள். மருத்துவர் அவனைத் தேர்வு எழுத வேண்டாம் எனவும் வீட்டில் இருந்து ஓய்வு எடுக்குமாறும் கூறியிருந்தார். ஆனால் விந்தன் தேர்வை அலட்சியப்படுத்தாது, உடல்நலம் குன்றிய நிலையிலும் தேர்வு எழுதினான். அந்நிலையில் முதல் மதிப்பெண் பெற இயலவில்லை. நந்தன் அந்த முறை முதலிடம் பெற்றான். அவன் தன்னைத் தானே பெருமையாகப் பேசிக் கொண்டான், தன்னைப் போல் யாராலும் படிக்க முடியாது என்றும், இனிவரும் தேர்வுகளில் எல்லாம் தானே முதல் மதிப்பெண் எடுப்பேன் என அடிக்கடி கூறினான். சில நாட்களில் அரசு பொதுத் தேர்வு நடைபெற்றது. அதில் விந்தன் முதல் இடம் பெற்றான். அதற்காக அவன் யாரிடமும் பெருமிதம் கொள்ளவில்லை. எப்போதும் போல் அடக்கத்துடன் செயல்பட்டான். அனைவரும் 'குறைகுடம் கூத்தாடும் நிறைகுடம் எப்போதும் தளும்பாது' எனக் கூறி விந்தனைப் பாராட்டினார்கள்.

நீதி:

முழுமையான அறிவைப் பெறாமல் பெருமைப்பாராட்டுவது தவறான செயல். எவ்வளவு கற்றாலும் அடக்கத்துடன் வாழ வேண்டும் என்பதே இப்பழமொழி உணர்த்தும் நீதி,

“கூடி வாழ்ந்தால் கோடி நன்மை"

பழமொழி விளக்கம்:

தனி ஒருவனால் சாதிக்க முடியாத பல காரியங்களைக் கூட்டு முயற்சியினால் வெற்றி பெறச் செய்ய முடியும் என்பது இப்பழமொழியின் கருத்தாகும்.

வாழ்க்கை நிகழ்வு:

ஒரு ஊரில் பல சமயத்தார்கள் ஒன்று கூடி வாழ்ந்து வந்தார்கள். அந்த ஊரில் நல்லது கெட்டது எது நடந்தாலும் ஒற்றுமையுடன் செயல்படுவார்கள். இப்படிப் பல வருடங்கள் கழிந்து விட்டன. பிறகு ஒருவருக்கொருவர் சில காரணத்துக்காக வாய்ச் சண்டையாகி, கைச்சண்டையில் போய் பிறகு உயிரைப் பறிக்கக் கூடிய சண்டையாக மாறிவிட்டது. இந்தச் செயலைப் பார்த்து பக்கத்து ஊர்க்காரர்களும் இவர்களை தாழ்வாக நினைத்தார்கள்."

வில் ஒருவருககொருவர் பிரச்சனையில் மாட்டிக் கொண்டு காவல் நிலையம், நீதிமலம் தன்னிடம் இருங்கும் பணத்தையெல்லாம் விரயம் செய்து கடைசியில் தன் குடும்பத்தைச் சோகத்து தள்ளி விட்டார்க்ள் பிறகு ஒவ்வொரு சமயத்தாரும் தன் நிலையைத் தெரிந்து கொண்டு, நாம் ஒற்றுமையடன் இருந்தால் தான் வாழ்க்கையில் செம்மையை அடைவோம் என்றுச் சொல்லி. ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.

நீதி:

”ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு' என்ற பழமொழிக்கேற்ப தேரினை இழுப்பத்தற்கும் பல மனிதர்கள் தேவை. அது போல ஒருவர் மட்டும் தேரினை இழுக்க முடியாது என்பது போலக் கூடி வாழ்ந்தால் கோடி நன்மையாகும் என்பதை இப்பழமொழி உணர்த்துகிறது.

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

பழமொழி விளக்கம்:

உலகில் செல்வம் படைத்தவராக இருந்தாலும் நோய் இருப்பின் அவர்கள் பெரியவர்களே. ஏழ்மையானவர் ஒருவர் நோயற்ற வாழ்வு பெற்றிருந்தால் அவரே உலகில் செல்வந்தர் ஆவார். 

வாழ்க்கை நிகழ்வு :

என பாசத்துக்குரிய நண்பர் சிறப்பாகக் கல்வி கற்று ஒரு பட்டதாரியானார். பின் பணத்தின் தேவையை உணர்ந்து பல மாணவர்களுக்குக் கணிதம் சொல்லிக் கொடுத்து. பல மாணவர்களைத் திறமையான மாணவர்களாக உருவாக்கினார். அவருடைய எளிமையான முறை மாணவர்களைக் கவர்ந்தது. பல பள்ளிகளிலிருந்து வந்து நூற்றுக்கணக்கான மாணவர்கள் அவரிடம் கல்வி பயின்றனர். கடின உழைப்பால் சில மணிநேரம் உடல்நிலை சரியில்லாமல் இருப்பதுண்டு அதைச் சரியாகக் கவனிக்காமல் மாத்திரைகளை மட்டும் வாங்கி உண்ணுவார். அதனால் அவருக்கு உடல் நிலை கடுமையாகப் பாதித்து மருத்துவரிடம் சென்றபோது. அளவுக்கு அதிகமாக மாத்திரைகளை உண்டதால் அவரது சிறுநீரகம் பாதித்தது என்று டாக்டர் கூறினார். பிறகு அவர் சம்பாதித்த பணம் எல்லாம் தன் நோய்க்குச் செலவு செய்ததனால் ஏழ்மைக்குத் தள்ளப்பட்டார்.

நீதி:

நாம் பணத்தைச் சம்பாதித்துவிடலாம். ஆனால் நம் உடல்நிலை பாதிக்கப்பட்டால் மீண்டும் நல்ல நிலைக்குக் கொண்டுவர இயலாது. இதுவே இப்பழமொழியின் கருத்தாகும்,

"ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையுமா?

பழமொழி விளக்கம்:

இளமையில் கல்வி கற்காதவன் முதுமையில் கல்வி கற்பது என்பது முடியாத காரியமாகும். அதுபோல இளமையில் முயற்சி செய்யாதவன் முதுமையில் முயற்சி செய்ய முடியாது என்பதே இப்பழமொழியின் கருத்தாகும். 

வாழ்க்கை நிகழ்வு:

நானும் என் நண்பன் சந்திரனும் இணைபிரியாத நண்பர்களாக இருந்தோம். ஆனால்நான் சிறுபிள்ளைத்தனமாக விளையாட்டிற்கு முக்கியத்துவம் கொடுத்தேன். அவன் நன்றாகப் படித்து உயர்நிலையை அடைந்தான். நான் அவனைப் போல உயர்நிலையை அடைய நினைத்தேன். ஆனால் முடியவில்லை. பின்பு அவனைப் போல கல்வியில் உயர்நிலை அடைய முதியோர்கல்விக்குச் சென்றுப் படிக்க ஆசைப்பட்டு படித்து வந்தேன், என் முதுமை காரணமாக என்னால் கல்வி கற்க முடியவில்லை. இதிலிருந்து நான் புரிந்து கொண்டது என்னவென்றால் கற்க வேண்டிய கல்வியை முறையாக இளமையிலேயே கற்க வேண்டும். 

நீதி:

சிறுவயதில் கற்றுக் கொள்வதும், அதன்படி செய்வதும் இறுதி வரை தொடரும், அவ்வளவு சீக்கிரத்தில் அதை மாற்றிவிட முடியாது. இக்கருத்தைத்தானே “ஐந்தில் வளையாது ஐம்பதில் வளையுமா?” என்னும் பழமொழி சொல்கின்றது?

நுணலும் (தவளை) தன் வாயால் கெடும்.

பழமொழி விளக்கம்:

ஒருவன் தன் வாழ்வில் அளவறிந்து பேசுவது அறிவுடைமை யாரும் அளவில்லாமல் பேசுவது தீமை விளைவிக்கும் என்பதே இப்பழமொழியின் விளக்கம்..

வாழ்க்கை நிகழ்வு :

தவளை இருக்கிறதே தவளை, அது சும்மா இருக்காது அது எப்போதும் தர, தர என்று கத்திக் கொண்டே தான் இருக்கும் இடத்தை வெளிப்படுத்தும். பசியோடு போகிற பாம்புக்கு அது இரையாகிவிடும். அதுபோலத்தான்

அரளின் அரசியல் எதிரி முந்தையா. ஒரு சமயம் அருண் முத்தையாவை வாய்த்தகராறில் குற்றிக் கொலை லெதான விடுவேன் என்று மெல்ல என் தலைவனை எப்படித் திட்டலாம் என்று கூறிவிட்டுச் சென்றுவிட்டர் மூன்றாவதாக சின்னப்பன். ஒருநாள் உணமையாகவே முத்தையாவை யாரோ ஒருவர் கொலை செய்யப்போய் அது அருணை ஆபத்தில் மாட்டிவிட்டது பிறகு காவல் நிலையம், நீதிமன்றம் என்று அலைந்து கடைசியில் வெளிவருதற்குள் போதும் போதும் என்றாறிவிட்டது அருணுக்கு

நீதி

யாராக இருந்தாலும் சிந்தித்து வார்த்தையைப் பிறரிடம் கூற வேண்டும். இல்லையென்றால் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடும். நுணலும் தன் வாயால் கெடும்' என்பது இக்கதையின் நீதி.

சிறுதுளி பெருவெள்ளம்" 

பழமொழி விளக்கம்:

மழையானது முதலில் சிறுசிறு துளியாக வரும் அந்த சிறுதுளி ஒரு மணி நேரம் தொடர்ந்து பெய்தால் அந்த சிறுதுளி எங்கும் வெள்ளம்போல் காட்சியளிக்கும் இவையே சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியின் விளக்கமாகும்.

வாழ்க்கை நிகழ்வு :

சிறுதுளி பெருவெள்ளம் என்னும் பழமொழியை நன்மைக்கும் எடுத்துக் கொள்ளலாம். தீமைக்கும் பயன்படுத்தலாம். சிறுகச் சிறுக சேமித்ததாலேயே குசேலன் மனைவி கண்ணனுக்கு அவல் இடித்துக் கொடுக்க முடிந்தது. குசேலனும் கண்ணனும் வகுப்பு நண்பர்கள். கண்ணன் துவாரகையின் மன்னன். குசேலனோ குழந்தை குட்டிப் பெறுவதில் மன்னனானான்.

வறுமை வாட்டியது, வயிற்றுக்குச் சோறிட முடியாத வறுமையில் குடும்பம் வாடியது. இந்நிலையில் கண்ணனைக் கண்டுவர குசேலர் புறப்பட்டார். வெறுங்கையோடு போகலாமா? என்ன செய்வது? குசேலன் மனைவி வறுமை நிலையிலும் ஒரு பிடி தானியத்தை எடுத்துத் தனியே தினமும் வைத்திருந்தாள். அதை எடுத்து அவல் இடித்துக் கண்ணனிடம் கொடுக்க சொல்லி குசேலனிடம் கொடுத்தாள், கண்ணன் விரும்பியுண்ட அந்த அவல் குசேலன் வீட்டைக் குபேரன் ஆக்கியது.

நீதி:

நாம் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு ரூபாயாக சேர்த்து வைத்தால் ஒரு சில ஆண்டுகளில் அவை பெரும் தொகையாக மாறும் இவற்றை சிறுதுளி பெருவெள்ளம் என்ற பழமொழியின் நீதியாகும்.

வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் 

பழமொழி விளக்கம்:

ஒருவன் திறமைசாலியாக இருந்தால், அவன் எந்த சிக்கலான பிரச்சனையையும் சந்தித்து, வெற்றி கொள்வான். 

வாழ்க்கை நிகழ்வு :

சரவணன் ஒரு திறமைசாலி ஒருநாள் அவன் தன் இரு சக்கர வாகனத்தில் ஒரு சுரங்கப்பாலத்தின் வழியே சென்றபோது, அந்த சுரங்கப் பாலம் தொடங்குமிடத்திலிருந்து சில அடிகள் தூரத்தில் ஒரு வேன் நின்றிருந்தது. சுரங்கப் பாலத்தின் உயரம் குறைவான இருந்தது. அதை சுவனத்தில் கொள்ளாமல், வேன் ஓட்டுநர் உள்ளே நுழைந்ததும், வேனின் கூரை, சுரங்கத்தின் கூரையை உரசியபடி, நின்றுவிட்டது. முன்னாலும் போக முடியவில்லை. பின்னாலும் வண்டியை எடுக்க முடியவில்லை. வேன் ஓட்டுநர் என்ன செய்வது எனத் தெரியாமல் தவித்தபடி இருந்தான். அச்சமயத்தில் அங்கு சென்ற சரவணன், அந்த ஓட்டுநரிடம், அந்த வேனின் நான்கு சக்கரங்களிலும் இருந்த காற்றை பாதியளவுக்கு வெளியேற்றச் சொன்னான். இதனால், வேனின் உயரம், சற்று குறைந்தது. வேனை மெதுவாக ஓட்டியபடி சுரங்கத்தை விட்டு வெளியே வந்தான் அவன். சரவணின் புத்திசாலித்தனமான யோசனை அந்த வேன் ஓட்டுநரைக் காப்பாற்றியது. 

நீதி :

ஒரு திறமைசாலி, சாதாரணமான ஒரு யோசனையைக் கொண்டு. சிக்கலான பிரச்சனையை வென்றிடுவான். 

பேராசை பெரு நட்டம்:

பழமொழி விளக்கம் : 

ஒருவன் அளவுக்கு மீறி ஆசைகள் ஏற்படும்போது தீய வழியில் அடைய முற்படுவார்கள். இதனால் நாம் பெரும் விலைக் கொடுக்க நேரிடும். எனவேதான் இவற்றை பேராசை பெருநட்டம் என்ற பழமொழியின் விளக்கமாகும்.

வாழ்க்கை நிகழ்வு: என் தந்தையார. ஒரு நகை கடை விளம்பரத்தைக் கண்டார். அதில் பத்தாயிரம் முதலீடு செய்தால் மாதாமாதம் அதிக வட்டி தருவதாக போடப்பட்டிருந்தது. அதைப் பார்த்து பணம் போடப் போவதாக கூறினார். அதை கேட்ட என் தாயாரும் என் சகோதாரும் எடுத்துக் கூறியும் கேட்கவில்லை. விடாப்பிடியாக நான் பணம் போட்டே தீருவேன் என்றார். அவர் போக்கிலே வீட்டுவிட்டோம். அன்று மாலையே நகை கடைக்குச் சென்று (₹30,000) முதலீடு செய்தார் சில மாதங்கள் வட்டி பணம் காசோலையாக செக்காக வந்தது. என் தந்தையின் மகிழ்ச்சிக்கு எல்லையே இல்லை. அது மாதங்களுக்குப் பின் வட்டி பணம் வரவில்லை. நேரிடையாகச் சென்று கேட்டபோதுகடையை மூடி விட்டார்கள். பின் பணத்தை ஏமாந்தவர்கள் தொடர்ந்த வழக்கு சில வருடங்களுக்குப் பின் குறிப்பிட்ட பணம் மட்டும் கைக்கு வந்தது. அப்போதுநான் என் தந்தை “பேராசை பெரு நட்டம்"" என்பதை உணர்ந்தார்.

நீதி :

ஆசை அளவுக்கு மீறினால் பெரும் தீமை ஏற்படும். இதனால் பெரும் நட்டம் ஏற்படும். இவற்றை பேராசை பெரு நட்டம்" என்ற பழமொழிக் கூறும் நீதியாகும்.

இளங்கன்று பயம் அறியாது ?

பழமொழி விளக்கம் :

பொதுவாக இளமையில் பயம் இருக்காது.

வாழ்க்கை நிகழ்வு : 

மாரியப்பன் மாடி வீட்டில் குடியிருந்தார். அவரது வீட்டுப் பால்கனியின் கைப்பிடிச்சுவர் உயரம் குறைவாக இருந்தது. அவரது ஐந்து வயது மகள் பால்கனியில் விளையாடிக் கொண்டிருக்கும்போது, அதன் சுவர் மீது ஏறி நின்று விட்டான், தற்செயலாக அதைக் கண்ட மாரியப்பன் ஓடிப்போய் மகனை இழுத்து அணைத்துக் கொண்டார். பின் மகனிடம் ”இதன் மேல் ஏறி நிற்கிறாயே உனக்கு பயமில்லையா? விழுந்துவிட்டால் என்ன செய்வது” என்று கேட்டார். இளங்கன்று பயமறியாது என்பது போல "அதெல்லாம் ஒன்றும் ஆகாதப்பா என்று சொல்லி தனது தந்தையைப் பார்த்து சிரித்தான்.

நீதி:

இளமைத் துடிப்புள்ள இளையோர் தாங்கள் செய்யும் காரியத்தின் நன்மை தீமை அதன் பின் விளைவுகள் பற்றி எண்ணிப் பாராமல் அதில் துணிவுடன் இறங்கிவிடுகிறார்கள். அதற்குக் காரணம் அவர்களுடைய இளமையே என்பது இப்பழமொழி உணர்த்தும் நீதியாகும்.

வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு :

பழமொழி விளக்கம் :-

அறிஞர்க்கெல்லாம் அறிஞராக விளங்கக் கூடியவன் இவ்வுலகில் உண்டு. நான் என்னும் கர்வம் இல்லாமல் வாழ வேண்டும் என்பதே இப்பழமொழியின் விளக்கமாகும். 

வாழ்க்கை நிகழ்வு

பிரபு என்ற இளைஞன் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வருபவன் மிகவும் புத்திசாலியானவன். நன்கு படிக்கக் கூடியவன். அதனால் கல்லூரியில் உள்ள பேராசிரியர்கள் அனைவருக்கும் இவனைப் பிடிக்கும்: பேராசிரியர்கள் பாடம் நடத்துவதற்கு முன்பே எல்லா பாடங்களையும் படித்து முடித்து விடுவான். அவர்கள் கேட்தம்1 அனைத்து வினாக்களுக்கும் தானே முதலில் பதில் கூற வேண்டும் என்பதில் சுவனமாக இருப்பவன். இதனால் அவன் மனதில் தான்தான் மிக சிறந்தவன் என்னும் கர்வம் இருந்து வந்தது.

இரண்டாம் ஆண்டில் புதியதாக வேணு என்பவன் அக்கல்லூரியில் அவன் பிரிவில் வந்து சேர்ந்தான். வேணு பிரபுவைப் போல் இல்லாமல் அமைதியாகப் பேராசிரியர் நடத்தும் பாடங்களைக் கவனித்தான். அந்தாண்டு தேர்வில் பிரபுவை விட வேணு அனைத்துப் பாடங்களிலும் நல்ல மதிப்பெண் பெற்றேன். அது மட்டுமில்லாமல் கல்லூரியில் நடைபெற்ற இலக்கிய விழாவில் பேசி அனைவரையும் தன் பக்கம் ஈர்த்துக் கொண்டான். இதுவரை பிரபுவை மட்டுமே பாராட்டிய பேராசிரியர்கள் இப்பொழுது வேணுவைப் பாராட்ட ஆரம்பித்தனர். இதனைப் பார்த்த அவன் பாடப்பிரிவைச் சேர்ந்த மாணவர்கள் பிரபுவைப் பார்த்து "இதான்டா வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டுன்னு சொல்வாங்க. எப்பவும் தனக்குத்தான் எல்லாம் தெரியும்னு கர்வம் கூடாது” எனக் கைக்கொட்டிச் சிரித்தனர்.

நீதி : 

நான் தான் பெரிய அறிவாளி என்ற கர்வத்துடன் செயல்படக் கூடாது.


Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...