Daily TN Study Materials & Question Papers,Educational News

11th tamil Important 4 marks - Public Exam ( செய்யுள் )

11th tamil Important 4 marks - Public Exam ( செய்யுள் )

1. நூல் ஒன்றின் முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக நன்னூல் எவற்றைக் குறிப்பிடுகிறது?

  • நூலின் இயல்பு, ஆசிரியர் இயல்பு, கற்பிக்கும் முறை, மாணவர் இயல்பு, கற்கும் முறை, நூலாசிரியர்
  • பெயர், நூல் பின்பற்றிய வழி, நூல் வழங்கப்படுகின்ற நிரப்பு, நூலின் பெயர், யாப்பு, நூலில் குறிப்பிடப்படும் கருத்து, நூலைக் கேட்போர், நூலைக் கற்பதனால் பெறுகின்ற பயன் ஆகியன, முகவுரையில் இடம்பெற வேண்டுவனவாக, நன்னூல் குறிப்பிடுகிறது.

2. “சலச வாவியில் செங்கயல் பாயும்” – இடஞ்சுட்டிப் பொருள் விளக்குக.

இடம்

திருமலை முருகன் பள்ளூவில், வடகரை நாட்டின் வளத்தைக் கூறும்போது, பெரியவன் கவிராயரால் கூறப்படுகிறது.

பொருள் :

 நீர் நிறைந்த தாமரைத் தடாகத்தில், செம்மையான கயல்மீன்கள் துள்ளிப்பாய்ந்து, விளையாடும் என்பது பொருளாகும்.

விளக்கம்

வடகரை நாடு நீர் நில வளம் மிக்கது. அங்குத் தாமரை நிறைந்த குளத்தில், கயல் மீன்கள் அக்கமின்றித் துள்ளிப் பாய்ந்து விளையாடும்; மீனைப் பிடித்துண்ண வந்து சங்கிலியில் அமர்ந்துள்ள உள்ளான் பறவை, வண்டுகளின் இசையில் மயங்கி, வாலை ஆட்டியபடி அமர்ந்திருக்கும் என்று கூறப்பட்டுள்ளது. இதில் வடகரை நாட்டின் நீர், நிலவளம் தெளிவாக விளக்கப்பட்டுள்ளது.

3. தமிழ்ப் பண்பாட்டின் அடையாளம் காவடிச்சிந்து என்பதை விளக்குக.

  • காவடி’ என்பது, தமிழக பண்பாட்டுக் கூறுகளுள் ஒன்று.பண்டைய காலம் முதல் நாட்டார் வழக்கிலுள்ள இசைமரபே காவடி சிந்து . 
  •  உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழும் தமிழ்மக்கள், குலவதோறும் வீற்றிருக்கும் முருகனின் கோவிலை நோக்கி வழிபடச் செல்வர்.
  • அப்போது முருகப்பெருமானின் வழிபாட்டிற்காகப் பால் முதலான வழிபாட்டுப் பொருள்களைக் காவடிகளில் கொண்டு செல்வர். அப்படிச் செல்லும்போது வழிநடைக் களைப்புப் போக, முருகப் பெருமானின் புகழைச் சிந்துவகைப் பாடலாகப் பாடுவர்.

4. சிங்கி பெற்ற பரிசுப் பொருட்களாகக் குற்றாலக் குறவஞ்சி கூறுவன யாவை?

  • சேலத்து நாட்டில் பெற்ற சிலம்பு;
  • கோலத்து நாட்டாரிடம் பெற்ற முறுக்கிட்ட தண்டை;
  • பாண்டியனார் மகள் கொடுத்த பாடகம்;
  • குற்றாலர் சந்நிதிப் பெண்கள் கொடுத்த அணிமணிக் கெச்சம்;
  • கண்டி தேசத்தில் பெற்ற காலாழி.

5. தமிழகப் பெண்கள் பாடிக்கொண்டே விளையாடும்போது, வெளிப்படுத்தும் மேன்மையான கருத்துகளாகத் திருச்சாழல் உணர்த்துவன யாவை?

  • சாழல்’ என்பது, பெண்கள் விளையாட்டு. 
  • இந்த விளையாட்டின்போது ஒருத்தி வினாக் கேட்க, மற்றொருத்தி விடை கூறுவதாக அமையும். இறைவன் செயலைப் பழிப்பதுபோல் அந்த வினா இருக்கும். இறைவன் செயலை நியாயப்படுத்துவதுபோல் அந்த விடை இருக்கும்.

எ – கா : “சுடுகாட்டைக் கோவிலாகவும், புலித்தோலை ஆடையாகவும் கொண்ட உங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லை. இத்தன்மையனோ உங்கள் கடவுள்?” என்பது பழிப்பது  வினா!

“எங்கள் தலைவனுக்குத் தாய் தந்தை இல்லாவிடினும், அவன் சினத்தால் உலகம் அனைத்தும் கல்பொடியாகி விடும்” என்பது, செயலை நியாயப்படுத்தும் விடை.

6. “உயர் தமிழை உயிரென்று போற்றுமின்கள்” – இடம் சுட்டிப் பொருள் விளக்கம் தருக..

இடம் :

 பாரதிதாசனால் இயற்றப்பட்ட புரட்சிக்கவி பாடல்.

பொருள்

உயர்ந்த தமிழை உங்களின் உயிராகப் போற்றுங்கள்.

விளக்கம்

கொலைத்தண்டனை விதிக்கப்பட்டுக் கொலைக்களத்தில் நிறுத்தப்பட்ட உதாரன், அங்குக் கூடியிருந்தோரிடம், சில சொற்கள் பேசினான். “யானறிந்த தமிழே என் மரணத்துக்குக் காரணம் என மக்கள் தமிழை இகழ்வார்களோ! மக்களே, மாசு இல்லாத உயர்ந்த தமிழை உயிராகப் போற்றுங்கள்” என்று வேண்டினான்.

7. வாய்க்காலின் சிறப்புகளாகக் குறிப்பிடப்படுவன யாவை?

  • சிறு வாய்க்கால், நமக்கு உணவு நல்கும் வயலுக்கு உபயோகப்படுகிறது; 
  • அலை கடலை மலையாகவும்,
  •  மலையை அலைகடலாகவும் மாற்றிட நடக்கிறது; 
  • கூழாங்கற்களை நெறுநெறு என உராய்ந்து நுண் துகளாக்கிச் சிறு மணலாக்குகிறது. மேலும், தன் வலிமைக்குள் அடங்கிய புல், புழு அனைத்தையும் கொண்டுவந்து, காலத்தச்சன் கடலில் கட்டும் மலைக்கு வழங்குகிறது.
  • மலையில் பொழிந்த மழையான பின், அருவியாய் இறங்கி,
  •  குகைமுகம் புகுந்து, பூமியின் வெடிப்புகளில் நுழைந்து, 
  • பொங்கி எழுந்து, சுனையாய்க் கிடந்து, 
  • ஊற்றாய்ப் பரந்து ஆறாக நடந்து, மடுவாகக் கிடந்து, மதகுகளைச் சாடி, 
  • வாய்க்கால் வழி ஓடித் தான் பட்ட களைக் கூறி, மேலும் இயன்றதைக் கொண்டுவருவதாக உறுதி கூறுகிறது.
  • நீக்கம் இல்லா அன்பும், ஊக்கமும் உறுதியும் கொண்டு அனுதினமும் அழைக்கிறது என்று, வாய்க்காலின் சிறப்புகள் குறிப்பிடப்பட்டுள்ளன.


Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support