Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label 10th Tamil பகுபத உறுப்பிலக்கணம். Show all posts
Showing posts with label 10th Tamil பகுபத உறுப்பிலக்கணம். Show all posts

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக - 10th tamil

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக, 

குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் – மொ ̄நடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர், --------------

பள்ளி ஆண்டு விழா மலருக்காக. நான் நூலகத்தில் படித்த ஒரு கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுதல்,

நூலின் தலைப்பு:- 

  • மு,மேத்தா எழுதிய கண்ணீர்ப் பூக்கள் (கவிதை நூல்)

நூலின் மையப்பொருள் :

இன்றைய சூழலில் ம2த2ன் ஏக்கங்களும் மனதில் ஏற்படும் தாக்கங்களும்

நூலின் மையப்பொருளாக அமைந்துள்ளன,

மொழிநடை :

இலக்கண விதிமுறைகள் அதிகம் இல்லாமல் இலக்கிய பாங்குடன் பாமரரும்

எளிதாக படித்துப் பொருள் உணரும் நடையில் எளிமையாக இந்நூல் அமைந்துள்ளது,

வெளிப்படுத்தும் கருத்து :

இக்கவிதை நூல் வாழ்வியல் எதார்த்தங்களை அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது, இந்த உலகம் போட்டி  ̈றைந்த உலகம்; பூசல்களைக் குறைத்தால் பூவுலகு பிறக்கும், ஆசைகளைத் துறந்தால்; ஆனந்தம் பிறக்கும், இறைவன் படைப்பில் அனைவரையும். சமமாக நடத்தப்பட வேண்டும், பெண்மையைப் போற்றும் இந்நாட்டில். பெண்ணை இ ̄வுபடுத்துகின்றோம், நாம் யாரிடமும் அன்பு செலுத்தாமல். 

நம்மிடம் அன்பு செலுத்த யாரும் இல்லையே என வருந்தக்கூடாது, 

மரங்களை வெட்டக்கூடாது; வளர்க்க வேண்டும்,

மனிதநேயம் வளர்க்க வேண்டும் . 

என்பது போன்ற பல கருத்துகள் இக்கவிதை நூலில் இடம் பெற்றுள்ளன,

நூலின் நயம் :

எதுகை. மோனை. இயைபு. முரண் ஆகிய தொடைநயங்கள் இக்கவிதை

நூலில் அதிகமாக இடம் பெற்றுள்ளன, அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு பாடல் கீழ்வருமாறு:-

“பங்களா தேசத்துப் பாதையில்  ̈ன்றொரு

பாடகன் பாடுகின்றேன், வீர

பாரத பூஹயின் பாரதி ர்மையின்

பாடகன் பாடுகிறேன்!”, 

நூல் கட்டமைப்பு:- 

இந்நூல் 28 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும், இதில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும். ஒவ்வொரு கருத்தையும்; வாழ்வியல் எதார்த்தங்களையும் எடுத்தியம்புகிறது, 28 கவிதைகளில் ஒன்று கவிதைப்பூக்கள் என்னும் கவிதை,

இக்கவிதையையே புத்தகத்தின் தலைப்பாக அமைத்துள்ளார் ஆசிரியர், சில கவிதைகள் சிறியதாகவும். சில கவிதைகள் பெரியதாகவும் இந்நூலில் இடம் பிடித்துள்ளன,

சிறப்புக்கூறு :-

இக்கவிதை தொகுப்பு முப்பதாவது பதிப்பாகும், ஒரு புத்தகம் முப்பது முறை அச்சேறி பதிப்பு பெற்று வெளிவந்திருக்கிறது என்றால் அதைவிட சிறப்புக்கூறு வேறு என்ன வேண்டும்! அந்த அளவிற்கு இந்நூல் சிறப்பாக உள்ளது, பல்வேறு அழகான கருத்துகள் எளிய நடையில் அமைந்துள்ள நூல் இதுவாகும்,

நூல் ஆசிரியர் :

  • கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலின் ஆசிரியர் மு,மேத்தா ஆவார்,

Share:

உழவுத் தொழில் கட்டுரை - 10th Tamil

உழவுத் தொழிலின் பெருமை கட்டுரை

குறிப்பு சட்டகம்

முன்னுரை

உழவு இல்லையேல் உணவு இல்லை

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள்

விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

முடிவுரை

முன்னுரை

“உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றெல்லாம் தொழுதுண்டு பின்செல்பவர்” என்கிறார் திருவள்ளுவர்.

ஒவ்வொருவரும் ஒவ்வொரு கைப்பிடி உணவை உண்ணுவதற்கு அதில் ஒவ்வொரு விவசாயிகளினுடைய உழைப்பு தங்கியிருக்கும். ஆதலால் தான் உலகத்தில் பல தொழில்கள் இருந்தாலும் உழவுத் தொழில் தலைசிறந்த தொழிலாக காணப்படுகிறது.

இது வரைக்கும் விளம்பரத்தில் ஈடுபடாத ஒரே தொழில் விவசாயம் தான் ஏனென்றால் விவசாயம் தொழில் அல்ல எமது உயிர்நாடி. உலகத்தின் ஒவ்வொரு உயிர்களுக்கும் பசி என்ற உணர்வு இருக்கும் வரை விவசாயம் அழியாது.

இக்கட்டுரையில் விவசாயத்தின் முக்கியத்துவம், விவசாயத்தில் இன்று காணப்படும் பிரச்சனைகள், விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் போன்றன நோக்கப்படுகின்றன.

உழவு இல்லையேல் உணவு இல்லை

இங்கே யாரும் உழவில்லை யாரும் விதைக்கவில்லை யாரும் வியர்வை சிந்தி நெல்மணிகளை விதைவிக்கவில்லை என்றால் நாம் உணவிற்கு எங்கே போவது? சற்று சிந்தியுங்கள்.

“விவசாயி சேற்றில் கால்வைத்தால் தான் நாம் இங்கே சோற்றில் கை வைக்க முடியும்”

விவசாயம் ஒன்றும் அத்தனை இலகுவான தொழில் கிடையாது. கஷ்ரப்பட்டு நிலத்தை உழுது பண்படுத்தி வியர்வை சிந்தி பயிரிட்டு அதனை நீர் பாய்ச்சி பாதுகாத்து பசளையிட்டு நோய்களில் இருந்து காப்பாற்றி வெய்யிலில் காய்ந்து மழையில் நனைந்து விலங்குகள் பறவைகளில் இருந்து பயிரை காக்க காவல் இருந்து அறுவடை செய்யும் வரை விவசாயி பாடுபட்டு உழைத்தால் தான் விளைச்சலை பெற முடிகிறது.

இந்த கஷ்ரங்களை பொருட்படுத்தாது மீண்டும் மீண்டும் அவர்கள் உழைத்து கொண்டிருப்பதால் தான் இவ்வுலகமே இயங்கி கொண்டிருக்கிறது என்றால் ஆச்சரியப்படுவதற்கில்லை.


இதனையே திருவள்ளுவர் “சுழன்றும் ஏர்ப்பின்னது உலகம் அதனால் உழன்றும் உழவே தலை” என்கிறார்.

விவசாயத்தின் முக்கியத்துவம்

விவசாயம் என்பது ஒரு நாட்டினுடைய முதுகெலும்பு என்று கூறுவார்கள். ஒரு நாடு பொருளாதாரத்தில் தன்னிறைவு காணவேண்டுமாயின் அங்குள்ள மக்களுக்கு போதிய உணவு கிடைக்க வேண்டும்.

அப்போது தான் அந்த தேசம் உத்வேகத்துடன் இயங்க முடியும். பஞ்சம், பசி, பட்டினி என்பன இல்லாத தேசம் ஒன்று உருவாக வேண்டும் என்றால் அந்நாடு விவசாயத்தில் உச்சநிலை பெற வேண்டும். இல்லாவிடில் அந்த நாடு வளர்ச்சி பெறுவதென்பது இயலாத காரியமாகும்.

உலகத்தின் வளர்ச்சி அடைகின்ற, அடைந்த எல்லா தேசங்களும் விவசாயத்திற்கு அதிக முக்கியத்துவம் கொடுத்ததால் தான் அவை தன்னிறைவடைந்து காணப்படுகின்றன.

விவசாயத்தில் காணப்படும் பிரச்சனைகள்

முன்பு குறிப்பிட்டதனை போல தலைசிறந்த நாடுகள் தமது நாட்டின் விவசாயிகளை ஊக்குவிக்கின்றது. அவர்களது உற்பத்திகளை தாமே கொள்வனவு செய்கிறது. விவசாய உற்பத்திகளை முடிவு பொருட்களாக தனது தொழில்நுட்பங்கள் மூலமாக உற்பத்தி செய்து தனது உள்நாட்டு நுகர்வுக்கு பயன்படுத்தி எஞ்சியவற்றை சர்வதேசத்துக்கும் ஏற்றுமதி செய்கின்றது.

ஆனால் நம்முடைய வளர்முக நாடுகள் அவ்வாறில்லை முதலாளிகளின் கையிலே விவசாயம் உள்ளது. அதிகளவான நிலமும் வசதி படைத்தவர்களிடமே உள்ளது. சாதாரண ஏழை விவசாயிகள் கடன் பட்டு தான் விவசாயம் செய்ய வேண்டிய நிலையானது இருக்கின்றது.

இயற்கை காரணிகளால் பயிர் சேதமடைந்தால் அவற்றுக்கான நஷ்ட ஈடுகளும் கிடைப்பது இல்லை

உற்பத்தி செய்யும் விவசாய பொருட்களுக்கு தனியார் தரகர்களே விலை நிர்ணயம் செய்கிறார்கள். குறைவான விலைக்கு கொள்வனவு செய்து மக்களுக்கு அதிக விலைக்கு விற்பனை செய்து முதலாளிகள் அதிக இலாபம் ஈட்ட விவசாயிகளும் சாதாரண மக்களும் மோசமாக பாதிக்கப்படுகின்றனர்.

இந்தியாவில் விவசாயிகள் பல வருடங்களாக விவசாயம் செய்ய முடியாது கடன் சுமையால் தற்கொலை செய்வது மனதை உடைக்கும் துயர நிகழ்வுகளாகும். இவ்வாறு பல பிரச்சனைகள் இன்றைய விவசாயத்தில் காணப்படுகின்றன.

விவசாயத்தை பாதுகாக்க எடுக்க வேண்டிய நடவடிக்கைகள்

விவசாயம் செய்பவர்கள் இன்று குறைந்த வண்ணமே இருக்கிறது. மீண்டும் மீண்டும் எத்துயர் வரினும் தம் உடலை வருத்தி எமக்காக போராடும் விவசாயிகளை பாதுகாக்க அரசாங்கம் முழுமனதாக திட்டங்களை வகுக்கவேண்டும்.


விவசாயத்தில் ஊழல் செய்வோரை சிறையில் அடைக்கவேண்டும். விவசாய உற்பத்திகளை அரசாங்கமே கொள்வனவு செய்ய வேண்டும். விவசாய உற்பத்திகளிற்கு மிகச் சரியான கொள்வனவு விலை, விற்பனை விலைகளை நிர்ணயிக்க வேண்டும்.

விவசாயத்திற்கு வேண்டிய உள்ளீட்டு வசதிகள் தொழில்நுட்பங்கள் என்பவற்றை மேம்படுத்தல். விவசாயிகளுக்குரிய காப்புறுதி ஆதரவுகளையும் உரிய மரியாதையையும் கிடைக்க செய்தல்.

இவை போன்ற நடவடிக்கைகளால் விவசாயத்தை பாதுகாக்க முடியும்.

முடிவுரை

உணவு உற்பத்தி எனும் விடயம் உலகத்தில் எத்தனை தொழில்நுட்பங்கள் உருவானாலும் அதற்குரிய மதிப்பு என்றும் குறையாது.

சனத்தொகை பெருக்கம் பெருக்கல் விருத்தியில் பெருகி வருவதால் உணவு உற்பத்தி அதற்கேற்ப இல்லாவிடின் உலகமே பாரிய பிரச்சனைகளில் சிக்கி விடும்.

விவசாயிகள் அனுபவிக்கும் துன்பங்களை கண்டுகொள்ளாது அவர்களுக்காய் குரல் கொடுக்காமல் விட்டால் இங்குள்ள அனைவரும் உணவின்றி இறக்க நேரிடும். அனைவரும் உயிர் வாழ வேண்டுமென்றால் உழவுத்தொழிலை காக்க அனைவரும் முன்வரவேண்டும்.

Share:

10th Tamil பகுபத உறுப்பிலக்கணம் அனைத்தும் பகுபதம் அறிதல் - Pagupatha - Urupilakanam

10th Tamil  பகுபத உறுப்பிலக்கணம் அனைத்தும்
பகுபதம் அறிதல்
  • பகுபத உறுப்புகள் எத்தனை?
பகுபத உறுப்புகள் ஆறு .
அவை:
  • பகுதி,விகுதி,சந்தி,சாரியை,விகாரம்,இடைநிலை

 இயல்  - 1


1. வளர்ப்பாய் -  வளர் + ப் + ப் +ஆய்

    வளர் -  பகுதி

    ப் -  சந்தி

    ப் - எதிர்கால இடைநிலை

    ஆய் -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி


2 . கொள்வார்  - கொள் + வ் + ஆர்

    கொள் - பகுதி

    வ் -  எதிர்கால இடைநிலை

    ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி


3.  உணர்ந்த - உணர் +த் ( ந் ) + த் + அ

    உணர் - பகுதி

   த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம் 

   த் -  இறந்தகால இடைநிலை

   அ -  பெயரெச்ச விகுதி


4. வந்தனன் - வா (வ) + த் ( ந் )+ த் + ஆன் + அன்

   வா - பகுதி  ' வ ' ஆனது விகாரம்

   த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம் 

   த் -  இறந்தகால இடைநிலை

  அன் -  சாரியை

  அன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி


5. செய்யாதே - செய் + ய் + ஆ + த் + ஏ

    செய் - பகுதி

   ய் - சந்தி

  ஆ -  எதிர்மறை இடைநிலை

  த் -  எழுத்துப்பேறு

  ஏ -  முன்னிலை ஒருமை ஏவல் வினைமுற்று விகுதி



---------------------------------------------------------------------------

இயல்  -2


10 th Students  :


6.விரித்த - விரி + த் + த் + அ

  விரி - பகுதி

  த்  - சந்த

  த் -  இறந்தகால இடைநிலை

 அ -  பெயரெச்ச விகுதி


7.  குமைந்தனை  -   குமை +த்(ந் )+ த் + அன்

    குமை - பகுதி

   த் - சந்தி ' ந் ' ஆனது விகாரம்

   த் -  இறந்தகால இடைநிலை , அன் - சாரியை

   ஐ -  முன்னிலை ஒருமை வினைமுற்று விகுதி

8.  பாய்வன - பாய் + வ் +அன் +அ

    பாய் - பகுதி

   வ் -  எதிர்கால இடைநிலை

   அன் -  சாரியை

   அ -  பலவின்பால் வினைமுற்று விகுதி


9.  நிறுத்தல் -  நிறு +த் + தல்

    நிறு - பகுதி

    த் - சந்தி

   தல் - தொழிற்பெயர் விகுதி


10. கொடுத்தோர் -  கொடு + த் + த் + ஓர்

     கொடு - பகுதி

     த் - சந்தி

     த் -  இறந்தகால இடைநிலை

     ஓர் -   பலர்பால் வினைமுற்று விகுதி



------------------___________________________________________-------

இயல் - 3


11. பரப்புமின் - பரப்பு + மின்

      பரப்பு - பகுதி

     மின் -  முன்னிலை பன்மை வினைமுற்று விகுதி


12. அறைந்தனன் - அறை + த் ( ந் )+ த் + அன் + அன்

      அறை - பகுதி

      த் - சந்தி - ' ந் ' ஆனது விகாரம்

      த் -  இறந்தகால இடைநிலை

     அன் - சாரியை

     அன் -  ஆண்பால் வினைமுற்று விகுதி



______________________________________________________________

    இயல்  - 4 - பகுபத உறுப்பிலக்கணம்


13. பொருத்துங்கள் - பொருத்து + உம் + கள்

     பொருத்து - பகுதி

    உம் - முன்னிலை பன்மை விகுதி

    கள் -  விகுதி மேல் விகுதி


14 . நெறிப்படுத்தினர் -  நெறிப்படுத்து + இன் + அர்

      நெறிப்படுத்து - பகுதி

     இன் -  இறந்தகால இடைநிலை

    அவர்-  பலர்பால் வினைமுற்று விகுதி



__________________________-----___________________________________

இயல்  -5


15. விளைவது - விளை + வ் + அ + து

     விளை - பகுதி

     வ் -  எதிர்கால இடைநிலை

    அ -  சாரியை

    து -  தொழிற்பெயர் விகுதி


16. சமைக்கின்றார் -  சமை + க் + கின்று + ஆர்

      சமை - பகுதி

      க் -  சந்தி

     கின்று -  நிகழ்கால இடைநிலை

     ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி


17 .உரையாமை -  உரை+ ய் + ஆ + மை

     உரை - பகுதி

     ய் - சிந்தி ( உடம்படுமெய் )

    ஆ -  எதிர்கால இடைநிலை

    மை -  தொழிற்பெயர் விகுதி


18.  காய்க்கும் - காய் + க் + க் + உம்

      காய் - பகுதி

     க் -  சந்தி

     க் - எதிர்கால இடைநிலை

    உம் - பெயரெச்ச விகுதி




______________-----------_______________________________________________

   இயல்  - 6


19.பருகிய - பருகு +இன் + ய் + அ

     பருகு - பகுதி

    இன் -- இறந்தகால இடைநிலை -  'ன் '  கெட்டது விகாரம்

    அ -  பெயரெச்ச பகுதி


20 . பூக்கும் - பூ + க் + க் + உம்

       பூ - பகுதி

      க் -  சந்தி

      க் -  எதிர்கால இடைநிலை

      உம் -  வினைமுற்று விகுதி


21. தொட்டு - தொடு( தொட்டு ) +  உ

       தொடு - பகுதி,  ' தொட்டு ' என இரட்டித்து  இறந்தகாலம் காட்டியது -                                                             விகாரம்

       உ -  வினையெச்ச விகுதி


22 . கண்டேன் -  காண் + (கண் ) + ட் + ஏன்

       காண் - பகுதி ,  ' கண் ' எனக் குறுகியது விகாரம்

       ட் -  இறந்தகால இடைநிலை

      ஏன் -  தன்மை ஒருமை வினைமுற்று விகுதி


____________________________________________________________

    இயல் - 7

23 .இறைஞ்சி -  இறைஞ்சு + இ

     இறைஞ்சு -  பகுதி

     இ -  வினையெச்ச விகுதி


24 . ஓம்புவார் - ஓம்பு + வ் + ஆர்

       ஓம்பு - பகுதி

      வ் -  எதிர்கால இடைநிலை

     ஆர் -  பலர்பால் வினைமுற்று விகுதி


25 . கொண்ட - கொள் (ண்) + ட் +அ

       கொள் - பகுதி ' ண் ' ஆனது  விகாரம்

       ட் -  இறந்தகால இடைநிலை

      அ -  பெயரெச்ச விகுதி


26 . ஆழ்ந்த -  ஆழ் + த் ( ந் ) + த் + அ

      ஆழ் - பகுதி

      த் - சந்தி ' ந் ' ஆனது  விகாரம்

      த் -  இறந்தகால இடைநிலை

     அ -  பெயரெச்ச விகுதி


27 .ஓங்கிய -  ஓங்கு +இ (ன் )+ ய் + அ

      ஓங்கு - பகுதி

      இ (ன் ) -  இறந்தகால இடைநிலை

      ய் -  உடம்படுமெய்

     அ -  பெயரெச்ச விகுதி


28 . மகிழ்ந்தோர் - மகிழ் +த்(ந்) +த் +ஓர்

        மகிழ் - பகுதி

       த் -  சந்தி ' ந் ' ஆனது  விகாரம்

       த் -  இறந்தகால இடைநிலை

      ஓர் -  பலர்பால் வினைமுற்று விகுதி



_____________________________________________________________________

   இயல் - 8

29. வேண்டி - வேண்டு + இ

      வேண்டு - பகுதி

      இ -  வினையெச்ச விகுதி


30 . போகிறது - போ + கிறு + அ + து

       போ - பகுதி

      கிறு -  நிகழ்கால இடைநிலை

      அ -  சாரியை

      து -  ஒன்றன்பால் வினைமுற்று விகுதி


31 . மலர்ச்சி - மலர் + ச் + சி

       மலர் - பகுதி

      ச் -  பெயர் இடைநிலை

     சி -  தொழிற்பெயர் விகுதி


32 . இணைகின்றன - இணை + கின்று + அன் + அ

       இணை - பகுதி

      கின்று - நிகழ்கால இடைநிலை

      அன் -  சாரியை

      அ -  பலவின்பால் வினைமுற்று விகுதி


33 . போக்குக - போக்கு + க

       போக்கு -  பகுதி

       க -  வியங்கோள் வினைமுற்று விகுதி



____________________________________________________________


    இயல்  - 9


34 . சரிந்து - சரி + த் ( ந் ) + த் + உ

       சரி - பகுதி

      த் -  சந்தி ' ந் ' ஆனது  விகாரம்

      த் - இறந்தகால இடைநிலை

       உ -   வினையெச்ச விகுதி


35 . உடையார் - உடை + ய் + அர்

      உடை - பகுதி

      ய் -  சந்தி (  உடம்படுமெய் )

      அர் -  பலர்பால் வினைமுற்று விகுதி

 

36 . பொளிக்கும் - பொளி + க் +க் +உம்

       பொளி -  பகுதி

       க் -  சந்தி

       க் -  எதிர்கால இடைநிலை

       உம் -  வினைமுற்று விகுதி

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories