Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label 10th தமிழ் கட்டுரைகள். Show all posts
Showing posts with label 10th தமிழ் கட்டுரைகள். Show all posts

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.10th tamil katturai

கட்டுரை எழுதுக : - உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச்சென்று வந்த  ̈நிகழ்வைக் கட்டுரையாக்குக, --------------

உங்கள் பகுதியில் நடைபெற்ற அரசுப் பொருட்காட்சிக்குச் சென்று வந்த நிகழ்வைக் கட்டுரையாக்குக.

விடை:

முன்னுரை:

எங்கள் பகுதியான மதுரையில் அரசுப்பொருட்காட்சி ஆண்டு தோறும் ஏப்ரல் மாதம் சித்திரை திருவிழாவை ஒட்டித் தமுக்கம் மைதானத்தில் தமிழ்நாடு அரசு செய்தி விளம்பரத் துறைப் பிரிவு சார்பில் நடைபெற்றது. அரசுப் பொருட்காட்சிப்பற்றி இக்கட்டுரையில் காண்போம்.

பொருட்காட்சியின் சிறப்பம்சங்கள்: 


உலகில் கண்டு வியக்கத்தக்க பொருட்கள் நாள் தோறும் தோன்றிக் கொண்டே இருக்கின்றன. அவ்வாறு தோன்றும் புதிய பொருட்களைக் காணவும், வாங்கவும் வேண்டுமென்று மக்கள் விரும்புகின்றனர். பல்வேறு இடங்களில் தயாரிக்கப்படுகின்ற பல்வேறு பொருட்களையும் ஓர் இடத்தில் மக்கள் எளிதில் வந்து பார்க்கத் தகுந்த வகையில் கவர்ச்சிகரமான முறையில் வணிக நிறுவனங்கள் அரங்குகள் அமைத்து மக்கள் காணுமாறு செய்திருந்தனர்.

அரங்குகள் அமைப்பு:


இந்தப் பொருட்காட்சியில் 26 மாநில அரசுத்துறை நிறுவனங்கள், 12 தமிழக அரசுத்துறை நிறுவனங்கள், 3 மத்திய அரசு நிறுவனங்கள் என மொத்தம் 42 அரசு அரங்குகள் அரசின் சாதனை நலத்திட்டத்தை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் அமைந்திருந்தன. மேலும் 115 கடைகளும், 25 விற்பனை அரங்குகளும் தனியார் மூலம் அமைக்கப்பட்டிருந்தன. மதுரை திருமலை நாயக்கர் மஹால் வடிவமைப்பு பொருட்காட்சியின் முகப்பாக அமைக்கப்பட்டிருந்தது. நகர்ப்புற மக்கள், கிராமச் சூழ்நிலையை உணர்ந்து அனுபவிக்கும் வகையில் சிற்றூர் சுற்றுலா எனப்படும் சிறப்பு அரங்கு 25 ஆயிரம் சதுர அடியில் உருவாக்கப்பட்டிருந்தது.

கலைநிகழ்ச்சிகள்:


ஒவ்வொரு நாளும் கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. நாங்கள் சென்றிருந்தபோது ஒரிசா, குஜராத், சிக்கிம், மிசோரம், ராஜஸ்தான், இமாச்சலப் பிரதேசம், அஸ்ஸாம், ஜார்கண்ட், மணிப்பூர், அருணாச்சலப் பிரதேசம் மற்றும் நாகாலாந்து மாநில கலைஞர்களின் கலைநிகழ்ச்சிகள் அம்மாநில மக்களின் கலாச்சாரத்தைப் பறைசாற்றும் வகையில் இருந்தது. இது இந்த ஆண்டுதான் ஏற்பாடு செய்யப்பட்டிருந்ததாகக் கூறினார்கள்.

விளையாட்டு அரங்குகள்: 


இராட்சச ராட்டினம், குவளை இராட்டினம், மின்சாரத் தொடர்வண்டி, மரணக் கிணறு, மேஜிக்,குதித்து விளையாடும் மெத்தை எனப் பல்வேறு அரங்குகள் இருந்தன. அந்த அரங்குகளுக்குத் தனித்தனியே கட்டணம் வசூலிக்கப்பட்டது. நுழைவுக் கட்டணம்: பொருட்காட்சி நடைபெறும் இடத்தின் உள்ளே செல்ல நுழைவுக் கட்டணம் வசூலிக்கப்பட்டது. பொருட்காட்சி அலுவலக நாட்களில் மாலை 3 மணி முதல் இரவு 10 மணி வரையிலும், விடுமுறை நாட்களில் காலை 11 மணிமுதல் இரவு 10 மணி வரையிலும் நடைபெற்றது. நாங்கள் சென்றபோது இதுவரை ஐந்து இலட்சம் பேர் வருகை புரிந்நதாகக் கூறினார்கள்.

முடிவுரை: 

பொருட்காட்சிக்கு வருகை புரிந்தது மூலம் நாங்கள் இதுவரை அறிந்திராத அரசுத் திட்டங்கள் பற்றிய தகவல்களை அறிந்துகொள்ள முடிந்தது. பொழுது போக்கிற்காக நாங்கள் சென்று வந்த நிகழ்வுமிகவும் பயனுள்ளதாகவும் அறிவார்ந்த சிந்தனையை தூண்டுவதாகவும் அமைந்தது.

Share:

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக - 10th tamil

மதிப்புரை – பள்ளி ஆண்டுவிழா மலருக்காக. நீங்கள் நூலகத்தில் படித்த கதை/கட்டுரை/ சிறுகதை / கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுக, 

குறிப்பு - நூலின் தலைப்பு - நூலின் மையப் பொருள் – மொ ̄நடை – வெளிப்படுத்தும் கருத்து – நூலின் நயம் – நூல் கட்டமைப்பு - சிறப்புக்கூறு – நூல் ஆசிரியர், --------------

பள்ளி ஆண்டு விழா மலருக்காக. நான் நூலகத்தில் படித்த ஒரு கவிதை நூலுக்கான மதிப்புரை எழுதுதல்,

நூலின் தலைப்பு:- 

  • மு,மேத்தா எழுதிய கண்ணீர்ப் பூக்கள் (கவிதை நூல்)

நூலின் மையப்பொருள் :

இன்றைய சூழலில் ம2த2ன் ஏக்கங்களும் மனதில் ஏற்படும் தாக்கங்களும்

நூலின் மையப்பொருளாக அமைந்துள்ளன,

மொழிநடை :

இலக்கண விதிமுறைகள் அதிகம் இல்லாமல் இலக்கிய பாங்குடன் பாமரரும்

எளிதாக படித்துப் பொருள் உணரும் நடையில் எளிமையாக இந்நூல் அமைந்துள்ளது,

வெளிப்படுத்தும் கருத்து :

இக்கவிதை நூல் வாழ்வியல் எதார்த்தங்களை அப்படியே படம்பிடித்து காட்டுகின்றது, இந்த உலகம் போட்டி  ̈றைந்த உலகம்; பூசல்களைக் குறைத்தால் பூவுலகு பிறக்கும், ஆசைகளைத் துறந்தால்; ஆனந்தம் பிறக்கும், இறைவன் படைப்பில் அனைவரையும். சமமாக நடத்தப்பட வேண்டும், பெண்மையைப் போற்றும் இந்நாட்டில். பெண்ணை இ ̄வுபடுத்துகின்றோம், நாம் யாரிடமும் அன்பு செலுத்தாமல். 

நம்மிடம் அன்பு செலுத்த யாரும் இல்லையே என வருந்தக்கூடாது, 

மரங்களை வெட்டக்கூடாது; வளர்க்க வேண்டும்,

மனிதநேயம் வளர்க்க வேண்டும் . 

என்பது போன்ற பல கருத்துகள் இக்கவிதை நூலில் இடம் பெற்றுள்ளன,

நூலின் நயம் :

எதுகை. மோனை. இயைபு. முரண் ஆகிய தொடைநயங்கள் இக்கவிதை

நூலில் அதிகமாக இடம் பெற்றுள்ளன, அதற்கு எடுத்துக்காட்டாக உள்ள ஒரு பாடல் கீழ்வருமாறு:-

“பங்களா தேசத்துப் பாதையில்  ̈ன்றொரு

பாடகன் பாடுகின்றேன், வீர

பாரத பூஹயின் பாரதி ர்மையின்

பாடகன் பாடுகிறேன்!”, 

நூல் கட்டமைப்பு:- 

இந்நூல் 28 கவிதைகளை உள்ளடக்கிய தொகுப்பாகும், இதில் உள்ள ஒவ்வொரு கவிதைகளும். ஒவ்வொரு கருத்தையும்; வாழ்வியல் எதார்த்தங்களையும் எடுத்தியம்புகிறது, 28 கவிதைகளில் ஒன்று கவிதைப்பூக்கள் என்னும் கவிதை,

இக்கவிதையையே புத்தகத்தின் தலைப்பாக அமைத்துள்ளார் ஆசிரியர், சில கவிதைகள் சிறியதாகவும். சில கவிதைகள் பெரியதாகவும் இந்நூலில் இடம் பிடித்துள்ளன,

சிறப்புக்கூறு :-

இக்கவிதை தொகுப்பு முப்பதாவது பதிப்பாகும், ஒரு புத்தகம் முப்பது முறை அச்சேறி பதிப்பு பெற்று வெளிவந்திருக்கிறது என்றால் அதைவிட சிறப்புக்கூறு வேறு என்ன வேண்டும்! அந்த அளவிற்கு இந்நூல் சிறப்பாக உள்ளது, பல்வேறு அழகான கருத்துகள் எளிய நடையில் அமைந்துள்ள நூல் இதுவாகும்,

நூல் ஆசிரியர் :

  • கண்ணீர்ப் பூக்கள் கவிதை நூலின் ஆசிரியர் மு,மேத்தா ஆவார்,

Share:

தேசியப் பறவை மயில் - கட்டுரை

தேசியப் பறவை மயில் - கட்டுரை 

மதிப்பீட்டுச் செயல்பாடு

கீழ்க்காணும் குறிப்புச் சட்டகத்தைப் பயன்படுத்தித் தேசியப் பறவை மயில் பற்றி ஒரு பக்க அளவில் ஒரு கட்டுரை எழுதுக.

குறிப்புச் சட்டகம்

முன்னுரை

பொருளுரை

அழகு மயில்

மயிலின் உணவும் உறைவிடமும்

மயிலின் சிறப்பு

முடிவுரை

தேசியப் பறவை மயில்

முன்னுரை

“வானில் மிதக்கும் கருமுகிலின்
            வனப்பில் மயங்கி மகிழ்வுடனே                         
            கானில் நின்று நீயாடும்
            காட்சி கண்டு வியந்தேனே” என்று வண்ணத் தோகை விரித்து ஆடும் மயிலின் அழகில் மயங்கிப் பாடிய புலவர் பலர் உண்டு. கண்ணைக் கவரும் அவ்வண்ணப் பறவை பற்றி மேலும் அறிவோம்! வாருங்கள்!

அழகு மயில்        

உலகில்  இந்தியா, இலங்கை, பர்மா ஆகிய நாடுகளில் காணப்படும் மயில்களில் மூன்று வகை உண்டு. இந்திய மயில்கள், பச்சை மயில்கள் மற்றும் வெள்ளை மயில்கள். ஆண் மயிலுக்கு நீண்ட தோகை உண்டு. அழகிய கண்களுடன் தலையில் சிறு கொண்டை காணப்படும். எத்தியோப்பிய மயில்களுக்கு இரட்டைக் கொண்டைகளும் உண்டு. கோழியினப் பறவையான மயில் நீண்ட கழுத்தைக் கொண்டது. நீலம், சிவப்பு, பச்சை வண்ணங்களுடன் ஒவ்வொரு அசைவிற்கும் மயில் திரும்பும் அழகே அழகு! கருமேகம் சூழ்ந்து விட்டால் தன் வண்ணத் தோகையை விரித்து ஆடும் மயில். இக்காட்சிக்கு மனதைப் பறி கொடுக்காதவர்கள் எவருமில்லை!

மயிலின் உணவும் உறைவிடமும்      

மயில் ஓர் அனைத்துண்ணி ஆகும். தானியங்கள், புழு பூச்சிகள், அத்திப் பழங்கள், கிழங்குகள். தேன். கரையான்கள், தவளைகள், பாம்புகள் என இதன் உணவிற்கு நீண்ட பட்டியல் உண்டு. குறிஞ்சி நிலப் பறவையான மயில் காடுகளிலும் மலைப் பகுதிகளிலும் வாழும். மயில் முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து வாழும். குறிஞ்சி நிலத் தெய்வமான முருகனின் வாகனம் மயிலே!

மயிலின் சிறப்பு      

அக்காலத்திலேயே சாலமோன் அரசருக்கு இந்திய மன்னர்கள் மயில் தோகையைப் பரிசளித்து இருக்கிறார்கள். திருக்குறளிலும் சங்க இலக்கியங்களிலும் மயில் தோகை பற்றிய செய்திகள் உள்ளன. கி.பி 1963இல் மயில் இந்தியாவின் தேசியப் பறவையாக அறிவிக்கப்பட்டது. கி.பி1972 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட இந்தியச் சட்டப்படி மயிலை வேட்டையாடுவது குற்றமாகும். ஆபத்தைக் கண்டால் அதிக ஒலி எழுப்பும் பறவை மயில் ஆகும். இவ்வொலியை அகவல், ஆலல், ஏங்கல் என்கிறோம்.

முடிவுரை           

பண்டைய மன்னர்கள் தங்கள் படைக்கலன்களை அழகுபடுத்தி வைப்பதற்கு மயிற்பீலியைப் பயன்படுத்தி இருக்கிறார்கள். சமணர்களும் இந்துக்களும் மயிலையும் மயிற்பீலியையும் கடவுளாக மதித்துப் போற்றுகிறார்கள்.

“இயற்கை அன்னை இப் பெண்கட்கெலாம்                  

குட்டைக் கழுத்தைக் கொடுத்தாள்

உனக்கோ குறையொன்றில்லாக் கலாப மயிலே

நிமிர்ந்து நிற்க நீள் கழுத்தளித்தாள்”.

-     என்கிறார் பாவேந்தன் பாரதிதாசன்.          

பல்வேறு சாதி, மதங்கள், இனக்குழுக்கள் வாழும் நம் இந்தியாவின் தேசியப் பறவை பல வண்ணங்கள் கொண்ட மயில் என்பது பொருத்தம் தானே?

Share:

காமராஜர் வாழ்க்கை வரலாறு

காமராஜர் வாழ்க்கை வரலாறு

முன்னுரை

தமிழ்நாட்டை ஆண்ட முதலமைச்சர்களுள் குறிப்பிடத்தக்கவர், ‘பெருந்தலைவர் காமராஜர்’. தமிழகத்தை ஒன்பது ஆண்டு காலம் ஆட்சிசெய்து  பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவு திட்டத்தினை ஏற்படுத்தி, ஏழை எளிய மக்களின் கல்வியில் முன்னேற்றத்தினை ஏற்படுத்தினார்.


பிறப்பு: ஜூலை 15, 1903
இடம்: விருதுநகர், தமிழ்நாடு, இந்தியா
பணி: அரசியல் தலைவர், தமிழக முதல்வர்.
இறப்பு: அக்டோபர் 2, 1975
நாட்டுரிமை: இந்தியன்

இளமை​

காமராஜர் ஆரம்பக்கல்வியை தனது ஊரிலேய பயின்றார்
1908 ஆம் ஆண்டில் ஏனாதி நாராயண வித்யா சாலையிலும் .
பின்னர் விருதுப்பட்டியிலுள்ள உயர்நிலைப்பள்ளியான “சத்ரிய வித்யா சாலா பள்ளியிலும் பயின்றார் .
அவருக்கு ஆறு வயதிருக்கும் பொழுது, அவருடைய தந்தை இறந்ததால் பள்ளிப்படிப்பை தொடரமுடியாத நிலைக்கு தள்ளப்பட்ட காமராஜர்,
தன்னுடைய மாமாவின் துணிக்கடையில் வேலைக்குச் சேர்ந்தார்

அரசியல்

இளமை காலம் முதலே சுதந்திர போராட்ட கருத்துக்கள் மூலம் ஈர்க்க பட்டார்
தனது 16 வது வயதிலேயே இந்தியன் நேஷனல் காங்கிரஸ் இல் தன்னை இணைத்து கொண்டார்.1930 ஆம் ஆண்டு, சி. ராஜகோபாலாச்சாரி தலைமையில் நடந்த உப்பு சத்தியா கிரகத்தில் கலந்து கொண்டு வேதாரண்யம்   நோக்கி நடந்த திரளணியில் பங்கேற்று, கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.அடுத்த ஆண்டே, ‘காந்தி இர்வின் ஒப்பந்தத்தின்’ அடிப்படையில் விடுதலைசெய்யப்பட்டார்.
‘ஒத்துழையாமை இயக்கம்’
, ‘வைக்கம் சத்தியாக்கிரகம்’,
 ‘நாக்பூர் கொடி சத்தியாகிரகம்’ போன்றவற்றில் பங்கேற்ற காமராஜர் அவர்கள், சென்னையில், ‘வாள் சத்தியாக்கிரகத்தைத்’ தொடங்கி, நீல் சிலை சத்தியாகிரகத்திற்குத் தலைமைத் தாங்கினார்..மேலும், ஆங்கிலேய ஆட்சிக்கு எதிராக நடந்த அனைத்து போராட்டங்கள், மற்றும் ஆர்ப்பாட்டங்களில் பங்கேற்ற அவர், ஆறு முறை சிறையில் அடைக்கப்பட்டு, ஒன்பது ஆண்டுகள் சிறைதண்டனை அனுபவித்தார்

காங்கிரஸ்

காங்கிரஸ் தலைவர் சத்திய மூர்தி அவர்களை தன்னுடைய அரசியல் குருவாக மதித்தார்.1936 ஆம் ஆண்டு சத்திய மூர்த்தி காங்கிரஸ் தலைவராக பொறுப்பேற்ற போது, காமராஜரை செயலாளராக நியமித்தார்


தமிழக முதல்வராக காமராசர்,

           1953 ஆம் ஆண்டு, ராஜாஜி கொண்டுவந்த குலக்கல்வி திட்டத்தால், எதிர்ப்புகள் கிளம்பியது. இதனால், ராஜாஜி அவர்கள் பதவியிலிருந்து விலகி, தன் இடத்திற்கு சி. சுப்பிரமணியத்தை முன்னிறுத்தினார்.கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தில், காமராஜர் பெருவாரியான வாக்குகளைப் பெற்றதால், 1953 ஆம் ஆண்டு தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றார்.காமராஜர், தன்னுடைய அமைச்சரவையில்  தன்னை எதிர்த்து போட்டியிட்ட சி.சுப்பிரமணியத்தையும், அவரை முன்மொழிந்த எம். பக்தவத்சலத்தையும் அமைச்சராக்கினார்.தன்னுடைய முதல் பணியாக  குலக்கல்வித் திட்டத்தினை கைவிட்டு,  மூடப்பட்ட 6000 பள்ளிகளைத் திறந்தார்.

கல்வித்திட்டம்

17000த்திற்கும் மேற்பட்ட புதிய  பள்ளிகளைத் திறந்தோடு மட்டுமல்லாமல், பள்ளிக்குழந்தைகளுக்கு “இலவச மதிய உணவு திட்டத்தினை” ஏற்படுத்தினார்.இதனால், ஆங்கிலேயரின் ஆட்சிக்காலத்தில் 7 சதவீதமாக இருந்த கல்விக் கற்போரின் எண்ணிக்கை, காமராஜர் ஆட்சியில் 37 சதவீதமாக உயர்ந்தது.

தொழில்துறை

தொழில்துறை, நீர்பாசனத் திட்டங்கள், மின் திட்டங்கள் போன்றவற்றிலும் முன்னேற்றத்தை ஏற்படுத்தினார்
நெய்வேலி நிலக்கரித் திட்டம்
பெரம்பூர் ரயில் பெட்டி தொழிற்சாலை
திருச்சி பாரத் ஹெவி எலக்ட்ரிக்கல்ஸ்
கல்பாக்கம் அணு மின்நிலையம்
ஊட்டி கச்சா ஃபிலிம் தொழிற்சாலை
கிண்டி டெலிபிரிண்டர் தொழிற்சாலை
மேட்டூர் காகிதத் தொழிற்சாலை
சேலம் இரும்பு உருக்கு ஆலை
பாரத மிகு மின் நிறுவனம்
இரயில் பெட்டித் தொழிற்சாலை
நிலக்கரி புகைப்படச் சுருள் தொழிற்சாலை என மேலும் பல தொழிற்சாலைகள் காமராஜரால் உருவாக்கப்பட்டன
நீர்பாசனம்
மேட்டூர் கால்வாய்த்திட்டம்
பவானி திட்டம்
காவேரி டெல்டா வடிகால் அபிவிருத்தி திட்டம்
மணிமுத்தாறு,
 அமராவதி,
வைகை சாத்தனூர்,
கிருஷ்ணகிரி,
ஆரணியாறு போன்ற நீர்பாசன திட்டங்களையும்’ ஏற்படுத்தினார்

காங்கிரஸ் தலைவர்

           கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின்  படி அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்.கட்சியின் மூத்த தலைவர்கள் பதவிகளை, இளைஞர்களிடம் ஒப்படைக்கும் K-PLAN எனப்படும் காமராஜர் திட்டத்தின்  படி அக்டோபர் 2, 1963 ஆம் ஆண்டு தன்னுடைய முதலமைச்சர் பதவியைத் பக்தவத்சலத்திடம் ஒப்படைத்தார்.1963 அக்டோபர் 9 ஆம் தேதி, அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார்
1964 ஆம் ஆண்டு, ஜவர்ஹலால் நேரு மரணமடைந்தவுடன், லால்பதூர் சாஸ்திரி அவர்களை இந்திய பிரதமராக முன்மொழிந்தார்.
1966 ஆம் ஆண்டு லால்பதூர் சாஸ்திரியின் திடீர் மரணத்தைத் தழுவ, 48 வயது நிரம்பிய நேருவின் மகள் இந்திராகாந்தியை இந்தியாவின் அடுத்த பிரதம மந்திரியாக்கினார்

இறப்பு

1975 ஆம் ஆண்டு அக்டோபர் 2 ஆம் தேதி தன்னுடைய 72 வது வயதில் காலமானார்.அதற்கு அடுத்த ஆண்டு, இந்திய அரசின் மிக உயரிய விருதான “பாரத ரத்னா” விருது மத்திய அரசால் அவருக்கு வழங்கப்பட்டது.
Share:

10th std Tamil நெடுவினா - இயல் 1

1. மனோன்மணியம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக

விடை:
தாயே! தமிழே! வணக்கம்

தாய் மகன் உறவு அம்மா, உனக்கும் எனக்கும் செய்யுள் ஒன்றனை இயற்றும் போது தெய்வத்தையோ, இயற்கையை, உயந்தாரையோ நாட்டையோ, மொழியை வாழ்த்திப் தொடங்குவது கவிஞர்களின் இயல்பு. இங்கு இரு கவிஞர்களின் வாழ்த்துப் பாடல்கள் பற்றி ஆய்ந்து ஒப்பிடுவோம்.

நாடு மொழி:

பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழ் மொழி மொழியாகவும் செந்தமிழ் ஆகவும், நற்கனி ஆகவும், பேரரசாகவும், பாண்டியனின் மகனாகவும், திருக்குறள் பெருமைக்குரியவளாகவும் ஒப்புமைப்படுத்திக் காட்டியுள்ளார்.
மனோன்மணீயம் சுந்தரனார் தமிழ் நிலத்தைப் பெண்ணாக உருவகம் செய்துள்ளார்
அந்நிலப்பெண் கடலை ஆடையாக அணிந்துள்ளாள். அவள் நெற்றியிலிட்ட பொட்டு மணம் வீசுவதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் மணம் எல்லாத் திசைகளிலும் புகழ் மணக்கும்படி இருக்கும் தமிழ் பெண்ணே என்ற பெண் தெய்வத்திற்கு ஒப்பிட்டுள்ளார் பெருமை
திருக்குறள், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு, பதினெண்கீழ்க்கணக்கு, நிலைத்த சிலப்பதிகாரம், மணிமேகலை ஆகிய நூல்களின் மூலம் பொங்கி எழும் நினைவுகளால் தலைபணிந்து வாழ்த்துகிறோம் என்று பாவலரேறு வாழ்த்துகிறோம்.

பெருமையை பரப்புதல்:
பழம்பெருமையும், தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளமும் கொண்டதாகவும் தமிழ் உள்ளது. நீண்ட நிலைத்த தன்மையும் கொண்ட தமிழ் மொழி, உள்ளத்தில் கனல் மூள, வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நாங்கள் உன்னைச் சுவைத்து உன் பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.

தமிழ்ப் பெண்ணே இன்றும் இளமையாக இருக்கின்ற உன் சிறப்பானத் திறமையை வியந்து எங்கள் செயல்களை மறந்து உனது புகழைப் போற்றுவோம் நிறைவாக.

சாகும்போதும் தமிழ்ப்படித்துச் சாகவேண்டும் - என்றன் சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும் 
என்று கவிஞர் க. சச்சிதானந்தன் கூறுவதற்குக் காரணம் கூட தமிழின் மேற்கண்ட சிறப்புகளே என்று கூறலாம்.
#10th #important_neduvina
Share:

10th std thirukural || sslc திருக்குறள் மனப்பாடப்பாடல்

10th std thirukural || sslc திருக்குறள் மனப்பாடப்பாடல் திருக்குறள் 

 திருக்குறள் 

 மெய் உணர்தல் 


எப்பொருள் எத்தன்மைத் தாயினும் அப்பொருள்
மெய்ப்பொருள் காண்ப தறிவு


 பெரியாரைத் துணைக்கோடல் 

பல்லார் பகைகொளலின் பத்தடுத்த தீமைத்தே
 நல்லார் தொடர்கை விடல்


கண்ணோட்டம்

 பண்என்னாம் பாடற் கியைபின்றேல்; கண்என்னாம்
 கண்ணோட்டம் இல்லாத கண்
,

ஆள்வினை உடைமை

 அருமை உடைத்தென் றசாவாமை வேண்டும் 
 பெருமை முயற்சி தரும்

முயற்சி திருவினை ஆக்கும் முயற்றின்மை 
 இன்மை புகுத்தி விடும் 

அமைச்சு

 செயற்கை அறிந்தக் கடைத்தும் உலகத் 
 தியற்கை அறிந்து செயல்

 பொருள் செயல் வகை

 பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும் 
பொருளல்ல தில்லை பொருள்

  குன்றேறி யானைப்போர் கண்டற்றால் தன்கைத்
தொன் றுண்டாகச் செய்வான் வினை

குடிசெயல் வகை

 குற்றம் இலனாய்க் குடிசெய்து வாழ்வானைச்
  சுற்றமாச் சுற்றும் உலகு


 நல்குரவு

இன்மையின் இன்னாத தியாதெனின் இன்மையின்
 இன்மையே இன்னா தது
Share:

10th std letter writting tamil | பத்தாம் வகுப்பு தமிழ் கட்டுரை

வாழ்த்து மடல் எழுதுக.

திருநெல்வேலி மாநில அளவில் நடைபெற்ற “மரம் இயற்கையின் வரம்” எனும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் வெற்றி பெற்று முதல் பரிசு பெற்ற தோழனை வாழ்த்தி மடல் எழுதுக.


திருநெல்வேலி,
12-3-19.


அன்புள்ள நண்பா,
                        நான் நலம், உன் நலம் மற்றும் உன் வீட்டார் அனைவரின் நலம் அறிய ஆசை, மாநில அளவில் நடைபெற்ற 'மரம் இயற்கையின் வரம்' என்னும் தலைப்பிலான கட்டுரைப் போட்டியில் நீ கலந்து கொண்டு முதல் பரிசு பெற்ற செய்தியை நாளிதழில் உன் புகைப்படத்துடன் கண்டு பெருமகிழ்வு கொண்டேன்.

மரங்களின் பயன்களையும், மரங்களை அழிப்பதனால் ஏற்படும் தீமைகளையும் பற்றி பல நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறார். மரங்களை அழித்துக் கொண்டே போனால் நாம் உயிர் வளியைக் கூட விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை வரும் என்ற செய்தியைக் குறிப்பிட்டிருந்தார். இதை நினைக்கும் போது மனம் வருத்தம் அடைகிறது.

உயிர் வளியைக் காசு கொடுத்து வாங்கும் நிலை வராதபடி நாம் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தி "வீட்டிற்கொரு மரம் வளர்ப்போம் ; மரங்களை அழிக்காதீர்!" என்று அச்செயல்களில் ஈடுபடுவோம். தூய காற்றை சுவாசிப்போம், நீ மேலும் பல கட்டுரைகளை எழுதி பரிசுகள் பெற்று மகிழ்வுடன் வாழ மனதார வாழ்த்துகிறேன்.

இப்படிக்கு, 
உன் தோழன், 
அ. சங்கர்.

உறை மேல் முகவரி,
க.கண்ண ன், 
வடமலை தெரு திருநகர்,
மதுரை - 11


Share:

பத்தாம் வகுப்பு கடிதம் || 10th std letter Tamil

கடிதம் எழுதுக.

நாளிதழ் ஒன்றின் பொங்கல் மலரில் "உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம்' என்ற உங்கள் கட்டுரையை வெளியிட வேண்டி அந்நாளிதழ் ஆசிரியருக்குக் கடிதம் எழுதுக.

அனுப்புநர்,

               ஆர். இராகவன், 16,  
                பெரியகடைவீதி, 
                தஞ்சாவூர்
பெறுநர்,
                 ஆசிரியர் அவர்கள், 
                  'கனல்' நாளிதழ், 
                   மதுரை.
பொருள்: கட்டுரை வெளியிட வேண்டுதல் - தொடர்பாக.
மதிப்பிற்குரிய ஐயா,
                    தங்கள் நாளிதழின் சார்பாக பொங்கல் பண்டிகையை ஒட்டி வெளியிடும் பொங்கல் மலருக்காக உழவுத் தொழிலுக்கு வந்தனை செய்வோம். என்னும் தலைப்பில் கட்டுரை ஒன்று எழுதியுள்ளேன். அக்கட்டுரையைத் தங்கள் அலுவலகத்துக்கு அனுப்பியுள்ளேன். ஒன்று எழுதியுள்ளேன். தொழிலுக்கு செய்கையை ஒட்டி தாங்கள் அக்கட்டுரையைத் தங்கள் நாளிதழ் சார்பாக வெளியிடும் பொங்கல் சிறப்பு மலரில் என் கட்டுரையும் வெளிவர ஆவன செய்யும்படி பணிவன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.

                       நன்றி!

இப்படிக்கு, 
ஆர். இராகவன்.

உறைமேல் முகவரி:
ஆசிரியர் அவர்கள், 
'கனல்' நாளிதழ் அலுவலகம், 
மதுரை - 10.
Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories