10ம் வகுப்பு - காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல்10th standard tamil poem writings

 10ம்  வகுப்பு - காட்சியைக் கண்டு கவினுற எழுதுதல் -10 

10th standard tamil poem writings

இயல் - 1  ப.எண் : 23

   கல்வி

மாணவப் பருவத்திலே

கல்வி என்னும்

அறிவுப்  பூட்டைத் திறந்திடு....

மதிப்பெண் பெற்றிடவே

பாடத்தைப் படித்திடு !

முயற்சியைத் தொடர்ந்து

மூளையிலே நிறுத்திடு !

சாவி கொண்டு பூட்டிடு !

எப்போதும் நினைத்து 

ஏகாந்தமாய் இருந்திடு !

கல்வி என்னும்

அறிவுக் கண்ணைத்

திறந்திடு ....


இயல் - 2        ப.எண்  : 47




சுத்தமான சுவாசம்

சுற்றுச்சூழல்  மாசுபாட்டால்

மனிதன் உயிர் வாழ

தூய காற்றைத் தேடி

அலைந்து ....

மண்பானையிலே

மரம் ஒன்றை வளர்த்து

காடு மேடெல்லாம்

அலைந்து ....

தூய்மையான காற்றைத்

தனக்கெனவே தனியாக

குழல் மூலம்  பெற்றே ....

நலமுடன் வாழும்

காலமும் வந்ததே.......


இயல்  - 3   ப. எண் : 68

      



  இரக்கம்

இயற்கை அழகு கொஞ்சும்

இன்பமான வீட்டிலே..

அன்பான உறவு சொல்லி

ஆசையோடு பரிவு காட்டி

பாசத்தோடு...

பசிக்குத் தட்டிலே

உணவிட்டு ....

நன்றியுள்ள  ஜீவனுக்கு

நன்றியோடு  ...

நல்வாழ்க்கை

வாழ்ந்திடுவோம் ....

இயல்  - 4  ப.எண் : 97

    



அலைபேசி

கைகளில் தவழும் 

குழந்தையே..

நீயின்றி நானில்லை !

உன் நினைவால்..

உறக்கமில்லை....

பெருமையாக நினைத்து

உன்னை மதித்தேன்  !  

அதனால்   நீ.....

என் முதுகின் மீது ஏற

எனக்கே பாரமாகி

கைகளிலே சாட்டையோடு..

என்னை அடிமையாக்கி

சவாரியும் செய்வதேனோ !


இயல்  - 5     ப.எண்  :125


மரம் வளர்ப்போம்

வெட்ட வெளியிலே 

மணற்பரப்பிலே ...

மேகக் கூட்டத்தோடு

மரம்  இன்றி..

நிழல் இன்றி.. அமர்ந்து

மரம் வளர்ப்போம்..

அரண் காப்போம்..

மழை பெறுவோம்.. 

என்று

பசுமையான படம் காட்டி

பகுத்தறிவூட்டி...

பூமித் தாயைக்  காத்திடுவோம்...

பொறுப்புடனே...

வாழ்ந்திடுவோம்....

இயல்  - 6        ப .எண் : 152



   ஒயிலாட்டம்

உருமி சத்தம் கேட்டதுமே

உரிமையோடு ஆடிடுவோம்...

இடுப்பிலே கச்சைக்கட்டி

கையிலே துணியை வீசி

ஒய்யாரமாய் ஆடிடுவோம்....

உடலிலே  வியர்வை சிந்த

காண்பவரைக் கவர்ந்திழுக்க..

கணக்காய்  அடியெடுத்து..

ஒற்றுமையாய் இணைந்திடுவோம்  !

ஓசைக்கு ஏற்ப ஆடிடுவோம் !

இயல் - 7    ப.எண் : 182


 


உழவன்

கலப்பையைத் தோளிலே

சுமந்து.....வேட்டியை

இடுப்பிலே  அணிந்து

மேகமூட்டத்துடன்..

காலையிலே  கழனி செல்லும்

உழவனே.....நீ

ஏர் பிடித்து உழவு செய்து..

நீரிறைத்துப் பயிர் வளர்த்து..

உணவுதானியங்களைக் குவித்தே..

உலகோர் அனைவருக்கும்

பசியினைப் போக்குவாயே...

உழுதுண்டு வாழ்வாரே

உலகின் உயர்ந்த மனிதன் !

இயல் - 8   ப.எண் : 201

      



தானம்


தானம் கொடுக்கும் 

பொருளைப்  பெறாதே !

கொடுக்க நினைக்கும் பொருளை

  ஏழைக்குக் கொடுத்துவிடு !

உழைத்துப் பொருளைச் சேர்த்து

வாழ்வதே பெரும் மகிழ்ச்சி !

கொடுப்பதைப் போல் கொடுத்து

ஏழையின் வயிற்றில் அடிக்காதே !

நீதி காக்கும் தெய்வம்

நித்தம் உன்னை வணங்கும் !

இயல்  - 9  ப . எண்  :  229


    தர்மம்

ஒருவருக்கு பெருமை.....

ஒருவருக்கு வறுமை    ...

இடது கையிலே உதவி...

வலது கையிலே அலைப்பேசி,.

வயிற்றுப்பசிக்கு கையேந்தி

வகையாய் புகைப்படங்கள்..

அலைபேசியின் ஆர்வத்தாலே..

மதிப்பற்றுப்   போனதே  ..

மானிட மனம்  !!



Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...