தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – பதிவிறக்கம் செய்வதற்கான Simple Steps இதோ!

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கான Hall Ticket வெளியீடு – பதிவிறக்கம் செய்வதற்கான Simple Steps இதோ!

தமிழகத்தில் 2022-23ம் கல்வியாண்டுக்கான 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு வரும் மார்ச் 13ம் தேதி தொடங்கப்பட உள்ளது. தற்போது இந்த பொதுத் தேர்வுக்கான Hall Ticket வெளியிடப்பட்டுள்ளது. இதனை பதிவிறக்கம் செய்வதற்கான வழிமுறைகள் குறித்து பார்ப்போம்.

தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு

தமிழகத்தில் நடப்பு (2022-23) கல்வியாண்டுக்கான 10,11,12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த கால அட்டவணையை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. அதன்படி 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 6ம் தேதி முதல் 20ம் தேதி வரையும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 14ம் தேதி முதல் ஏப்ரல் 5ம் தேதி வரையும், இதே போல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு மார்ச் 13ம் தேதி முதல் ஏப்ரல் 3ம் தேதி வரையும் நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி தற்போது பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டு வருகிறது, இந்த நிலையில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்வுக்கூட அனுமதிச் சீட்டு www.dge.tn.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த Hall Ticket-ல் மாணவர்களின் பெயர், தேர்வு அட்டவணை, பட்டியல் எண், தேர்வு எண் மற்றும் தேர்வு மைய முகவரி ஆகிய விவரங்கள் இடம்பெற்றிருக்கும்.

இதனை பெற விரும்பும் மாணவர்கள் www.dge.tn.nic.in என்ற இணையதளம் மூலமாகவோ அல்லது மாணவர்கள் தங்களின் கல்வி நிறுவனத்தின் மூலமாகவோ பெற்றுக் கொள்ளலாம்.

வழிமுறைகள்

1. இதற்கு முதலில் dge.tn.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்திற்கு செல்லவும்.

2. இதன் முகப்புப் பக்கத்தில் ஹால் டிக்கெட்டுக்கான இணைப்பைக் கிளிக் செய்யவும்

3. இப்போது Regular Candidate / Private Candidates என்பதில் உங்களுக்கான விருப்பத்தை தேர்வு செய்து உங்களின் விண்ணப்ப எண், பிறந்த தேதி உள்ளிட்டு சமர்ப்பிக்கவும்

5. இப்போது உங்களின் பொதுத்தேர்வுக்கான Hall Ticket திரையில் தோன்றும்.

6. இதனை பதிவிறக்கம் செய்து, பிரிண்ட் அவுட் எடுத்து வைத்துக் கொள்ளவும்.

Download Hall Ticket

Official Site


Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support