Daily TN Study Materials & Question Papers,Educational News

இப்படி ஒரு சிறு சேமிப்பு திட்டமா ?? அதிக வட்டி கொடுக்கும் பெண்களுக்கான சூப்பர் திட்டம் !

 பெண்களுக்கான திட்டம் - அதிக வட்டி பணத்தை அள்ளித்தரும் சிறு சேமிப்பு திட்டங்கள்!

பெண்கள் தங்களுக்காக அல்லது தங்களது மகளுக்காக ஒரு தொகையை சிறுசேமிப்பு மூலம் சேர்த்து வைத்தால் அது பின் நாட்களில் பேருதவியாக இருக்கும் என்ற எண்ணத்தில் பல திட்டங்கள் கொண்டுவரப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. அவற்றில் சில ... பிறந்த குழந்தை முதல் 10 வயது வரையுள்ள பெண் குழந்தைகளுக்கு 1.5 லட்சம் வரை சேமிக்கும் செல்வமகள் திட்டம் ஏற்கனவே உள்ளது. அதன் முதிர்ச்சி என்பது 21 ஆண்டுகள் எடுக்கும். 

எனினும், 18 வயதிற்கு பின் பாதி அளவு தொகையை எடுத்துக்கொள்ள அனுமதிக்கிறது. அதேபோல 15 ஆண்டுகளில் முதலீட்டின் இரட்டிப்பு தொகையை வழங்கும் சுகன்யா சம்ரிதி யோஜனா திட்டமும் 0-10 இடைப்பட்ட வயதுடைய குழந்தைகளுக்கு இருக்கிறது. ஆனால் இவை எல்லாமே நீண்டகால சேமிப்பு திட்டங்கள். குறைந்த நேரத்தில் சேமிப்பதற்காக தான் இந்த பட்ஜெட்டில் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் என்ற பெண்களுக்கான சிறுசேமிப்பு திட்டத்தை அறிமுகம் செய்துள்ளனர். அதன் முழு விபரங்கள் இதோ:

இந்த திட்டத்தின் மொத்த சேமிப்புத் தொகை எவ்வளவு?

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தின் மூலம் பெண் குழந்தைகள் மட்டுமல்லாது பெண்கள் தங்கள் பேரில் கூட அதிகபட்ச தொகையாக ரூ.2 லட்சம் வரை டெபாசிட் செய்யலாம் என்று பட்ஜெட் அறிக்கை குறிப்பிட்டுள்ளது.

இத்திட்டத்தின் வட்டி விகிதம் எவ்வளவு?

மகிளா சம்மான் சேமிப்புத் திட்டம் 7.5 சதவீத நிலையான வட்டி விகிதத்தை வழங்கும். இது பெரும்பாலான வங்கி வைப்புத் தொகை மற்றும் தபால் அலுவலக மாதாந்திர வருமானத் திட்டம் (POMIS), மூத்த குடிமக்கள் சேமிப்புத் திட்டம் (SCSS), பொது வருங்கால வைப்பு நிதி போன்ற பிற பிரபலமான முதலீட்டுத் திட்டங்களை விட அதிகமாகும். மேலும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC), மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY). ஆகிவற்றின் வட்டி விகிதத்தை விட அதிகம்.

மகிளா சம்மான் சேமிப்பு சான்றிதழ் முதிர்வு தேதி எப்போது வரும்?

இதற்கு முன்னர் இருக்கும் நீண்ட கால சிறுசேமிப்பு போல இல்லாமல் மிகக்குறுகிய காலத்திற்குள் பெரும் தொகையை சேமிப்பதே இந்த திட்டத்தின் குறிக்கோள். எனவே இதற்கான முதிர்வு காலம் 2 ஆண்டுகளாக வரையறுக்கப்பட்டுள்ளது. பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கான மகிளா சம்மான் சேமிப்பு பத்திரத்தின் கீழ் புதிய சிறுசேமிப்பு வசதி 2023 மற்றும் 2025 க்கு இடையில் இரண்டு ஆண்டுகளுக்கு இருக்கும்.

மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ்களுக்கு வரிச் சலுகைகள் உண்டா ?

கண்டிப்பாக உண்டு. வருங்கால வைப்பு நிதி (பிபிஎஃப்), மூத்த குடிமக்கள் சிறுசேமிப்புத் திட்டம் (எஸ்சிஎஸ்எஸ்), தேசிய சேமிப்புச் சான்றிதழ் (என்எஸ்சி) மற்றும் சுகன்யா சம்ரித்தி யோஜனா (எஸ்எஸ்ஒய்) போன்ற சேமிப்புகளை எப்படி பிரிவு 80C யின் கீழ் காட்டி குறிப்பிடத்தக்க வரிச் சலுகை பெருகிறோமோ அதே போல மகிளா சம்மான் சேமிப்பு தொகையையும் வரி சலுகைக்கு காட்டலாம்.

சேமிப்பு தொகையை இடையில் திரும்பப் பெறுவதற்கான வரம்பு என்ன?

ஒரு சில நேரத்தில் முதிர்ச்சி அடைவதற்கு முன்பே அவசரமாக பணம் தேவைப்படும். அப்படி சேமிப்பு கணக்கில் உள்ள தொகையை முதிர்ச்சி காலத்திற்கு முன் எடுக்க வேண்டும் என்றால் நீங்கள் மகிளா சம்மான் சேமிப்புச் சான்றிதழ் திட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ள மொத்த சேமிப்பு தொகையில் பகுதியளவு தொகையை திரும்பப் பெறும் வசதியை இந்திய அரசு அனுமதித்துள்ளது.

மகிளா சம்மான் சேமிப்பு திட்டக் கணக்கை எங்கே, எப்படி திறப்பது?

இத்திட்டத்தின் விவரங்கள் அரசால் இன்னும் முழுமையாக பகிரப்படவில்லை. இருப்பினும், இந்த திட்டத்தை ஏப்ரல் 1, 2023 முதல் எந்த அரசுக்கு சொந்தமான வங்கிகளிலும் அஞ்சல் அலுவலகங்களிலும் திறக்க முடியும் என்று ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support