10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி - அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 !

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி - அஞ்சல் துறை வேலைவாய்ப்பு 2023 ! | India post Recruitment 2023

தமிழ்நாடு அஞ்சல் துறை ஒரு வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பானது இந்திய அஞ்சல் துறையில் உள்ள கிளை போஸ்ட் மாஸ்டர்(BPM), அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) ஆகிய பணிகளுக்காக 27.01.2023 அன்று வெளியிட்டுள்ளதாகும். இந்த அஞ்சல் துறை வேலைவாய்ப்பில் மொத்தம் 3167 காலிப்பணியிடங்கள் ஒதுக்கபட்டுள்ளன.

இந்த பதவிக்கு தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். மேலும் இப்பதவிக்கு விருப்பம் மற்றும் ஆர்வம் உள்ள விண்ணப்பதாரர்கள் விண்ணப்ப படிவத்தை கடைசி தேதி 16.02.2023-க்குள் சமர்ப்பிக்க வேண்டும். மேலும், இந்த வேலைவாய்ப்பு அறிவிப்பு பற்றிய முழுமையான தகவல்களுக்கு indiapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தை அணுக வேண்டும்.

இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு விபரம்:

நிறுவனம்

            தமிழ்நாடு அஞ்சல் அலுவலகம் 

பணி

                கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM), அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM)

மொத்த காலிப்பணியிடம் -    3167 

 பணியிடம்

                    தமிழ்நாடு

விண்ணப்பிக்க கடைசி தேதி

                    16.02.2023

அதிகாரப்பூர்வ இணையதளம்

www.indiapost.gov.in

சம்பள விவரம்:

1. கிளை போஸ்ட் மாஸ்டர் (BPM)  - Rs.12,000 To 29,380/-

2. அசிஸ்டண்ட் கிளை போஸ்ட் மாஸ்டர் (ABPM) -  Rs.10,000 To24,470/-

கல்வி தகுதி: 

  1. தகுதி வாய்ந்த விண்ணப்பதாரர்கள் 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  2. மேலும் கல்வி தகுதி பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

வயது தகுதி:

  1. விண்ணப்பதாரர்களின் வயது குறைந்தபட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.
  2. மேலும் வயது தளர்வு பற்றி தெரிந்துக்கொள்ள கீழே கொடுக்கப்பட்டுள்ள Notification-ஐ கிளிக் செய்து தெரிந்துக்கொள்ளுங்கள்.

விண்ணப்பிக்கும் முறை:

  • Online மூலம் விண்ணப்பதாரர்கள் விண்ணப்பங்களை விண்ணப்பிக்கவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

  • மதிப்பெண்கள் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படும்.

கட்டணத்திற்கான தொகை:

  • விண்ணப்பக் கட்டணமாக Rs. 100 செலுத்த வேண்டும்.
  • மேலும், SC/ ST/PWD விண்ணப்பதாரர்கள் தேர்வுக் கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இந்திய தபால் துறை வேலைவாய்ப்பு காலியிடத்திற்கு எப்படி விண்ணப்பிக்க வேண்டும்..?

  1. indiapost.gov.in என்ற அதிகாரபூர்வ வலைத்தளத்திற்கு செல்லவும்.
  2. பின்பு அதில் Home Page-ல் கொடுக்கப்பட்டுள்ள GDS பணிக்கான அறிவிப்பை தேர்வு செய்ய வேண்டும்.
  3. பின் அறிவிப்பை கவனமாக படித்து அதில் கொடுக்கப்பட்டுள்ள கல்வி மற்றும் வயது தகுதியை சரி பார்த்து கொள்ள வேண்டும்.
  4. பின் அங்கு கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்ய வேண்டும்.
  5. பிறகு விண்ணப்ப படிவத்தை சரியாக பூர்த்தி செய்து அறிவிக்கப்பட்டுள்ள கடைசி தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். 

OFFICIAL NOTIFICATION   DOWNLOAD HERE


Post a Comment

0 Comments