பள்ளி மேலாண்மை குழுக் கூட்டத் (SMC) தீர்மானங்களை ஆகஸ்ட் 15 சுதந்திர தின கிராம சபைக் கூட்டத்தில் கூட்டப் பொருளாக இணைத்திட அறிவுறுத்தல் - மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள் ந.க.எண்: 1680/ A11/ ஒபக/ பமேகு/ 2023, நாள்: 08.08.2023
இந்து நாளிதழ் - அன்பாசிரியர் 2022 விருது - விண்ணப்பிக்க அறிவிப்பு!
மாணவர்களுக்கு பாடங் களைக் கற்பிப் பதோடு நில்லாமல், மாறுபட்ட புதிய சிந்தனை யோடு, மாண வர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக் கறையை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன்ஸ் சார்பில் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022’ விருது வழங்கப்படவுள்ளது.
இந்நிகழ்வை லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகியன இணைந்து வழங்குகிறது. இந்த விருதினைப் பெற விரும்பும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 2-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இவ்விருதினைப் பெற தகுதியுடைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். முன்னரே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க வேண்டாம்.
இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவுசெய்து,சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும்.
பதிவான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் முதல் கட்ட நேர்காணல் விரைவில் நடைபெறவுள்ளது.
நேர்காணலுக்கு அழைக்கப்படும் ஆசிரியர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற விவரங்களையும் நேரில் கொண்டுவர வேண்டும். மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்கள், மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 39 பேருக்கு ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9843225389 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஏப். 11-ல் பணி நிரவல் கலந்தாய்வு
உடற்கல்வி ஆசிரியர்களுக்கு ஏப். 11-ல் பணி நிரவல் கலந்தாய்வு
பள்ளிக் கல்வி ஆணையரகம் சார்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் உடற்கல்வி ஆசிரியர்கள், பணிநிரவல் செய்யப்பட உள்ளனர். இதற்காக கடந்த ஆக.1-ம் தேதி நிலவரப்படி உள்ளஆசிரியர் - மாணவர் விகிதாச்சாரத்தின் அடிப்படையில் உடற்கல்வி இயக்குநர் (நிலை-1) பணியிடங்கள் நிர்ணயம் செய்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடம் இருந்து அறிக்கையாக பெறப்பட்டுள்ளது.
அதன்படி, மாநிலம் முழுவதும் உள்ள 3,123 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் மொத்தம் 407 உடற்கல்வி இயக்குநர் பணியிடங்கள் அனுமதிக்கப் பட்டுள்ளது. மேலும், பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில் 400 மாணவர்களுக்கு மேல் இருக்கும் பள்ளிகளில் மட்டுமே உடற்கல்வி ஆசிரியர் நிலை-1 பதவியில் ஆசிரியர்கள் பணியாற்று கின்றனர்.
183 பள்ளி களில் உடற்கல்வி இயக்குநர் நிலை-1 பதவியில் ஆசிரியர்கள் இல்லை. ஆனால், 400-க்கும் குறைவான மாணவர்கள் உள்ள 163 பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்கள் உபரியாக உள்ளனர். எனவே, விதிகளின்படி உபரியாக உள்ள உடற்கல்வி ஆசிரியர்கள், தேவvயுள்ள பள்ளிகளுக்கு பணி நிரவல் அடிப்படையில் இடமாறுதல் செய்யப்படுவர்.
இதற்கான கலந்தாய்வு, ஏப்.11-ம் தேதி இணையவழியில் நடத்தப்படும். பணி நிரவல் கலந்தாய்வுக்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளையும் செய்ய வேண்டும். எந்த வித புகாருக்கும் இடமளிக்காமல் கலந்தாய்வை நடத்த அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் அறிவுறுத்தப்படுகிறது.








