Daily TN Study Materials & Question Papers,Educational News

இந்து நாளிதழ் - அன்பாசிரியர் 2022 விருது - விண்ணப்பிக்க அறிவிப்பு!


மாணவர்களுக்கு பாடங் களைக் கற்பிப் பதோடு நில்லாமல், மாறுபட்ட புதிய சிந்தனை யோடு, மாண வர்களின் திறன்களை வளர்த்து, சமூக அக் கறையை ஊட்டி, நற்பண்புகளைப் போதித்து, பள்ளியையும் மேம்படுத்தும் அர்ப்பணிப்பு மிக்க ஆசிரியர்களைப் பாராட்டி கவுரவிக்கும் வகையில் ராம்ராஜ் காட்டன்ஸ் சார்பில் ‘இந்து தமிழ் திசை - அன்பாசிரியர் 2022’ விருது வழங்கப்படவுள்ளது. 


இந்நிகழ்வை லெட்சுமி செராமிக்ஸ் மற்றும் இந்துஸ்தான் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி அண்ட் சயின்ஸ் ஆகியன இணைந்து வழங்குகிறது. இந்த விருதினைப் பெற விரும்பும் ஆசிரியர்கள் வரும் ஜூன் 2-க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.


இவ்விருதினைப் பெற தகுதியுடைய தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியைச் சேர்ந்த அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் மெட்ரிக் பள்ளிகளில் பணியாற்றி வரும் ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களும் விண்ணப்பிக்கலாம். முன்னரே அன்பாசிரியர் விருது, மாநில, மத்திய அரசு வழங்கும் நல்லாசிரியர் விருது பெற்றவர்கள், சிபிஎஸ்இ பள்ளி ஆசிரியர்கள் ஆகியோர் விண்ணப்பிக்க வேண்டாம்.


இத்துடன் கொடுக்கப்பட்டுள்ள இணைய முகவரியில் உள்ள விண்ணப்பப் படிவத்தில் பதிவுசெய்து,சுய விவரக் குறிப்பு, சாதனைகள் அடங்கிய புகைப்படங்கள், வீடியோக்கள், ஊடக அங்கீகாரங்கள், ஆசிரியரின் நன்முயற்சிகளுக்குப் பிறகு மாணவர்களின் செயல்பாடுகளில் ஏற்பட்ட முன்னேற்றம் ஆகியவற்றுக்கான ஆதாரங்களையும் இணைத்து விண்ணப்பிக்க வேண்டும். 


பதிவான விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் சென்னை, கோயம்புத்தூர், மதுரை, திருச்சி ஆகிய நான்கு மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு, ‘இந்து தமிழ் திசை’ அலுவலகத்தில் முதல் கட்ட நேர்காணல் விரைவில் நடைபெறவுள்ளது.


நேர்காணலுக்கு அழைக்கப்படும் ஆசிரியர்கள் புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் பிற விவரங்களையும் நேரில் கொண்டுவர வேண்டும். மண்டல அளவில் தேர்வாகும் ஆசிரியர்கள், மூத்த கல்வியாளர்கள் மூலம் இறுதிகட்ட நேர்காணலுக்கு அழைக்கப்படுவர். மாவட்டத்துக்கு ஒருவர் வீதம் 39 பேருக்கு ‘அன்பாசிரியர் 2022’ விருது வழங்கப்படும். கூடுதல் விவரங்களுக்கு 9843225389 என்ற கைபேசி எண்ணில் தொடர்புகொள்ளலாம்.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support