TNTET - ஆசிரியர் தகுதி தேர்வு கடந்து வந்த பாதை!


2010 ஆம் ஆண்டு மத்திய அரசின் இலவச கட்டாய கல்வி சட்டத்தின் படி ஆசிரியர் தகுதி தேர்வு கட்டாயமாக்கப்பட்டது. அப்போது இருந்து ஆட்சியாளர்கள் தகுதி தேர்வில் அதிக மதிப்பெண் பெறுபவர்க்கே பணி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டனர். ஆனால் தகுதி தேர்வு என்பது   ஆசிரியர் பணிக்கான தகுதி தேர்வு தான் தவிர அதன் அடிப்படையில் பணி நியமனம் செய்ய க்கூடாது என்று ஒரு சிலர்  நீதி மன்றத்தை நாடினர் நீதிமன்றமும் வேறு ஏதாவது அடிப்படையில் பணி நியமனம் செய்ய அரசுக்கு பரிந்துரை செய்தது. இதனால் அரசு  தகுதி தேர்வுக்கு ஓரிரு நாட்களுக்கு முன் வெயிட்டேஜ் முறை என்ற ஒரு புதிய அரசாணையை வெளியிட்டது. முதன் முதலில் ஆசிரியர் தகுதி தேர்வு 2012 ஆம் ஆண்டு ஜூன் மாதம் தகுதி தேர்வு தாள் 1 மற்றும் தாள் 2 நடைபெற்றது. தேர்வில் சுமார் 4 முதல் 5 லட்சம் பேர் தேர்வை எழுதினர். தேர்வு முடிவு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டது. ஆனால் காலிப் பணியிடங்களை காட்டிலும் மிகக் குறைவான அளவில் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றனர் இதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மறுதேர்வை அக்டோபர் மாதம் நடத்தியது இதற்காக தேர்வு கட்டணம் ஏதும் வசூலிக்கப்படவில்லை. இதற்கான தேர்வு முடிவை நவம்பர் மாதம் வெளியிடப்பட்டது தேர்வில் இடைநிலை ஆசிரியர்கள் 12,000 க்கு மேலும் பட்டதாரி ஆசிரியர்கள் 10000 க்கு மேலும் தேர்ச்சி பெற்றனர் அப்போது ஏற்பட்ட காலிப் பணியிடங்களின் மூலம் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்பட்டது. பிறகு 2013 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஆசிரியர் தேர்வு வாரியம் தகுதி தேர்வை நடத்தியது ஆனால் இந்த தகுதி தேர்வில் அதிக அளவில் ஆசிரியர்கள் தேர்ச்சி பெற்றனர் இதனால் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் பணி நியமனம் வழங்க முடியவில்லை. எனவே வெயிட்டேஜ் முறையை அரசு பின்பற்றியது இந்த வெயிட்டேஜ் முறையை எதிர்த்து பாதிக்கப்பட்ட ஒரு சிலர் மதுரை உயர்நீதிமன்ற கிளையை நாடினர் நீதி அரசர் நாகமுத்து அவர்கள் வெயிட்டேஜ் முறையை அறிவியல் பூர்வமாக கணக்கிடும்படி அரசுக்கு பரிந்துரை செய்தார்.அதே சமயத்தில் அன்று முதலமைச்சராக இருந்த மறைந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் சட்டமன்றத்தில் தகுதி தேர்வுக்கான மதிப்பெண்ணை 90 ல் இருந்து 82 ஆக குறைத்தார்

 இது தற்போது நடைபெற்ற 2013-க்கும் பொருந்தும் என்றும் கூறினார்.

 எனவே எனவே தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் எண்ணிக்கை அதிகளவில் உயர்ந்தது. வெயிட்டேஜ் முறையில் 12 ம் வகுப்பு, இளங்கலையில் (UG) மற்றும் B.Ed யில் குறைந்த மதிப்பெண் பெற்றவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். அதுவரை போராடாத ஆசிரியர்கள் வெயிட்டேஜ் முறையை எதிர்த்து போராடினர் அரசும் இவரது போராட்டத்தை கண்டு கொள்ளவில்லை பாதிக்கப்பட்டவர்கள் நீதிமன்றத்தை நாடினர் நீதிமன்றமும் இடைக்கால தடை பிறப்பித்தது இருப்பினும் அரசு மேல்முறையீடு செய்து தடையை நீக்கியது. பணி நியமனம் இரவோடு இரவாக மாவட்ட கல்வி அலுவலகத்தில் வழங்கப்பட்டது. ஆசிரியர் தேர்வு வாரியம் 2017 ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதி தேர்வை நடத்தியது இதில் கணிசமான அளவில் தேர்ச்சி பெற்றனர் ஆனால் பணி நியமனம் ஏதும் வழங்கப்படவில்லை அதே ஆண்டில் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மீண்டும் ஒரு போட்டி தேர்வை நடத்த அரசாணை 149 பிறப்பித்தது. ஆசிரியர் தேர்வு வாரியம் 2019 ஆம் ஆண்டு மீண்டும் தகுதி தேர்வை நடத்தியது இதில் மிகக் குறைந்த அளவே தேர்ச்சி பெற்றனர். ஆசிரியர் தேர்வு வாரியம் 2021 ஆம் ஆண்டு வருடாந்திர தேர்வு அட்டவணையில் போட்டிதேர்வு அடிப்படையில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார் என அறிக்கை வெளியிட்டது. கிட்டத்தட்ட 10 ஆண்டுகளுக்கு பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் நியமன அறிவிப்பை வெளியிட்டது.அதில் இந்த ஆண்டுக்கான ஆசிரியர் தகுதி தேர்வும் நடைபெறும் என்றும் அறிவித்தது. முதன்முதலாக ஆசிரியர் தகுதித் தேர்வு கணினி வழியில் நடைபெற்றது. இதில் கணிசமான முறையில் தேர்ச்சி பெற்றுள்ளனர். தற்போது இடைநிலை ஆசிரியர்  6000 பணியிடங்களுக்கு மேல் உள்ளது இதற்கு 60,000 க்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.இதே போல் பட்டதாரி ஆசிரியர்களின் சுமார் 4000 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது இதிலும் 60 ஆயிரத்துக்கு மேற்பட்டோர் தேர்ச்சி பெற்றுள்ளனர். 


ஆசிரியர் தேர்வு வாரியம் மே மாதம் போட்டி தேர்வுக்கான அறிவிப்பை வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. ஆனால் 2013ல் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் 10 ஆண்டுகளுக்குப் பிறகு எங்களால் எவ்வாறு நியமன தேர்வை எதிர்கொள்ள முடியும் என்று நியமனத் தேர்வை ரத்து செய்ய(Go.149) வேண்டும் என்றும் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களை பதிவு மூப்பு அடிப்படையில் பணி நியமனம் (TET+ EMPLOYMENT SENINORITY) செய்யப்பட வேண்டும் என்று போராட்டத்தை தற்போது நடத்தி வருகிறார்கள் இந்த போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், கல்வியாளர்களும, ஆசிரியர் கூட்டமைப்பினரும், ஆதரவு அளித்து வருகிறார்கள்.

ஒரு சிலர் போட்டி தேர்வுக்கு தயார் செய்து கொண்டு வருகின்றனர்.

 ஆனால் தற்போது போட்டித் தேர்வு நடைபெறுமா ? அல்லது தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவரை நேரடி பணி நியமனம் செய்யப்படுவார்களா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம் 


      நன்றி வணக்கம்...

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...