Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label 8th Tamil refresher Answer. Show all posts
Showing posts with label 8th Tamil refresher Answer. Show all posts

8th Tamil Refresher course Unit 5 Answer key

8th Tamil Refresher course Unit 5 Answer key

Topic : சொற்களை இணைத்து தொடர் உருவாக்குதல் 

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

சொற்களைப் பயன்படுத்தித் தொடர்களை உருவாக்குக.

இணையம் காலை வகுப்பு

ஆசிரியர் குறிப்பு குறிப்பேடு

படங்கள் மகிழ்ச்சி தெளிவு

(எ.கா.) இணைய வகுப்பில் ஆசிரியர் கூறுவதைக் குறிப்பெடுத்துக் கொண்டான் .

ஆசிரியரின் காலை வகுப்பு மகிழ்ச்சியாக இருந்தது.

இணைய வகுப்பில் ஆசிரியர் காண்பித்த படங்கள் தெளிவாக இருந்தன.

இணையத்தில் குறிப்பு எடுப்பது குறித்து ஆசிரியர் தெளிவாகக் கூறினார்.

ஆசிரியரின் இணைய வகுப்பு தெளிவாக இருந்ததால் மகிழ்ச்சியடைந்தோம்.

வகுப்பு ஆசிரியர் இணையம் மூலம் படங்கள் காட்டி குறிப்பேட்டில் தெளிவாக எழுதச் சொன்னார்.

மதிப்பீட்டுச் செயல்பா டு - 2

கோடிட்ட இடங்களில் ஒரே சொல்லைக் கொண்டு தொடரினை நிரப்புக.

(எ.கா.) மாலா பூவைப் பறித்தாள். அவளிடமிருந்து லதா அதனைப் பறித்தாள்.

1. தந்தை , தனக்குக் கொடுத்த நிலத்தில் கால் பங்கு இடத்தினைக் கால் 

பந்து விளையாட்டு மைதானம் அமைக்க தானமளித்தார் செந்தில்.

2. பூக்கடையில் மாலை நேரத்தில் சென்றாலும் மாலை வாங்கலாம்.

3. இன்பம் தரும் இனிய மொழி தமிழ் . ஆதலால் அனைவரும் விரும்பித் தமிழ் கற்பீர் என்றார் ஆசிரியர் .

4. பல நூல்  கற்ற சான்றோர்கள் அந்நூல் கூறிய படி வாழ்ந்தனர்.

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

முறை மாறியுள்ள சொற்களை முறைப்படுத்திச் சொற்றொடர்களை உருவாக்குக.

(எ.கா.) முதல் விளையாட்டு கலையரசன் பரிசு போட்டியில் பெற்றான் .

கலையரசன் விளையாட்டுப் போட்டியில் முதல் பரிசு பெற்றான் .

1. நந்தினியும் இணைய மாலினியும் கலந்துரையாடினர் வகுப்பில்

நந்தினியும் மாலினியும் இணைய வகுப்பில் கலந்துரையாடினர்.

2. பிறந்தநாள் எனக்குப் அம்மா பரிசாக வாங்கிக் சட்டையை இந்தச் என் கொடுத்தார் .

எனக்குப் பிறந்தநாள் பரிசாக என் அம்மா இந்தச் சட்டையை வாங்கிக் கொடுத்தார்.

மதிப்பீட்டுச் செயல்பாடு - 4

சொற்களை இணைத்துத் தொடராக்குக.

நான் பள்ளிக்குச் சென்று வந்தேன்.

கண்ணன் பள்ளிக்குச் சென்று வந்தான்.

மாலதி பள்ளிக்குச் சென்று வந்தாள்.

மாணவர்கள் பள்ளிக்குச் சென்று வந்தனர்.

Share:

8th Tamil Refresher course Unit 6 Answer key

8th Tamil Refresher course Unit 6 Answer key

8th Tamil Refresher Unit 6 : செய்யுளின் மையக்கருத்தையும் மற்றும் சொற் பொருளையும் அறிதல் 

மதிப்பீட்டுச்செயல்பாடு - 1

வெற்றி மேல் வெற்றிவர விருதுவர பெருமை வர

மேதைகள் சொன்னது போல் விளங்கிட வேண்டும்

பெற்ற தாயின் புகழும் பிறந்த மண்ணின் புகழும்

வற்றாமல் உன்னோடு வாழ்ந்திட வேண்டும்.

    - பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்

மேற்கண்ட பாடலின் மையக் கருத்தினை எழுதுக.

மேலான அறிஞர்கள் கூறிய அறிவுரைகளின்படி வாழ வேண்டும். அதன் மூலம் வெற்றிகளையும் விருதுகளையும் பெருமையையும் பெற வேண்டும். பெற்ற தாயின் புகழும் நம் தாய்நாட்டின் புகழும் அழியாத வகையில் வாழ வேண்டும்.

மதிப்பீட்டுச்செயல்பாடு - 2

பாடலைப் படித்து அதன் சொற்பொருளை எழுதுக.

யாவரும் சமம்

சுற்றம் விலக்கி வாழாதே !

சூதின் பக்கம் போகாதே !

உற்றார் உறவைப் பழிக்காதே !

ஊரார் பழிக்க நடவாதே !

பெற்றோர் நோகப் பேசாதே !

பெரியோர் பாதை விலகாதே !

கற்றோர் நட்பை உதறாதே !

கவசம் அதுவே மறவாதே !

- பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்

சொற் பொருள் எழுதுக.

சுற்றம் - உறவுகள்

சூது - சூதாட்டம்

கவசம் - பாதுகாப்பு

பழி - குற்றம்

கற்றோர் படித்தோர்

Share:

8th Tamil Refresher course Unit 8 Answer key

8th Tamil Refresher course Unit 8 Answer key

8th Tamil Refresher Unit 8 : புதிர்களுக்கு விடையளித்தல் 

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

புதிருக்கான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(பட்டுக் கோட்டை , நூலகம், மூங்கில்காடு, பாரதியார் , பாய்மரக்கப்பல்)

1. முதலெழுத்து பாடலின் வேறு பெயரைக் குறிக்கும். 

முதல் எழுத்துடன் அடுத்த இரண்டும் சேர்ந்தால் பெயரைக் குறிக்கும். 
 இறுதி இரண்டு எழுத்துகள் வினாச் சொற்களைக் குறிக்கும். இம்மூன்று புதிர்களும் சேரக் கிடைப்பது. தமிழ்க்கவிஞர்களில் ஒருவரின் பெயர் . யார் அவர்? 

  • பாரதியார் 

2. முதல் மூன்று எழுத்துகள் காஞ்சிபுரத்தில் உற்பத்தி செய்யப்படுவதைக் குறிப்பது. 

 இறுதி மூன்றெழுத்துகள், அரசனின் பாதுகாப்பு அரணை இவ்வாறும் அழைப்பர் .

இவ்விரண்டும் சேர்த்தால் கிடைப்பது ஓர் ஊரின் பெயர் .

அது எந்த ஊர்?

  • பட்டுக்கோட்டை

3.  முதல் நான்கு எழுத்துகள், புல்லாங்குழல் செய்யப் பயன்படுவதைக் குறிக்கும். 

 இறுதி இரண்டு எழுத்துகளைக் கூட்டினால் மரம், செடி கொடிகள் நிறைந்த பகுதியைக் குறிக்கும்.

அது என்ன? ________________

  • மூங்கில் காடு

4.  முதல் இரண்டு எழுத்துகள் உறங்குவதற்கு உதவுவது. 

 இடையில் உள்ள மூன்றெழுத்துகள் உயிர்வாழ்வதற்கான காற்றைத் தருவது. 

 இறுதி நான்கு எழுத்துகள் கடலில் பயணிக்க உதவுவது.

அது என்ன? 

  • பாய்மரக் கப்பல்

5.  முதல் இரண்டு எழுத்துகள் மாணவர் கைகளில் தவழ்வது.

 இறுதி மூன்று புறம் என்ற சொல்லின் எதிர்ச்சொல்.

அது என்ன? 

  • நூலகம்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(ஆந்தை , மயில், கொக்கு, அணில், பாம்பு)

1. நான் ஓர் அழகு தேவதை ; ஆடும் தேவதை . நான் யார் ?

  • மயில்

2. வளைவேன் , நெளிவேன் , வயிறு கலங்க வைப்பேன் . நான் யார் ?

  • பாம்பு

3. மரத்திற்கு மரம் தாவுவேன் . முதுகில் மூன்று கோடுகள் கொண்டிருப்பேன் . நான் யார் ?

  • அணில்

4. நான் ஒற்றைக்காலில் நிற்கிறேன் . ஓடையிலே மீன் பிடிக்கிறேன் . நான் யார் ?

  • கொக்கு

5. பகலில் துயில்வேன் . இரவில் அலறுவேன் . நான் யார் ?

  • ஆந்தை

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

விடுகதைகளுக்கேற்ற விடைகளைத் தேர்ந்தெடுத்து எழுதுக.

(காளான் , எலுமிச்சம்பழம், தர்பூசணி, வெண்டைக்காய், மாதுளம்பழம்)

1. பச்சைப் பெட்டிக்குள் வெள்ளை முத்துக்கள் அது என்ன?

  • வெண்டைக்காய்

2. வெளியே பார்த்தால் பச்சை ; வெட்டிப் பார்த்தால் சிவப்பு; சுவைத்துப் பார்த்தால் இனிப்பு அது என்ன?

  • தர்பூசணி

3. எங்கள் வீட்டுத் தோட்டத்தில் மஞ்சள் குருவி ஊசலாடுது?

  • எலுமிச்சம்பழம்

4. சொம்பு நிறையக் கம்பு அது என்ன?

  • மாதுளம்பழம்

5. மழைக்காலத்தில் குடை பிடிப்பான் அவன் யார் ?

  • காளான்
Share:

8th Tamil Refresher course Unit 9 Answer key

8th Tamil Refresher course Unit 9 Answer key

8th Tamil Refresher Course Unit 9 : இணையான தமிழ்ச் சொற்கள் , கலைச்சொற்கள் அறிதல் 

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

கீழ்க்காணும் பத்தியைப் படித்து, ஆங்கிலச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களை எழுதுக.

மகிழன் காலையில் எழுந்தான் . தன் காலைக் கடன்களை முடித்தான் . காலைஉணவு சாப்பிட்டான் . 8.30 மணிக்குப் பள்ளி பேருந்தில் ஸ்கூலுக்குச் சென்றான் . பள்ளியில் காலை வழிபாட்டுக் கூட்டத்தில் கலந்து கொண்டான் . தனது வகுப்பில் டீச்சரிடம்  அனைத்துப் பாடங்களையும் சூப்பராகப் படித்தான் . மதியஉணவு இடைவேளையில் பிரண்சுடன் லஞ்ச் சாப்பிட்டான் . மதியம் கணிதப் பாடவேளையில் ஆசிரியர் கொடுத்த ஆக்டிவிட்டி செய்தான் . ஈவினிங் 4.30 மணிக்கு ஸ்கூல்பெல் ஒலித்தது. பள்ளி முடிந்து அனைவரும் வீட்டிற்குச் சென்றனர். வீட்டிற்குச் செல்லும் வழியில் ரோட்டில் செல்லும் பஸ், கார் , லாரி, மிதிவண்டி போன்ற வாகனங்களைக் கண்டு இரசித்தான் . வீட்டிற்குச் சென்றவுடன் யுனிபார்மை மாற்றிக் கை , கால்களைக் கழுவினான் . மம்மி கொடுத்த ஸ்நாக்சைச் சாப்பிட்டுவிட்டு தனது நண்பர்களுடன் விளையாடச் சென்றான் .

ஆங்கிலச் சொற்கள்             தமிழ்ச் சொற்கள்

  • ஸ்கூலுக்கு பள்ளிக்கூடத்திற்கு
  • டீச்சரிடம் ஆசிரியரிடம்
  • சூப்பராக சிறப்பாக
  • பிரண்சுடன் நண்பர்களுடன்
  • ஆக்டிவிட்டி செயல்பாடு
  • ஈவினிங் மாலை
  • ஸ்கூல்பெல் பள்ளி மணி
  • ரோட்டில் சாலையில்
  • பஸ் பேருந்து
  • கார் மகிழுந்து
  • லாரி சரக்குந்து
  • யுனிபார்ம் சீருடை
  • மம்மி அம்மா
  • ஸ்நாக்ஸ் நொறுக்குத்தீனி

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

படத்தைப் பார்த்து ஆங்கிலச் சொல்லுக்கு இணையான தமிழ்ச் சொல்லை எழுதுக.


நாள்காட்டி    வைரம்
நாடாளுமன்றம்    இசைக்கருவிகள்
வாழ்த்துகள்    ஆமை
வகுப்பறை    இயங்கும்படிக்கட்டு

மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

பிறமொழிச் சொற்களுக்கு இணையான தமிழ்ச் சொற்களைத் தேர்ந்தெடுத்து எழுதுக.
(ஆணை, பயன்பாடு, சிற்றுண்டி, அறிஞர், கருவூலம், பணி, வழிபாடு, இழப்பு)
பிறமொழிச் சொல்         தமிழ்ச்சொல்

  • ஆபூர்வம்         புதுமை
  • நஷ்டம்        இழப்பு
  • ஆராதனை        வழிபாடு
  • உத்தியோகம்        பணி
  • கஜானா        கருவூலம்
  • நிபுணர்        அறிஞர்
  • நாஷ்டா        சிற்றுண்டி
  • உபயோகம்        பயன்பாடு
  • உத்தரவு        ஆணை
Share:

8th Tamil Refresher course Unit 10 Answer key

 8th Tamil Refresher course Unit 10 Answer key

மதிப்பீட்டுச் செயல்பாடு 1

பின்வரும் படங்களிலிருந்து காற்புள்ளி அமையுமாறு தொடர் அமைத்து எழுதுக.


  • எனக்குப் பிடித்த காய்கறிகள் பீட்ரூட், காரட், முட்டைக்கோசு, தக்காளி.


  • இப்படத்தில் மரம், பறவை, விலங்கு ஆகியன உள்ளன.

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

வியப்புக்குறி அமையுமாறு தொடரமைக்க.



  • ஆகா! என்ன அழகான கட்டடக்கலை!



  • அடடே! மான் வலையில் மாட்டிக்கொண்டதே!


மதிப்பீட்டுச் செயல்பாடு - 3

முற்றுப்புள்ளி, வினாக்குறி, இரட்டை மேற்கோள் குறி அமையுமாறு தொடர்கள் அமைக்க.


  • காகம், மானிடம் "எப்படி மாட்டிக்கொண்டாய்?" என்று கேட்டது.



  • நரி, "நன்றாக இருக்கிறாயா?" என்று மானிடம் கேட்டது.

மதிப்பீட்டுச் செயல்பாடு - 4

கீழ்க்காணும் தொடர்களில் உரிய நிறுத்தக்குறிகளை இடுக.

1. நான் தண்டமிழைக் கற்று என் வாழ்வில் உயர்ந்தேன் என்று தமிழாசிரியர் கூறினார்

  • "நான் தண்டமிழைக் கற்று, என் வாழ்வில் உயர்ந்தேன்" என்று தமிழாசிரியர் கூறினார்.

2. அண்ணா சிந்தி சீர்தூக்கு செயல்படு என்று கூறினார்

  • அண்ணா, "சிந்தி, சீர்தூக்கு, செயல்படு" என்று கூறினார்.

3. தமிழ் இலக்கணம் ஐவகைப்படும் அவையாவன எழுத்து சொல் பொருள் யாப்பு அணி

  • தமிழ் இலக்கணம் ஐவகைப்படும். அவையாவன : எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி.

4. அடடே ஏனப்பா அழுகிறாய் என்ன வேண்டும் உனக்கு

  • அடடே! ஏனப்பா அழுகிறாய்? என்ன வேண்டும் உனக்கு?

5. அனுமனைப் பார்த்து இராவணன் வாலி நலமா என்று கேட்டான்

  • அனுமனைப் பார்த்து இராவணன், "வாலி நலமா?" என்று கேட்டான்.

6. இந்தச் சிலையை எங்கே வாங்கினீர்கள் நன்றாக இருக்கிறதே என்று கேட்டார்

  • "இந்தச் சிலையை எங்கே வாங்கினீர்கள்? நன்றாக இருக்கிறதே!" என்று கேட்டார்.
Share:

8th Tamil Refresher course Unit 11 Answer key

8th Tamil Refresher course Unit 11 Answer key

8th Tamil Refresher Course unit 11 : மயங்கொலிச் சொற்களை முறையாக ஒலித்தல் 

மதிப்பீட்டுச் செயல்பாடு - 1

பாடலைச் சரியான ஒலிப்புடன் படித்துப் பழகுக.

அன்னப் பறவை நடைநடந்து

அன்பை விதைத்துச் செல்வோமா?

வண்ணத் திரையின் காட்சிகளை

வரைந்து நாமும் மகிழ்வோமா?

முந்திச் செல்லும் மேகம் போல்

முன்பே மழையைப் பொழிவோமா ?

அந்தி வானக் கதிரோனாய்

அழகை வாரி இறைப்போமா?

- பாவலர்மணி இராம வேல்முருகன், வலங்கைமான்

மதிப்பீட்டுச் செயல்பாடு - 2

பின்வரும் தொடர்களுக்கு ஏற்ற சொல்லைப் பொருத்திப் படித்துப் பழகுக.

(சொல்லிப் , எழிலும், பிள்ளை , பாலும், கொள்ளை )

நல்ல பிள்ளை மெல்லத் தவழும்.

பிள்ளைச் செல்வம் கொள்ளை இன்பம்.

பள்ளிப்பிள்ளை சொல்லிப் பழகும்.

பழகப் பழகப் பாலும் புளிக்கும்.

அழகும் எழிலும் வலுவும் பொலிவும்.

Share:

8th Tamil Refresher course Unit 12 Answer key

8th Tamil Refresher course Unit 12 Answer key

மதிப்பீட்டுச் செயல்பாடு

பின்வரும் செய்தியைப் படித்து ‘வானொலியில் விளம்பர உரையாடலாக’ எழுதுக.


சென்னை வானொலியில்

உழைப்பாளர் தினச் சிறப்பு நிகழ்ச்சிகள்

சென்னை , மே .1

சென்னை வானொலியில் இன்று (சனிக்கிழமை ) உழைப்பாளர் தினத்தை முன்னிட்டு, மே தின சிறப்பு நிகழ்ச்சிகள் நாள் முழுவதும் ஒலிபரப்பாகின்றன. காலை 7 மணிக்கு, இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் பங்கு பெறும் சிறப்புப் பேட்டி ஒலிபரப்பாகிறது.

அதைத் தொடர்ந்து, காலை 10 மணிக்குச் சந்திராயன் திட்ட முன்னாள் இயக்குநர் , விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி ஒலிபரப்பாகிறது. நண்பகல் 12 மணிக்கு ஒலிபரப்பாகும் நிகழ்ச்சியில், ‘கண்டா வரச் சொல்லுங்க’ பாடல் புகழ் கிராமியப்பாடகி கிடாக்குழி மாரியம்மாள் கலந்து கொள்கிறார் .

பிற்பகல் 2மணிக்கு உழைப்பின் மகத்துவத்தை வெளிப்படுத்திய தமிழ்த் திரைப்படங்கள் பற்றிய தொகுப்பு இடம்பெறுகிறது.

கலா - மாலா, சென்னை வானொலியில் உழைப்பாளர் தின சிறப்பு நிகழ்ச்சிகள் குறித்து உனக்குத் தெரியுமா?

மாலா - தெரியுமே. காலை 7 மணிக்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் சிறப்புப் பேட்டி ஒலிபரப்பாகிறது.

கலா - அப்படியா, தவறாமல் கேட்க வேண்டும். அடுத்து ...

மாலா - காலை 10 மணிக்கு விஞ்ஞானி மயில்சாமி அண்ணாத்துரை கலந்து கொள்ளும் சிறப்பு நிகழ்ச்சி.

கலா - நேற்று தான் பாடப்புத்தகத்தில் அவர் குறித்து படித்தேன். அவசியம் கேட்க வேண்டும். அடுத்து ...

மாலா - நண்பகல் 12 மணிக்கு கிடாக்குழி மாரியம்மாள் நிகழ்ச்சி.

கலா - கிராமியப் பாடகியாச்சே, அருமையாக இருக்கும். அடுத்து...

மாலா - பிற்பகல் 2 மணிக்கு உழைப்பின் மகத்துவம் கூறும் திரைப்படத் தொகுப்பு.

கலா - அத்தனையும் அருமையான நிகழ்ச்சிகள், தவறாமல் கேட்டுவிடுகிறேன். நன்றி.

Share:

8th Tamil Refresher course Unit 13 Answer key

8th Tamil Refresher course Unit 13 Answer key

8th Tamil Refresher Course unit 13 - மன வரைபடம் உருவாக்குதல் 

மதிப்பீட்டுச் செயல்பாடு

கீழ்க்காணும் பத்தியைப் படித்து மனவரைபடம் வரைக.


உருவத்தில் சிறிய இந்தப் பழுப்புநிறப் பறவையைப் பார்த்தவுடனே ஆண், பெண் வேறுபாட்டை உணர முடியும். ஆண் குருவியின் தொண்டைப்பகுதி கருப்பு நிறத்தில் இருக்கும். பெண் குருவியின் உடல் முழுவதும் மங்கிய பழுப்பு நிறத்தில் இருக்கும். சிட்டுக்குருவி கூடுகட்டி வாழும் பறவையினத்தைச் சார்ந்தது. கூடு கட்டும் காலங்களில் சத்தமிட்டுக் கொண்டே இருக்கும். கூடுகட்டிய பின் மூன்று முதல் ஆறு முட்டைகள் வரை இடும். பதினான்கு நாள்கள் அடை காக்கும். பதினைந்தாம் நாளில் குஞ்சுகள் வெளிவரும். துருவப் பகுதிகள் தவிர மனிதன் வாழும் இடங்களில் எல்லாம் சிட்டுக்குருவிகளும் வாழ்கின்றன. இந்தியா முழுவதும் சிட்டுக்குருவிகளைக் காணலாம். இமயமலைத் தொடரில் 4000 மீட்டர் உயரத்தில் கூட இவை வாழ்கின்றன. தானியங்கள், புழு பூச்சிகள், மலர் அரும்புகள், இளந்தளிர்கள், தேன் போன்றவை சிட்டுக்குருவிகளின் உணவாகும். சிட்டுக்குருவியின் குஞ்சுகள் பெரும்பாலும் புழு, பூச்சிகளையே உட்கொள்ளும். அதனால், தாய்க்குருவி புழு பூச்சிகளைப் பிடித்துத் தம் குஞ்சுகளுக்கு ஊட்டிவிடும். சிட்டுக்குருவியின் வாழ்நாள் பத்து முதல் பதின்மூன்று ஆண்டுகள் ஆகும். சிட்டுக்குருவி உருவத்தில் சிறியது. ஆனாலும் வேகமாகப் பறக்கும். அதனால்தான் விரைவாகச் செல்பவனைச் ‘சிட்டாய்ப் பறந்து விட்டான் ’ என்று கூறுகிறோம்.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories