Daily TN Study Materials & Question Papers,Educational News

அன்னை மொழியே - 10th Tamil - Annai Mozhiye

அழகார்ந்த செந்தமிழே!

அன்னை மொழியே - 10th Tamil - Annai Mozhiye
அன்னை மொழியே - 10th Tamil - Annai Mozhiye

*அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே !

முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!

கன்னிக் குமரிக் கடல்கொண்ட நாட்டிடையில்

மன்னி அரசிருந்த மண்ணுலகப் பேரரசே!

தென்னன் மகளே! திருக்குறளின் மாண்புகழே!

இன்னறும் பாப்பத்தே! எண்தொகையே! நற்கணக்கே!

மன்னுஞ் சிலம்பே! மணிமே கலைவடிவே!

முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே! 

செப்பரிய நின்பெ ருமை

செந்தமிழே ! உள்ளுயிரே செப்பரிய நின்பெருமை

எந்தமிழ்நா எவ்வாறு எடுத்தே உரைவிரிக்கும்?

முந்தைத் தனிப்புகழும் முகிழ்த்த இலக்கியமும்

விந்தை நெடுநிலைப்பும் வேறார் புகழுரையும்

உந்தி உணர்வெழுப்ப உள்ளக் கனல்மூளச்

செந்தா மரைத்தேனைக் குடித்துச் சிறகார்ந்த

அந்தும்பி பாடும் அதுபோல யாம்பாடி

முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே!

- கனிச்சாறு

பாடலின் பொருள்

  • அன்னை மொழியே! 
  • அழகு நிறைந்த செழுந்தமிழே! 
  • பழமைக்கும் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே! 
  • கடல் கொண்ட குமரிக் கண்டத்தில் நிலைத்து அரசாண்ட மண்ணுலக ப் பேரரசே ! 
  • பாண்டிய மன்னனின் மகளே! 
  • திருக்குறளின் பெரும் பெருமைக் குரியவளே ! 
  • பத்துப்பாட்டே! 
  • எட்டுத்தொகையே! 
  • பதினெண் கீழ்க்கணக்கே !
  • நிலைத்த சிலப்பதிகாரமே ! 
  • அழகான மணிமேகலையே ! 
  • பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து  வாழ்த்துகின்றோம்.
  • செழுமை மிக்க தமிழே! 
  • எமக்குயிரே!
  • சொல்லுதற்கரிய நின் பெருமைதனை என்னுடைய தமிழ் நாக்கு எவ்வாறுதான் விரித்துரைக்கும்? 
  • பழம்பெருமையும் தனக்கெனத் தனிச் சிறப்பும் இலக்கிய வளமும் கொண்ட தமிழே! வியக்கத்தக்க உன்னுடைய நீண்ட நிலைத்த தன்மையும் வேற்று மொழியார் உன்னைப் பற்றி உரைத்த புகழுரையும் எமக்குள் பற்றுணர்வை எழுப்புகின்றன. எம்தனித்தமிழே!வண்டானது செந்தாமரைத் தேனை க் குடித்துச் சிறகசைத்துப் பாடுவது போன்று நா ங்கள் உன்னைச் சுவைத்து உள்ள த்தில் கனல் மூள, உன்  பெருமையை எங்கும் முழங்குகின்றோம்.
சாகும்போதும் தமிழ்படித்துச் சாகவேண்டும் – என்றன்
சாம்பலும் தமிழ்மணந்து வேகவேண்டும்
க. சச்சிதானந்தன

நூல்வெளி

பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் கனிச்சாறு (தொகுதி 1) தொகுப்பிலிருந்து 
இருவேறு தலைப்பில் உள்ள பாடல்கள் (தமிழ்த்தா ய் வாழ்த்து, முந்துற்றோம்
யாண்டும்) எடுத்தாளப்பட்டுள்ளன. தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாகத்  தமிழுணர்வை உலகெங்கும் பரப்பியவர் துரை. மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்ட பெருஞ்சித்திரனார்.
இவர் உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், கனிச்சாறு, எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி,பள்ளிப் பறவைகள் முதலிய நூல்களைப் படைத்துள்ளார் . இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை, 
தமிழுக்குக் கருவூலமாய் அமைந் துள்ளது. இவரது நூல்கள் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன.

Share:

0 Comments:

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Blog Archive

Definition List

Unordered List

Support