Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label 9th Tamil Basic Quiz. Show all posts
Showing posts with label 9th Tamil Basic Quiz. Show all posts

9th Tamil Full Guide Book & Creative Questions - PDF Download

9th Tamil Full Guide Book & Creative Questions - PDF Download

9th Tamil Guide Book Back & Creative Answers
Unit 1 - திராவிட மொழிக்குடும்பம் Click Here
Unit 1 - தமிழோவியம் Click Here
Unit 1 - தமிழ்விடு தூது Click Here
Unit 1 - வளரும் செல்வம் Click Here
Unit 1 - தொடர் இலக்கணம் Click Here
Unit 2 - நீரின்றி அமையாது உலகு Click Here
Unit 2 - பட்டமரம் Click Here
Unit 2 - பெரியபுராணம் Click Here
Unit 2 - புறநானூறு Click Here
Unit 2 - தண்ணீர் Click Here
Unit 2 - துணைவினைகள் Click Here
Unit 3 - ஏறுதழுவுதல் Click Here
Unit 3 - மணிமேகலை Click Here
Unit 3 - அகழாய்வுகள் Click Here
Unit 3 - வல்லினம் மிகும் இடங்கள் Click Here
Unit 3 - திருக்குறள் Click Here
Unit 4 - இயந்திரங்களும் இணையவழிப் பயன்பாடும் Click Here
Unit 4 - ஓ, என் சமகாலத் தோழர்களே Click Here
Unit 4 - விண்ணையும் சாடுவோம் Click Here
Unit 4 - வல்லினம் மிகா இடங்கள் Click Here
Unit 5 - கல்வியிற் சிறந்த பெண்கள் Click Here
Unit 5 - குடும்ப விளக்கு Click Here
Unit 5 - சிறுபஞ்சமூலம் Click Here
Unit 5 - வீட்டிற்கோர் புத்தகசாலை Click Here
Unit 5 - இடைச்சொல் – உரிச்சொல் Click Here
Unit 6 -வணிக வாயில் Click Here
Unit 6 - நான்மாடக்கூடல் Click Here
Unit 6 - மதுரைக்காஞ்சி Click Here
Unit 6 - சந்தை Click Here
Unit 6 - ஆகுபெயர் Click Here
Unit 6 - திருக்குறள் Click Here
Unit 7 - சிற்பக்கலை Click Here
Unit 7 - இராவண காவியம் Click Here
Unit 7 - நாச்சியார் திருமொழி Click Here
Unit 7 - செய்தி Click Here
Unit 7 - புணர்ச்சி Click Here
Unit 8 - பழந்தமிழர் சமூக வாழ்க்கை Click Here
Unit 8 - சீவக சிந்தாமணி Click Here
Unit 8 - முத்தெள்ளாயிரம் Click Here
Unit 8 - இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர் பங்கு Click Here
Unit 8 - பொருளிலக்கணம் Click Here
Unit 9 - பெரியாரின் சிந்தனைகள் Click Here
Unit 9 - ஒளியின் அழைப்பு Click Here
Unit 9 - தாவோ தே ஜிங் Click Here
Unit 9 - யசோதர காவியம் Click Here
Unit 9 - மகனுக்கு எழுதிய கடிதம் Click Here
Unit 9 - யாப்பிலக்கணம் Click Here
Unit 10 - விரிவாகும் ஆளுமை Click Here
Unit 10 - அக்கறை Click Here
Unit 10 - குறுந்தொகை Click Here
Unit 10 - தாய்மைக்கு வறட்சி இல்லை Click Here
Unit 10 - அணியிலக்கணம் Click Here
Share:

9th Tamil Basic Quiz 1 - Answer key ( வினாடி வினா)

9th Tamil Basic Quiz 1 - Answer key ( வினாடி வினா)

  • இயல்1 - பயிற்சித்தாள் -  ஒன்பதாம் வகுப்பு - தமிழ் 
  • உரைநடை உலகம் - திராவிட மொழிக்குடும்பம்

1. திராவிட மொழிக்குடும்ப அடிப்படையில் மாறுபட்டதைக் கண்டறிந்து காரணம் எழுதுக

அ) கூயி ஆ) கோண்டா

இ) குரூக்  ஈ) கோயா

விடை- குருக்- வடதிராவிடம் - 

மற்ற மூன்றும் நடுத்திராவிட மொழிகள்.

2. திராவிட மொழிக்குடும்பம் குறித்து ஆய்வு மேற்கொண்ட மொழி ஆராய்ச்சியாளர்நால்வரின் பெயரைக் குறிப்பிடுக.

பிரான்சில் எல்லிஸ்,  கால்டுவெல் , ஹோக்கன் , எமினோ

3. தொன்மை, தனித்தன்மை - இரு சொல்லையும் ஒரே தொடரில் அமைத்து எழுதுக.

தமிழ்மொழி தொன்மையும் , தனித்தன்மையும் வாய்ந்த மொழியாகும் . 

4. உரைப்பகுதியைப் படித்து வினாக்கள் இரண்டனை உருவாக்குக.

                   1856இல் திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் என்னும் நூலில் கால்டுவெல்,திராவிட மொழிகள், ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை எனவும் இம்மொழிகள் சமஸ்கிருத மொழிக்குள்ளும் செல்வாக்குச் செலுத்தியுள்ளன எனவும் குறிப்பிட்டார். இதனை மேலும் உறுதிப்படுத்த பல்வேறு இலக்கணக் கூறுகளைச் சுட்டிக்காட்டி, திராவிட மொழிகளுக்குள் இருக்கும் ஒற்றுமைகளையும்எடுத்துரைத்தார்.

வினாக்கள் 

1 ) ' திராவிட மொழிகளின் ஒப்பிலக்கணம் ' என்னும் நூலின் ஆசிரியர் யார் ?

2 ) திராவிட மொழிகள் ஆரிய மொழிக்குடும்பத்தில் இருந்து வேறுபட்டவை என நிறுவியவர் யார் ?

5 ) திராவிட மொழிக்குடும்பத்தின் வகைகள் யாவை ? உங்கள் தாய்மொழி எந்தத் திராவிட மொழிக்புடும்பத்தைச் சேர்ந்தது ?

திராவிட மொழிக்குடும்பத்தின் வகைகள்

1 ) தென்திராவிட மொழிகள் 

2) நடுத்திராவிட மொழிகள்

3 ) வடதிராவிட மொழிகள்

என் தாய்மொழியான தமிழ்மொழி தென்திராவிட மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தது

அட்டவணையைப்படித்து 6 முதல் 8 வரையிலான வினாக்களுக்கு விடையளிக்க.

6 ) தெலுங்கு , கன்னட மொழிகளில் பொதுவாக உள்ளசொற்களை எழுதிஅவற்றிற்கான தமிழ்ச் சொற்களை எழுதுக.

நூரு , நூரு  - நூறு

நாலுகு ,நாலு  - நான்கு

ஐது , ஐது  - ஐந்து

7 ) இரண்டு என்னும் தமிழ்ச்சொல் மலையாளம் , தெலுங்கு மொழிகளில் எந்த முன்னொட்டைப் பெறுகிறது ?

மலையாளம் , தெலுங்கு - ஈர்ரெண்டு - ' ஈர் ' என்னும் முன்னொட்டைப் பெறுகிறது.

8 ) ' நீ ' என்னும் சொல் கன்னடம் , துளு போன்ற மொழிகளில் எவ்வாறு பயன்படுத்தப்படுகிறது ?

  நீ என்னும் சொல் கன்னடத்தில் ' நீன் ' என்றும்  , துளுவில் ' ஈ'என்றும் பயன்படுத்தப் படுகிறது.

9 ) இரண்டு புதிருக்குமான ஒரே விடையைக் கண்டறிக.

அ) இது ஒரு நான்கெழுத்துச் சொல் . மண்ணிலே மறைந்திருக்கும்.மதிப்பு மிகுந்திருக்கும். முதலெழுத்தை நீக்கிவிட்டால் தொழிலாகும்.அது என்ன ?

விடை - புதையல் , தையல்

ஆ ) இரண்டாம் எழுத்தை நீக்கிவிட்டால் ஊரையே நாசமாக்கும்.இடை எழுத்துகள் இரண்டை எடுத்துவிட்டால் மாடும்தின்னும்.மாதம் ஒன்று மறைந்திருக்கும். அது என்ன ?

விடை - புயல் , புல்.

10 ) ' பிரான்சிஸ் எல்லிஸ் ' என்பாருக்கும்  ' தென்னிந்திய மொழிகள் '  என்பதற்கும் உள்ள தொடர்பினை எழுதுக.

1 ) முதன் முதலில் தமிழ் , தெலுங்கு , கன்னடம் , மலையாளம் போன்ற மொழிகளை ஒப்புமைப்படுத்தி ஆராய்ந்தவர் பிரான்சிஸ் எல்லிஸ்.

2 ) தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் ஆகியவை தனியொரு மொழிக்குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற கருத்தை முன்வைத்தவர் இவர்.

3 ) தமிழ் , தெலுங்கு , மலையாளம் , கன்னடம் முதலிய மொழிகளை ஒரே இனமாகக் கருதி ' தென்னிந்திய மொழிகள் 'எனப் பெயரிட்டவரும் இவரே.


11 )பின்வரும் திராவிட மொழிக்குடும்பத்தின் பண்பினைப் படித்து ஏற்ற எடுத்துக்காட்டுகளைஎழுதுக.

பண்பு:திராவிடமொழிகளில் குறில் , நெடில் வேறுபாடுகள் பொருளை வேறுபடுத்தத் துணைசெய்கின்றன.

எ.கா - வளி - வாளி 

அடி - ஆடி 

கொடு - கோடு

படு - பாடு 

விடு - வீடு

12 ) 'தமிழ்மொழியின் தனித்தன்மை  'என்னும் தலைப்லிற்கான குறிப்புகளைக் கொண்டு ஒரூ பக்க அளவில் கட்டுரை எழுதுக.

முன்னுரை - தமிழ்மொழி - தொன்மை - இலக்கண இலக்கிய வளம் - தனித்தியங்கும் மொழி - சொல்வளம் - தனித்தன்மை - முடிவுரை

13 ) திராவிடமொழிகளின் பண்பினைப் படித்துப் பின்வரும் அட்டவணையை நிரப்பி நிறுவுக.

  ஆங்கிலம் போன்ற மொழிகளில் வினைச்சொல் காலத்தை மட்டும் காட்டும். திணை , பால் , எண் , இடம் ஆகிய வேறுபாட்டைக்காட்டுவதில்லை. திராவிட மொழிகளின் வினைச்சொற்கள்  இவற்றைத் தெளிவாகக் காட்டுகின்றன.

அட்டவணை 


நிறுவும் கருத்து 

தமிழ் மொழியில் அஃறிணையில்  பால்பகுப்பு இல்லை.ஆண் , பெண் வேறுபாடு உண்டு.அஃறிணைச் சொற்களில் பால்காட்டும் விகுதிகள் இல்லை. தன்மை முன்னிலை இடச்சொற்களில் பெயர்ச்சொல்லைக்கொண்டே பால்பகுப்புக் கூறமுடியும்.

    இப்பண்புகள் ஆங்கிலத்தில் இல்லை.வினைச்சொல்லைக்  கொண்டு திணை , பால் , எண் , இடம் ஆகியவற்றைஆங்கிலத்தில் அறிய முடியாது.

14 ) தமிழ் மொழியிலுள்ள வேர்ச்சொற்கள் , பயன்பாட்டில் எஙவ்வாறு வடிவமாற்றம் பெறுகின்றனென்பதை 'வா, தா , செல் ஆகிய வேர்ச்சொற்களைக்கொண்டு விளக்குக.

விடையைக் குறிப்பேட்டில் எழுதுக.

வா- வந்த , வரும் , வந்தான் , வந்தது , வந்தன , வருவார்கள்.

தா - தரும் , தந்தது , தந்தன , தருவான் , தருவாள் , தருவார்கள்

செல் - செல்லும் , சென்றது , சென்றன , செல்வான் , செல்வாள் , சென்றார்கள் , செல்வார்கள்.

15 ) படமும் , செய்தியும்உணர்த்தும் கருத்து குறித்து ஐந்து வரிகள் எழுதுக.

1 ) ஆப்பிரிக்க கண்டத்தில் உள்ள மொரிசியஸ் நாட்டின் பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

2) தமிழகத்தின் அண்டை நாடானிலங்கை நாட்டின்பணத்தாளில் தமிழ்மொழி இடம்பெற்றுள்ளது.

3 ) இலங்கை , மலேசியா, சிங்கப்பூர் முதலிய நாடுகளில் தமிழ் பேச்சு மொழியாக உள்ளது.

4 ) இங்கிலாந்து , கனடா போன்ற ஐரோப்பிய நாடுகளிலும் பேசப்படும் பெருமை உடையது தமிழ்மொழி.

5 ) தமிழ்நாட்டில் மட்டுமன்றி உலகமெங்கும் பேசப்படும் பெருமையுடையது தமிழ் மொழி.

Share:

9th Tamil Basic Quiz 2 - Answer key

9th Tamil Basic Quiz 2 - Answer key

  • ஒன்பதாம் வகுப்பு - தமிழ் - இயல் - 1

  • கவிதைப்பேழை - தமிழோவியம்

  • Basic Quiz - 2 ( வினாடி வினா)

1.) கருத்தைப் படித்து ஆசிரியரின் பெயரைத் தெரிவுசெய்க.

'வணக்கம் வள்ளுவ' நூலின் ஆசிரியர் மற்றும் ஹைக்கூ, லிமரைக்கூ, சென்ரியு எனப்புதுப்புது வடிவங்களில் கவிதை நூல்களை வெளிட்டவர்.

அ) கவிஞர் தமிழ்ஒளி

ஆ)வைரமுத்து

இ) ஈரோடு தமிழன்பன்

ஈ) பாரதிதாசன்

விடை- இ) ஈரோடு தமிழன்பன்

2. பாடலிலுள்ள எதுகை, மோனைச் சொற்களை எழுதுக.

"காலம் பிறக்கும் முன் பிறந்தது தமிழே! எந்தக்

காலமும் நிலையாய் இருப்பதும் தமிழே!"

மோனை -  கா

காலமும்  

காலமும்   

எதுகை  - ல

காலமும் 

காலமும்

3."மானிட மேன்மையைச் சாதித்திடக்-குறள் மட்டுமே போதுமே ஓதி,நட" என்ற பாடலடியில் எதை ஓதி, பின்பற்ற வேண்டுமெனக் கவிஞர் குறிப்பிடுகிறார்?

திருவள்ளுவர் இயற்றிய திருக்குறளை ஓதி , பின்பற்ற வேண்டுமெனக் கவிஞர் குறிப்பிடுகிறார்.


4. பின்வரும் புதுக்கவிதையில் நிலா எதற்கு ஒப்பிடப்பட்டுள்ளது?

"நள்ளிரவில்

மௌனமான கப்பல் தளத்திற்கு மேலே

கப்பலின் உயர்ந்த கூம்பில் சிக்கியிருக்கிறது நிலா

தூரத்தில் காணும் அது

விளையாடிய குழந்தை மறந்துவிட்ட பலூன் தான்"

 கப்பலின் உயர்ந்த கூம்பில் காட்சியளிக்கும் நிலா , குழந்தை மறந்துவிட்ட பலூனுடன் ஒப்பிடப் பட்டுள்ளது.


5. பாடலடிகளிலுள்ள அடிக்கோடிட்ட சொற்களுக்கு இலக்கணக்குறிப்பு தந்து,

அச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.


"எத்தனை எத்தனை சமயங்கள் - தமிழ்

ஏந்தி வளர்த்தது தாயெனவே"

எத்தனை எத்தனை - அடுக்குத்தொடர்

தமிழ் மொழியில் எத்தனை எத்தனை இலக்கியங்கள் !

ஏந்தி வளர்த்தது - வினையெச்சத் தொடர்

தமிழ் தாயைப்போல ஏந்தி வளர்த்த சமயங்கள் பல உண்டு.

6.ஹைக்கூ கவிதைகள் தரும் பொருளை உரைநடை வடிவில் எழுதுக.

அ) உலகம் முழுமைக்கும்

உணவளிக்கும் வயல்

சோற்றுக்கிண்ணம்!

 விடை : உலகின் சோற்றுக் கிண்ணம் வயலாகும். உலகம் முழுமைக்கும் உணவு தரும் சோற்றுக் கிண்ணமாக வயல் ஒப்பிடப்பட்டுள்ளது.

ஆ) உலகம் இயங்க

இதயம் ஆனவன்

விவசாயி!

விடை : உடல் இயங்க இதயம் நன்முறையில் வேலை செய்ய வேண்டும். அதுபோல , உலகம் உணவால் சிறக்க விவசாயி முக்கியம்.

7. பின்வரும் இயைபுச்சொற்களைத் தொடரில் அமைத்து எழுதுக.

அ) கேட்டு வரும்

ஆ) பாட்டு வரும்

(எ.கா.) "ஏனிவ் விருட்டெனக் கேட்டு வரும் - நீதி

ஏந்திய தீபமாய்ப் பாட்டு வரும்."


விடை : அம்மா , ஒரு பாடல் பாடுங்களேன் எனக் கேட்டு வரும் மாணவர்களின் மனம் மகிழ , தமிழாசிரிடம் இருந்து உடனே பாட்டு வரும்.


8. கவிதையை நீட்டித்து ஆறுவரிகள் எழுதுக.


'சங்கம் வளர்த்த மொழி

சான்றோர் போற்றும் மொழி

தென்னவன் வளர்த்த மொழி

தேனினும் இனிய மொழி 

காப்பியங்கள் கொண்ட மொழி 

காவியங்கள் தந்த மொழி

முன்னவர் புகழும் மொழி

முக்காலமும் வாழும் மொழி

9.) பாடலடியைப் படித்துத் தமிழ் இலக்கிய நூல் ஒன்றன் பெயரையும் தமிழ் இலக்கணநூல் ஒன்றன் பெயரையும் எழுதுக.

"அகமாய்ப் புறமாய் இலக்கியங்கள் - அவை

அமைந்ததைச் சொல்லும் இலக்கணங்கள்"

இலக்கிய நூல் - அகநானூறு

இலக்கண நூல் - தொல்காப்பியம்

10. படங்கள் இரண்டுடன் உங்கள் எண்ணங்களை இணைத்துக் கவிதை வடிவில் எழுதுக.

மாட்டு வண்டிக் காலமெல்லாம் 

மலையேறிப் போனதென்று 

சக்கரம் உருட்டும் 

சங்கத் தமிழ்சிறுமிகள்.

Share:

9th Tamil Basic Quiz Question - Answer key

9th Tamil Basic Quiz Question - Answer key

9th std Tamil All topics Basic Quiz Question and answer key PDF download.9th Tamil Basic Quiz answer key PDF download 2021 - 2022.

9th Tamil Basic Quiz answer key 

  • 9th Tamil Basic Quiz 3 - Answer key
  • 9th Tamil Basic Quiz 4 - Answer key
  • 9th Tamil Basic Quiz 5 - Answer key
  • 9th Tamil Basic Quiz 6 - Answer key
  • 9th Tamil Basic Quiz 7 - Answer key
  • 9th Tamil Basic Quiz 8 - Answer key
  • 9th Tamil Basic Quiz 9 - Answer key
  • 9th Tamil Basic Quiz 10 - Answer key
  • 9th Tamil Basic Quiz 11 - Answer key
  • 9th Tamil Basic Quiz 12 - Answer key
  • 9th Tamil Basic Quiz 13 - Answer key
  • 9th Tamil Basic Quiz 14 - Answer key
  • 9th Tamil Basic Quiz 15 - Answer key
  • 9th Tamil Basic Quiz 16- Answer key
  • 9th Tamil Basic Quiz 17 - Answer key
  • 9th Tamil Basic Quiz 18 - Answer key


9th std Tamil All topics Basic Quiz Question and answer key PDF download.9th Tamil Basic Quiz answer key PDF download 2021 - 2022.
Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories