Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label Teachers. Show all posts
Showing posts with label Teachers. Show all posts

ஆசிரியர்கள் கம்பு எடுத்தால் மாணவர்கள் கம்பி எண்ண வேண்டாம்

ஆசிரியர்கள் கம்பு எடுத்தால் மாணவர்கள் கம்பி எண்ண வேண்டாம்!



மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பதற்கு ஆசிரியர்கள் கையில் சிறிய கம்பை உபயோகிக்காமல் வைத்திருந்தாலே மாணவர்களிடம் நல்ல மாற்றமும் ஒழுக்கமும் வந்துவிடும் – கேரள ஐகோர்ட் நீதிபதி கருத்து


சமீபக் காலமாகத் தமிழகத்தில் பள்ளிகளில் மாணவர்களிடையே அரங்கேறி வரும் ஒழுங்கீனங்கள் பெரும் அதிர்வலையை உருவாக்கி உள்ளன. மாணவர்கள் செய்யும் சீர்கேடுகளைத் தட்டிக்கேட்டுத் திருத்துவதற்கான அதிகாரம் ஆசிரியர்களுக்கு வழங்கப்படவில்லை. இதனால், நாளுக்கு நாள் பள்ளி மாணவர்கள் மத்தியில் பொறுத்துக் கொள்ள முடியாத அளவுக்குச் சீர்கேடுகள் அதிகரித்துக் கொண்டே வருகின்றன.


பள்ளிப்பருவத்தில் மாணவர்கள் செய்யும் சின்னஞ் சிறு குறும்புகள், ஒழுங்கீனங்கள், சீர்கேடுகள் ஆகியவற்றை கண்டித்தும், தண்டித்தும், அறிவுரைக் கூறியும் திருத்தி, சமுதாயத்தில் அவர்களை மாண்புமிகு மனிதர்களாக மாற்றுவது ஆசிரியர்களின் தலையாயக் கடமையாக இருந்தது. தவறிழைக்கும் பிள்ளைகளை, அதிலிருந்து திருத்தி நல்வழிப் படுத்தும் பெரும் பொறுப்பு பெற்றோருக்கு அடுத்தப்படியாக ஆசிரியர்களுக்கு மட்டுமே உண்டு. அதனால்தான் ஆசிரியர்களை மாணவர்களின் இரண்டாவது பெற்றோர் என்கின்றனர் கல்வியாளர்கள்.


ஆனால், இன்று நிலைமை தலைகீழாக மாறியுள்ளது. பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்ன தவறு செய்தாலும் அவர்களை கண்டிக்கவோ, தண்டிக்கவோ அல்லது அறிவுரைக் கூறுவதற்கான உரிமையோ கூட ஆசிரியர்களுக்கில்லை. அரசின் சட்டங்களால் ஆசிரியர்களின் வாய்களுக்குப் பூட்டும், கைகளுக்குக் கட்டும் போடப்பட்டிருக்கின்றன.


அதனால், தவறு செய்யும் மாணவர்களைத் தட்டிக்கேட்கும் ஆசிரியர்களின் உயிருக்கே உத்தரவாதமில்லை. அவர்கள் வகுப்பறையிலும் பொதுவெளிகளிலும் மாணவர்களின் தாக்குதலுக்கும், கொலைவெறிக்கும் ஆளாகின்றனர். அதையும் தாண்டி மாணவர்களின் ஒழுங்கீனங்களைத் திருத்துவதற்கு முயற்சிக்கும் ஆசிரியர்கள், அரசின் சட்டத்திற்குள் அகப்பட்டு, எவ்வித விசாரணையுமின்றி ஜெயிலுக்குள் அடைக்கப்படுகின்றனர்.


இது மாணவர்கள், ஆசிரியர்களுக்கு மரியாதைக் கொடுத்து, அவர்களை அனுசரித்து நடந்த காலம் மாறி, இன்று ஆசிரியர்கள் மாணவர்களைப் பார்த்துப் பயங்கொள்ளும் நிலையை உருவாக்கியுள்ளது. இந்நிலை தமிழகத்தில், கல்வித்துறையில் கற்றல், கற்பித்தலில் பெரும் இடைவெளியை உருவாக்கியுள்ளது. இதற்கு முழுமுதற் காரணம் பள்ளிக்கூடங்களில் தவறிழைக்கும் மாணவர்களைத் திருத்துவதற்கான சிறு தண்டனை கூட ஆசிரியர்களால் வழங்க வழியின்மையாகும்.


முன்பெல்லாம் மாணவர்கள், பள்ளியில் தவறிழைத்து ஆசிரியர்கள் அதற்குக் கடும் தண்டனை அளித்தால் கூட மாணவர்களின் பெற்றோர், தன் பிள்ளை தவறிலிருந்து திருந்தி வரவேண்டும் என்பதற்காகத் தண்டனை வழங்கிய ஆசிரியர்களுக்கு ஆதரவாக இருந்து வந்தனர். ஆனால் இப்பொழுது, மாணவர்கள் தடம் மாறும் போது ஆசிரியர்கள் தண்டனை வழங்கினால், அந்த மாணவர் சார்ந்திருக்கும் ஜாதி, மத, அரசியல் கட்சியினர் அனைவரும் ஒண்றிணைந்து, அவர்களின் சுய லாபத்திற்காக அப்பாவிப் பெற்றோரைத் தூண்டிவிட்டு ஆசிரியருக்கும், கல்வி நிறுவனத்திற்கும் எதிராகப் போராட்டக் களத்தில் இறங்கி விடுகின்றனர். அதோடு சமூக வலைதளங்களும் அவர்கள் பங்கிற்கு அவற்றைப் பூதாகரமாக்கின்றன.


இதனால் அவ்வாசிரியர் மட்டுமின்றி பள்ளி நிர்வாகிகள் வரை கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுகின்றனர். சமீபத்தில் விழுப்புரம் மாவட்டத்தில், ஓர் அரசு உயர்நிலைப் பள்ளியில் ஆறாம் வகுப்புப் படிக்கும் மாணவன், அப்பள்ளியில் படிக்கும் மாணவியை தாக்கியுள்ளார். இதனை கண்டித்த அப்பள்ளி உடற்கல்வி ஆசிரியரை, சஸ்பெண்ட் செய்து, பள்ளி தலைமையாசிரியை பணியிட மாற்றமும் செய்துள்ளது கல்வித்துறை.


வகுப்பறையில் மாணவர்களுக்கிடையே நடக்கும் சிறுசிறு பிரச்னைகள், அவர்களுக்குள்ளே கொலை செய்யும் அளவிற்கு மாறுகிறது. அதுதான் சமீபத்தில் திருநெல்வேலி மாவட்டத்தில் ஒரு மாணவனை, அப்பள்ளி சகமாணவர்களே பள்ளியின் வெளியில் வைத்துக் கொலை செய்த சம்பவம். திருநெல்வேலி மாவட்டத்தில் நடக்கும் கொலைகளில், கொலையாளிகளின் பட்டியலில் இளம் சிறார்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கிடைத்த தகவல் கூறுகிறது.


தமிழகத்தில் பள்ளிக்கூடங்களில் போதைப் பொருட்களின் புழக்கம் பல்வேறு விதங்களில் அதிகரித்து வருவதால், தொடக்க நிலையில் படிக்கும் மாணவர்களே அதற்கு அடிமையாகி வருகின்றனர். இதனால் சிறு வகுப்பிலிருந்தே மாணவர்கள் கீழ்படிதலற்றவர்களாக மாறுகின்றனர். அவர்களை சீர்படுத்துவதற்கே பெரும் சிரமமாக உள்ளது என ஆசிரியர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.


இந்நிலையில், ‘பள்ளிகளில் மாணவர்கள் ஒழுக்கத்தைக் கடைபிடிக்க வேண்டுமென்றால் ஆசிரியர்கள் கையில் கம்பு வைத்திருக்க வேண்டும்’ என கேரள மாநில ஐகோர்ட் நீதிபதி குஞ்சுகிருஷ்ணன், கேரள மாநில ஆசிரியர்களுக்கும் கல்வித்துறைக்கும் அறிவுரை வழங்கியுள்ளார். கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்தில் ஒரு பள்ளியில் ஆறாம் வகுப்பு படிக்கும் மாணவனை, ஆசிரியர் கம்பால் அடித்தார் எனப் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். அவ்வாசிரியர் மீது போலீசார் கிரிமினல் வழக்குப் பதிவுச் செய்துள்ளனர். அதனால் ஆசிரியர் முன்ஜாமீன் கோரி ஐகோர்ட்டில் மனுவளித்துள்ளார்.


அந்த மனுவை விசாரித்த நீதிபதி குஞ்சுகிருஷ்ணன், ஆசிரியருக்கு முன்ஜாமீன் வழங்கியதோடு, ‘மாணவர்கள் ஒழுக்கமுடன் இருப்பதற்கு ஆசிரியர்கள் கையில் சிறிய கம்பை உபயோகிக்காமல் வைத்திருந்தாலே மாணவர்களிடம் நல்ல மாற்றமும் ஒழுக்கமும் வந்துவிடும். மாணவர்களின் எதிர்கால நலனுக்காக அவர்களுக்குச் சிறிய தண்டனைக் கொடுத்தாலே கிரிமினல் வழக்கு வந்துவிடும் என்ற அச்சத்துடன் ஆசிரியர்கள் வேலை செய்யக் கூடிய நிலை இருக்கக் கூடாது. புகார் அளித்தார்கள் என்பதற்காக போலீசாரும் உடனடியாக வழக்குப் பதிவுச் செய்யக் கூடாது. இன்றைய மாணவர்கள் போதைப் பொருள்களுக்கு அடிமையாகி, ஆசிரியர்களை மிரட்டி பயமுறுத்துவது, அவர்கள் மீது தாக்குதல் நடத்துவது போன்ற சம்பவங்கள் நடக்கின்றன. புதிய தலைமுறைகளின் சிற்பிகள் தான் ஆசிரியர்கள். அவர்கள் சுதந்திரமாகச் செயல்பட வேண்டும்’ என அரசுக்கும் காவல் துறைக்கும் அறிவுரை கூறியுள்ளார்.


நீதிபதியின் இவ்வறிவுரை கேரள மாநில ஆசிரியர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இவ்வறிவுரை கேரள மாநில ஆசிரியர்களுக்கு மட்டுமின்றி நம் நாட்டின் ஒட்டுமொத்த ஆசிரியர் சமுதாயத்திற்கும் பொருத்தமுடையதாகும்.


எனவே, மாணவர்களின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு, அவர்களை நல்வழிப்படுத்த ஆசிரியர்கள் என்னென்ன நடைமுறைகளைக் கையாளலாம் என்ற வழிகாட்டி நெறிமுறையைத் தமிழக அரசும் கல்வித்துறையும் உருவாக்க வேண்டும். என்றால் மட்டுமே ஆசிரியர்கள் அச்ச உணர்வின்றி சுதந்திரமாகத் தங்களின் கடமைகளைச் செய்ய முடியும். மாணவர்களையும் சிறந்த குடிமகன்களாக உருவாக்க முடியும்.


முனைவர் கமல. செல்வராஜ், தென்மாநில ஒருங்கிணைப்பாளர், கல்வி மேம்பாட்டுக் கேந்திரம் ஆசிரியர் கல்வி.

Share:

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு

அமைச்சுப் பணியாளர்களுக்கு 2% முதுகலை பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.



அறிவிப்பு வெளியிடப்பட்டு நிரப்பப்படாமல் உள்ள


2007-2014----341


2014-2025----176


---------------------------


மொத்தம்--517 BT


------------------------------


2011-2014-----68


2014-2022-----162


-------------------------------


மொத்தம் ----230 PG


------------------------------


6 வார காலத்திற்குள் மேற்காணும் எண்ணிக்கையிலான 2% அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு / பணி நியமனம் வழங்க வேண்டும். அதன் பின்னர் BT நேரடி நியமன நடவடிக்கை தொடங்கலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு.


2%PG promotion judgement .pdf


Download here

Share:

பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீட்டிப்பு: ஐகோர்ட் உத்தரவு



பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீட்டித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.



தமிழக பள்ளிக்கல்வித் துறையில் பட்டதாரி ஆசிரியர்கள் நியமனத்தின் போது, 50 சதவீத இடங்களை நேரடியாகவும், 48 சதவீத இடங்களை இடைநிலை ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்கியும், எஞ்சிய 2 சதவீத இடங்களை தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்குவதன் மூலமும் நிரப்ப கடந்த 2007-ம் ஆண்டு அரசாணை பிறப்பிக்கப்பட்டது.





ஆனால், இந்த அரசாணைப்படி தங்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படவில்லை எனக்கூறி பாதிக்கப்பட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அமைச்சுப் பணியாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி இந்த வழக்கை விசாரித்த உயர் நீதிமன்றம், “அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத இடஒதுக்கீடு வழங்காமல் பட்டதாரி ஆசிரியர்களை நியமனம் செய்யக்கூடாது” என நியமனங்களுக்கு இடைக்கால தடை விதித்து ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தது.




இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன்பாக மீண்டும் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில், ‘கடந்த 2014-15 முதல் 2024-25 வரை அமைச்சுப் பணியாளர்களுக்கு 2 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் 130 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் உள்ளது. ஆசிரியர் தகுதித் தேர்வு தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் இருப்பதால் அந்த உத்தரவுக்காக காத்திருக்கிறோம். மேலும், இந்த வழக்கில் அரசு தலைமை வழக்கறிஞர் ஆஜராக உள்ளதால் விசாரணையை தள்ளிவைக்க வேண்டும்’ என கோரப்பட்டது.


அதையேற்ற நீதிபதி இந்த வழக்கு விசாரணையை வரும் அக்.17-க்கு தள்ளி வைத்தார். மேலும், “ஆசிரியர் தகுதித்தேர்வில் தகுதிபெற்ற அமைச்சுப் பணியாளர்களுக்கு கடந்த 2014-ம் ஆண்டு முதல் உரிய பதவி உயர்வு வழங்கப்படாததால், உச்ச நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கு மனுதாரர்களின் கோரிக்கையில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது.” எனக்கூறி பட்டதாரி ஆசிரியர் நியமனத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடையை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share:

பாட ஆசிரியர்களின் பணிகளும், பொறுப்புகளும்

பாட ஆசிரியர்களின் பணிகளும், பொறுப்புகளும்

பள்ளிக் கல்வித் துறை வழங்கிய தலைமையாசிரியர் கையேட்டில் உள்ளபடி

1.4 பாட ஆசிரியர்களின் பணிகள்

i. மாணவர்களின் பாடக் குறிப்பேடு, மதிப்பெண் பதிவேடு, மாணவர் முன்னேற்ற அறிக்கை, மாணவர் நன்னடத்தை பதிவேடு முதலான அனைத்தையும் முறையாகப் பராமரித்தல்.

ii. NMMS, TRUST, NTSE, NEET, JEE, CUET தேர்வுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெற ஊக்குவித்தல் மற்றும் பயிற்சியளித்தல்.


iii. தன் வகுப்பிற்கு வரும் பிற பாட ஆசிரியர்களிடமும் மாணவர்களைப் பற்றிக் கலந்தாலோசித்து அவர்களின் திட்டமிடுதல். முன்னேற்றத்திற்குத்


iv. மாணவர்களின் நடத்தை மற்றும் உடல்நலம் குறித்து உற்றுநோக்கி பதிவுகள் மேற்கொள்ளல்.


V. அனைத்து மாணவர்களும் காலை, மதிய உணவு உண்பதை உறுதி செய்தல்.


vi. மாணவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டால் முதலுதவி செய்து அதன் விவரத்தினை உடனடியாகத் தலைமையாசிரியருக்கும், பெற்றோருக்கும் தெரிவித்தல்.


vii. வகுப்பில் உள்ள தனிக்கவனம் தேவைப்படும் மாணவர்களைத் தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும் SMC உதவியுடன் உளவியல் ரீதியிலான அறிவுரைகள் தந்து மனமாற்றத்தை ஏற்படுத்துதல்.


viii. சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களைக் இனம் கண்டறிந்து கற்றல் திறனை மேம்படுத்த இல்லம் தேடிக் கல்வித் (ITK) தன்னார்வலர்களை மாலை நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளல்.


ix. மாணவர் சேர்க்கை முடிவுற்றவுடன் சேர்க்கைப் பதிவேட்டில் விபரங்களைச் சரிபார்த்தல்.


X. சிறு இடைவேளை, உணவு இடைவேளை, உடற்கல்வி வகுப்பு நேரம் முடிந்தவுடன் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்வதை உறுதி செய்தல்.


xi. தமது வகுப்பிற்கு வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் வகுப்பு நேரம் முடிந்தபின் பள்ளியை விட்டு சென்று விட்டதை உறுதி செய்தல்.


xii. வகுப்பில் பாட கால அட்டவணை பாடத்திட்ட நகல் பராமரித்தலை உறுதி செய்தல்.

xiii. மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து பயிற்சி அளித்தல், பாராட்டி ஊக்குவித்தல், திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்குதல்.


xiv. மீத்திறன் படைத்த ஊக்குவித்தல் மற்றும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை வழிகாட்டுதல்.


XV. கற்றலில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களைக் கண்டறிந்து இணைப்புப் பயிற்சி வகுப்பறைக்கு அனுப்புதல்.


xvi. கல்வி சார்ந்த இணைச்செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஊக்குவித்தல். ஒவ்வொரு மாணவனும் ஏதேனும் ஒரு செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்தல்.


xvii. மாணவர்களின் விடுப்பு விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்குதல்.

1.5 ஆசிரியரின் கடமைகளும் பொறுப்புகளும்


i ஆசிரியர்கள் நற்செயல்பாடுகள் நடை, உடை, பாவணை தோற்றம் முதலியன ) மாணவர்களின் மனதில் பதியும்படி இருத்தல்


ii. ஆசிரியர்கள் தனது பாடத்தில் மேம்படுத்தப்பட்ட அறிவுடையவராக இருத்தல்.


iii. பணி சார்ந்த நெறிமுறை கொண்டவராக இருத்தல். மாணவர்களிடம் ஆசிரியர்கள் அன்பும் பரிவும் உடையவர்களாக இருத்தல்


iv. ஆசிரியர்கள் புதுமையில் நாட்டமுள்ளவர்களாகவும் திறமைகளை வளர்த்துக் கொள்பவர்களாகவும் இருத்தல்.


V. ஆசிரியர்கள் பாரபட்சமின்றி வகுப்பறையில் செயல்பட்டு அனைத்து மாணவர்களையும் தன்பால் ஈர்க்கும் திறன் பெற்றிருத்தல்.


vi. காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்துவதற்கு உடற்கல்வி ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர் உறுதுணையாக இருத்தல்.


vii. காலைவழிபாட்டுக்கூட்டத்தில் நாள்தோறும் ஒரு ஆசிரியர் ஒழுக்கம் பற்றி தெளிவான கருத்தை கதை/நிகழ்வுகள் மூலம் வலியுறுத்தல்.


viii. பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமையாசிரியரால் அமைக்கப்பட்ட குழுக்கள் குறிப்பிட்ட பணிகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்.

ix. NSS, NCC, JRC, SCOUT/Guides RRC, NGC, SPC की அமைப்புகளுக்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்.


X. ஆசிரியர்கள் காலம் தவறாமையைக் கடைபிடித்தல்.


xi. வகுப்பு மற்றும் பாடவாரியாக ஆண்டுச் செயல்திட்டம் தயாரித்தல்.


xii. ஒவ்வொரு மாணவனைப் பற்றிய முழு விவரங்களையும் ஆசிரியர் தெரிந்து வைத்திருத்தல்.


xiii. மாணவர்களை மனரீதியாக பாதிக்க கூடிய சொற்களை பயன்படுத்தாதிருத்தல்.


xiv. தலைமைப் பண்புகளை வளர்க்க ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர் பயிற்சி அளித்தல்.


XV. பள்ளிமுடிந்தவுடன் மாணவர்களிடையே ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க மாடிப்படிகள் நுழைவாயில் ஆகிய பகுதிகளில் மாணவர்களை மாணவப் பிரதிநிதிகள் மூலம் ஒழுங்குபடுத்தலை ஆசிரியர்கள் கண்காணித்தல்

1.5.1 ஆசிரியர்களின் ஓய்வு பாடவேளைகள்(Leisure Period)


i. Teaching Aid தயாரித்தல். மற்றவர்களுக்கு Teaching Aid தயாரிக்க ஆலோசனை வழங்குதல்.


ii. மாணவர்களின் பாடம் சார்ந்த அனைத்து ஏடுகளையும் மதிப்பீடு செய்தல்.


iii. வினாத்தாள் தயாரித்தல்.


iv. பாடம் தொடர்பான, உளவியல் தொடர்பான. கல்வித் தொடர்பான பார்வை நூல்களை வாசித்தல்.


V. வலையொலியில் பாடச் சம்பந்தமான காணொலிகளை பார்த்தல்/ மதிப்பீடு செய்தல்/ உருவாக்குதல்.


vi. Power Point (PPT), Audio, Mobile app வீடியோ தயாரித்து வலையொலியில் (Youtube) பதிவேற்றம் செய்தல்.

Share:

ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்திற்கு ஆகஸ்ட் 7ம் தேதி உள்ளூர் விடுமுறை மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் அறிவிப்பு

விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் திருக்கோவிலின் ஆடிப்பூரத் தேரோட்டத்தை முன்னிட்டு 7.8.24 அன்று உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் ஜெயசீலன் உத்தரவிட்டுள்ளார் அதனை ஈடு செய்விதமாக ஆகஸ்ட் 17.08.24 அன்று பணி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Share:

12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல் - மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS -ல் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு..


2022-2023 ஆம் கல்வி ஆண்டில் 12-ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு சிறப்பு ஊக்கத்தொகை வழங்குதல் - மாணவர்களின் வங்கிக் கணக்கை சரிபார்த்து EMIS -ல் 05.08.2024க்குள் பதிவேற்றம் செய்ய பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு..


DSE Proceedings - Download here

Share:

ஆகஸ்ட் 6ம் தேதி உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

தமிழகத்தில் புகழ்பெற்ற ஆன்மிக தலமாக இருப்பது மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடம் கோவில். இந்த கோவிலில் ஆடிப்பூரம் திருவிழா வரும் ஆகஸ்ட் 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனை முன்னிட்டு கோவிலில் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் அம்மனுக்கு மாலை அணிவிக்கப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும்.

அதனை தொடர்ந்து பட்டிமன்றம், நாடகம், நாட்டியம், கருத்தரங்கம் உள்ளிட்ட கலை நிகழ்ச்சிகளும் இடம் பெறும். நடப்பு ஆண்டு ஆடிப்பூரம் திருவிழாவை முன்னிட்டு செங்கல்பட்டு மாவட்டத்திற்கு வரும் ஆகஸ்ட். 6 ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் உள்ளூர் விடுமுறையை அறிவித்துள்ளார். இந்த விடுமுறையை ஈடு செய்யும் வகையில் ஆகஸ்ட் 31ஆம் தேதி வேலைநாள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02

🦋 Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02

 *August 06 முதல் August 16* வரை 6 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நடத்தப்படவேண்டும். 


*முக்கிய குறிப்புகள்:*


1. Hi -Tech lab Assessment - Quiz நடைபெறும் தேதியை மாணவர்களுக்கு முன்கூட்டியே தெரியப்படுத்தி அவர்களை தேர்வுக்கு தயார்படுத்த வேண்டும்.


2. *6 முதல் 10 ஆம் வகுப்பு வரை ஒரு பாடத்திற்கு 4 கேள்விகள் வீதம் 5 பாடத்திற்கு 20 கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும். 11 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கு  4 கேள்விகள் வீதம் 6 பாடத்திற்கு 24* *கேள்விகளை தேர்வு செய்ய வேண்டும்* . 


3. July-இல் நடைபெற்ற Hi -Tech lab Assessment - Quiz - Cycle 01 ஐ 80% பள்ளிகள் முழுமையாக நடத்தி முடித்தனர். 80% (18,85,104) மாணவர்கள் Assessment - Quiz இல் பங்கேற்றுள்ளனர். 


4. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 -விற்கான Event ID உருவாக்கப்பட்டுள்ளது. இந்த Event ID ஐ பயன்படுத்தி Question Paper Allocation நிகழ்வை Assessment நடைபெறும் நாளுக்கு இரண்டு நாட்களுக்கு முன்பாகவே ஆசிரியர்கள் மேற்கொள்ளவேண்டும்.


5. Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 விற்கான கால அட்டவணை, வழிகாட்டு நெறிமுறைகள் (SOP) ஆகியவை இணைக் கப்பட்டுள்ளன.


இந்த தகவல்களை பள்ளிகளுக்கு தெரியப்படுத்தி Hi -Tech lab Assessment - Quiz - Cycle 02 நடைபெற பள்ளிகளுக்கு உதவுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்.

Video Demo

Share:

Wanted Teachers!!

CHENNAI

PUBLIC SCHOOL

CHENNAI PUBLIC SCHOOL Anna NagarThirumazhisai CBSE Cambridge IB.


CPS, a leading network of schools with more than a decade of academic excellence, seeks highly qualified, dedicated learner-centric educators with international mindedness to inspire young minds. Candidates who share our passion and commitment to deliver global standards of excellence may apply to teach.


VP/Coordinator 

Preprimary, Primary, Secondary,

(with min 2 yrs of Administrative Exp.)


PGT

Sr. Secondary, Cultural Coordinator (Female Candidates Preferred)

English, Math, Computer Science, Accountancy, Business Studies, Economics, Entrepreneurship

English, Math, Computer Science.


TGT SGT

Tamil, Hindi, French, 

Physical Education.


PRT

English, Math, Sciences, Social Sciences, Tamil, Hindi.


Art & Craft, Music & Dance (Both Western/Classical), Robotics, Librarian, Career Counsellor, Campus Supervisor, Lab Asst., Front Office Exe., PRO, Graphic Designer, DTP.


Interested candidates with IB/Cambridge/ICSE/CBSE exp. in reputed schools may apply within a week to

apply@chennaipublicschool.com.


Mention the position applied for in the email subject.

Anna Nagar Campus

Thirumazhisai Campus 


97909 79587

044 3511 0377.







Share:

DPI தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை.

டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024 மற்றும் 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற டி.பி.ஐ தொடர் முற்றுகைப் போராட்டத்தைத் தொடர்ந்து டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் சார்பில் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கை.

tito jac 04.08.2024 - Download here





*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு (டிட்டோஜாக்)


*நாள்:04.08.2024*


**************************


*டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழுவின் அறிக்கை.


*************************


*மூன்று நாட்கள் பேரெழுச்சியுடன் நடந்த டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டம்!




*பள்ளிக்கல்வித்துறைச் செயலருடன் சுமூகமாக நடைபெற்ற பேச்சுவார்த்தைகள்!





*டிட்டோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு!*


**************************


*தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் பேரமைப்பின் சார்பில் 31 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி 29.07.2024, 30.07.2024, 31.07.2024 ஆகிய மூன்று நாட்கள் சென்னையில் பள்ளிக்கல்வித்துறையின் தலைமை அலுவலகமான டி.பி.ஐ வளாகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்துவதென 14.07.2024 அன்று திருச்சியில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில ஆலோசனைக் கூட்டத்தில் ஏகமனதாக முடிவு செய்யப்பட்டது. இக்கூட்டத்தில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், டிட்டோஜாக்கில் இணைந்துள்ள 12 ஆசிரியர் சங்கங்களின் மாநில நிர்வாகிகள், டிடோஜாக்கின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், 12 இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்றனர்.




*இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி மூன்று நாட்கள் முற்றுகைப் போராட்டத்தை வெற்றிகரமாக நடத்துவதற்காக 12 இணைப்புச் சங்கங்களின் நிர்வாகிகளும் கண்துஞ்சாது களப்பணியாற்றினர். மூன்று நாட்கள் டி.பி.ஐ முற்றுகைப் போராட்டம் என்ற கடுமையான களப்போராட்ட முடிவிற்கு டிட்டோஜாக் பேரமைப்பு ஏன் வந்தது என்பதைச் சிந்தித்துப் பார்க்க வேண்டும். எடுத்த எடுப்பிலேயே இப்படியொரு களப்போராட்டத்தை நடத்த டிட்டோஜாக் முடிவெடுக்கவில்லை என்பதை இந்த இடத்தில் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும்.


*30 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிட்டோஜாக் பேரமைப்பு வட்டார அளவில், மாவட்ட அளவில் பல போராட்டங்களை எழுச்சியுடன் நடத்தியது. கோரிக்கைகள் நிறைவேறாத நிலையில் 13.10.2023 அன்று சென்னையில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்தத் தீர்மானித்தது. மாநிலம் முழுவதுமிருந்து பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்க சென்னை புறப்படத் தயாரான நிலையில், கோரிக்கைகள் தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த 12.10.2023 அன்று மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்களை அழைத்தார்.




*அமைச்சரது அழைப்பின் பேரில் டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் போராட்டத் தேதிக்கு முதல் நாள் மாலை பேச்சுவார்த்தைக்குச் சென்றனர். இப்பேச்சுவார்த்தையில் மதிப்புமிகு.பள்ளிக்கல்வி இயக்குநர் அவர்களும், மதிப்புமிகு.தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றார்கள். 1 மணி 45 நிமிடங்கள் நடைபெற்ற இப்பேச்சுவார்த்தையில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகள் தொடர்பாகவும் ஒவ்வொன்றாக விரிவாக விவாதிக்கப்பட்டது. பேச்சுவார்த்தையின் முடிவில் டிட்டோஜாக் முன்வைத்த 30 கோரிக்கைகளில் 12 கோரிக்கைகள் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டது. ஏற்றுக்கொள்ளப்பட்ட கோரிக்கைகள் தொடர்பாக உரிய ஆணைகள் வெளியிடப்படும் எனவும் உறுதியளிக்கப்பட்டது.





*இதனடிப்படையில் மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் மீது பெரும் நம்பிக்கை கொண்டு டிட்டோஜாக் பேரமைப்பு 13.10.2024 அன்று சென்னையில் நடத்தவிருந்த மாநில அளவிலான ஆர்ப்பாட்டத்தை ஒரு நல்லெண்ண அடிப்படையில் பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டமாக நடத்த முடிவெடுத்தது. அதன்படி 13.10.2023 காலை 10 மணிக்கு டிட்டோஜாக் சார்பில் சென்னையில் எழும்பூர் ராஜரத்தினம் ஸ்டேடியம் அருகில் நடைபெற்ற 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தை விளக்கக் கூட்டத்தில் ஆசிரியர் இயக்க வரலாற்றிலேயே இல்லாத நிகழ்வாக மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறை இயக்குநரும், மதிப்புமிகு தொடக்கக்கல்வி இயக்குநரும் அக்கூட்டத்தில் பங்கேற்று முதல் நாள் பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக பொதுமேடையிலேயே அறிவித்தனர். இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் நியாயமான 30 கோரிக்கைகளில் முதற்கட்டமாக கோரிக்கைகளாவது நிறைவேறிவிடும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.



*ஆனால், இந்நிகழ்விற்குப் பின்பு இரண்டு மாதங்கள் கடந்த நிலையிலும் ஏற்றுக்கொண்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக எவ்வித ஆணைகளும் தொடக்கக்கல்வித்துறையால் பிறப்பிக்கப்படவில்லை. டிட்டோஜாக்கின் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள் இது தொடர்பாக பலமுறை முயன்றும் ஆணைகளைப் பெற இயலவில்லை.

*இந்தச் சூழலில் தான் தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 90 சதவீத ஆசிரியர்களின் முன்னுரிமையைப் பாதிக்கும் வகையிலும், பதவி உயர்வைப் பாதிக்கும் வகையில் ஊட்டுப் பதவிகளில் மாற்றம் செய்தும், குறிப்பாகத் தொடக்கக்கல்வித் துறையில் மிகப்பெரும்பான்மையாகப் பணியாற்றும் 80 சதவீதப் பெண்ணாசிரியர்களின் பதவி உயர்வைப் பறிக்கும் வகையிலும் அரசாணை: 243 நாள்: 21.12.2023 தமிழக அரசால் வெளியிடப்பட்டது. 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக் கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாக ஆணைகள் வெளிவரும் என்று எதிர்பார்த்த தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு எதிர்பாராத விதமாக அரசாணை: 243 வெளியிடப்பட்டது தலையில் இடிதாக்கியதைப் போன்று இருந்தது. இதனால் மாநிலம் முழுவதும் தொடக்கக்கல்வி ஆசிரியர்கள் மத்தியில் கொந்தளிப்பும், அதிருப்தியும் ஏற்பட்டது.




*இதனைத் தொடர்ந்து டிட்டோஜாக் பேரமைப்பு அரசாணை 243 ஐ ரத்து செய்தல் உள்ளிட்ட 31 அம்சக் கோரிக்கைகள் வலியுறுத்தி 19.02.2024 அன்று சென்னையில் மாபெரும் உண்ணவிரதப் போராட்டத்தை நடத்தியது. அதன் தொடர்ச்சியாக அரசாணை 243 தொடர்பாக டிட்டோஜாக் பேரமைப்பை அன்றைய பள்ளிக்கல்வித்துறை செயலாளர் அவர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதன்படி 20.02.2024 அன்று சென்னையில் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறை செயலாளரும், தொடக்கக்கல்வி இயக்குநரும் கலந்து கொண்டார்கள். 1 மணி 30 நிமிடம் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பின்பு மீண்டும் ஒருமுறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசுவதாகவும் கூறினார். ஆனால், இறுதிவரை பேச்சுவார்த்தைக்கு அழைக்கமலேயே அரசாணை 243ன் படி பொதுமாறுதல் கலந்தாய்வை நடத்த ஆணை பிறப்பித்தார்.

*பொதுவாக ஒரு துறையில் வெளியிடப்படும் அரசாணை என்பது அந்தத் துறையின் வளர்ச்சிக்கும், அதில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கும், அந்தத் துறையின் பயனாளிகளுக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும். ஆனால், இங்கு அதற்கு நேர் மாறாக அரசாணை 243 வெளியிடப்பட்டது. தொடக்கக்கல்வித் துறையில் பணியாற்றும் 5 சதவீத ஆசிரியர்களுக்குக் கூட பயன்தராத ஒரு அரசாணையை, 95 சதவீத ஆசிரியர்களுக்குக் கேடு விளைவிக்கும் அரசாணையை, மாணவர்களின் நலனுக்கு குந்தகம் ஏற்படுத்தும் அரசாணை 243 ஐ வெளியிட்டு விட்டு, இந்த அரசாணை ஆசிரியர்களுக்குப் பயன் தரக்கூடியது என்று தொடக்கக்கல்வித்துறைக்குச் சம்பந்தமில்லாத சில ஆசிரியர் சங்கங்கள் கூறுவதைச் சரி என்று ஏற்றுக் கொண்டதால் அது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்குச் செய்யும் மிகப்பெரிய துரோகம் என டிட்டோஜாக் பேரமைப்பு கருதுகிறது.


*எனவேதான் நடைபெற்ற முற்றுகைப் போராட்டம் என்பது தமிழ்நாடு தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் மீது திணிக்கப்பட்ட போராட்டம் என்று டிட்டோஜாக் பேரமைப்பு கூறுகிறது.*


*எனவேதான் மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் உள்ளக் குமுறலை உள்ளங்கை நெல்லிக்கனிபோல் உணர்த்தும் வகையில் அமைந்திருந்தது. இதுவரை இல்லாத அளவிற்கு ஆசிரியர்கள் ஆவேசத்தின் வார்ப்படங்களாய், குறிப்பாகப் பெண்ணாசிரியர்கள் உணர்ச்சிப் பிழம்பாய் களத்தில் நின்று போராடினர்.

*முற்றுகைப் போராட்டத்தை ஒடுக்க தமிழ்நாடு அரசு காவல்துறையை ஏவிவிட்டது. இதுவரை வரலாற்றில் இல்லாத அளவிற்கு டெஸ்மா, எஸ்மா காலத்தில் கூட இல்லாத அளவிற்கு ஆசிரியர்களை பணியாற்றும் பள்ளிகளிலேயே ஆசிரியர்கள் கற்பித்தல் பணி செய்து கொண்டிருந்தபோதே காவல்துறை கைது செய்து காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிகழ்வு என்பது வரலாற்றில் ஒரு கரும்புள்ளியாக விழுந்துவிட்டது. சங்கப் பொறுப்பாளர்களை கொடுங்குற்றவாளிகளைப் போல நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்து காவல் நிலையங்களுக்கு கொண்டு சென்ற நிகழ்வு என்பது எந்த சட்டப்பிரிவின் கீழ் சரியானது என்பதை தமிழக அரசுதான் கூற வேண்டும். அதேபோன்று முற்றுகைப் போராட்டத்திற்கு வாகனங்களில் வந்த பெண்ணாசிரியர்களை கண்ட இடத்தில் நிறுத்தி மண்டபங்களில் இரவு முழுவதும் சிறை வைத்த நிகழ்வும் சட்டவிரோத நிகழ்வுகளாகும். அதேபோன்று கல்வித்துறை அலுவலர்கள் மூலம் ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தால் "ஊதியத்தைப் பிடிப்போம்" என்றும் "கடும் நடவடிக்கை எடுக்கப்படும்" என்றும் மிரட்டிய செயல் ஜனநாயகத்தின் குரல்வளையை நெறிக்கும் செயலாகும். இத்தனை இடர்களையும் தாண்டி, தடைகளைத் தகர்த்து சென்னைக்கு வருகை தந்த ஆசிரியர்களை ரயில் நிலையங்களிலும், பேருந்து நிறுத்தங்களிலும், கண்ட இடங்களிலும் கைது செய்தது காவல்துறை. இத்தனை இடர்பாடுகளையும் தாண்டி டி.பி.ஐ முற்றுகைப் போராட்டத்தில் பல்லாயிரக்கணக்கான ஆசிரியர்கள் பங்கேற்றார்கள் என்றால் ஆசிரியர்களின் கோபத்தையும், நியாயத்தையும், போராட்ட வலிமையையும் தமிழக அரசு புரிந்து கொள்ள வேண்டும். இத்தனை அடக்குமுறைகளையும் தாண்டி முதல் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5000க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், இரண்டாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 4500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும், மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டத்தில் 5500க்கும் மேற்பட்ட ஆசிரியர்களும் பங்கேற்றார்கள் என்பதுதான் போராட்டத்தின் வெற்றி, டிட்டோஜாக் பேரமைப்பின் வலிமை.



*அதுமட்டுமல்ல டி.பி.ஐ. முற்றுகைப் போராட்டத்தில் கலந்து கொள்ள இயலாதவர்கள் தற்செயல் விடுப்பெடுத்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கலாம் என்று போராட்டம் தொடங்குவதற்கு முதல் நாள் தான் டிட்டோஜாக் அறிவித்தது. அதனை ஏற்று மாநிலம் முழுவதும் மூன்று நாட்களில் கல்வித்துறை அலுவலர்களின் அச்சுறுத்தலையும் மீறி 50 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் தற்செயல் விடுப்பு எடுத்தார்கள் என்பது டிட்டோஜாக் பேரமைப்பின் 31 அம்சக் கோரிக்கைகளின் மீது தொடக்கக்கல்வி ஆசிரியர்களுக்கு உள்ள ஆதரவு நிலையை வெளிப்படுத்துகிறது. பல மாவட்டங்களில் பெரும்பாலான ஒன்றியங்களில் மிகப் பெரும்பாலான ஆசிரியர்கள் தற்செயல் விடுப்பு எடுத்த நிலையில் அன்றையதினம் பள்ளிகளை நடத்த இயலாத நிலை தான் ஏற்பட்டது. எனவே, தொடக்கக்கல்வி ஆசிரியர்களின் ஒட்டுமொத்த பிரதிநிதியாக டிட்டோஜாக் மட்டுமே உள்ளது என்பதை தமிழ்நாடு அரசு உணர வேண்டும்

*மூன்று நாள் முற்றுகைப் போராட்டம் அறிவிக்கப்பட்ட பின்பு புதிதாகப் பொறுப்பேற்ற மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் இரண்டு முறை டிட்டோஜாக் அமைப்பை அழைத்துப் பேசினார். 22.07.2024 அன்று முற்பகல் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்கள் புதிதாகப் பொறுப்பேற்ற நிலையிலும் அனைத்துக் கோரிக்கைகளையும் விரிவாகக் கேட்டறிந்து நமது கோரிக்கைகளின் நியாயத்தைப் புரிந்து கொண்டு சாதகமான முறையில் கோரிக்கைகளின் மீது நடவடிக்கை மேற்கொள்வதாகக் கூறியது புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியது. இருப்பினும் கோரிக்கைகள் தொடர்பாக உத்திரவாதமான அறிவிப்புக்கள் இல்லாததால் கடந்த கால அனுபவங்களைக் கணக்கில் கொண்டு முற்றுகைப் போராட்டம் திட்டமிட்டபடி நடைபெறும் என டிட்டோஜாக் அறிவித்தது.




*அதன்பின்பு முதல் இரண்டு நாட்கள் முடிவடைந்த நிலையில் 30.07.2024 அன்று இரண்டாவது முறையாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களைப் பேச்சுவார்த்தைக்கு அழைத்தார். அதனடிப்படையில் 30.07.2024 அன்று பிற்பகல் தலைமைச் செயலகத்தில் நடைபெற்ற பேச்சு வார்த்தையில் பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களும், புதிதாகப் பொறுப்பேற்ற தொடக்கக்கல்வி இயக்குநர் அவர்களும் பங்கேற்றனர். அரசாணை 243 தொடர்பாக விரிவாக டிட்டோஜாக் உயர்மட்டக்குழு உறுப்பினர்களுடன் ஆலோசனை நடத்திய செயலாளர் அவர்கள், டிட்டோஜாக் அமைப்பின் மற்ற கோரிக்கைகள் தொடர்பாகவும், குறிப்பாக 12.10.2023 அன்று டிட்டோஜாக் அமைப்புடன் மாண்புமிகு.பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்கள் தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகள் தொடர்பாகவும் விரிவாக ஆலோசனை நடத்தினார்.

*மூன்றாம் நாள் முற்றுகைப் போராட்டம் பேரெழுச்சியுடன் நடைபெற்று முடிந்த நிலையில் 31.07.2024 அன்று இரவு 7 மணி முதல் 8 மணி வரை தமிழக ஆசிரியர் கூட்டணியின் மாநில அலுவலகத்தில் நடைபெற்ற டிட்டோஜாக் மாநில உயர்மட்டக்குழு கூட்டத்தில் மூன்று நாள் முற்றுகைப் போராட்ட நிகழ்வுகள் குறித்தும் விரிவாக ஆய்வு செய்யப்பட்டது. அடக்குமுறைகளை எதிர்கொண்டு நெஞ்சுறுதியோடு போராட்டக் களத்திற்கு வருகை தந்து களப்போராளிகளாகக் களத்திலே நின்று போராட்டத்தை வெற்றியடையச் செய்த ஆசிரியர்களுக்கும், போராட்டத்தை வெற்றியடையச் செய்வதற்காக இமைப்பொழுதும் சோராமல் களப்பணியாற்றிய டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாநில, மாவட்ட, வட்டார நிர்வாகிகளுக்கும் மாநில டிட்டோஜாக் உயர்மட்டக்குழு தனது நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறது. மேலும், மதிப்புமிகு பள்ளிக்கல்வித்துறைச் செயலாளர் அவர்களின் சிறப்பான அணுகுமுறை மற்றும் புதிதாகப் பொறுப்பேற்றுள்ள சூழல் ஆகியவற்றை விரிவாக விவாதித்த மாநில உயர்மட்டக்குழு எதிர்வரும் ஆகஸ்டு இரண்டாவது வாரத்தில் திருச்சியில் மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர்கள், மாநிலப் பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் மற்றும் டிட்டோஜாக் இணைப்புச் சங்கங்களின் மாவட்டச் செயலாளர்கள் பங்கேற்கும் மாநில அளவிலான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தி டிட்டோஜாக்கின் அடுத்த கட்ட செயல்பாடுகளைத் தீர்மானிப்பதென முடிவு செய்துள்ளது. டிட்டோஜாக் பேரமைப்பைப் பொறுத்துவரை முன்வைத்துள்ள 31கோரிக்கைகளும் நியாயமானவை. எனவே, 31கோரிக்கைகளும் நிறைவேற்றப்பட வேண்டும் என டிட்டோஜாக் வலியுறுத்துகிறது.




 *குறிப்பாக அரசாணை 243 முற்றிலுமாக ரத்து செய்வதையே டிட்டோஜாக் ஏற்றுக்கொள்ளும் என்பதையும் இங்கு வலியுறுத்திக் குறிப்பிட விரும்புகிறோம். மேலும், 12.10.2023 அன்று மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுடன் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் ஏற்றுக்கொள்ளப்பட்ட 12 கோரிக்கைகளுக்கான ஆணைகள் உடனடியாக வெளியிடப்பட வேண்டும். இதுவே டிட்டோஜாக் பேரமைப்பின் உறுதியான நிலைப்பாடு. நம் கோரிக்கைகளுக்கு சரியான தீர்வு உரிய காலத்திற்குள் கிடைக்கவில்லை என்றால் டிட்டோஜாக் பேரமைப்பு இறுதி வரை உறுதியாகக் களத்தில் நின்று போராடும்.


**************************


*ச.மயில்


*பொதுச்செயலாளர்


*தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி


*மாநில உயர்மட்டக்குழு உறுப்பினர் (டிட்டோஜாக்)

Share:

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்படவேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா? RTI பதில்

6 முதல் 12 ஆம் வகுப்பு வரை வகுப்புகளுக்கு பாடக்குறிப்பேடு கையினால் எழுதப்படவேண்டும் என்பதற்கான அரசாணை ஏதும் உள்ளதா? 

RTI பதில்👇👇👇👇



Share:

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம்.

அரசு ஊழியர் ஓய்வு பெறும் வயதை மீண்டும் உயர்த்த அரசு திட்டம்


நிதி நெருக்கடியில் சிக்கியதால் அரசு ஊழியர்களின் ஓய்வுவதை 58 இல் இருந்து 60 ஆக உயர்த்தியது அதிமுக அரசு அதைவிட மிக மோசமான நிதி நெருக்கடியிலும் வருவாய் பற்றாக்குறையிலும் திமுக அரசு சிக்கி இருப்பதாக ஓய்வு பெறும் வயதை 62 ஆக உயர்த்தலாமா என கோட்டையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. 


60 வயதுக்கு மேற்பட்டவர்களை ஓய்வு பெற அனுமதிப்பதன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு தேவை 18 ஆயிரம் கோடி இவர்களெல்லாம் பழைய ஓய்வதில்லை திட்டத்தில் இருப்பதால் அவர்களுக்கு பென்ஷன் வழங்க சுமார் 300 கோடி தேவை மேலும் புதிதாக ஆட்களை நியமனம் செய்யும் போது அவர்களுக்கு சம்பளம் கொடுக்க கிட்டத்தட்ட 600 கோடி தேவை ரூபாய் தேவைப்படும்.




ஆக சுமார் 19,000 கோடி தேவை அதனால் ஓய்வு பெற அனுமதிக்காமல் இரண்டு ஆண்டுகளுக்கு வயதை உயர்த்தி விட்டால் வருடத்திற்கு அவர்களுக்கு சம்பளமாக கொடுக்க 600 கோடி தான் தேவைப்படும் அதே சமயம் ஆண்டுக்கு சுமார் 18,400 கோடியை இரண்டு ஆண்டுகளுக்கு 36 ஆயிரத்து 800 கோடி ரூபாய் அரசு செலவினத்தை தவிர்க்க முடியும் அதனால் ஓய்வு பெறும் வயதை உயர்த்தலாமா என ஆலோசித்திருக்கிறது தி.மு.க அரசு...

Share:

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25 - விரைவில்..

முதலமைச்சர் கோப்பை விளையாட்டுப் போட்டிகள் 2024-25 - விரைவில்..





Share:

1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு பணி நீட்டிப்பு: பள்ளிக்கல்வித் துறை அரசாணை

அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் 1,282 தற்காலிக ஆசிரியர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு தொடர் நீட்டிப்பு ஆணை வழங்கி பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.



இதுகுறித்து பள்ளிக்கல்வித் துறை செயலர் சோ.மதுமதி வெளியிட்ட அரசாணை விவரம்; தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டத்தின்கீழ் 2011-12-ம் நிதியாண்டில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் நியமனம் செய்ய 1,282 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு ஒப்பளிப்பு செய்து ஆணை வெளியிடப்பட்டது. இந்த தற்காலிக பணியிடங்களுக்கான தொடர் நீட்டிப்பு காலம் 2022 டிசம்பர் மாதத்துடன் நிறைவு பெற்றது. அதன்பின் ஊதிய கொடுப்பாணை மூலமாக இந்த பணியிடங்களில் உள்ள பட்டதாரி ஆசிரியர்களுக்கு தொடர்ந்து சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் 1,282 தற்காலிக பட்டதாரி ஆசிரியர்பணியிடங்களுக்கு தொடர் நீட்டிப்பு வழங்க வேண்டுமென பள்ளிக்கல்வித் துறை இயக்குநர் தமிழக அரசுக்கு கருத்துரு அனுப்பினார்.





அதையேற்று 1,282 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கு 2029-ம் ஆண்டு ஜூன் 30-ம் தேதி வரை 5 ஆண்டுகளுக்கு தொடர் பணிநீட்டிப்பு வழங்கப்படுகிறது. இந்த உத்தரவை பின்பற்றி செயல்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.




இதன் மூலம் அந்த ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் கால தாமதமின்றி கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Share:

2024 - 2025 School Calender September TN

2024 - 2025 School Calender September TN

தமழ்நாடு பள்ளி நாட்காட்டி செப்டம்பர் மாதம்




Share:

2024 - 2025 School Calender August TN

2024 - 2025 School Calender August TN

தமழ்நாடு பள்ளி நாட்காட்டி ஆகஸ்ட் மாதம்




Share:

+2 பொதுத்தேர்வு மார்ச் 2024 - அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் , மதிப்பெண் பட்டியல் வழங்குதல் குறித்த விவரங்கள்

+2 பொதுத்தேர்வு மார்ச் 2024 - அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் , மதிப்பெண் பட்டியல் வழங்குதல் குறித்த விவரங்கள்




+2 பொதுத்தேர்வு மார்ச் 2024 - அசல் மதிப்பெண் சான்றிதழ்கள் , மதிப்பெண் பட்டியல் வழங்குதல் குறித்த விவரங்கள் - DOWNLOAD HERE PRESS NEWS

Share:

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மாதத்தின் முதல் சனிக்கிழமை விடுமுறை.. அரசு அறிவிப்பு!

பள்ளி மாணவர்களுக்கு குட் நியூஸ்.. மாதத்தின் முதல் சனிக்கிழமை விடுமுறை.. அரசு அறிவிப்பு!!



தேசிய விடுமுறை நாட்கள், பண்டிகைகள் மற்றும் பொது விடுமுறை தினங்களில் நாட்டிலுள்ள அனைவருக்கும் விடுமுறை நாட்கள் ஒன்றாக அறிவிக்கப்படுகிறது. ஆனால் ஒரு குறிப்பிட்ட பகுதியில் மட்டும் சிறப்பிக்கப்படும் கோயில் திருவிழா போன்ற பண்டிகைகளுக்கு சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அரசு உத்தரவிடுவது வழக்கமாக உள்ளது.



இந்நிலையில் நாளை(ஆகஸ்ட் 3) புதுச்சேரியில் ஆடிப்பெருக்கு திருவிழா நடைபெற உள்ளது. இதனால் புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் பிரியதர்ஷினி அவர்கள் அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிட்டுள்ளார்.

Share:

வெளிநாடு செல்லும் மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும் ! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு !

வெளிநாடு செல்லும் மாணவர்களின் செலவை தமிழக அரசே ஏற்கும் ! முதலமைச்சரின் அதிரடி உத்தரவு !



நமது நாட்டில் உள்ள ஒவ்வொரு மாணவர்களுக்கும் படிப்பு என்பது மிகவும் இன்றியமையாத ஒன்றாகும்.தற்போதைய காலகட்டத்தில் பள்ளி பருவத்திலேயே படிப்பை பாதியில் நிறுத்திவிட்டு குடும்ப சூழ்நிலை காரணமாக வேலைக்கு சென்று விடுகிறார்கள்.ஆனால் படிப்பின் பலனை அறியாமல் சில காலத்திற்கு பிறகு மிகவும் மோசமான சூழ்நிலைக்கு தள்ளப்படுகிறார்கள். அவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு நமது தமிழக அரசு அவர்களின் படிப்பை நிறுத்தி விடாமல் இருக்க பல்வேறு திட்டங்களை கொண்டு வருகின்றனர்.


அதன் தொடர்ச்சியாக தற்போது தமிழக அரசு ஒரு புதிய திட்டத்தை கொண்டுவந்துள்ளது. அதாவது, படிப்பிற்காக வெளிநாடு செல்ல இருக்கும் தமிழக மாணவர்களின் பயணச் செலவை தமிழ்நாடு அரசே ஏற்கும் என்றும் தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ஸ்டாலின் அவர்கள் தெரிவித்துள்ளார். இத்திட்டம், மாணவர்களிடயே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

Share:

B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A = 4970 Posts 5 Years Pay Order

பள்ளிக் கல்வி - # ' 2011-2012 - ஆம் கல்வியாண்டில் அனைவளுக்கும் இடைநிலைக்  கல்வித் திட்டத்தின் கீழ் தற்காலிகமாக தோற்றுவித்தப்பட்ட 3550 பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் , 710 ஆய்வக உதவியாளர்கள் பணியிடங்கள் மற்றும் 710 இளநிலை உதவியாளர் பணியிடங்கள் என மொத்தம் 4970 பணியிடங்களுக்கு 01.01.2024 முதல் 31.12.2028 வரை ஐந்து ஆண்டுகளுக்கு தொடர்நீட்டிப்பு D வழங்குதல் - ஆணை வெளியிடப்படுகிறது.

B.T.Asst. 3550 + 710 Lab Asst. + 710 J.A = 4970 Posts 5 Years Further Cont. 1-1-24 to 31.12.28👇👇👇


Download here

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories