பாட ஆசிரியர்களின் பணிகளும், பொறுப்புகளும்

பாட ஆசிரியர்களின் பணிகளும், பொறுப்புகளும்

பள்ளிக் கல்வித் துறை வழங்கிய தலைமையாசிரியர் கையேட்டில் உள்ளபடி

1.4 பாட ஆசிரியர்களின் பணிகள்

i. மாணவர்களின் பாடக் குறிப்பேடு, மதிப்பெண் பதிவேடு, மாணவர் முன்னேற்ற அறிக்கை, மாணவர் நன்னடத்தை பதிவேடு முதலான அனைத்தையும் முறையாகப் பராமரித்தல்.

ii. NMMS, TRUST, NTSE, NEET, JEE, CUET தேர்வுகளில் மாணவர்கள் ஆர்வமுடன் பங்கேற்று வெற்றி பெற ஊக்குவித்தல் மற்றும் பயிற்சியளித்தல்.


iii. தன் வகுப்பிற்கு வரும் பிற பாட ஆசிரியர்களிடமும் மாணவர்களைப் பற்றிக் கலந்தாலோசித்து அவர்களின் திட்டமிடுதல். முன்னேற்றத்திற்குத்


iv. மாணவர்களின் நடத்தை மற்றும் உடல்நலம் குறித்து உற்றுநோக்கி பதிவுகள் மேற்கொள்ளல்.


V. அனைத்து மாணவர்களும் காலை, மதிய உணவு உண்பதை உறுதி செய்தல்.


vi. மாணவர்கள் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டால் முதலுதவி செய்து அதன் விவரத்தினை உடனடியாகத் தலைமையாசிரியருக்கும், பெற்றோருக்கும் தெரிவித்தல்.


vii. வகுப்பில் உள்ள தனிக்கவனம் தேவைப்படும் மாணவர்களைத் தலைமையாசிரியர், பெற்றோர் மற்றும் SMC உதவியுடன் உளவியல் ரீதியிலான அறிவுரைகள் தந்து மனமாற்றத்தை ஏற்படுத்துதல்.


viii. சிறப்புக் கவனம் தேவைப்படும் மாணவர்களைக் இனம் கண்டறிந்து கற்றல் திறனை மேம்படுத்த இல்லம் தேடிக் கல்வித் (ITK) தன்னார்வலர்களை மாலை நேரங்களில் பயன்படுத்திக் கொள்ளல்.


ix. மாணவர் சேர்க்கை முடிவுற்றவுடன் சேர்க்கைப் பதிவேட்டில் விபரங்களைச் சரிபார்த்தல்.


X. சிறு இடைவேளை, உணவு இடைவேளை, உடற்கல்வி வகுப்பு நேரம் முடிந்தவுடன் மாணவர்கள் வகுப்பறைக்குள் செல்வதை உறுதி செய்தல்.


xi. தமது வகுப்பிற்கு வருகை புரிந்த மாணவர்கள் அனைவரும் வகுப்பு நேரம் முடிந்தபின் பள்ளியை விட்டு சென்று விட்டதை உறுதி செய்தல்.


xii. வகுப்பில் பாட கால அட்டவணை பாடத்திட்ட நகல் பராமரித்தலை உறுதி செய்தல்.

xiii. மாணவர்களின் தனித்திறன்களைக் கண்டறிந்து பயிற்சி அளித்தல், பாராட்டி ஊக்குவித்தல், திறமையை வெளிப்படுத்த வாய்ப்புகளை உருவாக்குதல்.


xiv. மீத்திறன் படைத்த ஊக்குவித்தல் மற்றும் மாணவர்களைக் கண்டறிந்து அவர்களை வழிகாட்டுதல்.


XV. கற்றலில் சிறப்பு கவனம் தேவைப்படும் மாணவர்களைக் கண்டறிந்து இணைப்புப் பயிற்சி வகுப்பறைக்கு அனுப்புதல்.


xvi. கல்வி சார்ந்த இணைச்செயல்பாடுகள், கல்வி சாரா செயல்பாடுகளில் மாணவர்கள் கலந்து கொள்ள ஊக்குவித்தல். ஒவ்வொரு மாணவனும் ஏதேனும் ஒரு செயல்பாட்டில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டிருப்பதை உறுதி செய்தல்.


xvii. மாணவர்களின் விடுப்பு விண்ணப்பங்களைப் பரிசீலித்து அனுமதி வழங்குதல்.

1.5 ஆசிரியரின் கடமைகளும் பொறுப்புகளும்


i ஆசிரியர்கள் நற்செயல்பாடுகள் நடை, உடை, பாவணை தோற்றம் முதலியன ) மாணவர்களின் மனதில் பதியும்படி இருத்தல்


ii. ஆசிரியர்கள் தனது பாடத்தில் மேம்படுத்தப்பட்ட அறிவுடையவராக இருத்தல்.


iii. பணி சார்ந்த நெறிமுறை கொண்டவராக இருத்தல். மாணவர்களிடம் ஆசிரியர்கள் அன்பும் பரிவும் உடையவர்களாக இருத்தல்


iv. ஆசிரியர்கள் புதுமையில் நாட்டமுள்ளவர்களாகவும் திறமைகளை வளர்த்துக் கொள்பவர்களாகவும் இருத்தல்.


V. ஆசிரியர்கள் பாரபட்சமின்றி வகுப்பறையில் செயல்பட்டு அனைத்து மாணவர்களையும் தன்பால் ஈர்க்கும் திறன் பெற்றிருத்தல்.


vi. காலை வழிபாட்டுக் கூட்டம் நடத்துவதற்கு உடற்கல்வி ஆசிரியர்கள், வகுப்பு ஆசிரியர்கள் மற்றும் மாணவர் தலைவர் உறுதுணையாக இருத்தல்.


vii. காலைவழிபாட்டுக்கூட்டத்தில் நாள்தோறும் ஒரு ஆசிரியர் ஒழுக்கம் பற்றி தெளிவான கருத்தை கதை/நிகழ்வுகள் மூலம் வலியுறுத்தல்.


viii. பள்ளியில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளுக்கும் தலைமையாசிரியரால் அமைக்கப்பட்ட குழுக்கள் குறிப்பிட்ட பணிகளுக்குப் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்.

ix. NSS, NCC, JRC, SCOUT/Guides RRC, NGC, SPC की அமைப்புகளுக்கு ஆசிரியர்கள் பொறுப்பேற்றுக் கொள்ளுதல்.


X. ஆசிரியர்கள் காலம் தவறாமையைக் கடைபிடித்தல்.


xi. வகுப்பு மற்றும் பாடவாரியாக ஆண்டுச் செயல்திட்டம் தயாரித்தல்.


xii. ஒவ்வொரு மாணவனைப் பற்றிய முழு விவரங்களையும் ஆசிரியர் தெரிந்து வைத்திருத்தல்.


xiii. மாணவர்களை மனரீதியாக பாதிக்க கூடிய சொற்களை பயன்படுத்தாதிருத்தல்.


xiv. தலைமைப் பண்புகளை வளர்க்க ஒவ்வொரு மாணவருக்கும் ஆசிரியர் பயிற்சி அளித்தல்.


XV. பள்ளிமுடிந்தவுடன் மாணவர்களிடையே ஏற்படும் நெரிசலைத் தவிர்க்க மாடிப்படிகள் நுழைவாயில் ஆகிய பகுதிகளில் மாணவர்களை மாணவப் பிரதிநிதிகள் மூலம் ஒழுங்குபடுத்தலை ஆசிரியர்கள் கண்காணித்தல்

1.5.1 ஆசிரியர்களின் ஓய்வு பாடவேளைகள்(Leisure Period)


i. Teaching Aid தயாரித்தல். மற்றவர்களுக்கு Teaching Aid தயாரிக்க ஆலோசனை வழங்குதல்.


ii. மாணவர்களின் பாடம் சார்ந்த அனைத்து ஏடுகளையும் மதிப்பீடு செய்தல்.


iii. வினாத்தாள் தயாரித்தல்.


iv. பாடம் தொடர்பான, உளவியல் தொடர்பான. கல்வித் தொடர்பான பார்வை நூல்களை வாசித்தல்.


V. வலையொலியில் பாடச் சம்பந்தமான காணொலிகளை பார்த்தல்/ மதிப்பீடு செய்தல்/ உருவாக்குதல்.


vi. Power Point (PPT), Audio, Mobile app வீடியோ தயாரித்து வலையொலியில் (Youtube) பதிவேற்றம் செய்தல்.

Post a Comment

0 Comments