சகல சௌபாக்கியம் பெருக சதுர்த்தி வழிபாடு..!
விநாயகப் பெருமானுக்கு உகந்த மாதமாக திகழக்கூடிய மாதம் ஆவணி மாதம். ஆவணி மாதத்தில் வரக்கூடிய சதுர்த்தி திதி அன்று தான் விநாயகப் பெருமான் அவதரித்தார். அந்த வகையில் சதுர்த்தி திதி என்பது நாளை மதியம் மூன்று மணிக்கு மேல் தொடங்கப் போகிறது. இருப்பினும் சனிக்கிழமை தான் விநாயகர் சதுர்த்தி. அதனால் நாளைய தினம் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்வது என்பது சிறப்பு கூறியதாக திகழ்கிறது. சதுர்த்தி திதி ஆரம்பிக்கும் பொழுதே நாம் விநாயகப் பெருமானை வழிபாடு செய்தோம் என்றால் நமக்கு பல நன்மைகள் உண்டாகும். இந்த பதிவில் சதுர்த்தி திதி ஆரம்பிக்கும் பொழுது எந்த முறையில் விநாயகப் பெருமானை வழிபாடு செய்ய வேண்டும் என்றுதான் பார்க்கப் போகிறோம்.
சகல சௌபாக்கியம் பெருக சதுர்த்தி வழிபாடு இந்த வருடம் ஆவணி மாதத்தில் வரக்கூடிய சதுர்த்தி என்பது வெள்ளிக்கிழமை மதியம் 3 மணிக்கு மேல் ஆரம்பிக்கிறது, சனிக்கிழமை மதியம் 3 மணிக்குள் நிறைவடைகிறது. அதனால் விநாயகர் சதுர்த்தியை நாம் சனிக்கிழமை அன்று தான் கொண்டாடுகிறோம். இருப்பினும் சதுர்த்தி திதியானது வெள்ளிக்கிழமையே தொடங்கி விடுகிறது என்பதால் அன்றைய தினம் நாம் விநாயக பெருமானை வழிபட ஆரம்பித்து விட வேண்டும். அதோடு மட்டுமல்லாமல் நாளைய தினம் வெள்ளிக்கிழமை, மேலும் சுப முகூர்த்த நாளாகவும் இருப்பதால் இந்த நாளில் நாம் விநாயகர் பெருமானை வழிபாடு செய்யும்பொழுது பல நன்மைகள் உண்டாகும். அந்த வழிபாட்டை பற்றி தான் பார்க்க போகிறோம்.
இந்த வழிபாட்டை மாலை 6 மணிக்கு செய்ய வேண்டும். சுத்தமான மஞ்சளை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் சிறிது அரகஜா, ஜவ்வாது, பச்சை கற்பூரம் இவற்றை சேர்த்து இதனுடன் பன்னீர் ஊற்றி மஞ்சள் பிள்ளையார் பிடிப்பது போல் பிடித்துக் கொள்ளுங்கள். இந்த பிள்ளையாரை வெற்றிலை, மா இலை, வாழை இலை, எருக்கு இலை என்று ஏதாவது ஒரு இலையில் வைக்க வேண்டும். பிறகு இந்த பிள்ளையாருக்கு மூன்று பக்கங்களில் குங்குமத்தை வைத்து ஒரே ஒரு இனுக்காவது அருகம்புல்லை அவரின் தலையில் வைத்து விட வேண்டும். இப்படி வைத்த பிறகு அவருக்கு மலர்களை சூட்டி ஏதாவது ஒரு எளிமையான பொருளை நெய்வேத்தியமாக வைக்க வேண்டும். அடுத்ததாக ஒரு மந்திரம் இருக்கிறது. இந்த மந்திரத்தை 108 முறை கூறவேண்டும். அவ்வாறு கூறும் பொழுது விநாயகப் பெருமானுக்காக ஒரு நெய் தீபத்தை ஏற்றி வைத்துவிட்டு கூற வேண்டும். இப்படி கூறுவதன் மூலம் விநாயகப் பெருமான் மனம் மகிழ்ந்து நம்முடைய வாழ்க்கையில் இருக்கக்கூடிய கஷ்டங்கள் அனைத்தையும் நீக்குவதோடு நாம் நலமுடனும் சிறப்பாகவும் வாழ்வதற்கு தேவையான அனைத்து விதமான செல்வங்களையும் வாரி வழங்குவார் என்று கூறப்படுகிறது.
மந்திரம்
ஓம் கண நாதா போற்றி ஓம்
இந்த மந்திரத்தை முழு மனதுடன் விநாயகப் பெருமானை நினைத்தவாறு 108 முறை கூறி வழிபாடு செய்ய வேண்டும்.
இந்த எளிமையான மஞ்சள் பிள்ளையார் வழிபாட்டை நாளைய தினம் சதுர்த்தி திதி ஆரம்பிக்கும்போது செய்து வைத்து வழிபாடு செய்ய விநாயகப் பெருமானின் அருளால் அனைத்து விதமான நன்மைகளும் உண்டாகும் என்ற தகவலை உறுதி இந்த பதிவினை நிறைவு செய்து கொள்கிறோம்
0 Comments
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.