Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label 12th refresher Answer. Show all posts
Showing posts with label 12th refresher Answer. Show all posts

12th Tamil Refresher Course Online Test 1

 12th Tamil Refresher Course Online Test 1

  • பொதுத்தமிழ்
  • புத்தாக்கப் பயிற்சிக் கட்டகம்
  • இயங்கலைத்தேர்வு - 1 ( ஒரு மதிப்பெண் )
  • ( பகுபத உறுப்புகள் , இலக்கணக்குறிப்பு , புணர்ச்சி விதிகள் , திணை , துறை ) 

1) விகுதி பெறாத கட்டளை அல்லது ஏவல் வினையே ------

அ) இடைநிலை

ஆ) பகுதி

இ) சந்தி

ஈ) சாரியை

விடை : ஆ ) பகுதி 

2) திணை , பால் , எண் , இடம் ஆகியனவற்றைக் காட்டுவது -----


அ) பகுதி

ஆ) இடைநிலை

இ) விகுதி

ஈ) விகாரம்

விடை : இ ) விகுதி

3) வேர்ச்சொல் , முதனிலை என அழைக்கப்பெறுவது ------

அ ) விகுதி

ஆ) பகுதி

இ ) சாரியை

ஈ) இடைநிலை

விடை : ஆ ) பகுதி

4) இடைநிலை -------வகைப்படும்.

அ) 6

ஆ) 3

இ) 4

ஈ) 5

விடை : இ ) 4

5) வருவான் என்பதில் 'வ்' என்பது ------

இடைநிலை

அ) இறந்தகால

ஆ) நிகழ்கால

இ) எதிர்கால

ஈ ) எதிர்மறை

விடை : இ ) எதிர்கால


6) எழுத்து தனித்தும் , தொடர்ந்தும் பொருள்தரின் பதமாம். அது பகுபதம், பகாப்பதம் என இருபாலாகி இயலும் எனக் குறிப்பிடுவது -----


அ) நன்னூல்

ஆ) தொல்காப்பியம்

இ ) தொன்னூல் விளக்கம்

ஈ) இலக்கண விளக்கம்

விடை : அ ) நன்னூல்

7) கீழ்க்காண்பனவற்றுள் உடம்படு மெய்களாவன ------

அ) க்,ச்

ஆ)த் .ப்

இ) ய், வ்

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : இ ) ய் , வ்


8) பொருள் அற்றது -------


அ) பகுதி

ஆ) விகுதி

இ) சாரியை

ஈ) விகாரம்

விடை : இ ) சாரியை 

9) ' நின்றான் ' என்பதில் ' நில்' என்பது -------விகாரம்.

அ) திரிதல்

ஆ) கெடுதல்

இ) குறில் நெடிலாக மாறிய

ஈ) நெடில் குறிலாக மாறிய

விடை : அ ) திரிதல்

10 ) எழுத்துப்பேறாக வரும் எழுத்து ------

அ) ப்

ஆ) ம்

இ) ய்

ஈ )த்

விடை : ஈ ) த் 

11 ) இரண்டு ----- சொற்கள் ஒட்டி வருவது இருபெயரொட்டுப் பண்புத்தொகை

அ) வினை

ஆ) பெயர்

இ) இடை

ஈ) உரி

விடை : ஆ ) பெயர்

12 ) காலம் கரந்த பெயரெச்சம் ------

அ) பண்புத்தொகை

ஆ) வினைத்தொகை

இ) உவமைத்தொகை

ஈ) உம்மைத்தொகை

விடை : ஆ ) வினைத்தொகை

13) போல , போன்ற என்னும் உவம உருபு மறைந்து வருவது ------

அ) உவமைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) வினைத்தொகை

ஈ) வினையாலனையும் பெயர்


விடை : அ ) உவமைத்தொகை


14) சேரனும் சோழனும் - என்பதன் இலக்கணக்குறிப்பு -----


அ) உவமைத்தொகை

ஆ) பண்புத்தொகை

இ) உம்மைத்தொகை

ஈ) எண்ணும்மை


விடை : ஈ ) எண்ணும்மை


15 ) ' உயிர்முதல் ' என்பதன் சான்று -----


அ) மணிமாலை

ஆ) வாழை இலை

இ) தமிழ் நிலம்

ஈ) பொன்வண்டு


விடை : ஆ ) வாழை இலை


16 ) ' வாயொலி' - எவ்வகைப் புணர்ச்சி விதி என்பதைச் சுட்டுக.

அ) ஈறுபோதல்

ஆ) இனமிகல்

இ) ஆதிநீடல்

ஈ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

விடை : ஈ ) உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே

17) பொருள் பாகுபாட்டின் அடிப்படையில் திணை - வகைப்படும்.

அ) 2

ஆ)6

இ ) 4

ஈ) 3

விடை : அ ) 2

18)' தொல்காப்பியம்' குறிப்பிடும் திணைகள் ( புறம்சார்ந்தவை) -----

அ) 11

ஆ) 5

இ) 7

ஈ ) 12

விடை : இ ) 7

19) புகழெனின் உயிருங் கொடுக்குவர் பழியெனின் உலகுடன் பெறினுங் கொள்ளலர்; அயர்விலர் - எனும் புறப்பாட்டு சுட்டும் திணை --

அ) வெட்சித்திணை

ஆ) கைக்கிளை

இ) பொதுவியல்

ஈ) பாடாண்திணை

விடை : இ ) பொதுவியல் திணை


20 ) அரசன் செய்யவேண்டியகடமைகளை முறை தவறாமல்செய்யுமாறு அவன் கேட்க அறிவுறுத்துதல் துறை -----

அ) செவியறிவுறூஉத்துறை

ஆ)பொருண்மொழிக்காஞ்சி

இ) பரிசல்துறை

ஈ) இவற்றில் எதுவுமில்லை

விடை : அ ) செவியறிவுறூஉத்துறை

12th std Tamil Refresher Course based Tamil online Preparation test . You Can study and Write these 12th Tamil refresher online Exam.

Share:

12th Commerce Unit 1 Refresher course Answer key 2021 - Tamil Medium

12th Commerce Unit 1 Refresher course Answer key 2021 - Tamil Medium

 மதிப்பீட்டு வினா விடைகள் 

1. பண்ட மாற்றுமுறை என்றால் என்ன?

  •  பணப் பரிமாற்றம் இடம் பெறாமல் ஒரு பொருளைக் கொடுத்து வெறு பொருளைப் பெறும் வணிக முறையே  பண்ட மாற்று வணிக முறையாகும்.
  • பொருள் மற்றொரு பொருளுக்கு மாற்றாகப் பரிமாற்றம் செய்யப்படும் முறையைப் பண்டமாற்றுமுறை எனலாம்.

2. பணம் கண்டுபிழப்பதற்கு முன்பு வணிகம் எவ்வாறு நடைபெற்றது ?

  • பணம் கண்டுபிடிப்பதற்கு முன்பு வணிகம் பண்ட மாற்று முறையில் நடைபெற்றது.

3. பண்டமாற்று வணிகத்தின் நிபந்தனைகள் யாவை ?

  • ஒவ்வொருவரும் தேவைக்கு அதிகமான பொருட்களை இருப்பில் வைத்திருக்க வேண்டும்.
  • இருவருக்கும் அப்பொருள் உரிமை மாற்றுத் தேவையாக இருக்க வேண்டும் .
  • பரிமாற்றத்தின் போது இருவருக்கும் நேரடித்தோடர்பு  முக்கியமானதாக கருதப்படும்

4. பண்டமாற்று வணிகத்தின் குறைபாடுகளை விரிவாக எழுதுக 

  • இருவருடைய தேவைகள் உடன்படாமல் இருத்தல்
  • பொதுவான மதிப்பீடு அளவு இல்லாமை
  • உற்பத்தியாளருக்கும் நுகர்வோருக்கும் நேரடித்தோடர்பு இல்லாமை
  • உபரி இருப்பு வைக்க இயலாத நிலை
Share:

12th Commerce Unit 2 Refresher course Answer key 2021 - Tamil Medium

12th Commerce Unit 2 Refresher course Answer key 2021 - Tamil Medium

மதிப்பீட்டு வினா விடைகள்

1. ஆள்சார் தடை என்றால் என்ன ?

ஆள்சார்தடை

  • பொருட்கள் தேவைப்படும் நபர்களையும் நியாயமான விலையில் வாங்க 
  • விரும்புபவர்களையும் தொடர்பு கொள்ள முடியாத  நிலை உள்ளது.
  • உற்பத்தியாளரும் நுகர்வோரும் ஒருவருக்கொருவர் அறிமுகம் செய்து கொள்ளும் சந்தர்ப்பம் ஏற்பட வாய்ப்பு கிடையாது.
  •  இக்குறைபாடே ஆள்சார்தடை எனப்படும்.
  • வணிகத்தின் முக்கிய அங்கமாக திகழும் வியாபாரம் இக்குறைபாட்டை நீக்க உதவுகிறது . 

2. குறிப்பு  வரைக :? இடத்தடை

இடத்தடை 

  • பொட்கள் ஒரு இடத்தில் உற்பத்தி செய்யப்பட்டு நாடு முழுவதும் மற்றும் உலகம் முழுவதும் உள்ள நுகர்வொர்களுக்கு விற்பனை செய்யப்படுகிறது.
  • உற்பத்தியாளரையும் நுகர்வோரையும் பிரிக்கும் தூரமே இடத்தடை எனப்படுகிறது.
  • போக்குவரத்து மூலம் இத்தடையை நீக்கப்படுகின்றன.

3. உற்பத்தியான பொருளை பற்றி நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்க என்ன சாதனைகளை பயன்படுத்துவாய்?

  • உற்பத்தியான பொருள் பற்றி நுகர்வோருக்கு தகவல் தெரிவிக்க நல்ல விளம்பரம் மற்றும் விற்பனையாளர் சேவையை பயன்படுத்தலாம்.

4. நிதித்தடை என்றால் என்ன ?அதனை எவ்வாறு போக்குவாய் ?

  • உற்பத்தியாளருக்கும் வர்த்தகர்களுக்கும் அவசியமான நேரத்தில் தேவையான நிதி கிடைப்பத்தில்லை.
  • நிதி ஆதாரம் குறைந்து வியாபாரம் தடைப்படுதலே நிதித்தடை எனப்படுகிறது.
  • இத்தடை வங்கி மற்றும் நிதி நிறுவனங்களால் நீக்கப்படுகிறது.

5. மிக முக்கியமான வணிகத்தின் பல்வேறு தடைகளைப் பட்டியலிடுக 

  • ஆள்சார் தடை
  •  இடத்தடை
  • காலத்தடை
  •  இடர்கள் மற்றும் பொருட்கள் தரம் கெடாமல் இருக்கத்தடை
  • நட்ட இடர்பாட்டுத் தடை
  • அறிவுசார் தடை
  • பண்ட பரிமாற்ற தடை
  • நிதி தடை
  • பொருட்களை துல்லியமாக தயாரிப்பதில் தடை
  • பொருட்களை உற்பத்தி செய்கின்ற இடத்திலிருந்து நுகர்வோருக்கு நேரடியாக வீட்டிற்கு 
  • கொண்டு செல்லுதல் .
Share:

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories