Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label Thirukkural. Show all posts
Showing posts with label Thirukkural. Show all posts

திருக்குறள் - அதிகாரம் 4 - அறன்வலியுறுத்தல் - விளக்கம்

திருக்குறள் - அதிகாரம் 4 - அறன்வலியுறுத்தல் - விளக்கம் 

குறள் 31:.

சிறப்புஈனும் செல்வமும் ஈனும் அறத்தினூஉங்கு 
ஆக்கம் எவனோ உயிர்க்கு.

Tamil meaning

சிறப்பையும், செழிப்பையும் தரக்கூடிய அறவழி ஒன்றைத்தவிர ஆக்கமளிக்கக் கூடிய வழி வேறென்ன இருக்கிறது?

Translation:.
It yields distinction, yields prosperity; what gain
Greater than virtue can a living man obtain?

Commentary:.

Virtue will confer heaven and wealth; what greater source of happiness can man possess ?

குறள் 32:.

அறத்தினூஉங்கு ஆக்கமும் இல்லை அதனை 

மறத்தலின் ஊங்கில்லை கேடு.

Tamil meaning

நன்மைகளின் விளைநிலமாக இருக்கும் அறத்தைப் போல் ஒருவருடைய வாழ்க்கைக்கு ஆக்கம் தரக்கூடியது எதுவுமில்லை; அந்த அறத்தை மறப்பதை விடத் தீமையானதும் வேறில்லை.

Translation:.
No greater gain than virtue aught can cause;
No greater loss than life oblivious of her laws.

Commentary:.

There can be no greater source of good than (the practice of) virtue; there can be no greater source of evil than the forgetfulness of it.

குறள் 33:.

ஒல்லும் வகையான் அறவினை ஓவாதே 

செல்லும்வாய் எல்லாஞ் செயல்.

Tamil meaning

செய்யக்கூடிய செயல்கள் எவை ஆயினும், அவை எல்லா இடங்களிலும் தொய்வில்லாத அறவழியிலேயே செய்யப்பட வேண்டும்.

Translation:.
To finish virtue's work with ceaseless effort strive,
What way thou may'st, where'er thou see'st the work may thrive.

Commentary:.

As much as possible, in every way, incessantly practise virtue.

குறள் 34:.

மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன் 

ஆகுல நீர பிற.

Tamil meaning

மனம் தூய்மையாக இருப்பதே அறம்; மற்றவை ஆரவாரத்தைத் தவிர வேறொன்றுமில்லை.

Translation:.

Spotless be thou in mind! This only merits virtue's name;

All else, mere pomp of idle sound, no real worth can claim.

Commentary:.

Let him who does virtuous deeds be of spotless mind; to that extent is virtue; all else is vain show.

குறள் 35:.

அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும் 

இழுக்கா இயன்றது அறம்.

Tamil meaning

பொறாமை, பேராசை, பொங்கும் கோபம், புண்படுத்தும் சொல் ஆகிய இந்த நான்கும் அறவழிக்குப் பொருந்தாதவைகளாகும்.

Translation:.

'Tis virtue when, his footsteps sliding not through envy, wrath,

Lust, evil speech-these four, man onwards moves in ordered path.

Commentary:.

That conduct is virtue which is free from these four things, viz, malice, desire, anger and bitter speech.

குறள் 36:.

அன்றறிவாம் என்னாது அறஞ்செய்க மற்றது 

பொன்றுங்கால் பொன்றாத் துணை.

Tamil meaning

பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று நாள் கடத்தாமல் அறவழியை மேற்கொண்டால் அது ஒருவர் இறந்தபின் கூட அழியாப் புகழாய் நிலைத்துத் துணை நிற்கும்.

Translation:.

Do deeds of virtue now. Say not, 'To-morrow we'll be wise';

Thus, when thou diest, shalt thou find a help that never dies.

Commentary:.

Defer not virtue to another day; receive her now; and at the dying hour she will be your undying friend.

குறள் 37:.

அறத்தாறு இதுவென வேண்டா சிவிகை 

பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை.

Tamil meaning

அறவழியில் நடப்பவர்கள் பல்லக்கில் உட்கார்ந்து செல்பவர்களைப் போல வாழ்க்கையில் வரும் இன்ப துன்பங்கள் இரண்டையும் எளியவாகக் கருதி மகிழ்வுடன் பயணத்தை மேற்கொள்வார்கள். தீய வழிக்குத் தங்களை ஆட்படுத்திக் கொண்டவர்களோ பல்லக்கைத் தூக்கிச் சுமப்பவர்களைப் போல இன்பத்திலும் அமைதி கொள்ளாமல், துன்பத்தையும் தாங்கிக் கொள்ளும் மனப்பக்குவமின்றி வாழ்வையே பெரும் சுமையாகக் கருதுவார்கள்.

Translation:.

Needs not in words to dwell on virtue's fruits: compare

The man in litter borne with them that toiling bear!

Commentary:.

The fruit of virtue need not be described in books; it may be inferred from seeing the bearer of a palanquin and the rider therein.

குறள் 38:.

வீழ்நாள் படாஅமை நன்றாற்றின் அஃதொருவன் 

வாழ்நாள் வழியடைக்கும் கல்.

Tamil meaning

பயனற்றதாக ஒருநாள்கூடக் கழிந்து போகாமல், தொடர்ந்து நற்செயல்களில் ஈ.டுபடுபவருக்கு வாழ்க்கைப் பாதையைச் சீராக்கி அமைத்துத் தரும் கல்லாக அந்த நற்செயல்களே விளங்கும்.

Translation:.

If no day passing idly, good to do each day you toil,

A stone it will be to block the way of future days of moil.

Commentary:.

If one allows no day to pass without some good being done, his conduct will be a stone to block up the passage to other births.

குறள் 39:.

அறத்தான் வருவதே இன்பம் மற்றெல்லாம் 

புறத்த புகழும் இல.

Tamil meaning

தூய்மையான நெஞ்சுடன் நடத்தும் அறவழி வாழ்க்கையில் வருகின்ற புகழால் ஏற்படுவதே இன்பமாகும். அதற்கு மாறான வழியில் வருவது புகழும் ஆகாது; இன்பமும் ஆகாது.

Translation:.

What from virtue floweth, yieldeth dear delight;

All else extern, is void of glory's light.

Commentary:.

Only that pleasure which flows from domestic virtue is pleasure; all else is not pleasure, and it is without praise.

குறள் 40:.

செயற்பால தோரும் அறனே ஒருவற்கு 

உயற்பால தோரும் பழி.

Tamil meaning

பழிக்கத் தக்கவைகளைச் செய்யாமல் பாராட்டத்தக்க அறவழிச் செயல்களில் நாட்டம் கொள்வதே ஒருவர்க்குப் புகழ் சேர்க்கும்.

Translation:.

'Virtue' sums the things that should be done;

'Vice' sums the things that man should shun.

Commentary:.

That is virtue which each ought to do, and that is vice which each should shun.

Share:

திருக்குறள் - அதிகாரம் 3 - நீத்தார் பெருமை - விளக்கம்

திருக்குறள் பாடல் : 21

ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து

வேண்டும் பனுவல் துணிவு.

  • தமக்குரிய ஒழுக்கத்தில் வாழ்ந்து, ஆசைகளை அறுத்து, உயர்ந்த மேன்மக்களின் பெருமையே, சிறந்தனவற்றுள் சிறந்தது என்று நூல்கள் சொல்கின்றன.

திருக்குறள் பாடல் : 22

துறந்தார் பெருமை துணைக்கூறின் வையத்து

இறந்தாரை எண்ணிக்கொண் டற்று.


  • ஆசைகளை விட்டு விலகியவரின் பெருமைக்கு, எண்ணிக்கையால் அளவு கூறுவது, இந்த உலகத்தில் இறந்து போனவர்களின் எண்ணிக்கையை எல்லாம் எண்ணுவது போலாகும்.


திருக்குறள் பாடல் : 23

இருமை வகைதெரிந்து ஈண்டுஅறம் பூண்டார்

பெருமை பிறங்கிற்று உலகு.


  • இம்மையின் துன்பத்தையும் மறுமையின் இன்பத்தையும் அறிந்து, மெய் உணர்ந்து, ஆசைகள் அறுத்து எறியும் அறத்தைச்செய்தவரின் பெருமையே, இவ்வுலகில் உயர்ந்து விளங்குகிறது.


திருக்குறள் பாடல் : 24 

உரனென்னும் தோட்டியான் ஓரைந்தும் காப்பான்

வரனென்னும் வைப்பிற்கோர் வித்தது.


  • மெய், வாய்,கண், மூக்கு, செவி என்னும் ஐந்து யானைகளும் தத்தம் புலன்கள் ஆகிய ஊறு, சுவை, ஒளி, நாற்றம், ஓசை ஆகியவற்றின் மேல் செல்லாமல், அவற்றை மன உறுதி என்னும் அங்குசத்தால் காப்பவன் எல்லாவற்றிலும் சிறந்ததாகிய வீட்டுலகிற்கு ஒருவிதை ஆவான்.


திருக்குறள் பாடல் : 25

ஐந்தவித்தான் ஆற்றல் அகல்விசும்பு ளார்கோமான்

இந்திரனே சாலுங் கரி.


  • அகன்ற வானத்து வாழ்பவரின் இறைவனாகிய இந்திரனே, புலன்வழிப் பெருகும் ஆசை ஐந்தையும் அறுத்தவனின்வலிமைக்குத் தகுந்த சான்று ஆவான்.


திருக்குறள் பாடல் : 26

செயற்கரிய செய்வார் பெரியர் சிறியர்

செயற்கரிய செய்கலா தார்.


  • பிறர் செய்வதற்கு முடியாத செயல்களைச் செய்பவரே மேன்மக்கள்; செய்ய முடியாதவரோ சிறியவரே.


திருக்குறள் பாடல் : 27

சுவைஒளி ஊறுஓசை நாற்றமென ஐந்தின்

வகைதெரிவான் கட்டே உலகு.


  • சுவை, ஒளி, ஊறு, ஓசை, நாற்றம் என்று கூறப்படும் ஐந்து புலன்களின் வழிப் பிறக்கும் ஆசைகளை அறுத்து எறிபவனின் வசப்பட்டதே இவ்வுலகம்.


திருக்குறள் பாடல் : 28

நிறைமொழி மாந்தர் பெருமை நிலத்து

மறைமொழி காட்டி விடும்.


  • நிறைவான வாக்குப் பெருமை உடைய மேன் மக்களின் உயர்வை, அவர்கள் இவ்வுலகில் சொன்ன மந்திரச் சொற்களே அடையாளம் காட்டிவிடும்.


திருக்குறள் பாடல் : 29

குணமென்னும் குன்றேறி நின்றார் வெகுளி

கணமேயும் காத்தல் அரிது.


  • நற்குணங்களாம் சிறுமலை மீது ஏறி நின்ற அம் மேன்மக்கள், தமக்குள் ஒரு கணப்பொழுதும் கோபத்தைக் கொண்டிருப்பது கடினம். எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.


திருக்குறள் பாடல் : 30

அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும்

செந்தண்மை பூண்டொழுக லான்.


  • எல்லா உயிர்களிடத்திலும் இரக்கம் கொண்டு வாழ்பவரே அறவோர்; அவரே அந்தணர்.


Share:

திருக்குறள் - அதிகாரம் 2 - வான் சிறப்பு- விளக்கம்

திருக்குறள் பாடல் : 11

வான்நின்று உலகம் வழங்கி வருதலால்

தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.


  • உரிய காலத்தில் இடைவிடாது மழை பெய்வதால்தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையே அமிழ்தம் எனலாம்.


திருக்குறள் பாடல் : 12

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்

துப்பாய தூஉம் மழை.


  • நல்ல உணவுகளைச் சமைக்கவும், சமைக்கப்பட்ட உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது மழையே.


திருக்குறள் பாடல் : 13

விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து

உள்நின்று உடற்றும் பசி.


  • உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்.


திருக்குறள் பாடல் : 14

ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்

வாரி வளங்குன்றிக் கால்.


  • மழை என்னும் வருவாய் தன் வளத்தில் குறைந்தால், உழவர் ஏரால் உழவு செய்யமாட்டார்.


திருக்குறள் பாடல் : 15

கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே

எடுப்பதூஉம் எல்லாம் மழை.


  • பெய்யாமல் மக்களைக் கெடுப்பதும்; பெய்து கெட்டவரைத் திருத்துவதும் எல்லாமே மழைதான்.


திருக்குறள் பாடல் : 16

விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே

பசும்புல் தலைகாண்பு அரிது.


  • மேகத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதாகிவிடும்.


திருக்குறள் பாடல் : 17

நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி

தான்நல்கா தாகி விடின்.


  • பெய்யும் இயல்பிலிருந்து மாறி மேகம் பெய்யாது போனால், நீண்ட கடல் கூட வற்றிப் போகும்.


திருக்குறள் பாடல் : 18

சிறப்பொடு பூசனை செல்லாது வானம்

வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.


  • மழை பொய்த்துப் போனால் தெய்வத்திற்குத் தினமும் நடக்கும் பூசனையும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.


திருக்குறள் பாடல் : 19

தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்

வானம் வழங்கா தெனின்.


  • மழை பொய்த்துப் போனால், விரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்குத் தரும் தானம் இராது; தன்னை உயர்த்தும் தவமும் இராது.


திருக்குறள் பாடல் : 20

நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்

வான்இன்று அமையாது ஒழுக்கு.


  • எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது; அந்த நீரோ மழை இல்லாமல் கிடைக்காது.


Share:

திருக்குறள் - அதிகாரம் 49 - காலமறிதல் - விளக்கம்


481.பகல்வெல்லுங் கூகையைக் காக்கை இகல்வெல்லும்

வேந்தர்க்கு வேண்டும் பொழுது.

விளக்கம்:

  • தன்னைவிட வலிமையான கூகையைப் பகல் நேரத்தில் காக்கை போரிட்டு வென்றுவிடும்; அவ்வாறே பகைவரை வெல்லும் வேந்தர்க்கும் தகுந்த காலம் வேண்டும்.

482.பருவத்தோடு ஒட்ட ஒழுகல் திருவினைத்

தீராமை யாக்கும் கயிறு.

விளக்கம்:

  • காலத்தோடு பொருத்த முயற்சிகளைச் செய்து வருதல், செல்வத்தைத் தம்மைவிட்டுப் போகாமல் பிணித்து வைக்கும் கயிறு ஆகும்.

483.அருவினை என்ப உளவோ கருவியான்

காலம் அறிந்து செயின்.

விளக்கம்:

  • ஏற்ற கருவிகளோடு, தகுதியான காலத்தையும் அறிந்து செயலைச் செய்தால், செய்வதற்கு அரிய செயல் என்பதும் உண்டோ?

(484) ஞாலம் கருதினும் கைகூடும் காலம்

கருதி இடத்தாற் செயின்.

விளக்கம்:

தகுதியான காலத்தை ஆராய்ந்து, ஏற்ற இடத்திலேயும் செய்தால், உலகத்தையே அடைய நினைத்தாலும் அதுவும் கைகூடும்.

(485) காலம் கருதி இருப்பர் கலங்காது

ஞாலம் கருது பவர்.

விளக்கம்:

  • உலகை வெற்றி கொள்ளக் கருகின்றவர்கள், அதற்கு ஏற்ற காலத்தை எதிர்பார்த்து, அதுவரையும் மனந்தளராமல் காத்திருப்பார்கள்.

(486) ஊக்கம் உடையான் ஒடுக்கம் பொருதகர்

தாக்கற்குப் பேருந் தகைத்து.


விளக்கம்:

  • ஊக்கம் உடையவன் ஒருவன் பகைவர்மேல் போருக்குச் செல்லாமல் ஒடுங்கியிருப்பது, போரிடும் ஆட்டுக் கடா பகையைத் தாக்குவதற்குப் பின்வாங்கும் தன்மையது.

(487) பொள்ளென ஆங்கே புறம்வேரார் காலம்பார்த்து

உள்வேர்ப்பர் ஒள்ளி யவர்.

விளக்கம்:

  • அறிவுடையவர், பகைவர் கெடுதல் செய்த அந்தக் கணமே தன் சினத்தை வெளியே காட்ட மாட்டார்கள்; தகுந்த காலத்தை எதிர்பார்த்து உள்ளத்தில் மட்டுமே சினம் கொள்வார்கள்.

(488) செறுநரைக் காணின் சுமக்க இறுவரை

காணின் கிழக்காம் தலை.


விளக்கம்:

  • தமக்குச் சாதகமான காலம் வரும் வரையிலும் பகைவரைக் கண்டால் பணிந்து போக, அவர்கட்கு முடிவு காலம் வரும்போது அவர்கள் தலை கீழே விழும்.

(489) எய்தற்கு அரியது இயைந்தக்கால் அந்நிலையே

செய்தற்கு அரிய செயல்.


விளக்கம்:

கிடைப்பதற்கு அருமையான காலம் வந்து வாய்த்தபோது, அப்போதே, நாம் செய்வதற்கு அரியவான செயல்களைச் செய்து வெற்றிபெற வேண்டும்.

(490 )கொக்கொக்க கூம்பும் பருவத்து மற்றதன்

 குத்தொக்க சீர்த்த இடத்து.

விளக்கம்:

காலத்தை எதிர்பார்க்க வேண்டிய பருவத்தில், கொக்கைப் போல இருந்து, காலம் வாய்த்த போதில், கொக்கு மீனைக் குத்தினாற்போலத் தவறாமல் செய்து முடிக்க வேண்டும்.

Share:

திருக்குறள் - அதிகாரம் 1 - கடவுள் வாழ்த்து - விளக்கம்

குறள்: 1

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி
பகவன் முதற்றே உலகு

குறள் விளக்கம் 
  • எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது
 
குறள்: 2
கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்
நற்றாள் தொழாஅர் எனின்.

குறள் விளக்கம் 
  • தன்னைவிட அறிவில் மூத்த பெருந்தகையாளரின் முன்னே வணங்கி நிற்கும் பண்பு இல்லாவிடில் என்னதான் ஒருவர் கற்றிருந்தாலும் அதனால் என்ன பயன்? ஒன்றுமில்லை
 
குறள்: 3
மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்
நிலமிசை நீடுவாழ் வார்.

குறள் விளக்கம் 

  • மலர் போன்ற மனத்தில் நிறைந்தவனைப் பின்பற்றுவோரின் புகழ்வாழ்வு, உலகில் நெடுங்காலம் நிலைத்து நிற்கும்.

 
குறள்: 4
வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல.

குறள் விளக்கம் 
  • விருப்பு வெறுப்பற்றுத் தன்னலமின்றித் திகழ்கின்றவரைப் பின்பற்றி நடப்பவர்களுக்கு எப்போதுமே துன்பம் ஏற்படுவதில்லை.
 
குறள்: 5
இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்
பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.

குறள் விளக்கம் 
  • இறைவன் என்பதற்குரிய பொருளைப் புரிந்து கொண்டு புகழ் பெற விரும்புகிறவர்கள், நன்மை தீமைகளை ஒரே அளவில் எதிர் கொள்வார்கள்.
 
குறள்: 6
பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க
நெறிநின்றார் நீடுவாழ் வார்.

குறள் விளக்கம் 
  • மெய், வாய், கண், மூக்கு, செவி எனும் ஐம்பொறிகளையும் கட்டுப்படுத்திய தூயவனின் உண்மையான ஒழுக்கமுடைய நெறியைப் பின்பற்றி நிற்பவர்களின் புகழ்வாழ்வு நிலையானதாக அமையும்
 
குறள்: 7
தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்
மனக்கவலை மாற்றல் அரிது.

குறள் விளக்கம் 
  • ஒப்பாரும் மிக்காருமில்லாதவனுடைய அடியொற்றி நடப்பவர்களைத் தவிர, மற்றவர்களின் மனக்கவலை தீர வழியேதுமில்லை.
 
குறள்: 8
அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்
பிறவாழி நீந்தல் அரிது.

குறள் விளக்கம் 
  • அந்தணர் என்பதற்குப் பொருள் சான்றோர் என்பதால், அறக்கடலாகவே விளங்கும் அந்தச் சான்றோரின் அடியொற்றி நடப்பவர்க்கேயன்றி, மற்றவர்களுக்குப் பிற துன்பக் கடல்களைக் கடப்பது என்பது எளிதான காரியமல்ல.
 
குறள்: 9
கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்
தாளை வணங்காத் தலை.

குறள் விளக்கம் 
  • உடல், கண், காது, மூக்கு, வாய் எனும் ஐம்பொறிகள் இருந்தும், அவைகள் இயங்காவிட்டால் என்ன நிலையோ அதே நிலைதான் ஈடற்ற ஆற்றலும் பண்பும் கொண்டவனை வணங்கி நடக்காதவனின் நிலையும் ஆகும்.
 
குறள்: 10
பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்
இறைவன் அடிசேரா தார்.

குறள் விளக்கம்
  • வாழ்க்கை எனும் பெருங்கடலை நீந்திக் கடக்க முனைவோர், தலையானவனாக இருப்பவனின் அடி தொடர்ந்து செல்லாவிடில் நீந்த முடியாமல் தவிக்க நேரிடும்.
Share:

கடவுள் வாழ்த்து - திருக்குறள்

கடவுள் வாழ்த்து - திருக்குறள்

அகர முதல எழுத்தெல்லாம் ஆதி

பகவன் முதற்றே உலகு.  - 1

எழுத்துக்கள் எல்லாம் அகரத்தை அடிப்படையாக கொண்டிருக்கின்றன. அதுபோல உலகம் கடவுளை அடிப்படையாக கொண்டிருக்கிறது.

கற்றதனால் ஆய பயனென்கொல் வாலறிவன்

நற்றாள் தொழாஅர் எனின்.  - 2

தூய அறிவு வடிவாக விளங்கும் இறைவனுடைய நல்ல திருவடிகளை தொழாமல் இருப்பாரானால், அவர் கற்ற கல்வியினால் ஆகிய பயன் என்ன?.

மலர்மிசை ஏகினான் மாணடி சேர்ந்தார்

நிலமிசை நீடுவாழ் வார்.  - 3

அன்பரின் அகமாகிய மலரில் வீற்றிருக்கும் கடவுளின் சிறந்த திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர், இன்ப உலகில் நிலைத்து வாழ்வார்.

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு

யாண்டும் இடும்பை இல.  - 4

விருப்பு வெறுப்பு இல்லாத கடவுளின் திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர்க்கு எப்போதும் எவ்விடத்திலும் துன்பம் இல்லை.

இருள்சேர் இருவினையும் சேரா இறைவன்

பொருள்சேர் புகழ்புரிந்தார் மாட்டு.  - 5

கடவுளின் உண்மைப் புகழை விரும்பி அன்பு செலுத்துகின்றவரிடம் அறியாமையால் விளையும் இருவகை வினையும் சேர்வதில்லை.

பொறிவாயில் ஐந்தவித்தான் பொய்தீர் ஒழுக்க

நெறிநின்றார் நீடுவாழ் வார்.  - 6

ஐம்பொறி வாயிலாக பிறக்கும் வேட்கைகளை அவித்த இறைவனுடைய பொய்யற்ற ஒழுக்க நெறியில் நின்றவர், நிலை பெற்ற நல்வாழ்க்கை வாழ்வர்.

தனக்குவமை இல்லாதான் தாள்சேர்ந்தார்க் கல்லால்

மனக்கவலை மாற்றல் அரிது.  - 7

தனக்கு ஒப்புமை இல்லாத தலைவனுடைய திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர்க்கு மனக்கவலையை மாற்ற முடியாது.

அறவாழி அந்தணன் தாள்சேர்ந்தார்க் கல்லால்

பிறவாழி நீந்தல் அரிது.  - 8

அறக்கடலாக விளங்கும் கடவுளின் திருவடிகளைப் பொருந்தி நினைக்கின்றவர் அல்லாமல், மற்றவர் பொருளும் இன்பமுமாகிய மற்ற கடல்களைக் கடக்க முடியாது.

கோளில் பொறியின் குணமிலவே எண்குணத்தான்

தாளை வணங்காத் தலை.  - 9

கேட்காதசெவி, பார்க்காத கண் போன்ற எண் குணங்களை உடைய கடவுளின் திருவடிகளை வணங்காதவரின் தலைகள் பயனற்றவைகளாம்.

பிறவிப் பெருங்கடல் நீந்துவர் நீந்தார்

இறைவன் அடிசேரா தார்.  - 10

இறைவனுடைய திருவடிகளை பொருந்தி நினைக்கின்றவர் பிறவியாகிய பெரிய கடலைக் கடக்க முடியும். மற்றவர் கடக்க முடியாது.

Share:

திருக்குறள் । 133 அதிகாரங்கள் விளக்கத்துடன்

திருக்குறள்  । 133 அதிகாரங்கள் விளக்கத்துடன் 

திருக்குறள் என்னும் அற்புத படைப்பு: 

  • “வள்ளுவன் தன்னை உலகிற்கு தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு” என்று அனைவராலும் போற்றப்படும் அளவிற்கு தமிழுக்கு புகழை சேர்த்த இவரது மிகச்சிறந்த படைப்பு இந்த திருக்குறள் எனும் நூல். திருக்குறளை படிக்காத தமிழன் இல்லை என்று கூட கூறலாம். அந்த அளவிற்கு தமிழ் நன்னெறி நூலாக உள்ளது . திருக்குறளின் உன்னதத்தினை உணர்ந்த இதனை “ஜி.யு. போப்” என்பவர் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

வள்ளுவர் வரலாறு 

  • திருவள்ளுவர் மக்கள் தங்கள் வாழ்க்கையில் எவ்வாறு நடந்துகொள்ளவேண்டும் என்பதனை தனது 133 அதிகாரரங்கள் மூலம் தெளிவாக பல நூறு வருடங்களுக்கு முன்னரே இந்த உலகிற்கு தெரிவித்து சென்றவர் என்ற பெருமை திருவள்ளுவருக்கு உண்டு.இன்றும் “உலக பொதுமறை” என்று அனைத்து மக்களாலும் ஏற்று கொள்ளப்பட்ட ஒரு நூலினை நமது தமிழ் இனத்தினை சேர்ந்த ஒருவர் எழுதியுள்ளார் என்பது தமிழர்களாகிய நமக்கு மிகப்பெரும் பெருமை என்றே கூறலாம். இப்படிப்பட்ட திருவள்ளுவரின் வாழ்க்கை வரலாற்றின் தொகுப்பு இந்த பதிவில் உள்ளது.திருவள்ளுவரது பெயர், பெற்றோர் மற்றும் பிறப்பிடம் ஆகிய அனைத்தும் இன்று வரை உறுதிசெய்யப்படவில்லை. இருந்தாலும் அவர் கி.பி. 2ஆம் நூற்றாண்டில் பிறந்திருக்க கூடும் என்று ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மேலும் அவர் தற்போதைய சென்னையில் உள்ள “மயிலாப்பூர்” பகுதியில் பிறந்து வளர்ந்தவர் என்றும் ஒரு தகவல் உண்டு . மேலும் காவேரிபக்கம் பகுதியில் வாழ்ந்த மார்கசெயன் என்பவர் திருவள்ளுவரது கவித்திறனை நேரில் கண்டு பூரித்து தனது மகளான வாசுகியை திருவள்ளுவருக்கு மணமுடித்து தந்ததாகவும் கூறப்படுகிறது. பெயர் – திருவள்ளுவர் பிறந்த வருடம் – கி .பி. 2ஆம் நூற்றாண்டு (சரியான ஆதாரம் இல்லை) பிறந்த இடம் – மயிலாப்பூர் (சரியான ஆதாரம் இல்லை) மனைவியின் பெயர் – வாசுகி வசித்த இடம் – மயிலாப்பூர்.

திருக்குறள் அதிகாரங்கள் 

அறத்துப்பால் 

  • திருக்குறள் அதிகாரம் 4 – அறன் வலியுறுத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 5 – இல்வாழ்க்கை 
  • திருக்குறள் அதிகாரம் 6 – வாழ்க்கைத் துணைநலம் 
  • திருக்குறள் அதிகாரம் 7 – மக்கட்பேறு 
  • திருக்குறள் அதிகாரம் 8 – அன்புடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 9 – விருந்தோம்பல் 
  • திருக்குறள் அதிகாரம் 10 – இனியவை கூறல் 
  • திருக்குறள் அதிகாரம் 11 – செய்ந்நன்றியறிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 12 – நடுவு நிலைமை 
  • திருக்குறள் அதிகாரம் 13 – அடக்கம் உடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 14 – ஒழுக்கம் உடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 15 – பிறனில் விழையாமை 
  • திருக்குறள் அதிகாரம் 16 – பொறையுடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 17 – அழுக்காறாமை 
  • திருக்குறள் அதிகாரம் 18 – வெஃகாமை 
  • திருக்குறள் அதிகாரம் 19 – புறங்கூறாமை 
  • திருக்குறள் அதிகாரம் 20 – பயனில சொல்லாமை 
  • திருக்குறள் அதிகாரம் 21 – தீவினையச்சம் 
  • திருக்குறள் அதிகாரம் 22 – ஒப்புரவறிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 23 – ஈ.கை 
  • திருக்குறள் அதிகாரம் 24 – புகழ் 
  • திருக்குறள் அதிகாரம் 25 – அருளுடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 26 – புலால் மறுத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 27 – தவம் திருக்குறள் 
  • அதிகாரம் 28 – கூடா ஒழுக்கம் 
  • திருக்குறள் அதிகாரம் 29 – கள்ளாமை 
  • திருக்குறள் அதிகாரம் 30 – வாய்மை 
  • திருக்குறள் அதிகாரம் 31 – வெகுளாமை 
  • திருக்குறள் அதிகாரம் 32 – இன்னா செய்யாமை 
  • திருக்குறள் அதிகாரம் 33 – கொல்லாமை 
  • திருக்குறள் அதிகாரம் 34 – நிலையாமை 
  • திருக்குறள் அதிகாரம் 35 – துறவு 
  • திருக்குறள் அதிகாரம் 36 – மெய்யுணர்தல் 
  • ருக்குறள் அதிகாரம் 37 – அவா அறுத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 38 – ஊழ் 

 பொருட்பால் 

  • திருக்குறள் அதிகாரம் 39 – இறைமாட்சி 
  • திருக்குறள் அதிகாரம் 40 – கல்வி 
  • திருக்குறள் அதிகாரம் 41 – கல்லாமை 
  • திருக்குறள் அதிகாரம் 42 – கேள்வி 
  • திருக்குறள் அதிகாரம் 43 – அறிவுடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 44- குற்றங்கடிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 45 – பெரியாரைத் துணைக்கோடல் 
  • திருக்குறள் அதிகாரம் 46 – சிற்றினம் சேராமை 
  • திருக்குறள் அதிகாரம் 47 – தெரிந்து செயல்வகை 
  • திருக்குறள் அதிகாரம் 48 – வலியறிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 50 – இடனறிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 51 – தெரிந்து தெளிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 52 – தெரிந்து வினையாடல் 
  • திருக்குறள் அதிகாரம் 53 – சுற்றந் தழால் 
  • திருக்குறள் அதிகாரம் 54 – பொச்சாவாமை 
  • திருக்குறள் அதிகாரம் 55 – செங்கோன்மை 
  • திருக்குறள் அதிகாரம் 56 – கொடுங்கோன்மை
  • திருக்குறள் அதிகாரம் 57 – வெருவந்த செய்யாமை 
  • திருக்குறள் அதிகாரம் 58 – கண்ணோட்டம் 
  • திருக்குறள் அதிகாரம் 59 – ஒற்றாடல் 
  • திருக்குறள் அதிகாரம் 60 – ஊக்கம் உடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 61 – மடி இன்மை 
  • திருக்குறள் அதிகாரம் 62 – ஆள்வினை உடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 63 – இடுக்கண் அழியாமை 
  • திருக்குறள் அதிகாரம் 64 – அமைச்சு 
  • திருக்குறள் அதிகாரம் 65 – சொல்வன்மை 
  • திருக்குறள் அதிகாரம் 66- வினைத் தூய்மை 
  • திருக்குறள் அதிகாரம் 67 – வினைத்திட்பம் 
  • திருக்குறள் அதிகாரம் 68 – வினை செயல்வகை 
  • திருக்குறள் அதிகாரம் 69 – தூது 
  • திருக்குறள் அதிகாரம் 70 – மன்னரைச் சேர்ந்து ஒழுகல் 
  • திருக்குறள் அதிகாரம் 71- குறிப்பறிதல் திருக்குறள் 
  • அதிகாரம் 72 – அவை அறிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 73 – அவை அஞ்சாமை 
  • திருக்குறள் அதிகாரம் 74 – நாடு 
  • திருக்குறள் அதிகாரம் 75 – அரண்
  • திருக்குறள் அதிகாரம் 76- பொருள் செயல்வகை 
  • திருக்குறள் அதிகாரம் 77 – படை மாட்சி 
  • திருக்குறள் அதிகாரம் 78 – படைச் செருக்கு 
  • திருக்குறள் அதிகாரம் 79 – நட்பு 
  • திருக்குறள் அதிகாரம் 80 – நட்பாராய்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 81- பழைமை 
  • திருக்குறள் அதிகாரம் 82 – தீ நட்பு 
  • திருக்குறள் அதிகாரம் 83 – கூடா நட்பு 
  • திருக்குறள் அதிகாரம் 84 – பேதைமை 
  • திருக்குறள் அதிகாரம் 85 – புல்லறிவாண்மை 
  • திருக்குறள் அதிகாரம் 86- இகல் 
  • திருக்குறள் அதிகாரம் 87 – பகை மாட்சி 
  • திருக்குறள் அதிகாரம் 88 – பகைத்திறம் தெரிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 89 – உட்பகை 
  • திருக்குறள் அதிகாரம் 90 – பெரியாரைப் பிழையாமை 
  • திருக்குறள் அதிகாரம் 91- பெண்வழிச் சேறல் 
  • திருக்குறள் அதிகாரம் 92 – வரைவின் மகளிர் 
  • திருக்குறள் அதிகாரம் 93 – கள்ளுண்ணாமை 
  • திருக்குறள் அதிகாரம் 94 – சூது 
  • திருக்குறள் அதிகாரம் 95 – மருந்து 
  • திருக்குறள் அதிகாரம் 96- குடிமை 
  • திருக்குறள் அதிகாரம் 97 – மானம் 
  • திருக்குறள் அதிகாரம் 98 – பெருமை 
  • திருக்குறள் அதிகாரம் 99 – சான்றாண்மை 
  • திருக்குறள் அதிகாரம் 100 – பண்புடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 101- நன்றியில் செல்வம் 
  • திருக்குறள் அதிகாரம் 102 – நாணுடைமை 
  • திருக்குறள் அதிகாரம் 103 – குடிசெயல் வகை 
  • திருக்குறள் அதிகாரம் 104 – உழவு 
  • திருக்குறள் அதிகாரம் 105 – நல்குரவு 
  • திருக்குறள் அதிகாரம் 106- இரவு 
  • திருக்குறள் அதிகாரம் 107 – இரவச்சம் 
  • திருக்குறள் அதிகாரம் 108 – கயமை 

காமத்துப்பால் 

  • திருக்குறள் அதிகாரம் 109 – தகை அணங்குறுத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 110 – குறிப்பறிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 111- புணர்ச்சி மகிழ்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 112 – நலம் புனைந்து உரைத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 113 – காதற் சிறப்புரைத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 114 – நாணுத் துறவுரைத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 115 – அலர் அறிவுறுத்தல்
  • திருக்குறள் அதிகாரம் 116- பிரிவு ஆற்றாமை 
  • திருக்குறள் அதிகாரம் 117 – படர்மெலிந் திரங்கல் 
  • திருக்குறள் அதிகாரம் 118 – கண் விதுப்பழிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 119 – பசப்புறு பருவரல் 
  • திருக்குறள் அதிகாரம் 120 – தனிப்படர் மிகுதி 
  • திருக்குறள் அதிகாரம் 121- நினைந்தவர் புலம்பல் 
  • திருக்குறள் அதிகாரம் 122 – கனவுநிலை உரைத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 123 – பொழுதுகண்டு இரங்கல் 
  • திருக்குறள் அதிகாரம் 124 – உறுப்புநலன் அழிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 125 – நெஞ்சொடு கிளத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 126- நிறையழிதல் 
  • திருக்குறள் அதிகாரம் 127 – அவர்வயின் விதும்பல் 
  • திருக்குறள் அதிகாரம் 128 – குறிப்பறிவுறுத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 129 – புணர்ச்சி விதும்பல் 
  • திருக்குறள் அதிகாரம் 130 – நெஞ்சொடு புலத்தல் 
  • திருக்குறள் அதிகாரம் 131- புலவி 
  • திருக்குறள் அதிகாரம் 132 – புலவி நுணுக்கம் 

  • திருக்குறள் அதிகாரம் 133 – ஊடலுவகை

திருக்குறள் ஆசிரியர் குறிப்பு 

திருக்குறளை இயற்றிய திருவள்ளுவரை பற்றிய முழுமையான விவரங்கள் இதுவரை கிடைக்கவில்லை. ஆனால் இவரை பற்றிய செய்திகள் செவி வழியாக பல நூற்றாண்டுகளை கடந்து இன்றும் நமது காதுகளில் ஒலிக்கின்றன. அதன் படி, இவர் சென்னையில் உள்ள மைலாப்பூர் பகுதியில் வாழ்ந்ததாகும், இவரின் மனைவி பெயர் வாசுகி என்றும் கூறப்படுகிறது. கற்பிற்கு ஒரு மிக சிறந்த இலக்கணமாக வாசுகி விளங்கினார் என்று கூறப்படுகிறது. இன்று உலகமே திருக்குறளை போற்றி புகழ்ந்தாலும் அந்நூல் இயற்றப்பட்ட காலகட்டத்தில் அதை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றுவதற்காக திருவள்ளூர் மிகுந்த சிரமப்பட்டார் என்றும், தமிழ் மூதாட்டி ஒளவையாரின் துணையோடு திருக்குறள் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது என்றும் செவி வழி செய்திகள் கூறுகின்றன. இந்த நூலின் ஆசிரியரான திருவள்ளுவருக்கு தெய்வப்புலவர், பொய்யில் புலவர், பெருநாவலர் என்று பல பெயர்கள் உள்ளன. நூல் குறிப்பு ஒரு மனிதனின் வாழ்விற்கு தேவையான அனைத்தையும் மூன்று பால்களாக பிரித்து அதை 1330 குறள்களாக இயற்றியுள்ளார் வள்ளுவ பெருந்தகை. திருக்குறளில் மொத்தம் மூன்று பால்கள் உள்ளன. அறத்துப்பால், பொருட்பால், காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பால். இப்படி மூன்று பால்களையும் ஒன்றிணைத்து அழகுற இயற்றப்பட்டதால் திருக்குறளிற்கு முப்பால் என்றொரு பெயர் உண்டு. இந்த முப்பாலும் மேலும் ‘இயல்’ என்று பகுக்கப்பட்டு ஒவ்வொரு இயலிற்கு கீழ் சில அதிகாரங்கள் பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு அதிகாரத்திற்கு கீழும் 10 குறள்கள் என்று தொகுக்கப்பட்டு, மொத்தம் 1330 குறள்களோடு இந்த நூல் உலகபுகழ்பெற்று விளங்குகிறது. இதில் உள்ள ஒவ்வொரு குறளும் இரண்டு அடிகளை கொண்டுள்ளது. முதல் அடியில் நான்கும் சீரும் இரண்டாம் அடியில் மூன்று சீரும் என மொத்தம் ஏழு சீர்கள் உள்ளது. அறத்துப்பால் அறத்துப்பாலில் மொத்தம் 4 இயல்கள் உள்ளன. இதில் முதலாவது இயல் “பாயிரவியல்”. பாயிரவியலில் மொத்தம் 4 அதிகாரங்கள் உள்ளன. இதனை தொடர்ந்து இரண்டாவது இயலாக “இல்லறவியல்” உள்ளது. இல்லறவியலில் மொத்தம் 20 அதிகாரங்கள் உள்ளன. அதனை தொடர்ந்து “துறவறவியல்” உள்ளது. அதில் மொத்தம் 13 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “ஊழியல்”. இதில் ஒரே ஒரு அதிகாரம் மட்டுமே உள்ளது. திருக்குறளில் ஒரே ஒரு அதிகாரம் உடைய இயல் ஊழியல் மட்டுமே. பாயிரவியல் – 4 அதிகாரங்கள் இல்லறவியல் – 20 அதிகாரங்கள் துறவறவியல் – 13 அதிகாரங்கள் ஊழியல் – 1 அதிகாரம் ஆக அறத்துப்பாலில் மொத்தம் 38 அதிகாரங்களும் 380 பாடல்களும் உள்ளன. பொருட்பால் பொருட்பாலில் மொத்தம் மூன்று இயல்கள் உள்ளன. இதில் முதலில் வருவது “அரசு இயல்”. இதில் 25 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “அமைச்சு இயல்”. இதில் 32 அதிகாரங்கள் உள்ளன. அதற்கடுத்து வருவது “ஒழிபு இயல்”. இதில்13 அதிகாரங்கள் உள்ளன. ஆக பொருட்பாலில் மொத்தம் மூன்று இயல்களும் 70 அதிகாரங்களும், 700 பாடல்களும் உள்ளன. காமத்துப்பால் முப்பலில் இறுதியாக வரும் காமத்துப்பால் அல்லது இன்பத்துப்பாலில் மொத்தம் இரண்டு இயல்கள் உள்ளன. ஒன்று களவியல் மற்றொன்று கற்பியல். இதில் களவியலில் 7 அதிகாரங்கள் உள்ளன. கற்பியலில் 18 அதிகாரங்கள் உள்ளன. ஆக காமத்துப்பாலில் மொத்தம் 25 அதிகாரங்களும் 250 பாடல்களும் உள்ளன. மொத்தம் 9 இயல்கள், 133 அதிகாரங்கள், 1330 பாடல்கள் திருக்குறளில் உள்ளன. திருவள்ளுவர் குறித்த சில ரகசியங்கள் சிறுவயது முதல் நாம் திருவள்ளுவரின் வரலாற்றை பற்றி எவ்வளவோ படித்துள்ளோம். ஆனால் நாம் படித்ததில் பெரும்பாலானவை ஒரு சாரார் எழுதியே வரலாறே தவிர அது முழுமையான வரலாறு கிடையாது. உண்மை என்ன வென்றால் இன்றுவரை திருவள்ளுவர் யார் ? அவர் எக்காலத்தில் வாழ்ந்தார் ? அவரின் உண்மையான பெயர் என்ன ? அவர் எப்படி இருந்தார் ? இப்படி எந்த விதமான தகவலையும் யாரும் உறுதியாக கூறியது கிடையாது. திருவள்ளுவர் மைலாப்பூரில் வாழ்ந்தார் என்று சில நூல்கள் கூறுகின்றன. வேறு சில நூல்களோ அவர் கன்யா குமரியில் வாழ்ந்தார் என்றும், இன்னும் வேறு சில நூல்களோ அவர் மதுரையில் வாழ்ந்தார் என்றும் கூறுகிறது. திருவள்ளுவர் எக்காலத்தில் வாழ்ந்தவர் என்று அனைவரும் கிழம்பி இருந்த நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு, தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் இது குறித்து ஆய்வு செய்து, திருவள்ளுவர் கீ மு 31 ஆம் ஆண்டு வாழ்ந்திருக்கலாம், அதாவது கிறிஸ்து பிறப்பதற்கு 31 ஆண்டுகளுக்கு முன்பு இவர் வாழ்ந்திருக்கலாம் என்று கூறியுள்ளனர். அதேபோல நமது பழங்கால நூலிகளில் உள்ள சில குறிப்பின்படி பார்த்தால் சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்பே திருவள்ளுவர் வாழ்ந்திருக்க கூடும் என்று நம்பப்படுகிறது. ஆனால் எதுவும் உறுதியான தகவல் கிடையாது. திருவள்ளுவர் எங்கு பிறந்தார் என்ற குழப்பம் நிலவிக்கொண்டிருக்க அது குறித்து வரலாற்று ஆசிரியர்கள் சில குறிப்புகளை கூறுகின்றனர். அதன் படி, இன்றைய கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள திருநயினார்குறிச்சி என்னும் ஊரில் தான் திருவள்ளுவர் பிறந்தார் என்றும் , அக்காலத்தில் அப்பகுதியில் மலை வாழ் மக்கள் வாழ்ந்தார்கள் என்றும் அவர்கள் காணி என்று அழைக்கப்பட்டார்கள் என்றும். அந்த பகுதியை ஆண்ட அரசனுக்கு பிறந்தவர் தான் திருவள்ளுவர் என்றும், தந்தைக்கு பிறகு திருவள்ளுவரே அரசாட்சி புரிந்ததாகும். அவர் ஆண்ட அந்த பகுதியின் பெயர் வள்ளுவ நாடு என்று அழைக்கப்பட்டதாகவும் வரலாற்று ஆசிரியர்கள் சிலர் கூறுகின்றனர். திருவள்ளுவர் ஒரு புலவர் ஆயிற்றே அவர் எப்படி ஒரு அரசனாக இருக்க கூடும் என்ற கேள்விக்கும் அவர்கள் பதிலளிக்கின்றனர். அதன் படி, நமது நாட்டில் வாழ்ந்த எத்தனையோ அரசர்கள் புலவர்களாகவும் இருந்ததுண்டு, உதாரணத்திற்கு, சிலப்பதிகாரத்தை இயற்றிய இளங்கோவடிகள், திருவிசைப்பா எழுதிய கண்டராதித்ய சோழன் இப்படி பலரை கூறலாம். ஆகையால் வள்ளுவன் என்னும் மன்னன் திருவள்ளுவராக இருக்க வாய்ப்புகள் அதிகம் உண்டு என்பது வரலாற்று ஆசிரியர்கள் சிலரின் கூற்றாக உள்ளது. இதற்க்கு மேலும் வலு சேர்க்கு விதத்தில் அவர்கள் கூறும் ஆதாரம் என்ன வென்றால், வள்ளுவர் பிறந்ததாக கூறப்படும் திருநயினார்குறிச்சி என்ற ஊரின் பக்கத்தில் கூவைமலை என்று ஒரு மலை இருக்கிறது. அம்மலை பகுதியில் வசிக்கும் காணி என்னும் பழங்குடி மக்கள் இன்றளவும் திருவள்ளுவரை தெய்வமாக வணணுகுகின்றனர் என்றும், பருவ மழை பொய்த்துவிட்டால் கூவைமலை பகுதியில், வள்ளுவர் பெயரால் அமைந்துள்ள வள்ளுவன் கல்பொற்றை மலைக்கு சென்று அப்பகுதி மக்கள் படையலிட்டு வள்ளுவரை இன்றளவும் வணங்குவதாக கூறுகின்றனர். அதோடு திருவள்ளுவர் நிச்சயம் ஒரு அரசனாக இருந்திருக்க கூடும் இல்லையேல் அவரால் அரசாட்சி பற்றிய அதனை நுணுக்கங்களையும் திருக்குறளில் எழுதி இருக்க முடியாது என்றும் கூறுகின்றனர். அதோடு இதை வெறும் பேச்சோடு நிறுத்தி விடாமல் கடந்த 1995 ஆம் ஆண்டில், அரசு ஆவணங்களில் திருவள்ளுவர் குமரி மாவட்டத்தில் பிறந்ததாகப் பதிவு செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவர் எங்கு வாழ்ந்தார் என்பது குறித்த சர்ச்சை ஒரு புறம் இருக்க, திருவள்ளுவர் என்ற பெயரே கூட அவருடைய சொந்த பெயர் கிடையாது என்று கூறப்படுகிறது. அக்காலத்தில் மக்கள் தங்களுடைய குலப்பெயரையும் தங்களின் பெயரோடு சேர்த்துக்கொள்வது வழக்கத்தில் இருந்தது. ஆகையால் திருவள்ளுவர் வள்ளுவ குலத்தை சேர்த்திருக்கலாம் என்றும் அதனாலேயே அவருக்கு திருவள்ளுவர் என்ற பெயர் வந்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது. நாம் அனைவரும் பொதுவாக படித்த வரலாறு படி, திருவள்ளுவருக்கு ஒரு மனைவி உண்டு அவர் பெயர் வாசுகி. அவர், கணவனே கண்கண்ட தெய்வம் என்று வாழ்ந்து வந்தவர் என்று குறிப்புகள் பல கூறுகின்றன. ஆனால் திருவள்ளுவருக்கு உண்மையில் திருமணமானதா ? அவருடைய மனைவியின் பெயர் வாசுகி தானா போன்ற எந்த ஒரு கேள்விக்கு நம்மிடம் எந்த ஒரு வரலாற்று சான்றும் இல்லை என்பதே உண்மை. அதே போல திருக்குறள் என்ற நூலுக்கு உண்மையான பெயர் என்ன என்பதும் கூட இதுவரை யாராலும் உறுதியாக கூற முடியவில்லை. பல அற்புதங்கள் நிறைந்த இந்த நூலை, பல மதங்கள் சொந்த கொண்டாடுகிறது. ஆனாலும் வியப்பு என்னவென்றால், 1330 குரல்களில் எந்த ஒரு குரலிலும் எந்த ஒரு மதத்தை பற்றியும் திருவள்ளுவர் குறிப்பிடவில்லை. அதற்க்கு அடுத்த படியாக அவர் எந்த ஒரு இறைவனை பற்றியும் எந்த ஒரு குரலிலும் கூறவில்லை. அதனால் தான் இன்று அந்த நூல் உலக மக்கள் அனைவருக்கும் சமமானதாக கூறப்படுகிறது. இன்று உலகமே திருக்குறளை போற்றி புகழ்ந்தாலும் அந்நூல் இயற்றப்பட்ட காலகட்டத்தில் அதை தமிழ் சங்கத்தில் அரங்கேற்றுவதற்காக திருவள்ளூர் மிகுந்த சிரமப்பட்டார் என்றும், தமிழ் மூதாட்டி ஒளவையாரின் துணையோடு திருக்குறள் தமிழ் சங்கத்தில் அரங்கேற்றப்பட்டது என்றும் செவி வழி செய்திகள் கூறுகின்றன. ஆனால் இதுவும் ஒரு சான்றில்லா கதை தான். 2500 வருடங்களுக்கு முன்பு இரண்டே வரிகளில் ஏழே சொற்களில் உலகையே அளந்த ஒரு நூல் வெளிவந்தது என்று சொன்னால் அது திருக்குறளாக மட்டும் தான் இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இந்த நூல் ஒரு சாதாரண மனிதன் முதல் மிகப்பெரிய மன்னம் வரை யார் எப்படி வாழ வேண்டும் என்பதை தெளிவாக கூறியுள்ளது. இந்த நூலை மக்கள் தெளிவாக படித்தால், ஒரு மன்னம் எப்படி இருக்க வேண்டும் என்பதை அவர்கள் நன்கு அறிந்துகொள்வார்கள். அப்படி அறிந்தால் அது மன்னனுக்கே பிரச்னையை விளைவிக்கும் என்பதனால் இந்த நூலை பெரும்பாலான மன்னர்கள் போற்றி புகழாமல் இருந்தனர் என்றொரு கூற்று உண்டு. கடந்த 1812 ஆம் ஆண்டு தான் இந்த நூல் முதன் முதலில் அச்சிடப்பட்டுள்ளது. அதன் பிறகே இதன் புகழ் உலகெங்கும் பரவி, இன்று 80 மொழிகளுக்கு மேல் மொழி பெயர்க்கப்பட்டுள்ளது. ஆங்கிலத்தில் மட்டும், 40 பேர் இதை மொழிபெயர்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருவள்ளுவரை எத்தனை மதங்கள் சொந்தம் கொண்டாடினாலும், அவர் ஒரு தமிழர் என்பதை யாராலும் மறுக்க முடியாது. அப்படி பட்ட ஒரு அதிசய தமிழனின் சில குறிப்புகளை உங்களிடம் பகிர்ந்துகொண்டதில் நாங்கள் பெருமை படுகிறோம். திருக்குறள் சிறப்புகள் தமிழ் மொழியில் இந்த நூல் இயற்றப்பட்டிருந்தாலும் இதில் தமிழ் என்ற சொல் எந்த குரலிலும் இடம் பெறவில்லை. அதே போல கடவுள் என்ற சொல்லும் இடம்பெறவில்லை. திருக்குறளில் மொத்தம் 14,000 சொற்கள் உள்ளன. திருக்குறளில் மொத்தம் 42,194 எழுத்துக்கள் உள்ளன. முதன்முதலில் திருக்குறள் அச்சிடப்பட்ட ஆண்டு-1812 திருக்குறளின் முதல் பெயர்- முப்பால் நெருஞ்சிப்பழம் என்ற பழவகை மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது. பனை, மூங்கில் ஆகிய மரங்கள் மட்டுமே திருக்குறளில் இடம்பெற்றுள்ளது. ஒரு குறளில் “பற்று” என்ற சொல் ஆறு முறை இடம்பெற்றுள்ளது. இதுவே ஒரே குளிரில் அதிகப்படியாக வரும் சொல் ஆகும். குறிப்பறிதல் என்ற அதிகாரம் மட்டுமே திருக்குறளில் இருமுறை வருகிறது. 
English overview: Here we have Thirukkural in Tamil. Thirukkural adhikaram are totally 133. Here we have kural for all the athikaram in Tamil. One can get Thirukkural with meaning and Thirukkural status in Tamil here.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories