Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label PGTRB. Show all posts
Showing posts with label PGTRB. Show all posts

PGTRB - முதுகலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!

PGTRB - முதுகலை ஆசிரியர்கள் போட்டித் தேர்வுகளுக்கான புதிய பாடத்திட்டம் வெளியீடு!



பள்ளிக்கல்வி ஆசிரியர் தேர்வு வாரியம் - முதுகலை ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை -1 மற்றும் கணினி பயிற்றுநர் நிலை -1 பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமன போட்டித் தேர்வு நடத்த மாற்றியமைக்கப்பட்ட முதுகலை ஆசிரியர் பாடங்களுக்கான பாடத்திட்டத்தை ( Syllabus ) அரசிதழில் வெளியிடுதல் ஆணை வெளிடயிடப்படுகிறது.


கீழ்க்கண்ட அரசாணை வெளியிடப்படுகிறது.

PGTRB New Syllabus 2024 - Download here

Share:

20.07.2011 க்கு பிறகு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம்!

 20.07.2011 க்கு பிறகு பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே selection grade வழங்கப்படும் - மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள் பணிநியமனம் பெற்ற ஆசிரியர்கள் ஆசிரியர் தகுதித் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற்றால் மட்டுமே selection grade வழங்கப்படும் - மாவட்ட கல்வி அலுவலரின் செயல்முறைகள்.



Share:

TRB இன்று ( 05/06/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - வட்டாரக் கல்வி அலுவலர் 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை!

TRB இன்று ( 05/06/2023 ) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு - வட்டாரக் கல்வி அலுவலர் 2023 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை - பத்திரிக்கைச் செய்தி 

Direct Recruitment for the Post of Block Educational Officer in the Directorate of Elementary Education under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019 2020 to 2021 2022

NOTIFICATION / ADVERTISEMENT

Applications are invited for Direct Recruitment from eligible candidates for the post of Block Educational Officer in the Directorate of Elementary Education Under Tamil Nadu Elementary Education Subordinate Service for the year 2019 – 2020 to 2021 – 2022 only through online mode upto 5.00 p.m. on 05.07.2023

Important Date's



TRB - BEO Requirement Notification - 5.6.2023 - pdf Download here


Share:

அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு!


தமிழ்நாட்டில் உள்ள அரசு மாதிரிப் பள்ளிகளில், TRB மூலம் தேர்வு செய்யப்பட்ட முதுகலை ஆசிரியர்களை மாற்றுப்பணியில் பணிபுரிய பள்ளிக் கல்வி இணை இயக்குநர் உத்தரவு.

Model Schools_Teachers Deputation-21.04.2023 - Download here


Share:

முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை - டிஆர்பி தரப்பு


முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் வன்னியர் உள் இடஒதுக்கீடு முறை பின்பற்றப்படவில்லை என டிஆர்பி தரப்பில் தெரிவிக்கப்பட்டதால் மனு முடித்து வைக்கப்பட்டது. சீர் மரபினர் நலச்சங்க தலைவர் ஜெபமணி, ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘முதுகலை பட்டதாரி ஆசிரியர் மற்றும் உடற்கல்வி இயக்குநர் மற்றும் கணினி பயிற்றுநர் நியமனம் தொடர்பான அறிவிப்பு கடந்தாண்டு ஆசிரியர் தேர்வாணையத்தால் வெளியானது. சான்றிதழ் சரிபார்ப்புக்கான தகுதியானோர் பட்டியல் கடந்த ஆக. 28ல் வெளியானது. இதில், எம்பிசி, எம்பிசி (வன்னியர்) மற்றும் எம்பிசி - சீர்மரபினர் என தனித்தனியாக மூன்று பிரிவுகளாக வகைப்படுத்தி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இது சட்டவிரோதம். ஏற்கனவே எம்பிசி பட்டியலில் இருந்து வன்னியர்களுக்கு உள்இடஒதுக்கீடு வழங்கும் சட்டம் செல்லாது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.


இதை கருத்தில் கொள்ளாமல் தேர்வானோர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல் பாடவாரியான கட்-ஆப் முறை கணக்கிடப்படவில்லை. எனவே, முதுகலை பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கான பட்டியலை ரத்து செய்ய வேண்டும்’’ என்று கூறியிருந்தார். இதேபோல் மேலும் பலர் மனு செய்திருந்தனர். இந்த மனுக்கள் நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன் நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. 

ஆசிரியர் தேர்வு வாரியம் தரப்பில் வக்கீல் சண்முகநாதன் ஆஜராகி, ‘‘சம்பந்தப்பட்ட நியமனங்களில் வன்னியர் உள்இடஒதுக்கீட்டின்படி 10.5 சதவீத இடஒதுக்கீடு பின்பற்றப்படவில்லை. உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கான 20 சதவீத இடஒதுக்கீடு தான் பொதுவான முறையில் பின்பற்றப்படுகிறது. இதில், எந்த விதிமீறலும் இல்லை’’ என்றார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதி, மனுக்களை முடித்து வைத்தார்.

Share:

ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு - TRB அறிவிப்பு.

முதுநிலை ஆசிரியர் பணிக்கான சான்றிதழ் சரிபார்ப்பு, வரும் 2ம் தேதி துவங்குகிறது.


இது குறித்து, ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர் லதா வெளியிட்ட செய்திக்குறிப்பு:

அரசு பள்ளிகளில் முதுநிலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குனர் மற்றும் கணினி பயிற்றுனர் பதவிகளுக்கு தேர்வுகள் முடிக்கப்பட்டுள்ளன. இதில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வரும் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை நேரடி சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதம், 48 மணி நேரத்துக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் பதிவேற்றப்படும்.

சம்பந்தப்பட்டவர் குறிப்பிட்ட நேரத்தில், தங்களின் அனைத்து அசல் சான்றிதழ்களுடன், சென்னையில் உள்ள ஆசிரியர் தேர்வு வாரியத்துக்கு வர வேண்டும். அவற்றின் நகல்களும் வைத்திருக்க வேண்டும்.மொபைல் போன், கைப்பை அனுமதி கிடையாது. பெற்றோர், சிறார், உறவினர்களை அழைத்து வரக்கூடாது. வளாகத்தில் கூட்டம் சேரக்கூடாது. கூடுதல் விபரங்களை http://trb.tn.nic.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share:

தெரியுமா : PGTRB - Certificate Verification Call Letter Published

முதுகலை ஆசிரியர் தேர்வர்கள் சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. 

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I - 2020 - 2021 - Click here to Download the Call Letter

Share:

PG TRB RESULT 2022 WITH FINAL KEY

PG TRB RESULT 2022 WITH FINAL KEY

PGTRB RESULT 2022 வந்தாச்சு

Direct Recruitment for the post of Post Graduate Assistants / Physical Education Directors Grade-I and Computer Instructor Grade I – 2020 – 2021 – RELEASE OF EXAMINATION RESULT WITH FINAL KEY.

PG TRB RESULT 2022 WITH FINAL KEY

  • PG TRB Result & Final Answer Key – Direct Link Click Here
  • Temporary Teachers Application Form ( No Water Mark ) Download PDF


Share:

TNTRB ஆசிரியர் தேர்வு வாரியம் - மகிழ்ச்சியான செய்தி

TNTRB ஆசிரியர் தேர்வு வாரியம், சென்னை - 6.


பத்திரிகைச் செய்தி

2020-2021 ஆம் ஆண்டு முதுகலைப்பட்டதாரி ஆசிரியர் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர் நிலை - 1 நேரடி நியமனத்திற்கான அறிவிக்கை (Notification) No. 01/2021 ஆசிரியர் தேர்வு வாரியத்தால் 09.09.2021 அன்று வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து கணினி வழித் தேர்வுகள் (Computer Based Examination) கடந்த 12.02.2022 முதல் 20.02.2022 வரை இருவேளைகளில் நடைபெற்றது.


ஆசிரியர் தேர்வு வாரிய Master Question Paper உடன் வெளியிடப்படும், தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை இணையவழியில் தேர்வர்கள் தெரிவிக்கும் முறை (Objection Tracker) ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இம்முறையில் முற்றிலும் கணினிபடுத்துவதில் தொழில்நுட்ப குறைபாடு உள்ளதை சீர்செய்வதற்கு கால அவகாசம் தேவைப்படுகிறது. அதற்குரிய பணிகள் நடவடிக்கையில் உள்ளது.

இப்பணி முடிவு பெற்று Objection Tracker தயாரானவுடன், தேர்வர்கள் அளித்த விடைகளுடன் கூடிய வினாத்தாள் (View Your QP with candidate response) ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தற்காலிக விடைக்குறிப்புடன் Master Q.P, (Tentative Key answers with Master Q.P of TRB) தற்காலிக விடைக்குறிப்பின் மீதான ஆட்சேபனைகளை தெரிவித்திடும் Objection Tracker ஆகியவை ஒரே நேரத்தில் கூடிய விரைவில் வெளியிடப்படும் அறிவிக்கப்படுகின்றது. 

Share:

PG TRB Admit Card Direct Download Link

PGTRB Hall ticket Direct Download link

 

PGTRB தேர்வர்களுக்கான ஹால் டிக்கெட் மூலமாக கல்லூரியில் தேர்வு எழுத உள்ளீர்கள் என்பதனை தற்போது டவுன்லோட் செய்யும் வசதி டிஆர்பி வெளியிடப்பட்டுள்ளது லிங்க் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது உங்களுடைய நண்பர்களுக்கும் இதை ஷேர் செய்யுங்கள்

PG TRB Admit Card Direct Download Link


Share:

PGTRB - முதுநிலை ஆசிரியர் தேர்வு தள்ளிவைக்க கோரிக்கை!

முதுநிலை ஆசிரியர் பணிக்கான, இரண்டாம் கட்ட போட்டி தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டு உள்ளது. ஆனால், தேர்தலுக்கு பின் தேர்வை நடத்துமாறு கோரிக்கை எழுந்துள்ளது.



அரசு பள்ளிகளில், முதுநிலை ஆசிரியர்கள், உடற்கல்வி இயக்குனர்கள் நிலை- 1, கணினி பயிற்றுனர்கள் நிலை 1 பணியிடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் வழியாக போட்டி தேர்வு நடத்தப்படுகிறது. முதற்கட்டமாக, தமிழ் உள்ளிட்ட 14 பாடங்களுக்கு, வரும், 12 முதல் 15ம் தேதி வரையில் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த அட்டவணை கடந்த மாதமே அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, மற்ற பாடங்களுக்கான இரண்டாம் கட்ட தேர்வு அட்டவணை வெளியானது. வரும், 16 முதல் 20ம் தேதி வரை தேர்வு நடக்கிறது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடக்கும் 19ம் தேதி மட்டும் விடுமுறை.இந்த தேர்வுகளுக்கு விண்ணப்பித்துள்ள ஆசிரியர்கள் பலருக்கு, நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் பணி வழங்கப்பட்டுள்ளது. 17ம் தேதி துவங்கி 20ம் தேதி வரை அதற்கான பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.எனவே, தேர்தல் முடிந்த பின்னர், இந்த தேர்வை நடத்துமாறு, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Share:

PGTRB 2022 - Exam Time Table Published

PGTRB 2022 - Exam Time Table Published

PGTRB 2022 - Exam Time Table :

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020-21 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்தப்படும் என 12.01.2022 பத்திரிகைச் செய்தியில் தெரிவிக்கப்பட்டிருந்தது. 12.02.2022 முதல் 15.02.2022 வரை 4 நாட்களுக்குரிய கணினி வழித்தேர்வுக்கான கால அட்டவணை ( Schedule ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் இன்று 28.01.2022 வெளியிடப்படுகின்றது.

இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு 1 மற்றும் அனுமதிச் சீட்டு 2 ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி அறிவிக்கப்படும். 

ஆங்கிலம் , கணிதம் , கணினி அறிவியல் பாடங்களுக்குரிய அட்டவணை அடுத்த வாரம் வெளியிடப்படும். இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்கள் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.

PGTRB 2022 - Exam Time Table Published




Share:

TRB - ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.

 TRB - ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணை வெளியீடு.



9494 Teachers Vacancies Filling - Annual Planner - 2022 | TRB Published. 

9494 ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான வருடாந்திர கால அட்டவணையினை வெளியிட்டது ஆசிரியர் தேர்வு வாரியம்.


ஏப்.2-ம் வாரத்தில் ஆசிரியர் தகுதித்தேர்வு நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அரசு கலைக் கல்லூரி உதவிப்பேராசிரியர் தேர்வு ஆகஸ்ட் முதல் வாரத்தில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு துறைகளில் 9,494 காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை டிஆர்பி வெளியிட்டுள்ளது.

Share:

PGTRB தேர்வு Feb-12 க்கு மாற்றப்பட்டது

PGTRB போட்டித் தேர்வு 12.02.2022 முதல் 20.02.2022 வரை நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு!


முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை – 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 - 2020-21 காலிப்பணியிடங்களுக்கான பணித்தெரிவு சார்ந்து 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட 31.12.2021 நாளிட்ட பத்திரிகைச் செய்தியில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது . தற்பொழுது பெருந்தொற்று சூழ்நிலை , நிர்வாகக் காரணங்களினால் வரும் 12.02.2022 முதல் 20.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்திட உத்தேசிக்கப்பட்டுள்ளது தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது.


விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் . இத்தேர்விற்கு உரிய அனுமதிச் சீட்டு ( Admit Card ) ஆசிரியர் தேர்வு வாரிய இணையதள முகவரி www.trb.tn.nic.in ல் தேர்வர்கள் தங்களது User ID மற்றும் கடவுச் சொல் ( Password ) உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்வதற்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும்.


 இந்த அட்டவணை நிர்வாகக் காரணங்களினால் மற்றும் பெருந்தொற்று சூழ்நிலை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது.

Share:

PGTRB - Exam Date TRB Announcement 2022

PGTRB - Exam Date TRB Announcement 


PGTRB 29.01.2022 முதல் 06.02.2022 வரை நடைபெறும் - ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு.

முதுகலை பட்டதாரி ஆசிரியர்கள் / உடற்கல்வி இயக்குநர் நிலை - 1 / கணினி பயிற்றுநர்கள் நிலை - 1 2020 21 காலிப்பணியிடங்களுக்கு பணித்தெரிவு சார்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிக்கை எண் .01 / 2021 , நாள் 09.09.2021 மற்றும் திருத்திய அறிவிக்கைகள் எண் . 01 A / 2021 , நாள் 17.09.2021 மற்றும் 01 B / 2021 , நாள் 21.10.2021 ஆகிய தினங்களில் வெளியிடப்பட்டன.

 இணையவழி வாயிலாக விண்ணப்பத்தினை விண்ணப்பதாரர்கள் 18.09.2021 முதல் பதிவேற்றம் செய்திடலாம் என தெரிவிக்கப்பட்டது. மேலும் , விண்ணப்பதாரர் விண்ணப்பத்தினை பதிவேற்றம் செய்ய 14.11.2021 மாலை 05.00 மணி வரை கால அவகாசம் வழங்ப்பட்டது. அதில் கணினி வழி தேர்வுக்கான தேதி அறிவிக்கப்படவில்லை.


தற்பொழுது , 29.01.2022 முதல் 06.02.2022 வரை உள்ள தேதிகளில் இருவேளைகளில் தேர்வுகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது என்ற விவரம் தேர்வர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. இத்தேதிகள் பெருந்தொற்று சூழ்நிலை , தேர்வு மையங்களின் தயார் நிலை ( Availability of Examination Centre ) மற்றும் நிர்வாக வசதியினை பொறுத்து மாறுதலுக்கு உட்பட்டது எனவும் அறிவிக்கப்படுகின்றது.

 விரிவான அட்டவணை 15 தினங்களுக்கு முன்பு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories