Daily TN Study Materials & Question Papers,Educational News

Showing posts with label கவிதை. Show all posts
Showing posts with label கவிதை. Show all posts

ஆசிரியர் தின கவிதைகள்.செப்டம்பர் -5

ஆசிரியர் தின கவிதைகள்..!

அனைவருக்கும் வணக்கம்.நாம் அனைவரும் உயர்திரு டாக்டர் இராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்..ஆதலால் அவர்களை பற்றிய கவிதையை நாம் பார்ப்போம்.




நாங்கள் செய்த தவறுக்கு 

தண்டனை எங்களுக்கு தந்து

வேதனையை - நீங்கள்

அல்லவா அனுபவித்தீர்கள் 

எத்தனை அன்பு , அரவணைப்பு

எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்

எல்லாம் எதற்கு

எங்கள் வாழ்வு வளம் பெறதானே 

எததனை நாள்

மழையில் நனைந்தீர்கள்

வெயிலில் காய்ந்தீர்கள்

பசியை மறந்தீர்கள் 

உங்கள் குடும்பத்தைவிட

எங்கள் நலனில் தானே

அதிகம் அக்கரை செலுத்தினீர்கள் நாங்கள் செய்த தவறுக்கு

தண்டனை எங்களுக்கு தந்து

வேதனையை - நீங்கள்

அல்லவா அனுபவித்தீர்கள்


எத்தனை அன்பு , அரவணைப்பு

எத்தனை அறிவுரைகள் , ஆலோசனைகள்

எல்லாம் எதற்கு

எங்கள் வாழ்வு வளம் பெறதானே


எததனை நாள்

மழையில் நனைந்தீர்கள்

வெயிலில் காய்ந்தீர்கள்

பசியை மறந்தீர்கள்


உங்கள் குடும்பத்தைவிட

எங்கள் நலனில் தானே

அதிகம் அக்கரை செலுத்தினீர்கள்

இறந்த காலங்களில் ஓராயிரம் முறை

உங்களை திட்டி தீர்திருந்தாலும்

நிகழ காலங்களில் வாழ்த்தாத நாளில்லை ...! 

Share:

அம்மா கவிதை

 

#என்னுயிர்_அன்னையே

**********************************************
கோயில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
நடமாடும் தெய்வம்
நீ என்னோடு இருக்கையிலே..!

பசி தூக்கம் தனை மறந்து
உயிர் நோகும் வலி மறந்து 
ஈரைந்து திங்கள்
இன்பமுடன் எனைச்
சுமந்து ஈன்றவளே..!

நான் செய்த
பெருந் தவத்தால்
எந்தன் அன்னையானவளே..!
என் மகளுக்கும் 
அன்னையாகி 
அரவணைத்துக் காப்பவளே..!

நிழலாக எனைத் தொடர்ந்து  
நித்தம் என்னை ஆள்பவளே..!
கலங்கரை விளக்கமென 
நல்வழிகாட்டி நிற்பவளே..!

எந்தன் தன்னம்பிக்கையின்
தாரக மந்திரம் நீதானம்மா..!
 நீயின்றி நானில்லையம்மா..! 
எத்தனை ஜென்மங்கள் 
எனக்கிருந்தாலும்
நீயே என் தாயாகி
என்னைக் காத்திடும் 
வரம் கொடுத்திடம்மா..!

அம்மா என்னும் 
அழகிய கவிதையே..!
என்றென்றும் என்னுயிர் நீயே..!

              I LOVE YOU AMMA

                        *ரேணுகா ஸ்டாலின்*
Share:

Blog Archive

Definition List

header ads

Unordered List

Support

 
Stories
Visual Stories