அம்மா கவிதை

 

#என்னுயிர்_அன்னையே

**********************************************
கோயில் எதற்கு
தெய்வங்கள் எதற்கு
நடமாடும் தெய்வம்
நீ என்னோடு இருக்கையிலே..!

பசி தூக்கம் தனை மறந்து
உயிர் நோகும் வலி மறந்து 
ஈரைந்து திங்கள்
இன்பமுடன் எனைச்
சுமந்து ஈன்றவளே..!

நான் செய்த
பெருந் தவத்தால்
எந்தன் அன்னையானவளே..!
என் மகளுக்கும் 
அன்னையாகி 
அரவணைத்துக் காப்பவளே..!

நிழலாக எனைத் தொடர்ந்து  
நித்தம் என்னை ஆள்பவளே..!
கலங்கரை விளக்கமென 
நல்வழிகாட்டி நிற்பவளே..!

எந்தன் தன்னம்பிக்கையின்
தாரக மந்திரம் நீதானம்மா..!
 நீயின்றி நானில்லையம்மா..! 
எத்தனை ஜென்மங்கள் 
எனக்கிருந்தாலும்
நீயே என் தாயாகி
என்னைக் காத்திடும் 
வரம் கொடுத்திடம்மா..!

அம்மா என்னும் 
அழகிய கவிதையே..!
என்றென்றும் என்னுயிர் நீயே..!

              I LOVE YOU AMMA

                        *ரேணுகா ஸ்டாலின்*

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post