12th Tamil important one mark questions with answer

12th Tamil one mark questions with answer 

ஒரு மதிப்பெண் வினாக்கள்

செய்யுள், உரைநடை வினாக்கள்

****************************************

1.இலக்கியத்தையும் மொழியையும் ஒருசேர பேசுகின்ற இலக்கண நூல் 

அ) யாப்பருங்கலக்காரிகை ஆ)தண்டியலங்காரம்  இ) தொல்காப்பியம்   ஈ) நன்னூல்

****************************************

2.மீண்டும் அந்த பழமை நலம் புதுக்குதற்கு" - கவிஞர் குறிப்பிடும் பழமை நலம்

 க. பாண்டியரின் சங்கத்தில் கொலுவிருந்தது

 உ.பொதிகையில் தோன்றியது

 ங.வள்ளல்களைத் தந்தது 

அ) க மட்டும் சரி     ஆ) க, உ இரண்டும் சரி    இ) ங மட்டும் சரி.    ஈ) க, ங இரண்டும் சரி

****************************************

3."மின்னேர் தனி ஆழி வெங்கதிர் ஒன்று      

      ஏனையது தன்னேரிலாத தமிழ்"

 - இவ்வடிகளில் பயின்றுவந்துள்ள தொடைநயம்

அ) அடிமோனை, அடி எதுகை.  ஆ) சீர் மோனை, சீர் எதுகை

இ) அடி எதுகை, சீர் மோனை.   ஈ) சீர் எதுகை, அடிமோனை

****************************************

4.கருத்து 1 : இயல்பு வழக்கில் தொடரமைப்பு என்பது எழுவாய், பயனிலை என்று வருவதே மரபு

 கருத்து 2 : தொடரமைப்பு, சங்கப் பாடல்கள் பலவற்றில் பிறழ்ந்து வருகிறது

அ) கருத்து 1 சரி    ஆ) கருத்து 2 சரி

 இ) இரண்டு கருத்தும் சரி     ஈ) கருத்து 1 சரி, 2 தவறு

****************************************

5.பொருத்துக

நூல். ஆசிரியர்
அ)தமிழ் அழகியல் 1.பரலி.சு.நெ்லையப்பர்
ஆ)நிலவுப்பூ 2.தி.சு.நடராஜன்
இ)கிடை 3.சிற்பி பாலசுப்பிரமணியம்
ஈ)உய்யும்வழி 4 .கி. ராஜநாராயணன்

அ) 4 3 2 1.   ஆ) 1 4 2 3. இ) 2 4 1 3.   ஈ) 2 3 4 1

****************************************

6.பொருத்துக

1 2
அ) குரங்குகள் கன்றுகளைத் தவிர்த்தன
ஆ) பசுக்கள் மரங்களிலிருந்து விழுந்தன
இ) பறவைகள் குளிரால் நடுங்கின
ஈ) விலங்குகள் மேய்ச்சல் மறந்தன

அ) 1 3 4 2.   ஆ) 3 1 2 4    இ) 3 2 1 4.   ஈ) 2 1 3 4

****************************************

7.நரம்புகளுக்குள் வீணை மீட்டிக் கொண்டிருக்கிறது" - என்று அய்யப்ப மாதவன் குறிப்பிடுவது .

அ) சூரிய ஒளிக்கதிர்  ஆ) மழை மேகங்கள்

 இ மழைத்துளிகள்.   ஈ) நீர்நிலைகள்

****************************************

8.வெள்ளச் சமவெளிகள் அழியக் காரணம்.

 அ) பருவநிலை மாற்றம்  ஆ) மணல் அள்ளுதல்

இ) பாறைகள் இல்லாமை.  ஈ) நிலத்தடி நீர் உறிஞ்சப்படுதல்

****************************************

9.பொய்யா வானம் புதுப்பெயல் பொழிந்தென - தடித்த சொல்லின் இலக்கணக்குறிப்பு 

அ) வினைத்தொகை ஆ) உரிச்சொல் தொடர்

இ) இடைச்சொல் தொடர்  ஈ)ஈறுகெட்ட எதிர்மறை பெயரெச்சம்

****************************************

10.உலக நாடுகள் மாற்று ஆற்றலை நோக்கிச் சென்றால் மட்டுமே, புவி வெப்பமயமாதலைக் கட்டுப்படுத்த முடியும் - இத்தொடர் உணர்த்துவது

) கார்பன் அற்ற ஆற்றல் பயன்பாடே தேவையாகிறது  ஆ) பசுமைக்குடில் வாயுக்கள் அதிகமாகிறது

இ) கால நிலை மாறுபடுகிறது  ஈ) புவியின் இயக்கம் வேறுபடுகிறது 

****************************************

11.சங்க இலக்கியத்தில் இல்லாத சொற்கள், சங்க கால சமூகத்தில் நடைமுறையில் இருந்துள்ளன. அவை___________.

அ) அறவோர், துறவோர்    ஆ) திருமணமும் குடும்பமும் 

இ) மன்றங்களும் அவைகளும்.    ஈ) நிதியமும் சுங்கமும்

****************************************

12.பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்க.

1. 2
அ)உரிமைத்தாகம் 1.பாரசீக கவிஞர்
ஆ)அஞ்ஞாடி 2.பூமணி
இ) ஜலாலுத்தீன் ரூமி 3)பக்தவத்சல பாரதி 
ஈ)தமிழர் குடும்ப முறை 4 .சாகித்திய அகாதெமி
அ) 2 4 31 ஆ) 3 4 1 2 இ) 2 4 1 3 ஈ) 2 3 4 1 
****************************************
13."இவற்றை வாயிலுக்கே சென்று இன்முகத்துடன் வரவேற்பாயாக" என்று ஜலாலுத்தீன் ரூமி குறிப்பிடுவது

அ) வக்கிரம்    ஆ) அவமானம்    
இ) வஞ்சனை.       ஈ) இவை அனைத்தும்
****************************************
14.உவா உற வந்து கூடும் உடுபதி, இரவி ஒத்தார்" - யார்? யார்
அ) சடாயு, இராமன்     ஆ) இராமன், குகன் இ) இராமன்,சுக்ரீவன்.  ஈ)இராமன், சவரி 
****************************************
15.எங்கள் தந்தையர் நாடென்ற 
பேச்சினிலே - ஒரு சக்தி பிறக்குது மூச்சினிலே" - என்னும் பாரதியின் பாடல் வெளிப்படுத்துவது 
அ) தனிக் குடும்ப முறை   ஆ) விரிந்த குடும்ப முறை 
இ) தாய்வழிச் சமூக முறை    ஈ) தந்தை வழிச் சமூக முறை
****************************************
16.படத்துக்கு பொருத்தமான திருக்குறளைக் கண்டுபிடிக்க

அ) அன்பும் அறனும் உடைத்தாயின் இல்வாழ்க்கை
 பண்பும் பயனும் அது

ஆ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் வானுறையும் 
தெய்வத்துள் வைக்கப் படும்

இ) சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனம் என்னும்
ஏமப் புணையைச் சுடும் 

ஈ) மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய
      பிறத்தல் அதனான் வரும்
****************************************
17.கடலின் பெரியது
அ) உற்ற காலத்தில் செய்த உதவி
இ) திணை அளவு செய்த உதவி
ஆ) பயன் ஆராயாமல் ஒருவர் செய்த உதவி
 ஈ) அவசரத்தில் செய்த உதவி
****************************************
18.பின்வரும் நாலடியார் பாடலின் பொருளுக்குப் பொருத்தமான திருக்குறளைக் கண்டறிக:-
நல்லார் நயவர் இருப்ப நயமிலாக் கல்லார்க் கொன்றாகிய காரணம் - தொல்லை
வினைப்பயன் அல்லது வேல்நெடுங் கண்ணாய் நினைப்ப வருவதொன் றில்
****************************************
) இருவேறு உலகத்து இயற்கை திருவேறு 
தெள்ளியரா தலும் வேறு 
ஆ) நல்லவை எல்லாம் தீயவாம் தீயவும் நல்லவாம் செல்வம் செயற்கு
 இ) ஊழிற் பெருவலி யாவுள மற்றொன்று 
சூழினும் தான்முந் துறும்
 ஈ) எந்நன்றி கொன்றார்க்கும் உய்வுண்டாம்; உய்வில்லை 
செய்ந்நன்றி கொன்ற மகற்கு
****************************************
19.கீழ்க்காணும் புதுக்கவிதைகள்    பொருந்தும் திருக்குறளைத் தேர்ந்தெடுக்க
 உயர் அலுவலரின் வருகை
அலுவலகமே அல்லாடும்
அவருடைய சினம் அனைவரும் அறிந்ததே கோப்புகளை விரைந்து முடிக்க
ஒழுங்கு செய்ய
நேரத்தில் இருக்க வேண்டும்
விரைகிறது மனம்
பரபரப்பும் மனவழுத்தமுமாய்
வண்டியை எடுக்கிறேபிற
அ) செய்யாமல் செய்த உதவிக்கு வையகமும் வானகமும் ஆற்றல் அரிது 
இ) அஃகாமை செல்வத்திற்கு யாதெனின் வெஃகாமை 
வேண்டும் பிறன்கைப் பொருள் நகையும் ஈ)உவகையும் கொல்லும் சினத்தின் பகையும் உளவோ பிற
****************************************
20.வையகமும் வானகமும் ஆற்றல் அரிது - எதற்கு
அ) செய்யாமல் செய்த உதவி 
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி
இ)) தினைத்துணை நன்றி 
ஈ) செய்ந்நன்றி
****************************************
21.பொருத்துக
1. 2
அ) வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் 1.சேர்ந்தாரைக் கொல்லி
ஆ) பயன்தூக்கார் செய்த உதவி 2.ஞாலத்தின் மாணப் பெரிது
இ) சினம் 3)தெய்வத்துள் வைக்கப் படும்
ஈ) காலத்தினால் செய்த நன்றி 4 .நன்மை கடலின் பெரிது

 அ) 4 3 2 1 ஆ) 3 4 1 2 இ) 1 2 3 4     ஈ) 2 3 4 1
****************************************
22.பின்வருவனவற்றுள் எண்ணும்மை எது ?
அ) அன்பும் அறமும்  ஆ) நன்கலம்   
இ) மறத்தல் ஈ) உலகு
****************************************
23.தெப்பம், பாதுகாப்பு - என்று பொருள்             தரும் சொற்கள் 
அ) வெகுளி, புணை     ஆ) ஏமம், திரு 
 இ) புணை , ஏமம்.  ஈ) வெகுளி, திரு
****************************************
24. பகையும் உளவோ பிற -இதில் பகை என்பது
அ) புணை  ஆ) சினம்  இ) ஏமம்  ஈ) திரு
****************************************
25.செல்லிடத்து - இச்சொல்லுக்கான புணர்ச்சி விதிகள்
     அ) தனிக்குறில் முன் ஒற்று      உயிர்வரின் இரட்டும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஆ) உயிர்வரின் உக்குறள் மெய்விட்டு ஓடும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
 இ) தன்னொற்றிரட்டல்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
ஈ) பூப்பெயர் முன் இன மென்மையும் தோன்றும்; உடல்மேல் உயிர்வந்து ஒன்றுவது இயல்பே
****************************************
26.காவினெம் கலனே சுருக்கினெம் கலப்பை" - இத்தொடரில் 'கலன்' உணர்த்தும் பொருள் 
அ) போர்க்கருவி   ஆ) தச்சுக்கருவி 
இ) இசைக்கருவி ஈ) வேளாண் கருவி
****************************************
27.சுரதா நடத்திய கவிதை இதழ் 
   அ) இலக்கியம்   ஆ) காவியம்
    இ) ஊர்வலம்.  ஈ) விண்மீன்
****************************************
28.விண் வேறு; விண்வெளியில் இயங்குகின்ற வெண்மதியும் செங்கதிரும் முகிலும் வேறு" - இத்தொடர் தரும் முழுமையான பொருள் ?
அ) விண்ணும் வெண்மதியும் வேறு வேறு 
ஆ) விண்வெளியும் செங்கதிரும் வேறு வேறு
இ) வெண்மதியும் முகிலும் வேறு வேறு ஈ) விண், விண்வெளியில் உள்ள வெண்மதி, செங்கதிர், முகில் அனைத்தும் வேறு வேறு
****************************************
29.சுவடியோடு பொருந்தாத ஒன்றைத் தேர்வு செய்க
அ) வசம்பு.  ஆ) மணத்தக்காளி இலைச்சாறு 
இ) கடுக்காய் ஈ) மாவிலைக்கரி 
****************************************
30.குழிமாற்று' எந்தத் துறையோடு தொடர்புடைய சொல்?
அ) இலக்கியம் ஆ) கணிதம் 
இ) புவியியல் ஈ) வேளாண்மை
****************************************
31.சென்னை வெறும் நகரம் மட்டுமல்ல;        அது நம்பிக்கை மையம். - காரணம்
அ) நேரடி, மறைமுக வேலைவாய்ப்புகளின் களம் 
ஆ) மென்பொருள், வன்பொருள், வாகன உற்பத்தியில் பங்கு 
இ) மென்பொருள் ஏற்றுமதியில் முன்னிலை 
ஈ) அ, ஆ, இ - அனைத்தும்
****************************************
32.கூற்று : இந்தியாவின் பல பகுதிகளில் இருந்தும் நெசவாளர்கள் சென்னைக்கு வந்தார் : கிழக்கிந்திய நிறுவனத்தின் வணிகம். துணி சார்ந்ததாகவே இருந்தது அ) கூற்று சரி, காரணம் தவறு 
ஆ) கூற்று தவறு, காரணம் சரி
இ) கூற்று தவறு, காரணம் தவறு 
ஈ) கூற்று சரி, காரணம் சரி
****************************************
33.பொருத்துக
1. 2
அ) திருவல்லிக்கேணி ஆறு 1) மாவலிபுரச் செலவு 
ஆ) பக்கிங்காம் கால்வாய் கல் கோடரி 2)கல்கோடரி
இ) பல்லாவரம் 3) அருங்காட்சியகம்
ஈ) எழும்பூர்4) கூவம்

அ)1 2 4 3  ஆ) 4 2 1 3  இ) 4 1 2 3. ஈ)2 4 3 1
****************************************
34.உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்' - இத்தொடர் உணர்த்தும் பண்பு அ) நேர்மறைப் பண்பு  ஆ) எதிர்மறைப் பண்பு
 இ) முரண் பண்பு  ஈ) இவை அனைத்தும்
****************************************
35.விளியறி ஞமலி' - இதில் குறிப்பிடப்படும் விலங்கு எது 
அ)எருது   ஆ) குதிரை   ) நாய் ஈ) யாழி

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post

POST ADS1

POST ADS 2

Loading...