பள்ளி,கல்லூரிகள் திறப்பு எப்போது - மத்திய அரசு

 

சீனாவின் நகரில் கடந்தாண்டு நவம்பர் மாதத்தில் தோன்றிய கொரோனா வைரஸ் 210 அதிகமான நாடுகளில் பரவி பெரும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக அமெரிக்கா, பிரேசில், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளில் கொரோனா தொற்று பரவலால் மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, நாடு முழுவதும் கடந்த மார்ச் 24-ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தற்போது இருக்கும் ஊரடங்கு உத்தரவு ஆகஸ்ட் 31-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இதனால் பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்கள் திறப்பதில் தொடர்ந்து சிக்கல் நீடித்து வருகிறது.

இதனிடையே, தற்போதுள்ள சூழ்நிலையில் பள்ளிகளை திறக்க வாய்ப்பில்லை என்றும், கொரோனா தொற்று குறைந்ததும், பெற்றோர்களின் கருத்துக்களை கேட்டபின்னர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி முடிவெடுப்பார் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், டிசம்பர் மாதம் வரை பள்ளி, கல்லூரிகள் திறக்க வாய்ப்பில்லை என மத்திய உள்துறை செயலாளர் தெரிவித்துள்ளார். மனிதவள மேம்பாட்டிற்கான நாடாளுமன்ற நிலைக் குழு கூட்டத்தில் மத்திய உயர்கல்வித்துறை செயலாளர் இந்த தகவலை தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments