தமிழக அரசு பாடத்திட்டத்தில், பிளஸ் 2 பொது தேர்வு முடிவுகள் கடந்த, 8ம் தேதி வெளியானது. இந்த தேர்வில், 47 ஆயிரம் மாணவர்கள் பதிவு செய்தும் பங்கேற்கவில்லை; பங்கேற்றவர்களில், 48 ஆயிரம் பேர் வரை தேர்ச்சி பெறவில்லை. தேர்ச்சி பெறாத, தேர்வு எழுதாத, 95 ஆயிரம் பேரும், ஜூனில் நடக்க உள்ள சிறப்பு துணை தேர்வில் பங்கேற்க, வழி வகை செய்யப்படுகிறது. இதுகுறித்து, முதன்மை கல்வி அலுவலர்களுக்கு, ஒருங்கிணைந்த கல்வி திட்ட இயக்குனர் இளம்பகவத் அனுப்பியுள்ள சுற்றறிக்கையில், 'துணை தேர்வு எழுத உள்ள மாணவர்கள் தேர்வுக்கு விண்ணப்பிக்கவும், தேர்வுக்கான சிறப்பு பயிற்சி வகுப்புகளில் பங்கேற்கவும், முதன்மை கல்வி அலுவலர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, தெரிவித்து உள்ளார்.
Home »
kalviseithi
» பிளஸ் 2 துணை தேர்வு 95,000 பேர் பங்கேற்பு?








0 Comments:
Post a Comment
1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.