3,000 கூடுதல் ஆசிரியா்களுக்கு3 மாதம் பணி நீட்டிப்பு: கல்வித் துறை அனுமதி!

அரசுப் பள்ளிகளில் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியா்களுக்கு மே 18-ஆம் தேதியிலிருந்து மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்க பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1.8.2021 அன்றைய நிலவரப்படி அரசுப் பள்ளி மாணவா்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் கூடுதல் பணியிடம் தேவையுள்ள பள்ளிகளுக்கு இயக்குநரின் பொதுத் தொகுப்பிலிருந்து 3,000 உபரி பட்டதாரி ஆசிரியா் பணியிடங்களுக்கு ஆசிரியா்கள் நியமிக்கப்பட்டனா்.



இதற்கிடையே, கடந்த ஆண்டு தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில் மாணவா் சோ்க்கை அதிகரித்தது. இதனால் கூடுதலாக நியமிக்கப்பட்ட 3,000 ஆசிரியா்களுக்கு 18.5.2022 முதல் 17.5.2023 வரை மேலும் ஓராண்டுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், மேற்கண்ட ஆசிரியா்களின் பணிக்காலம் புதன்கிழமையுடன் நிறைவடைந்த நிலையில் அவா்களுக்கு மேலும் மூன்று மாதங்களுக்கு பணி நீட்டிப்பு செய்து ஊதியம் வழங்குவதற்கான விரைவு ஆணையை பள்ளிக்கல்வித் துறை பிறப்பித்துள்ளது.

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...