1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு - முக்கியமான தகவல்!

1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு - முக்கியமான தகவல்!

தமிழக பள்ளிகளில் 10,11, 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு குறித்த தேதிகள் வெளியான நிலையில், 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது என்பது குறித்த தகவல் வெளியாகி இருக்கிறது.

முழு ஆண்டு தேர்வு

தமிழக பள்ளிகளில் 2022-23 கல்வியாண்டிற்கான 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு குறித்த தேதியை பள்ளிக்கல்வித்துறை சில மாதங்களுக்கு முன் வெளியிட்டது. அதன் படி 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப்ரல் 6 ஆம் தேதி முதல் ஏப்ரல் 20 ஆம் தேதி வரை, 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 14 ஆம் முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை, 12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு மார்ச் 13 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் என வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு தேதி எப்போது:

மேலும் 1முதல் 5 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு முழு ஆண்டு தேர்வு எப்போது என்பது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் தகவல் தெரிவித்துள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அலுவலர்கள் தெரிவித்துள்ளனர். அதன் படி இந்த மாணவர்களுக்கு வழக்கம் போல ஏப்ரல் மாதம் தேர்வுகள் நடத்த வாய்ப்பு இருப்பதாகவும், மே மாதத்தில் மாணவர்களுக்கு கோடை விடுமுறை விடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அது மட்டுமில்லாமல் முழு ஆண்டு தேர்வுக்கான ஏற்பாடுகளை தலைமை ஆசிரியர்கள் செய்து வருவதாகவும், தேர்வுக்கான கேள்வித்தாள்கள் மாவட்ட தொடக்க கல்வி அலுவலகத்திற்கு வந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை மாவட்ட தொடக்க கல்வி அலுவலகம் விரைவில் வெளியிடும் என பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது

Post a Comment

1.வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கின்றோம்.
2.இந்த வலைதளம் மாணவர்களுக்கானது என்பதால்,
3.தங்களின் மேலான கருத்துக்களை தவறாது பதிவிடவும்.
4.#இந்த பயனுள்ள தகவலை ஒருவருக்காவது Share பண்ணுங்க.

Previous Post Next Post
Loading...