நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!மகா சிவராத்திரியை முன்னிட்டு



 மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிப்பு!


மகா சிவராத்திரியை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்திற்கு வரும் 18ம் தேதி உள்ளூர் விடுமுறை அளித்து ஆட்சியர் ஸ்ரீதர் உத்தரவிட்டு உள்ளார்.இது தொடர்பாக அவர் வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில், கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகாசிவராத்திரியினை முன்னிட்டு 18.02.2023 (சனிக்கிழமை) அன்று கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அன்றைய தினம் இயங்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை வழங்கி உத்தரவிடப்படுகிறது.


(2)18.02.2023 அன்று அறிவிக்கப்பட உள்ள உள்ளூர் விடுமுறைக்கு ஈடாக 2023 மார்ச் நான்காவது சனிக்கிழமை (25.02.2023) அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் மேற்படி உள்ளுர் விடுமுறையினை துய்க்கும் மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு வேலை நாளாக இருக்கும்.



(3) கன்னியாகுமரி மாவட்டத்திற்கு மகாசிராத்திரிக்கு உள்ளூர் விடுமுறை செலவாணி முறிச் சட்டம் 1881 (Under Negotiable Instruments Act 1881)-ன்படி அறிவிக்கப்படவில்லை என்பதால் 18.02.2023 அன்று கன்னியாகுமரி மாவட்டத்தில் தலைமை கருவூலம் மற்றும் கிளை கருவூலங்கள் அரசு ஈடுபாடு சம்பந்தப்பட்ட அவசரப் பணிகளை கவனிக்கும் பொருட்டு, தேவையான பணியாளர்களை கொண்டு இயங்கும் என மாவட்ட ஆட்சியர் ஸ்ரீதர் தெரிவித்துள்ளார்.

Post a Comment

0 Comments